திருச்செங்கோட்டில் பெரியார் பிறந்த நாள் விழா
பெரியார் பிறந்தநாளை ஒட்டி, 17.09.2022 அன்று காலை 9 மணியளவில், திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பெரியார் சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர். பின்னர் 10 மணியளவில், திருச்செங் கோடு நகர செயலாளர் பூபதி தலைமையில், அண்ணாசிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு, திராவிட முன்னேற்ற கழகம், ஆதித்தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை இயக்கங்கள் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. திமுக சார்பில் திருச்செங்கோடு நகர் மன்றத் தலைவர் நளினி, துணைத் தலைவர் கார்த்தி, ஒன்றிய கவுன்சிலர் திருநங்கை ரியா, ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் செல்வ வில்லாளன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெரியார் முழக்கம் 06102022 இதழ்