ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் கொளத்தூர் மணி பங்கேற்றார்

பெரியார் தொண்டர் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் ஜூன் 15ஆம் தேதி மாலை குடந்தை பவளம் திருமண மண்டபத்தில் நடந்தது. ‘கீதாலயனின் நினைவுகள் சட்டக் கல்வி மய்யம்’ சார்பில் நடந்த இந்த நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று தோழர் ஆர்.பி.எஸ். ஸ்டாலின், பெரியாரியலுக்கு ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்தார்.   இந்த நிகழ்வில் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன், சோழபுரம் கலியன், சாக்கோட்டை இளங்கோவன், வழக்கறிஞர் விவேகானந்தன்,  பேராசிரியர் ஜெயராமன், எஸ்.எம். ஜெயக்குமார் (அ.ம.மு.க.), வழக்கறிஞர் ஜார்ஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

பெரியார் முழக்கம் 20062019 இதழ்

You may also like...