தமிழ்நாடு மாணவர் கழக மாணவர்கள் சாதனை

நாசா, ஐஏஎஸ்சி, எஸ்ஐஏயூ இணைந்து நடத்திய பிஎஸ்1 மற்றும் பிஎஸ்2 தொலைநோக்கிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் விண்கற்களை கண்டுபிடிக்கும் போட்டியில் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் துறையிலிருந்து சந்தியா, ஷியாம், பிரபாகர், அகிலேஷ்வரன், பிஎஸ்சி வேதியியல் துறையிலிருந்து கோபாலன் ஆகிய தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களும் இவர்களுடைய ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு.கலைச்செல்வன் அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் கூடுதல் சிறப்பாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் “3 புதிய” விண்கற்களை கண்டுபிடித்துள்ளதால் அந்த விண்கற்களுக்கு பெயர் சூட்டும் அரிய வாய்ப்பை நமது தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களுக்கு நாசா வழங்கியுள்ளது. 3 விண்கற்களில் ஒன்றுக்கு “பெரியாரியல்” சார்ந்தப் பெயரை நாசாவிடம் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் பரிந்துரைக்க உள்ளனர். இதற்கு நாசா ஒப்புதல் தரும்பட்சத்தில் வானியல் சார்ந்த ஆராய்ச்சியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் பெயர் இடம்பெறும் என்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
பெரியார் முழக்கம் 09012025 இதழ்

You may also like...