Category: அண்மைச் செய்திகள்

‘பராசக்தி’ படக்குழுவைப் பாராட்டுவோம்!

‘பராசக்தி’ படக்குழுவைப் பாராட்டுவோம்!

“இந்தித் திணிப்பு எதிர்ப்பை மக்களிடம் கொண்டு செல்வதில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது பராசக்தி. கேன்பரே (ஆஸ்திரேலியா) நகரில் படத்தைப் பார்த்தபோது பொதுநிலையில் உள்ளவர்கள் அனைவரும் படத்தைப் பாராட்டினார்கள். இது படத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி. படத்தின் இறுதியில் இருமொழிக் கொள்கையை அண்ணா அறிவிக்கும் காட்சி உணர்ச்சிமயமானது, படத்தின் திசை வழியை தெளிவாக உணர்த்திவிட்டது. தெலுங்கை தாய்மொழியாக் கொண்ட கதாநாயகி இந்திக்கு எதிராக தாய்மொழியின் தேவையைப் பேசுவதோடு போராட்டக்களத்திலும் நிற்கிறார். சௌராஷ்ட்ரா மொழி பேசும் இளைஞர் இந்திக்காக உயிர் துறக்கிறார். திராவிடர் இயக்கம் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் மேற்கு வங்கத்திலும் தீயாகப் பற்றியதை படம் உணர்வோடு பேசுகிறது. மும்மொழித் திட்டம், நவோதயா பள்ளி என்று தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க நினைக்கும் சங்கிகள் இனி வாய்திறக்க முடியாத சம்மட்டி அடியை கொடுத்திருக்கிறது பராசக்தி. காலத்திற்குத் தேவையான ஒரு அரசியல் கருத்தை மிகச் சிறந்த திரைமொழியில் உணர்வுகளோடு மக்கள் முன் சமர்ப்பித்த...

நிமிர்வோம் அரங்கில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

நிமிர்வோம் அரங்கில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சனவரியில் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் முதன்முதலாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் இடம்பெற்றுள்ளது. அரங்கு எண் 10 நிமிர்வோம் பதிப்பகத்திற்கு ஒதுக்கப்பட்டது. திராவிட இயக்கத்தின் பணிகள், லட்சியங்கள், செயல்பாடுகளை விவரிக்கும் வகையிலும், திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனங்கள், அவதூறுகளுக்கு பதிலடி தரும் வகையிலும் வெளியீடுகள் நிமிர்வோம் பதிப்பக அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நிமிர்வோம் அரங்கை ஆர்வத்துடன் பார்வையிட்டு, முன்னாள் வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்துடன் செல்பி எடுத்துக்கொண்டு, நூல்களையும் வாங்கிச் செல்கின்றனர். அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் நிமிர்வோம் அரங்கிற்கு தவறாமல் வருகை தருகின்றனர். புத்தகக் காட்சி தொடங்கிய முதல் 5 நாட்களிலேயே நிமிர்வோம் அரங்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நூல்கள் விற்பனையாகியுள்ளன. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் அரங்க...

குடியுரிமையை பறிக்கும் கூட்டுச்சதி எஸ்.அய்.ஆர்.!

குடியுரிமையை பறிக்கும் கூட்டுச்சதி எஸ்.அய்.ஆர்.!

விசிக சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு எஸ்.அய்.ஆர் (S.I.R) குடியுரிமை பறிக்கும் கூட்டுச்சதி விளக்கத் தெருமுனைக் கூட்டம் டிச-7, 2025 அன்று மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் ரூதர்புரம்.அ சுரேசு ( 125 வட்டச் செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) எஸ்.அய்.ஆர் குறித்தும் சனாதன எதிர்ப்பு களத்தில் தமிழ்நாடு எப்படி பயணிக்கிறது என்பது பற்றியும் கருத்துரையாற்றினார். யூதர் சு.கார்த்திக் (மண்டலச் செயலாளர்), வழக்கறிஞர் பி.சாரநாத் (மாவட்டச் செயலாளர்) மற்றும் பல்வேறு விசிக நிர்வாகிகள் உரையாற்றினார்கள். கழகத் தோழர்கள் குமார், பிரசாந்த் (முழக்கம் செய்தியாளர்) மற்றும் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 08012026

தோழர் லலிதா நினைவுநாளையொட்டி ஏழை – எளியோருக்கு உணவு!

தோழர் லலிதா நினைவுநாளையொட்டி ஏழை – எளியோருக்கு உணவு!

சென்னை கழகத் தோழர் புருஷோத்தமன் இணையர் லலிதாவின் நினைவு நாளையொட்டி, டிச-4, 2025, அவருடைய நந்தனம் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), கு. அன்பு தனசேகர் (தலைமைக்குழு உறுப்பினர்), இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, இராவணன் (மாவட்ட துணைச்செயலாளர் ), ப.அருண் ( மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), மயிலாப்பூர் பகுதித் தோழர்கள் மனோகர், சிவா, சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), சே. ராஜேஷ் (பகுதிச் செயலாளர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்), தோழர்கள் சைதை சிவா, தினகரன், இரண்யா, குறளரசி உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். புருஷோத்தமனின் மகனும் திரைப்பட இயக்குநருமான அருண் பிரபு, பேத்தி அனுகீர்த்தி அனைவரையும் வரவேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்...

குடிமங்கலத்தில் பெரியார் நினைவுநாளில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

குடிமங்கலத்தில் பெரியார் நினைவுநாளில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் தந்தை பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று “மனிதம் நமது அடையாளம் ; ஜாதி என்பதுஅவமானம்” எனும் தலைப்பில் மடத்துக்குளம் ஒன்றிய மாவட்டக் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கணக்கன் (மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர்) தலைமை தாங்கினார். சிவானந்தம் (மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர்), கடத்தூர் அய்யப்பன் (மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 11:00 மணிக்கு குடிமங்கலம் நான்கு சாலை சந்திப்பு, மதியம் 12.00 மணி அளவில் கொங்கல் நகரம் பேருந்து நிறுத்தம் அருகில், மாலை 03.00 மணியளவில் பெதப்பம் பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் என் மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. துரைசாமி (கழகப் பொருளாளர்), பரிமள ராசன் (சமூக வலைதள பொறுப்பாளர்), முகில் ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), முத்து (திருப்பூர் மாநகர அமைப்பாளர்), தமிழ் அமுதன் ( மார்க்சிய சிந்தனையாளர்), வழக்கறிஞர்.பெரியார்தாசன் (ஆதித்தமிழர் பேரவை), ஈழவேந்தன்...

பெரியார் நினைவுநாளில் கழகம் மரியாதை!

பெரியார் நினைவுநாளில் கழகம் மரியாதை!

கோவை: பெரியார் நினைவு நாளையொட்டி டிச.24 அன்று காந்திபுரம் பெரியார் சிலை முன்பு காலை 9.30மணிக்கு கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. ஏற்காடு: டிசம்பர்-24 அன்று கழகப் பொறுப்பாளர் ஏற்காடு பெருமாள் தலைமையில் தந்தை பெரியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. சேலம் கிழக்கு: 24.12.2025 காலை 10.00 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் உருவச்சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), முத்துமாணிக்கம் (கிழக்கு மாவட்ட அமைப்பாளர்), ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்), ரமேஷ்(இளம்பிள்ளை நகரத் தலைவர்), மோகன்ராஜ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்), தேவராஜ் (சேலம் மாநகர அமைப்பாளர்), வெற்றிமுருகன்(மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), பிரபு(சேலம் மாநகர பொருளாளர்) மற்றும் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம்...

பெரியார் ஒருவர்தான் பெரியார்!

பெரியார் ஒருவர்தான் பெரியார்!

சனவரி 3-ஆம் தேதி மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரியாரைப் போற்றுவோம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய சீமான் பெரியாரைத் தரக்குறைவாக விமர்சித்தும், தமிழ்நாட்டுக்குப் புதிதாக பல பெரியார்களை அறிமுகம் செய்தும் வைத்திருக்கிறார். ஜாதி ஒழிப்புக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பெரியாரை ‘பெரியார்’ என ஏற்க முடியாது எனக்கூறும் இவர், புதிதாக பட்டியலிட்டிருக்கும் பலர் எத்தனை முரண்பாடுகளாக இருக்கின்றனர் என்பதை தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். “ஜாதிய பாகுபாடுகளை எதிர்த்ததால், கொலை செய்யப்பட்ட இம்மானுவல் சேகரனாரும் பெரியார்! அவர் கொலைக்கு காரணமான பசும்பொன்னும் பெரியார்! “தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து செத்தே போன சங்கரலிங்கனாரும் பெரியார்! பெயர் வைக்க மறுத்த காமராஜரும் பெரியார்!! தமிழ்தான் வழிபாட்டு மொழி என்ற பெருஞ்சித்திரனாரும் பெரியார்! சமஸ்கிருத மந்திரங்கள் தேவை என்ற மபொசியும்...

பெரியார் முழக்கத்திற்கு வளர்ச்சி நிதி!

பெரியார் முழக்கத்திற்கு வளர்ச்சி நிதி!

கழகத் தோழர் இரண்யா ரூ.2000 பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக முழக்க வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார். கழகத் தோழர்கள் ரம்யா – பிரகாசு இணையரின் மகள் சிறகியின் முதலாவது பிறந்தநாள் விழா கழகத் தலைமை அலுவலகத்தில் 02.01.2026 அன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியின்போது, புரட்சிப் பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.3,000-அய், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதியிடம் வழங்கினர். தோழர் இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) அவர்கள் ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் 100 முழக்கத்துக்கான சந்தா தொகையை ரூ.30,00 வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார். கழகத் தோழர் கனி-இலக்கியா இணையர்கள்  50 பெரியார் முழக்கம் சந்தா மற்றும் தொகை ரூ.15000அய் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் ஒப்படைத்தார்.  நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (- ஆசிரியர்). பெரியார் முழக்கம் இதழ் 08012026

ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக ஓயாது பரப்புரை!

ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக ஓயாது பரப்புரை!

ஆகஸ்ட் 01: விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால் மதக் கலவரத்தை தூண்டும் சங் பரிவார் அமைப்புகளைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் காவல்துறையிடம் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 03: சேலம் மாவட்டம் மேச்சேரியில் இளைஞர் அணி சார்பில் பெரியார் என்னும் பெரு நெருப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மில்டன், யூ2புரூடஸ் மைனர், இந்திரகுமார் தேரடி கருத்துரை வழங்கினர். கழகத் தலைவர் நிறைவுரையாற்றினார். ஆகஸ்ட் 06: ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரியும், கவின் படுகொலைக்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தரக்கோரியும் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 08: குடியாத்தத்தில் குடிஅரசு மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. ஜாதி மறுப்பு மற்றும் விதவை மறுமணம் செய்துகொண்ட இணையர்கள் இந்நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர். கழகத்தலைவர் சிறப்புரையாற்றினார். ஆகஸ்ட் 09: சமூக நீதி எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் படத்திறப்பு நிகழ்ச்சி தேவநேயப் பாவாணார் அரங்கத்தில் நடைபெற்றது....

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

ஈரோட்டில் கழகத் தோழர்கள் உடல் உறுப்புதானம்

ஈரோட்டில் கழகத் தோழர்கள் உடல் உறுப்புதானம்

ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் 24.12.2025 அன்று ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இறப்புக்குப் பின் தங்களது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் தங்களுடைய உடல்களை முறைப்படி உடல் தானம் செய்தனர். இரத்தினசாமி, சண்முகப்பிரியன், சென்னிமலை செல்வராசு, திருமுருகன், மரவப்பாளையம் குமார், கோபிநாத், நல்லதம்பி, சி.எம். நகர் பிரபு, சுரேஷ், ராசண்ணா, மீசை முருகேஷ், கண.குறிஞ்சி இசைக்கதிர் ஆகிய 13 தோழர்கள் சட்ட முறைப்படி உடல் தானம் கொடுக்க முன்வந்துள்ளனர். பெரியார் முழக்கம் இதழ் 01012026

கழகத் தோழர் காவை.இளவரசன் அவர்களின் தாயார் மறைவுற்றார்!

கழகத் தோழர் காவை.இளவரசன் அவர்களின் தாயார் மறைவுற்றார்!

கழகத் தோழர் காவை. இளவரசன் அவர்களின் தாயர் சரசுவதி உடல் நலக்குறைவால் 17.12.2025 மாலை 4.00 மணியளவில் மறைந்தார். அவர்களின் இறுதி நிகழ்வு 18.12.2025 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் காவலாண்டியூர் இளவரசன் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்தார். கழக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் மறைந்த சரஸ்வதி அம்மாள் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்றனர். இதில் கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 01012026

களப்போராளிகளை நினைவுகூர்ந்து பொதுக்கூட்டம்!

களப்போராளிகளை நினைவுகூர்ந்து பொதுக்கூட்டம்!

பெரியாரின் 52வது நினைவுநாளில் (24/12/25), கழகப் பணியில் உயிர்நீத்த தோழர்கள் கண்ணன் – குமாரின் 20-ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம், சென்னை ராயப்பேட்டை வெங்கடாசலம் தெருவில், மாலை 6 மணியளவில் சு. பிரகாஷ் தலைமையில், தோழர்கள் ப. கணேசன், ரா. குட்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இரா. உமாபதி – வீரமணி – திராவிட மகிழன் குழுவினரின் பாடல்களும், சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சியும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. 60 பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தபசி குமரன் (கழக தலைமை நிலையச் செயலாளர்), கு. அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), ரூதர் கார்த்திக் (விசிக தென்சென்னை மண்டலச் செயலாளர்), கழகத் தோழர் அறிவுமதி ஆகியோர் கருத்துரையாற்றினர். கருத்துரையாற்றிய ரூதர் கார்த்திக் அவர்களுக்கு கழகத் தோழரும், கண்ணன் குமார் நண்பரும், அவர்களது விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்த வீரமுத்து, கழக வெளியீடுகளை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும்...

பொள்ளாச்சி, ஈரோடு, மயிலாப்பூரில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

பொள்ளாச்சி, ஈரோடு, மயிலாப்பூரில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

பொள்ளாச்சி: தந்தை பெரியார் நினைவு நாளான டிச-24 அன்று ஜாதி தீண்டாமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தெருமுனைக் பரப்புரைக் கூட்டங்கள் பொள்ளாச்சி ஆனைமலை வேட்டைக்காரன் புதூர் பகுதியில் வே.வெள்ளிங்கிரி தலைமையில் நடைபெற்றது. பாடகர் கண்ணையன், வழக்கறிஞர் சேதுபதி (தமிழ்நாடு தன்னுரிமை மீட்பு இயக்கம்), தமிழ் குமரன் (ஜெய் பீம் அறக்கட்டளை), பிரபா (மே 17 இயக்கம்), பிரபாகரன் (திராவிட இயக்க தமிழர் பேரவை), வழக்கறிஞர் ரிசி (தமிழ்ப்புலிகள் கட்சி), பொறியாளர் பரமசிவம், (திக), ராஜ்குமார் (திமுக இலக்கிய அணி), முத்தமிழன் (மக்கள் விடுதலை முன்ணனி), சபரிகிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்) மற்றும் கழகத் தோழர்கள் ஆனந்த், அரிதாஸ், நடராஜ் மணி தோழமை அமைப்புத் தோழர்கள் பங்கேற்றனர். ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 21.12.2025 ஞாயிறு மாலை 6 மணி அளவில் அம்மாப்பேட்டை ஒன்றியம் குருவரெட்டியூர் பகுதியில் “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்”...

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஆள்பிடித்தாரா பெரியார்?  ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (9) – கொளத்தூர் மணி

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஆள்பிடித்தாரா பெரியார்? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (9) – கொளத்தூர் மணி

தோழர் ஜீவாவால் எழுதப்பட்ட ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூல் 1947 டிசம்பர் முதல் 1948 பிப்ரவரி முடிய மூன்று மாதங்கள் பொதுவுடைமை இதழான ‘ஜனநாயகத்’தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்பதை நாம் முன்னரே பார்த்தோம். அதில் 1946-இல் நடந்த சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலையொட்டி எழுதப்பட்ட சில செய்திகளை அந்த நூலில் இருந்து எடுத்து, கீழே கொடுத்திருக்கிறோம். “ஜாதி ஒழிப்பு, மதவொழிப்பு விஷயங்களை முக்கியப்படுத்தி திராவிடர் கழகத்தில் நல்ல அபிப்பிராயத்தோடும், பற்றுதலோடும் இருந்த இளைஞர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களைக் கண்டு புத்துணர்ச்சி அடைந்து வந்ததைத் தடுக்க நயமான முறைகளில் சூழ்ச்சி செய்தது. ‘ப.ஜீவானந்தம் நம் ஆள்தான்’ என்றும் ‘கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமக்கும் வித்தியாசமில்லை” என்றும் பொதுவுடைமை ஆர்வமுள்ள வாலிபர்களைத் திராவிடர் கழகம் வலை வீசிப்பிடிக்க முயன்றது” என்கிறார் ஜீவா. ஜீவா எழுதியதை நம்பி ஏற்றுக்கொண்டால், அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது; மக்களின் ஆதரவைப் பெற்று இருந்தது;...

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

தமிழ்நாடு அறிவியல் மன்ற நிர்வாகிகளான ஆசிரியர்கள் சிவகாமி, ஆசிரியர் சிவகுமார் (ஈரோடு) ஆகியோர் முன்னெடுப்பில் பெரியார் முழக்கம் வளர்ச்சிக் குழு உருவாக்கப்பட்டு, பல்வேறு தோழர்கள் மாதம்தோறும் தலா ரூ.500 வழங்கி வருகிறார்கள். அவர்களின் பெயர் பட்டியல்: தலைமைக் குழு உறுப்பினர்கள் அன்பு தனசேகர், இளையராஜா, துரை. தாமோதரன், தோழர்கள் நாத்திக ஜோதி (ஈரோடு), முத்து (திருப்பூர்), சண்முகசுந்தரம் (மயிலாடுதுறை), பிரபாகரன் (மேட்டூர்), பிரபாகரன் (பவானிசாகர்), ஜோதி (மடத்துக்குளம்), சாக்கோட்டை இளங்கோவன், அஜீத் (மேட்டூர்), அறிவழகன் (கடலூர்), வீரமணி, முத்து (சத்தியமங்கலம்), சுந்தரம் (பவானி), தினேஷ், சந்தோஷ், அறிவழகன், மலைக் கொழுந்தன், வெங்கட், வீரன், கோபிநாத், வடிவேல் ராமசாமி, செளந்தர்யன், சரவணகுமார், மதன், மகேஷ், பழனிச்சாமி கோபி, அழகர் பிரபாகரன், ஆனந்த், மாதவன், இளங்கோ, ரவி, கோடி சுந்தரம். ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். டிசம்பர் மாத நன்கொடையாக ரூ.13,500 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்). * கழகப் பொருளாளர்...

எழுத்தாளர் பாமரன் இணையர் மறைவு!

எழுத்தாளர் பாமரன் இணையர் மறைவு!

எழுத்தாளர் பாமரன் அவர்களின் இணையர் தோழர் யாழ்மொழி அவர்கள் உடல் நலக்குறைவால் 26.12.2025 அன்று இயற்கை எய்தினார். 29.12.2025 கோவை பூ மார்கெட், சிரியான் சர்ச் ரோடுல் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாரமரன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். பன்னீர் செல்வம் (கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல் (மாநகரத் தலைவர்), வெங்கட்(மாநகரச் செயலாளர்), அன்னூர் விஷ்னு, மோகன கிருஷ்ணன், நவீன் மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர். சமூக வலைதளப் பக்கத்தில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதியிருந்த பதிவில், “அன்புத் தோழர் பாமரனின் இணையர் யாழ்மொழியின் இறப்புச் செய்தி, உண்மையிலே என்னை மிகவும் பாதித்திருக்கிறது. ஒரு சில முறைதான் அவரை நான் சந்தித்திருக்கிறேன். நீண்ட காலம் பழகியது போல் உணர்வுகளையும் உரிமைகளையும் எடுத்துக்கொண்டு கலகல என்று அவர் கொட்டிய அன்பு மொழிகள் அப்படியே என் கண் முன் தெரிகிறது. அன்புத்தோழர் பாமரனை வாழ்க்கையில் அவர் சுமந்தார்....

பெரியார் பெயரை மறைப்பதா? கழகம் எதிர்வினை!

பெரியார் பெயரை மறைப்பதா? கழகம் எதிர்வினை!

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளமான ஏற்காட்டிற்கு செல்லும் வழியில் இருபது கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில் ஒவ்வொரு வளைவிற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது, அதன்படி எட்டாவது கொண்டை ஊசி வளைவிற்கு தந்தை பெரியார் அவர்களின் பெயரை நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக வைக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 24 தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவு நாளை இருட்டடிப்பு செய்ய வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு தந்தை பெரியார் வளைவு என்ற பெயரின் மீது கருப்பு மையை பூசி விட்டு அதன் மீது தகடூர் அதியமான் வளைவு என்ற பதாகையை ஒட்டி பெரியாரைப் பற்றி வசைச்சொற்களால் கூச்சலிட்டுச் சென்றனர். இந்த அராஜகச் செயலைக் கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் துறையிடமும், நெடுஞ்சாலைத் துறையிடமும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் முறையாக மனு கொடுக்கப்பட்டது, ஆனால் காவல் துறையும், நெடுஞ்சாலைத் துறையும் சேர்ந்து...

ஜாதி ஒழிப்பு இயக்கம் தொடரும்!

ஜாதி ஒழிப்பு இயக்கம் தொடரும்!

சட்டமன்றத் தேர்தல் களம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுக்கும் ஒன்றிய அரசு, மசோதாக்களை நிறுத்திவைக்கும் ஆளுநர், சிறப்புத் தீவிர திருத்தத்தின் பெயரால் சாமானியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையம், அப்பட்டமான அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் அமலாக்கத்துறை, சோதனை நடத்தி நடிகர்களை அரசியலுக்கு இழுத்து வரும் வருமான வரித்துறை என ஒன்றிய பா.ஜ.க. அரசு தரும் நெருக்கடிகளும், இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை தி.மு.க அரசு தந்திருப்பதும்தான் இந்தத் தேர்தலில் இதுதான் பேசுபொருளாக இருக்கப்போகிறது. அரசியல் களம் அதை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தை முன்னெடுத்து, பாஜகவின் சூழ்ச்சிகளை, தமிழர் விரோத கொள்கைகளை முறியடிக்க வேண்டியது அவசியமானது. எனினும் பெரியார் இயக்கத்திற்கு அடிப்படையான ஜாதி ஒழிப்பு கொள்கையை சமரசமில்லாமல் முன்னெடுக்க வேண்டியதே, மற்ற எல்லாவற்றையும் விட தலையாய கடமை. அந்த கடமையின் பொருட்டு, சேலத்தில் 2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற,...

ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம், அரங்கு எண் 10-இல் இடம்பெறுகிறது. கழகத்தின் நூல்கள், வெளியீடுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம், அரங்கு எண் 10-இல் இடம்பெறுகிறது. கழகத்தின் நூல்கள், வெளியீடுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!   தமிழ்நாடு  அரசை  வலியுறுத்தி  கோவையில்  போராட்டம்

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோவையில் போராட்டம்

2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற ‘இது தமிழ்நாடு – இளம் தலைமுறையினரின் எச்சரிக்கை’ மாநாட்டில் ‘வைக்கம் போர் முடியவில்லை’ என்ற தலைப்பில் தீர்மானம் இயற்றப்பட்டு அதனடிப்படையில் தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலெடுத்துப் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையத்திலும் மனு அளிக்கப்பட்டது. 2025-இல் கழகத் தலைமைக் குழுவில் செப்-17 முதல் செப்-24 வரை “மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் நிறைவாக கோவையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களைக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கழகத்தின் சார்பில், கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கை கோரி மாநிலம் தழுவிய போராட்டம், டிசம்பர் 29-அன்று காலை 10.30 மணிக்கு...

ஆர்வத்துடன் நிதி அனுப்பும் ஆதரவாளர்கள்!

ஆர்வத்துடன் நிதி அனுப்பும் ஆதரவாளர்கள்!

ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் டிசம்பர் 29 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள போராட்டத்திற்கு தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் பொதுமக்கள் தங்களால் ஆன ஆதரவை கொடுத்து உதவுமாறு பொதுவெளியில் சமூக ஊடகங்களில் தோழர்கள் பலரும் பதிவிட்டனர் அந்த பதிவை பலரும் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, தங்களால் முடிந்த சிறு தொகையை அவரவர் சக்திக்கு ஏற்றவாறு நிர்மல் குமாரின் கூகுள் பே எண்ணுக்கு அனுப்பி, போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவையைச் சேர்ந்த, தற்போது கத்தாரில் பணியாற்றி வரும் தோழர் ஒருவர் இந்த போராட்டம் மிக அவசியமானது எனக்கூறி, ஆர்வத்துடன் நிதி உதவி அளித்திருப்பதோடு, கழகத்தின் இந்த போராட்டத்திற்கான தீர்மானம் 2023-இல் சேலம் மாநாட்டில் இயற்றப்பட்ட சமயத்தில் இருந்து கவனித்து வருவதாக கூறியுள்ளார்....

சட்ட எரிப்பு மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

சட்ட எரிப்பு மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

1957 நவம்பர் 26 அன்று, தந்தை பெரியாரின் கட்டளைப்படி, 10,000-க்கும் மேற்பட்ட கருப்புச் சட்டைத் தொண்டர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை எரித்தனர்! 3,000 பேர் கைது செய்யப்பட்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். இதில் 18 க்கும் மேற்பட்டோர் சிறையிலும் சிறைக்கு வெளியேயும் இறந்தனர்! சுயமரியாதையை மீட்டெடுக்கவும், ஜாதியை ஒழிக்கவும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு யாழ். வெள்ளிங்கிரி தலைமையில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பாக நடைபெற்றது. பொறியாளர் பரமசிவம் (தி.க.), சண்முகவேல் பிரபாகரன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), மணிமாறன் தென்றல் (திமுக கோவை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்), வழக்குரைஞர் சேதுபதி (தமிழர் தன்னுரிமை மீட்பு இயக்கம்), கா.மாரிமுத்து (மக்கள் விடுதலை முன்னணி), தமிழ் பிரபாகரன் (மே 17 இயக்கம்), ம.கோ.சபரிகிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்) கலந்துகொண்டு சட்ட எரிப்புப் போராட்ட நினைவுகளைப் பகிர்ந்து...

அம்பேத்கர் நினைவு நாளில் மரியாதை!

அம்பேத்கர் நினைவு நாளில் மரியாதை!

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, டிச-6,2025 காலை 8 மணியளவில், ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கொள்கை முழக்கமிட்டோம். ம.கி. எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ம. குகாநந்தன், அருண் கோமதி (தாம்பரம் பகுதி அமைப்பாளர்), இமானுவேல் துரை, ஷேக் முகமது, மருத்துவர் கணேஷ், கார்த்தி ராஜேந்திரன், தீபக், மஞ்சுநாதன், மடிப்பாக்கம் அருண், புகழேந்தி, ஸ்ரீலேகா, நந்தகுமார், ராஜஸ்ரீ, ரஞ்சித், ஜெயவேல், யாழ் நிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 25122025

ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து மத நல்லிணக்க பேரணி!

ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து மத நல்லிணக்க பேரணி!

மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் நடைபெற்ற அமைதிக்கான நல்லிணக்க பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கழகத் தோழர்கள் பங்கேற்றனர். தளபதி, காமாட்சி பாண்டி, சத்தியமூர்த்தி, முருகேசன், வேங்கைமாறன், தோழர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர். அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மதச்சார்பின்மைக்கு எதிராக, மாநில உரிமைக்கு எதிராக சனாதன தீர்ப்புகளை வழங்கி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும், தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் மதவாத கும்பல்களை தடை செய்ய வேண்டும் என்றும், சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடும் மதவெறி அமைப்புகளை எச்சரித்தும் பேரணியில் முழக்கங்கள் பேரணியில் முழக்கங்கள் எழுப்பட்டன. மதவாதத்தை தூண்டி திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என அதிகாரத் திமிருடன் பேசி கலவரத்தை தூண்டும் இந்துத்துவ பயங்கரவாதிகளை கைது செய்ய இந்த பேரணி வலியுறுத்தியது. பெரியார் முழக்கம் இதழ் 25122025 =

வடசென்னையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

வடசென்னையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

“மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” முழுநாள் பிரச்சாரக் கூட்டங்கள், டிசம்பர்-15,2025 முழுநாள் ஜாதி எதிர்ப்பு பரப்புரை வடசென்னை திருவொற்றியூர் அஜக்ஸ், புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ, பழைய வண்ணாரப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோவில் ஆகிய இடங்களில் நடைபெற்றது. தோழர்கள் வடசென்னை மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. (சென்னை மாவட்டச் செயலாளர்) இரா. உமாபதி ஒருங்கிணைத்தார். தோழர்கள் உமாபதி – வீரமணிதாசன் – லோகநாதன் குழுவினரின் சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சி சிறுவர் சிறுமியரையும் கவர்ந்திழுத்தது. “சமஸ்கிருத ஆதிக்கம்” குறித்து துரை தலைமையுரையாற்றினார். “திராவிடம்தான் தமிழ் தேசியம்” என்பதை வலியுறுத்தி தொழிலாளர் சீரமைப்பு இயக்கத் தோழர் ம.சேகர் உரையாற்றினார். “பாஜகவின் போலி ஆன்மீக வேடத்தை” விசிக மண்டலத் துணைச்செயலாளர் நிலமேலவளவன் தோலுரித்துக் காட்டினார். “குடும்பமும் சடங்குகளும் பழக்க வழக்கங்களும் ஜாதியை பாதுகாக்கின்றன” என்பதை விளக்கி கழகத்தோழர்- வழக்கறிஞர் இரண்யா கருத்துரையாற்றினார். “அம்பேத்கரை உள்வாங்கும் சங் அமைப்புகளால்,...

`தேசீய கீதப் புரளி’

`தேசீய கீதப் புரளி’

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாட இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. அதையொட்டி ‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து பல்வேறு விவாதங்களும் எழுந்தன. இந்த ‘வந்தே மாதரம்’ தொடர்பாக 1937-இல் குடிஅரசு வெளியிட்ட கருத்துக்கள் இவை. ஆகஸ்டு 31ந் தேதி கூடிய சென்னை அசம்பிளி – கெளன்சில் கூட்டு சம்மேளனத்தில் “வந்தேமாதர” தேசீய கீதம் பாடியபோது இரண்டு முஸ்லீம் மெம்பர்கள் எழுந்து நிற்கவில்லையென்று தெரிய வருகிறது. காங்கரஸ்காரரான ஹிந்துக்கள் வந்தேமாதர கீதத்தை தேசீய கீதமென்றோ தேசீய ஞான சங்கீர்த்தனமென்றோ கூறிக்கொள்ளலாம். ஆனால் இதர கட்சி மெம்பர்களும் இதர சமூக மெம்பர்களும் அதை காங்கரஸ் கீதம் என்றே மதிப்பார்கள். முக்கியமாக முஸ்லீம்கள் வந்தேமாதர கீதத்தை அறவே வெறுக்கிறார்கள். எனவே “வந்தே மாதர” கீதம் பாடியபோது உட்கார்ந்திருந்த அந்த இரண்டு முஸ்லீம்களையும் குறை கூறுவதற்கில்லை. வந்தேமாதர கீதம் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “ஆனந்த மடம்” என்ற நாவலில் முதன்...

இந்தியை ஆதரிக்கவில்லையா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (8) – கொளத்தூர் மணி

இந்தியை ஆதரிக்கவில்லையா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (8) – கொளத்தூர் மணி

தோழர் பொன்னீலனின் அதே நூலில் “1953 அக்டோபரில் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளத்துக்கே உரியன” என்ற கருத்தை கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் வெளியிட்டார். இதை எதிர்த்து அக்டோபர் 14 தாமரை குளத்தில் ஆர்.சோமசுந்தரம் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜீவா இவ்வாறு கூறினார்: “தேவிகுளம் பீர்மேடு சம்பந்தமாக ஸ்ரீ ஏ.கே. கோபாலன் கூறியது அவரது சொந்த கருத்து. கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக கருத்து வெளியிடாமல் இருப்பது வரையிலும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் அவர்கள் கூறுவது கட்சியின் முடிவாகாது. தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை ‘எல்லைக் கமிஷன் முடிவுக்கு விட வேண்டியது அவசியம்’ இதுதான் கட்சியின் கருத்து” என்று கறாராக அறிவித்து விடுகிறார். வெண்டைக்காய் பதில் ஆனால் ‘சரியில்லாத ஈரோட்டு பாதை’ காட்டிய பெரியாரின் ‘விடுதலை’ ஏடு அதன் 22.11.1955 இதழில் “தேவிகுளம், பீர்மேடு தமிழ் வட்டாரங்களே! சென்னை சட்டசபையில் அமைச்சர் தந்த புள்ளிவிவரம்” என்ற தலைப்பில் செய்தி...

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

“மதவெறி பாடல் குறித்து விவாதிப்பது ஏன்?” என்ற தலையங்கத்தில், ‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து இளைய தலைமுறை அறிந்திடாத பல உள்ளார்ந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன், இதனைத் தூக்கிப் பிடிக்கும் பாஜக-வின் உண்மை நோக்கத்தையும் படம் பிடித்துக் காட்டியுள்ளது. அதேபோல், தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சட்டங்கள் தொடர்பான தோழர் அருண் கோமதி எழுதிய கட்டுரையில், அந்தச் சட்டங்கள் எவ்வாறு பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்பதை மிக அழுத்தமாகவும் திருத்தமாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய சட்டத் தொகுப்பு என்பது, இந்திய விடுதலைக்கு முன்பே (தொழிற்சங்க சட்டம் 1926-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திலேயே) தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தொழிற்சங்க உரிமைகளை, குறிப்பாக வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை அடியோடு பறித்துள்ளது. தொழிலாளர்களின் இறுதி ஆயுதமாகவும், முதலாளிகளைப் பணியவைக்கும் பலமிக்க ஆயுதமாகவும் விளங்கும் வேலைநிறுத்தத்தை ஒன்றுமில்லாமல் செய்து, தொழிலாளர் வர்க்கத்தை நவீன கொத்தடிமைகளாக மாற்றியுள்ளது. -இளங்கோவன் ஏ காரைக்குடி பெரியார் முழக்கம் இதழ் 25122025

குழப்பங்கள், குளறுபடிகளுடன் நடத்தப்பட்ட எஸ்.அய்.ஆர்.!

குழப்பங்கள், குளறுபடிகளுடன் நடத்தப்பட்ட எஸ்.அய்.ஆர்.!

தமிழ்நாட்டில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புப் திருத்தத்தில் நடந்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை தி இந்து பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. 75018 வாக்குச் சாவடிகளில் குறித்த தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 14 வாக்குச் சாவடிகளில் இளவயதில் இறந்தவர்கள் என்கிற பெயரில் நீக்கப்பட்டுள்ள வாக்குகளின் விகிதம் அசாதாரண அளவு அதிகமாக இருக்கிறது. 35 வாக்குச்சாவடிகளில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. 8,361 சாவடிகளில் நீக்கப்பட்ட பெயர்களின் விகிதம் அசாதாரண அளவு அதிகமாக இருக்கிறது. 3,907 இடங்களில் இறந்தவர்களாகக் கருதப்பட்டவர்களின் விகிதம் மிகையாக இருக்கிறது. 6,139 பாகங்களில் வீட்டில் இல்லை (absent) என்று நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 172 பாகங்களில் ‘ நிரந்தரமாக குடிமாறிப் போன பெண்கள் ’ என்கிற வகைமை சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. 50 பேருக்கும் மேல் இறந்து விட்டதாகக் கூறப்படும் 14 வாக்குச்சாவடிகளில், 50% பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள். பொதுவாக மக்கள் தொகையியல் (Demographic) கணக்குப்படி ,...

பாஜக என்றால் பம்முகிறார் விஜய்!

பாஜக என்றால் பம்முகிறார் விஜய்!

“ஈரோடு கூட்டத்திற்கு நடிகர் விஜய்க்கு பேச்சு எழுதிக் கொடுத்தவர்களுக்கு விஜய் மீது என்ன கோபமோ தெரியவில்லை. அவருக்கே ஆப்பு வைத்திருக்கிறார்கள். அதனால்தான் “மக்களுக்கு ஒன்று என்றால் ஓடிவந்து மக்களோடு நிற்பேன், மக்களை சந்தித்து அவர்கள் பிரச்சனைகளை கேட்டு அறிந்த பிறகுதான் இங்கே பேச வந்திருக்கிறேன்” என்ற டயலாக்கை விஜயை வைத்தே பேச வைத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை பனையூர் பங்களாவுக்கு அழைத்து சந்திக்கும் ஒருவரை இதைவிட கிண்டல் அடிக்க முடியாது. “விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்கள் உரிமைத்தொகை” என்று தமிழ்நாடு அரசு திட்டங்களுக்கு பெயர் வைத்துள்ளது. இதுகூட விஜய்க்கு தெரியாது என்பதை மக்களிடம் அம்பலப்படுத்துவதற்காக இலவச திட்டம் என்று திமுக கூறுவதாக பொய்யாக பேச வைத்து மக்கள் மன்றத்தில் காமெடியன் ஆக்கி இருக்கிறார்கள். விஜய் எதிர்ப்பு அரசியலை திமுக கண்டு கொள்வதே இல்லை. அவரது பெயரைக் கூட தமிழ்நாடு முதல்வர் உச்சரித்ததே இல்லை ஆனால் ஏதோ தங்கள் கட்சியைப் பார்த்து மிரண்டு...

விஷச் சிந்தனைகளுக்கு இடமளிக்கக்கூடாது!

விஷச் சிந்தனைகளுக்கு இடமளிக்கக்கூடாது!

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் டிசம்பர் 21-ஆம் தேதி பொருநை அருங்காட்சியத்தை தமிழ்நாடு அரசு திறந்துவைத்துள்ளது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடத்தில் இரும்பின் பயன்பாடு இருந்ததை, இரும்பை உருக்கி ஆயுதங்கள் தயாரிக்கும் அறிவைப் பெற்றிருந்தனர் என உலகை வியக்கவைத்தது பொருநை அகழாய்வு முடிவுகள். அதேபோல கீழடியிலும் தமிழர்களின் நாகரிகம் உயர்ந்தது என்பதற்கான அகழாய்வுச் சான்றுகள் கிடைத்துள்ளன. அங்கும் ஒரு அருங்காட்சியகத்தை திமுக அரசு அமைத்திருக்கிறது. டிஜிட்டல் வசதிகளுடன் இரு அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்தோடு கீழடி, பொருநை நாகரிகங்கள் ஒத்துப்போகின்றன என்பது மட்டுமல்ல, இரண்டு இடங்களிலும் கடவுள், மத, ஜாதி அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் வெளிநாட்டு வணிகத் தொடர்புகளுடன், ஒரு உயர்ந்த நாகரிகமாக தமிழர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகளாக அவை திகழ்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறைக்கு கற்பித்து, இடையே புகுத்தப்பட்ட ஜாதி – மதப் பாகுபாடுகளை விட்டொழித்து நாம், ஜாதியற்ற- மதமற்ற தமிழர்களாக ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்துவதுதான் கல்வித்துறையின் சேவையாக...

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!

2006-இல் காசி விஸ்வநாதர் கோயில் நிலத்துக்கு சொந்தமான இடத்தில் மசூதி கட்டுவதாக வெடித்த சர்ச்சையில், இந்து முன்னணியைச் சேர்ந்த குமார பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டனர். உண்மையிலேயே அந்த இடம் கோயில் நிலம்தானா இல்லையா என்ற வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி கலவரங்களை உருவாக்கி, அதில் இந்துத்துவ குளிர் காய்ந்துகொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ். இப்போது திருப்பரங்குன்றம் வரை இது தொடர்கிறது. ஆனால் இதில் இழப்புகளைச் சந்திப்பது ஹெச்.ராஜாவை போன்ற பார்ப்பனர்கள் இல்லை, அப்பாவி சாமானிய இந்துக்களே. குமார பாண்டியன் குடும்பத்தினரும் அப்படிப்பட்ட சாமானிய இந்துக்களே. கொலை செய்யப்பட்டவர்களில் குமார பாண்டியன் சகோதரரின் மகளான ருத்ரா இந்த பார்ப்பன சூழ்ச்சியை புரிந்துகொண்டு, பெரியாரியத்தை நோக்கி தனது திசையை திருப்பிக்கொண்டு, இப்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவையுடன் பயணித்து வருகிறார். அவர், “ஜாதி நமக்கு அவமானம்; மனிதம் நமது அடையாளம்” என்ற...

டிசம்பர் 29- கோவையில் திரள்வோம்!  ஜாதி ஒழிப்பை வெகுமக்கள் இயக்கமாக்குவோம்!

டிசம்பர் 29- கோவையில் திரள்வோம்! ஜாதி ஒழிப்பை வெகுமக்கள் இயக்கமாக்குவோம்!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், டிசம்பர் 29-ஆம் தேதி, ஜாதி தீண்டாமைக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகள் கோரி போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டுக் கிராமங்கள் இன்னமும் ஜாதியக் கட்டமைப்புக்குள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது உண்மையிலேயே ஒரு வெட்கப்படத்தக்க நிலையாகும். இன்னமும் கிராமங்களில் ஜாதி தீண்டாமைகள் எப்படி நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன, நிலைநாட்டப்பட்டு வருகின்றன, அதன் வடிவங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதையெல்லாம் கோவை, திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமம் கிராமமாகச் சென்று ஆராய்ந்து, அதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஆணையத்தின் முன் திராவிடர் விடுதலைக் கழகம் கையளித்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ‘ஜாதி ஒரு அவமானம், மனிதம் நமக்கு அடையாளம்’ என்ற ஒரு தலைப்பில் தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, மக்களிடம் ஜாதியத் தீண்டாமைக் கொடுமைகளுக்கு...

சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

கழக ஆதரவாளரான தோழர் ரஞ்சித் அவர்களின் சிற்றுண்டி கடை (SNACKIFY), இராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிலையம் அருகில் டிசம்பர்-14, 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் ப. அருண் (இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் கடை திறப்பு விழா நடைபெற்றது. இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) சிற்றுண்டி கடையைத் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ஆர்.என்.துரை (திமுக தென்சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர்) கலந்து கொண்டார். திருவல்லிக்கேணி பகுதிக் கழகத் தோழர்கள் மற்றும் ரஞ்சித் குடும்பத்தினர், நண்பர்கள் உடனிருந்தனர். புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 மாவட்டச் செயலாளரிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் இதழ் 18122025

தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

வடசென்னை கழகத் தோழர் அருள்தாஸின் தாயார் அஞ்சலை (என்கிற) அன்னை மரி முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு டிச-11, 2025 மாலை 6 மணிக்கு கே.பி.பார்க் இல்லத்தில் நடைபெற்றது. அருள்தாஸ் புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு 10 சந்தாக்களை வழங்கினார். நிகழ்வில், இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர் ), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, மற்றும் ராஜன், தினகரன், விஜயன், அசோக் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 18122025

பொள்ளாச்சி, மேட்டூரில் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி, மேட்டூரில் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய் எனும் முழக்கத்தோடு 11.12.25 அன்று மாலை பொள்ளாச்சி திருவள்ளுவர் சிலை அருகில் சனநாயகக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வே.வெள்ளிங்கிரி (திவிக) தலைமையில் நடைபெற்றது. தமிழ்க்குமரன் (ஜெய் பீம் பொதுநல அறக்கட்டளை) தொடக்க உரையாற்றினார். கோபாலகிருஷ்ணன் (தமிழ்ப்புலிகள் கட்சி), மாரிமுத்து (தி.க.), ராஜ்குமார் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), க.மாரிமுத்து (மக்கள் விடுதலை முன்னணி), மணிமாறன் (திமுக), மாறன் (மக்கள் அதிகார கழகம்), முகமது யாசின் (எஸ்.டி.பி.அய்.), மனோகரன் (சிபிஎம்), பிரபாகரன் (மே 17 இயக்கம்), வழக்கறிஞர்கள் சேதுபதி (தமிழ்நாடு தன்னுரிமை இயக்கம்), சூரியகுமார் (நீலம் பண்பாட்டு மையம்), மதி.அம்பேத்கர் (விசிக) ஆகியோர் கண்டனவுரையாற்றினார்கள். மேட்டூரில் கண்டனப் பொதுக்கூட்டம்! மேட்டூர்: மேட்டூர் நகர கழகத்தின் சார்பாக மதுரை திருப்பரங்குன்ற உச்சி பிள்ளையார் கோவில் தீப வழக்கில் தமிழ்நாட்டில் பதட்டத்தை உண்டாக்க ஒருவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து கண்டனப்...

பத்ரி வீழ்த்தப்படவில்லை, விதையாக்கப்பட்டார்!

பத்ரி வீழ்த்தப்படவில்லை, விதையாக்கப்பட்டார்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி… திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில், 1992-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மசூதி வழியாக நடத்தி, கலவரத்தில் முடிக்க முயன்றனர் சிலர். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது வி.எம்.தெரு. அடுத்த ஆண்டில் வி.எம்.தெருவுக்குள்ளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த முயன்றார் ராமகோபாலன். அந்த முயற்சியை முறியடித்து, கலவர நோக்கத்தைத் தடுத்ததுடன், ஐஸ் அவுஸ் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு எதிர்ப்பாக பெரியார் கைத்தடி ஊர்வலத்தை நடத்தி, சமூகப் பதற்றத்தை தணித்தார் பத்ரி. அதேபோல, 2001-இல் அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலின்போது இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றன மேற்குலக நாடுகள். மேடை ஏறி...

பெங்களூர் கழகத் தோழர் ந.சித்தார்த் தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு  புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு வளர்ச்சி நிதியாக  ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார்.

பெங்களூர் கழகத் தோழர் ந.சித்தார்த் தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார்.

பெரியார் முழக்கம் 18122025

ஜீவாவும் மொழி வழி மாநில சீரமைப்பும் ; ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (7) – கொளத்தூர் மணி

ஜீவாவும் மொழி வழி மாநில சீரமைப்பும் ; ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (7) – கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை பலர் எழுதி இருந்தாலும் 1946-இல் வெளிவந்த தோழர் இஸ்மத் பாஷா எழுதிய ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ மட்டும் அவர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த ஒன்றாகும். 1963 ஜனவரியில் முடிவெய்திய தோழர் ஜீவா குறித்து, ‘ஜீவா வாழ்க்கை வரலாறு’ என்ற நூல் 1966-ஆம் ஆண்டு ஜனவரியில் நிகழ்ந்த அவரது சிலை திறப்பு விழாவில் வெளியிடப்பட்டிருந்தாலும் நூலினை எழுதிய தோழர் கே.பாலதண்டாயுதம் இறுதிக்காலத்தில் ஜீவாவோடு நெருக்கமாக இருந்த ஒருவர் ஆவார். அதில் பதியப்பட்டுள்ள செய்திகள் பெரும்பாலும் ஜீவாவிடம் நேரில் கேட்டு அறிந்து கொண்டதாகவும், ஏற்கெனவே அறிந்ததை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும்தான் இருக்க முடியும். அதில் மொழி வழி மாநிலங்கள் உருவான காலத்தில் வட எல்லையிலும் சென்னை குறித்தும் தெற்கெல்லைப் போராட்டம் குறித்தும் பதிவாகியுள்ள நிகழ்வுகளின் பற்றிய உண்மைத் தன்மையைக் குறித்து திறனாய்வு செய்ய வேண்டியுள்ளது. அந்நூலின் 72 ஆம் பக்கத்தில் உள்ள “தேவிகுளம், பீர்மேடு தமிழகத்துடன் இணைய 1949-இல்...

சமூகநீதிக் கொள்கையில் உறுதிகாட்டும் ராகுல் காந்தி!

சமூகநீதிக் கொள்கையில் உறுதிகாட்டும் ராகுல் காந்தி!

பார்ப்பனர்கள் மற்றும் உயர் ஜாதி அதிகாரிகளின் பிடியில்தான் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் மய்யம் சிக்கிக் கிடக்கிறது. முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்த பதவிகளில் அனைத்துப் பிரிவு மக்களும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் ராகுல் காந்தி. கடந்த புதன்கிழமை டெல்லியில் ஒரு முக்கிய கூட்டம் நடந்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இடம் பெற்ற குழுவின் கூட்டம். தலைமை தகவல் ஆணையர், கண்காணிப்பு ஆணையர் மற்றும் 8 தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக இந்த குழு கூடியது. தகவல் தொடர்பு ஆணையர் பதவி 2023-ஆம் ஆண்டில் இருந்தும் தலைமை ஆணையர்கள் பதவி கடந்த செப்டம்பரில் இருந்தும் நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கிறது. இந்தப் பதவிகளுக்கு மோடியும் அமித் ஷாவும் தேர்வு செய்துள்ள பட்டியல்களில் பார்ப்பனர்களே அதிகம். 90 நிமிடம் நடந்த இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி இந்த பட்டியலில்...

ராமர் கால வரலாறு திரும்பாது!

ராமர் கால வரலாறு திரும்பாது!

மகளிர் உரிமை திட்டத்தை ஒரு கோடியே 30 லட்சம் பெண்களுக்கு விரிவுப்படுத்தி இருக்கிறது திராவிட மாடல் ஆட்சி. உணர்வு பூர்வமாக நடந்து முடிந்துள்ள “வெல்லும் தமிழ் பெண்கள்” விழாவில் பெண்களின் அடையாளமாக கும்மியும் கோலாட்டமும் இல்லாமல் வீரத்தையும் விளையாட்டையும் முன்னிறுத்தி பயனாளிகளின் நெகிழ்வான உரைகளோடு நடந்து முடிந்திருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியின் பெண்கள் உரிமைத் திட்டங்களை இப்போது 10 மாநில அரசுகள் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன. இதில் பாஜக ஆளும் மாநிலங்களும் உண்டு. சனாதனமும் மனுதர்மமும் பார்ப்பனியமும் ஒரே நேர்கோட்டில்தான் பயணிக்கின்றன. இதற்கான அரசியல் வடிவம்தான் இந்துத்துவம். இந்துத்துவக் கருத்துகளை வழங்கிய பார்ப்பனர்கள், சாவர்க்கரும் கோல்வாக்கரும். பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் வர்ணாசிரம சமூக அமைப்பை வலிமையாக ஆதரித்தவர்கள். வர்ணாசிரமம் பெண்களை அடிமையாக்கியது; பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும் அவர்கள் பிராமணர்களாக முடியாது; பூணூல் போட முடியாது; சூத்திரர்கள் தான் என்று பறைசாற்றியது. கல்வி உரிமையையும், சொத்து உரிமையையும் மறுத்தது. அதன் காரணமாகத்தான்...

மீண்டும் மீண்டும் கொல்லப்படும் காந்தி!

மீண்டும் மீண்டும் கொல்லப்படும் காந்தி!

2005-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், அன்றைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 100 நாட்கள் ஊரக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இது வேலைவாய்ப்பு திட்டமாக இல்லாமல், சமூகப் பாதுகாப்புத் திட்டமாக மன்மோகன் சிங் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கும் கிராமப்புற மக்களுக்கு, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் வேலைவாய்ப்பு கிடைக்காத காலங்களில், அவர்களிடத்தில் பணப்புழக்கம் இருப்பதை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே இத்திட்டம். இந்தியா முழுவதும் பல கோடி மக்களை வறுமையில் இருந்த மீட்டது இந்தத் திட்டம். ஆனால் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 11 ஆண்டுகளாகவே வேலை நாட்களைக் குறைத்து, நிதியை விடுவிக்காமல், வேலை பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைத்து இத்திட்டத்தை பாழ்படுத்தி வருகிறது. 2013-14 நிதியாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்துக்கு ரூ.39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது....

அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!

அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!

கோவை: புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில், கோவை மாநகர கழகத்தின் மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பு தபெதிக அமைத்த அம்பேத்கர் படம் முன்பு காலை 9.30 மணிக்கு கோவை தோழர்கள் புகழ் வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் நிலவும் ஜாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை உறுதியாகப் போராடுவது என்று உறுதி ஏற்றனர். பன்னீர்செல்வம், வெங்கட், நிர்மல் குமார் உரையாற்றினர் தோழர்கள் கிருஷ்ணன், மாதவன், சதீஷ், நவீன், தரணி, சத்தியமூர்த்தி, மேட்டூர் பாலு, ஆதரவாளர்கள் சங்கனூர் கார்த்தி, பரத், இலக்கியா கலந்து கொண்டு புகழ்வணக்கம் செலுத்தினர். திருப்பூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவரது நினைவைப் போற்றும் விதமாக மாநகர அமைப்பாளர் இரா. சரசுவதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஜாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கழகப் பொருளாளர் சு.துரைசாமி, வீ.சிவகாமி (தலைவர்,...

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி… எண் 61, வெங்கடாசலம் தெரு, ராயப்பேட்டை என்ற முகவரி கொண்ட ஒற்றைக் குடித்தன வாடகை வீடு, ஒரு உடைந்த நாற்காலி, ஓலைப்பாய், மர பீரோ… பத்ரி நாராயணனுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் அதற்குமேல் இல்லை. ஆனால், அவருடைய கண்ணசைவுக்கே கட்டுப்படும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை 1990-இல் உருவாக்கி வைத்திருந்தார் அவர். 1980-களில் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, பத்தாண்டுகளிலேயே பலமான கோட்டையாக ராயப்பேட்டையை மாற்றிய செயல் வீரர். ராஜீவ் காந்தி படுகொலையில் கைதாகி, 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த எழுவரை, விடுவிக்கக்கோரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி, உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டது இன்றைய...

தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி

தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி

தொழிலாளர்கள் மீது இதுவரை அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நிகழ்த்தி வந்த பல்வேறு வகையான உழைப்பு சுரண்டலை சட்டரீதியாக செய்வதற்கான ஒரு ஏற்பாடு புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பாகும். விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாக இந்நாட்டின் உழைக்கும் மக்களும் போராடிப் பெற்ற 29 சட்டங்களையும் நீக்கிவிட்டு அவற்றை நான்கு சட்ட தொகுப்புகள் ஆக சுருக்கி புதிய தொழிலாளர் சட்டங்களை நிறுவியுள்ளது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இந்த சட்டத் தொகுப்பில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்வது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்/ள்களின் கடமையாகும். இந்தச் சட்ட தொகுப்பில் உள்ள சிக்கல்களை சுருக்கமாகப் பார்ப்போம். புதிய சட்டத்தின் சிக்கல்கள்! ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதே தற்போதைய வேலை நேரமாக உள்ளது. புதிய சட்ட தொகுப்பு இதில் ஒரு முக்கிய திருத்தத்தை செய்கிறது. வாரத்திற்கு ஆறு நாள் வேலை என்பது கட்டாயம் அல்ல. மாறாக...

காதலர்களின் காவல்கோட்டை காவலாண்டியூர்!

காதலர்களின் காவல்கோட்டை காவலாண்டியூர்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வலுவான கோட்டையாக சேலம் மாவட்டம் காவலாண்டியூர் திகழ்கிறது. பாலமலையை ஒட்டியுள்ள அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள் குடும்பம் குடும்பமாக கழகப் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடெங்கும் ஜாதி மறுப்பு காதல் திருமணம் புரிவோருக்கு அடைக்கலம் தந்து, இணையேற்பையும் நடத்தி வைக்கும் சமத்துவ மண். காவலாண்டியூரைச் சேர்ந்த தலைமைக் குழு உறுப்பினரான காவை ஈஸ்வரன் இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்திவைத்துள்ளார். இதனால் ஜாதிச் சங்கங்களின் அச்சுறுத்தல்கள், கொடுந்தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளார். ஆனால் ஒருபோதும் தனது இலட்சியத்தில் இருந்து பின் வாங்கியதில்லை. இந்த வரலாறுகள் எல்லாம் நிகழ்காலத்திலேயே ஊடக வெளிச்சம் பெற்று சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. DW சேனலில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலாண்டியூரின் செயல்பாடுகள் குறித்து மிக நேர்த்தியான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. காவை ஈஸ்வரன், ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்த இணையர்களின் நேர்காணல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. சமூக ஊடகங்களில் சிறு சிறு துணுக்குகளாக இலட்சக்கணக்கோரிடம் அந்த...

மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்!

மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்!

மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்! ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புலனாய்வு செய்து ‘கேரவன்’ பத்திரிக்கை விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் ஆர்.எஸ்.எஸின் சட்டப்பிரிவான ஏ.பி.ஏ.பி. அமைப்பு நீதித்துறையில் ஊடுருவி இருக்கும் அதிர்ச்சியான தகவல்களை அதன் அதிகாரபூர்வ பதிவேடுகளில் இருந்து அம்பலப்படுத்தி இருந்தது. நீதிபதிகளாக, வழக்கறிஞர்களாக, சட்டத்துறை அதிகாரிகளாக பல்வேறு மட்டங்களில் ஊடுருவி தங்களின் இந்துத்துவா கொள்கைக்காக நீதித்துறையை பயன்படுத்தி வருகிறார்கள். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கும் தீர்ப்புகளும்,சட்டத்துக்கு எதிரான எல்லை மீறிய செயல்பாடுகளும் இதற்கு சான்றாக நிற்கின்றன. இதற்கான வெகுமதி எதிர்காலத்தில் இவர்களுக்கு காத்திருக்கிறது. அதே நேரத்தில் மதவாத சக்திகளின் மிரட்டலுக்கு பணியாமல் நேர்மையாக மனித உரிமைக்காக குரல் கொடுத்த சென்னையைச் சேர்ந்த மற்றொரு நீதிபதியை பற்றியும் குறிப்பிட வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் பழிவாங்கலுக்கு உள்ளான. இந்த நீதிபதிக்கு இப்போது ஐ.நா.மனித உரிமை ஆணையம் மிக உயர்ந்த பதவியை வெகுமதியாக வழங்கி கவுரவித்திருக்கிறது. அவரது பெயர் “சீனிவாச முரளிதர்.” பாலஸ்தீன...

மதவெறிப் பாடல் குறித்து விவாதிப்பது ஏன்?

மதவெறிப் பாடல் குறித்து விவாதிப்பது ஏன்?

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய ஜி.ஆர்.சுவாமிநாதனின் செயல் குறித்து விவாதிக்க வேண்டுமென்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அதுகுறித்து விவாதிக்க முன்வரவில்லை. சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து விவாதமில்லை, மணிப்பூர் குறித்து விவாதமில்லை, இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து விவாதம் இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த எந்த விவகாரம் குறித்தும் விவாதம் இல்லை. ஆனால் வந்தே மாதரம் பாடல் குறித்து 10 மணி நேர விவாதம் நடத்தியிருக்கிறது பா.ஜ.க. அரசு. இப்பாடல் பாடப்பெற்று 150 ஆண்டுகள் ஆனதையொட்டி, நாடு தழுவிய அளவில் நவம்பர் 2025 தொடங்கி ஓராண்டு முழுவதும் கொண்டாட சென்ற அக்டோபரில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து, ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும், ஒன்றியப் பிரதேசங்களுக்கும் ஓராண்டுத் தொடர் நிகழ்வுகளைக் கொண்டாட விரிவான செயல் திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் நாடாளுமன்றத்தில்...

மதவாத கும்பல்களின் கலவர முயற்சிகளை முறியடிப்போம்!

மதவாத கும்பல்களின் கலவர முயற்சிகளை முறியடிப்போம்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை! மதுரை திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்ய முயற்சிக்கும் பாஜக இந்து முன்னணி அமைப்புகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்! தமிழ்நாட்டின் பொது அமைதியைக் குலைத்து வன்முறைக் காடாக்கி அதில் அரசியல் லாபம் அடைய முயற்சிக்கும் மத தீவிரவாத கூட்டத்தை அனுமதியோம்! இந்துத்துவ அமைப்புகளின் கலவரம் உருவாக்கும் சூழ்ச்சியை தக்க சமயத்தில் முறியடித்து அமைதியை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறோம்! மதவாத சக்திகளுக்கு எதிரான முதல்வரின் நடவடிக்கைகளுக்கு என்றும் துணை நிற்போம்! “மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு பல நூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக முருகன் கோயில் கருவறைக்கு நேர் மேலே இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் இருக்கும் தீபத்தூணில் ஏற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. மேலும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தலைமை அர்ச்சகர் ராஜா...