நீடாமங்கலம் – நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் 25112017

பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை ந.பசுபதியின் 12-ஆம் ஆண்டு நினைவு நாளில் *ரிவோல்ட்* நடத்தும் *நீடாமங்கலம்*நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில்  25.11.2017 மாலை 5 மணிக்கு தொடங்கியது

பெரியாரிய எழுத்தாளர் தோழர் பசு கவுதமன் அவர்கள் தலைமையேற்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் சிவகுரு வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர் சண்முகசுந்தரம் அவர்களின் ஒருங்கிணைப்பில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாலர் சாமுவேல்ராஜ், தபெதிக பிரச்சாரச் செயலர் சீனி விடுதலை அரசு, மதிமுக வெளியீட்டுச் செயலர் வந்தியதேவன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினர்
வரலாற்று ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ இரா வேங்கடாசலபதி அவர்கள் இந்நூல் வெளிவர நூலாசிரியர் எவ்வாறெல்லாம் உழைத்தார் என்றும் தான் எப்படியெல்லாம் அவரை வழிகாட்டி விரைவில் நூல் வெளிவர நெருக்குதல் அளித்தேன் என்பதை சுவைபட எடுத்துரைத்தார்
நீடாமங்கலம் நூலாசிரியர் ஆ திருநீலகண்டன் அவர்கள் தன்னுரையில் திவிக தோழர்கள் மற்றும் பெரியாரிய பற்றாளர்கள் இந்நூல் வெளிவர எவ்வோறெல்லாம் உடனுதவினார்கள் என்றும் தான் எவ்வோறெல்லாம் நூல் வெளிவர களவுழைப்பை செலுத்தினேன் என்றும் விரிவாக எடுத்துரைத்தார்

இறுதியில் கழக தலைவர் அவர்கள் அன்றைய தஞ்சை மாவட்டத்தின் சாதிய சூழல் குறித்தும் பண்ணையார்கள் மிராசுகளின் ஏகபோகம் குறித்தும் காங் செல்வாக்கு, விவசாய கூலி தொழிலாளர்களின் நிலை  பற்றியும் எடுத்துரைத்தார். நீடாமங்கலம் நூல் போன்று திராவிடர் இயக்கத்திற்கு ஆராய்ச்சி வடிவில் பல்வேறு நூல்களை ஆய்வறிஞர்கள் படைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

image1-1

You may also like...