பள்ளிபாளையம் தோழர்கள் மீதான வழக்குகளும் ரத்து!

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த மனிதத் தன்மையற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்றைய அதிமுக அரசு தோழர்கள் மீது பொய் வழக்குகளை போட்டது. அதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி விஜேந்திரனை கண்டித்து கொடும்பாவி எரிப்புப் போராட்டம் பள்ளிபாளையத்தில் நடத்தப்பட்டது. திருச்செங்கோடு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரண்டு வழக்குகளிலும் கழகத் தோழர்கள் சரவணன், முத்துப்பாண்டி, கோபி, தியாகு, அஜ்மீர் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர் குமாரபாளையம் வழக்கறிஞர் கார்த்தி அவர்கள் சிறப்பாக வாதாடி தோழர்களை விடுவித்தார்.
பெரியார் முழக்கம் 17042025இதழ்

You may also like...