பாஜக எங்கள் பண்பாட்டு எதிரி! காவியை கருப்பு, சிவப்பு விரட்டி அடிக்கும்!

தி.மு.க. என்­கிற மாபெ­ரும் இயக்கம், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்­க­ளி­டம் வரும் கட்சியல்ல. மக்­க­ளின் உரிமைகளுக்காக எப்போதும் களத்­தில் நிற்­கும் கட்சி. எங்­க­ளுக்­குத் தெரி­யும்! தமிழ்நாட்­டின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்­பாட்டின், உண்மை­யான எதிரி யார்? என்று எங்க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். அந்த எதிரியை எதிர்க்­கும் தெம்­பும், திரா­ணியும் கொண்ட ஒரே இயக்­கம் தி.மு.க என்­பது மக்­க­ளுக்­கும் நன்றாகத் தெரி­யும்!

அ.தி.மு.க. என்­கிற முக­மூ­டியை போட்­டுக் கொண்டு வந்தால், எங்­க­ளு­டைய தமிழ்நாட்டு மக்­க­ளுக்கு உங்களை அடையாளம் தெரி­யாமல் போய்­வி­டுமா? உங்­க­ளின் முகத்திரை­யைக் கிழித்து, தமிழ்­நாட்டு மக்க­ளி­டம் நாங்­கள் அம்­ப­லப்­ப­டுத்து­வோம். தமிழ்நாட்டை எப்ப­டி­யா­வது நம்மிடம் இருந்து, விழுங்கிட­லாம் என்று நினைக்­கி­றது காவிக் கூட்டம். எங்­கள் கருப்பு – சிவப்பு பட்டாளம் இருக்­கி­ற­வரை அது நடக்­கவே நடக்­காது. உங்­கள் அப்பனே வந்தா­லும் நடக்­காது. நடக்க விட­மாட்­டோம். இது அவர்­க­ளுக்­கும் நன்­றா­கத் தெரி­யும்.

அத­னால்­தான், அ.தி.மு.க. என்ற கட்­சி­யைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்­கு­கி­றார்­கள். அர­சி­ய­லில் நேர் எதிராக இருந்தாலும், அ.தி.மு.க தொண்­டர்­கள் மீது நான் உண்மையாகவே பரி­தாபப்படுகிறேன். அவர்­க­ளு­டைய உணர்­வுக்கு மாறாக கட்சி­யைக் கொண்டு போய் டெல்­லி­யில் அட­மா­னம் வைத்­து­ விட்டார் பழ­னி­சாமி. தன் சொந்த நல­னுக்­காக, சுய­ லாபத்துக்காக, எப்படியா­வது முத­ல­மைச்­ச­ராக ஆக வேண்­டும் என்ற நப்பாசையில், பழனி­சாமி அடி­மை­யா­கக் கிடக் கி­றார். அவரை வைத்து, ஒட்­டு­மொத்த அ.தி.மு.க.வையும் அழிக்­கும் வேலையை பா.ஜ.க செய்து கொண்­டி­ருக்­கி­றது.
இப்­போது கூட பீகா­ரில், என்ன நடக்கிறது என்று நாடே பார்க்கி­றதே! பீகார் மாநிலத்­தில் இது­வரை பா.ஜ.க. முத­ல­மைச்சர் இருந்ததே கிடை­யாது. நிதிஷ்­கு­மார் அவர்களை முன்­னிறுத்தி தேர்­த­லில் ஜெயித்­து­விட்டு, இப்­போது காரி­யம் ஆன­தும் அவரை ஓரங்­கட்­டி­விட்டு, பா.ஜ.க. முத­ல­மைச்­சரை உள்ளே கொண்டு வரப் போகி­றார்­கள். இதை­யே­தான் தமிழ்­நாட்­டி­லும் செய்­யலாம் என்று முயற்சி செய்­கி­றார்­கள்.
நான் அடித்­துச் சொல்­வேன்! சேலஞ்ச் செய்து சொல்­வேன்! இந்த முத்­து­வேல் கருணா­நிதி ஸ்டாலி­னும், எங்­கள் தி.மு.க.வும் இருக்­கும் வரை, பா.ஜ.க.வால் தமிழ் நாட்டை ஆள முடி­யவே முடியாது! நீங்­கள் அந்­தர் பல்டி அடித்­தாலும், என்ன முக­மூடி போட்­டுக் கொண்டு வந்­தா­லும், புதிது புதி­தாக யாரை அழைத்­துக் கொண்டு வந்­தா­லும், எத்­தனை ஏவல் அமைப்­பு களை வைத்து மிரட்­டிப் பார்த்­தா­லும், தமிழ்­நாடு எப்­போ­துமே உங்க­ளுக்கு Out Of Control–தான்!
நாங்­கள் பார்க்­காத படை­யெ­டுப்பா? தி.மு.க. பார்க்­காத மிரட்­டலா? நீங்­கள் இந்­தியா மேப்­பில் இருக்­கும் எந்த மாநி­லத்­தின் மீது வேண்­டு மா­னா­லும், காவி அடித்­தி­ருக்­க­லாம்! ஆனால், தமிழ்­நாட்­டில் உங்­கள் பாச்சா பலிக்­கவே பலிக்­காது! இங்கே எப்­போ­துமே நாங்­கள்­தான்! எங்­கள் மண்­ணில், நாங்­கள்­தான் ஜெயிப்­போம்! நாங்­கள் மட்­டும்தான் ஜெயிப்­போம்!
– திருச்சி மாநாட்டில் முதல்வர் உரை..
பெரியார் முழக்கம் இதழ் 12032026

You may also like...