பேராவூரணியில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்
பேராவூரணியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேராவூரணி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட அமைப்பாளர்
சித. திருவேங்கடம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பா. பாலசுந்தரம், திராவிட முன்னேற்றக் கழகம்
க. அன்பழகன், திராவிடர் கழகம் இரா. நீலகண்டன், காங்கிரஸ் கட்சி ஷேக். இப்ராஹிம், அறநெறி மக்கள் கட்சி ஜேம்ஸ், மனிதநேய ஜனநாயக கட்சி அப்துல் சலாம், திராவிடர் விடுதலைக் கழகம் நாவலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
‘பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்’ என்ற தலைப்பில் தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் கோ. திருநாவுக்கரசு, கல்வியாளர்கள் கே.வி. கிருஷ்ணன், புலவர் சு போசு, தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு நீலகண்டன், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் முனைவர் ஆ. ஜீவா, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேலுச்சாமி, காங்கிரஸ் கட்சி சாதிக் அலி, திராவிடர் விடுதலைக் கழகம் கலைச்செல்வன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக மக்கள் புரட்சி கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி விதை நெல் இலக்கியக் கூடம், தமிழ்வழிக் கல்வி இயக்கம், அறநெறி மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தோழமை சமூக சேவை மையம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் வரவேற்றார். நிறைவாக வீரக்குடி ராஜா நன்றி கூறினார்.
எங்கெல்லாம் பாசிஸம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் நிலை நிறுத்தப்படும். சமூக நீதிக்கும், சமூக சமத்துவத்திற்கு எதிரான செயல்பாடுகளை மத்திய மாநில அரசுகள் நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும் என்று வலியுறுத்தப்பட்டது.
பெரியார் முழக்கம் 02012020 இதழ்