கழக ஏட்டுக்கு ரூ.15,000 சந்தா!
தமிழ்நாடு அரசால் தந்தை பெரியார் விருது பெற்ற திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர், புரட்சி பெரியார் முழக்கத்தின் ஆசிரியர் விடுதலை ராசேந்திரன் அவர்களுக்கு, நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் சாமிநாதன் சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது புரட்சிப் பெரியார் முழக்க சந்தா தொகையாக 15,000 ரூபாயும், கழக வளர்ச்சி நிதியாக 1000 ரூபாயும் வழங்கினார். சந்திப்பின்போது தோழர் சந்திரா, தோழர் பிரகாசு ஆகியோர் உடனிருந்தனர்.
பெரியார் முழக்கம் 13032025இதழ்
