மயிலாடுதுறை மா.க. கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு; நினைவு நூல் வெளியீடு

திராவிடர் விடுதலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகியோரின் மூத்த சகோதரர் மா.க. கிருட்டிண மூர்த்தி (85) ஆகஸ்டு 19ஆம் தேதி முடிவெய்தினார். கூட்டுறவுத் துறையில் இணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற

மா.க. கிருட்டிணமூர்த்தி, தீவிரமான பெரியாரிஸ்ட். தனது சகோதரர்களை பெரியார் இயக்கத்தை நோக்கிக் கொண்டு வந்தவர். அவரது விருப்பப்படி உடல் புதுச்சேரி ‘மகாத்மா காந்தி’ அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. படத்திறப்பு நிகழ்வு ஆகஸ்டு 29 அன்று மயிலாடுதுறை வாசுகி மகாலில் மாலை 6 மணியளவில் நடந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். திராவிடர் விடுதலைக்கழகத் தோழர்களும் திராவிடர் கழகத் தோழர்களும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் நண்பர்களும் உறவினர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

நிகழ்வில்  மா.க. கிருட்டிணமூர்த்தி மகன் கி. தளபதிராஜ் எழுதிய ‘விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?’ என்ற நூல் வெளியிடப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் வெளியிட எழுத்தாளர் மதிமாறன் நூலைப் பெற்று நூல் குறித்து திறனாய்வு செய்தார்.  மா.க. கிருட்டிணமூர்த்தி அவர்களைப் பற்றி அவரது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் எழுதிய நினைவுக் குறிப்புகளின் தொகுப்பு ஒரு நூலாக வெளியிடப்பட்டது.  மா.க. கிருட்டிணமூர்த்தியின் பேரன் பேத்திகள் நூலைப் பெற்றுக் கொண்டனர்.

பெரியார் முழக்கம் 0509209 இதழ்

You may also like...