கழகம் முன்னெடுத்த பெரியார் நினைவு நாள் நிகழ்வுகள்
சென்னை : பெரியாரின் 48ஆவது நினைவு நாள் நிகழ்வு 24.12.2021 அன்று காலை 8:30 மணியளவில் சென்னை இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. முதலாவதாக தோழர்கள் கிருத்திகா, லீலா ஆகியோர் பெரியாரின் சிலைக்கு, தோழர்களின் கொள்கை முழக்கங்களுடன் மாலை அணிவித்தனர். அருகில் அமைத்திருந்த பெரியார் நினைவு மேடையில், களப்பணியில் உயர்நீத்த, கண்ணா – குமார் உருவப் படத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். பின் பெரியார் நினைவு நாள் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து, சிம்சன், தியாகராயர் நகர், எம்.ஜி.ஆர். நகர், கிண்டி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் அய்யனார், அன்பு தனசேகர் ஆகியோர் உட்பட சென்னை கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். காலை உணவை, தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் வழங்கினார். சென்னை மாவட்ட கழகம் சார்பில் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
பொள்ளாச்சி : திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில், பொள்ளாச்சி பேருந்து நிலையத்தின் முன்பு தந்தை பெரியாரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு கொள்கைகள் தோழர்களால் முழக்கமிடப் பட்டது.
நிகழ்வு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட செயலாளர் வே.வெள்ளிங்கிரி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில், தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் வழக்குரைஞர் பிரபாகரன், அஜித், மக்கள் விடுதலை முன்னணி தலைவர் இராசாய்யா, தம்பு, தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் இராவணன், கிரேட் களி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், ஆறு கேசவன் லோகநாதன், பிரகாஷ், திராவிட இயக்கத் தமிழர் பேரவை வெற்றிவேல், நவீன்குமார், பூஞ்சோலை அறக்கட்டளை தட்சிணா மூர்த்தி, தமிழ்நாடு மாணவர் கழகம் சபரி கிரி, தமிழ்நாடு மாணவர் மன்றம் பிரசாந்த் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இதில் வினோதினி, சிவா, சுரேஷ் குமார், வசந்த் ஆகிய பல்வேறு அமைப்புகள் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.
கோவை நகரம்: தலைவர் பெரியாரின் 48ஆவது நினைவு நாளை ஒட்டி காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் இராஜாமணி தலைமையில் மாலை யிட்டு கொள்கை முழக்கங்கள் எழுப்பி நிலா அறிவரசு உறுதிமொழி கூற அனைத்து தோழர்களும் உறுதி மொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் பன்னீர்செல்வம், நேருதாசு, வெங்கட், நிர்மல், மாதவன் சங்கர், கிருஷ்ணன், புரட்சி தமிழன், சதீஷ், மணிராஜ், துளசி, இயல், ஜெகதீஷ், கவிதா, ரவி, தங்கராஜ், சிவராஜ் கலந்து கொண்டனர். தோழர்களுக்கு ஜெகதீஷ் கவிதா தேநீர் வழங்கினர்.
சவுரிபாளையம்: சவுரிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பெரியார் பற்றாளர் டிட்டோ போட்டோஷ் உரிமையாளர் சிவராஜ் அவர்கள் ஏற்பாட்டில் பெரியார் படத்திற்கு மாலையிட்டு கொள்கை முழக்கங்கள் எழுப்பி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர் .
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் திராவிடர் கழகத் தோழர்களும் திராவிடர் விடுதலைக் கழக தோழரும் இணைந்து பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் இராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
திருச்செங்கோடு : பெரியாரின் நினைவு நாளை ஒட்டி, திருச்செங்கோடு நகர கழகம் சார்பாக காலை 8 மணியளவில் நகரச் செயலாளர் பூபதி தலைமையில், திருச்செங்கோடு நகர பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரியாரின், ‘பெண் ஏன் அடிமையானாள்’ 500 நூல்கள் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 30122021 இதழ்