கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
16.2.2020 ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணி அளவில் தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் மீன் மார்க்கெட் அருகில் மக்கள் அரசு கட்சி பொதுச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற அக் கட்சியின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து பெருவாரியான மக்கள் கலந்து கொண்டனர். அதில் அழைக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்சித் பொறுப்பாளர்களும் உரையாற்றினார்கள். மக்கள் அரசு கட்சியின் தலைவர் வழக்கறிஞர் அருள்மொழிவர்மன் சிறப்புரை ஆற்றினார்.
அக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டி அக்கூட்டத்தின் நோக்கத்தையும், மக்கள் இந்த நேரத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டியதின் மிக முக்கியமான தேவையையும் வலியுறுத்தி நல்லதொரு கண்டன உரையாற்றினார்கள். கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாச்சியார்கோயில் கிளையின் சார்பாக மூன்றாவது தவணையாக கழகக் கட்டமைப்பு நிதிக்காக ரூ.20,000/- கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது.
இரவு 10.35 வரை நடந்த கூட்டத்தில் மக்கள் திரள் கலையாமல் இருந்து செய்திகளை செவிமடுத்தது என்பது சிறப்பு / இறுதியாக மக்கள் அரசு கட்சியின் குடந்தை ஒன்றிய செயலாளர் பாரதி நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 20022020 இதழ்