Category: அண்மைச் செய்திகள்

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

குடிஅரசு வெளியிட ஏற்பட்ட தடைகள் குறித்த கழகத் தலைவரின் உரை பல புதிய தகவல்களை அறிந்து கொள்ள உதவியது. குடிஅரசு தொகுப்பில் உள்ள பல தோழர்களின் கூட்டு உழைப்பு தற்போதைய இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைகிறது. பேராசிரியர் வீ.அரசு அவர்களின் உரை ஈழப் பிரச்சனையிலும், வீரப்பன் பிரச்சனையிலும் கழகத் தலைவரின் தியாகத்தை, பறைசாற்றும் வகையில் அமைந்தது. மேலும் குடிஅரசு தொகுப்பை வெளியிட ஏற்படும் பொருளாதார செலவை சமாளிக்க தன் வீட்டையே தர முன்வந்த கழகப் பொதுச் செயலாளரின் குணம் சிலிர்க்க வைக்கிறது. குடிஅரசை தொகுக்க ஏற்பட்ட சிரமங்கள் புரட்சிப் பெரியார் முழக்கம் உரிய முறையில் ஆவணப்படுத்தி சேமித்து வைக்கப்பட வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. குடிஅரசுத் தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ளக் காரணமாக இருந்த சீர் வாசகர் வட்டத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். -அருண் கோமதி (தாம்பரம் பகுதி அமைப்பாளர்) பெரியார் முழக்கம் இதழ் 09102025

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

ஆசிரியர்கள் சிவகாமி, சிவக்குமார் முயற்சியில் ஆதரவாளர்கள் மற்றும் கழகத் தோழர்களை ஒருங்கிணைந்து வாட்ஸ்அப் குழு வழியாக புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு மாதம் ரூ. 500 என நன்கொடை திரட்டி வருகின்றனர். ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். செப்டம்பர் மாத நன்கொடையாக ரூ.15000 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்). பெரியார் முழக்கம் இதழ் 09102025

கழகத்தினர் எடுத்த பெரியார் பிறந்தநாள் விழாக்கள்

கழகத்தினர் எடுத்த பெரியார் பிறந்தநாள் விழாக்கள்

கள்ளக்குறிச்சி: மாவட்டக் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு நயனார்பாளையத்தில் தந்தை பெரியார் பள்ளியில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 10- மணியளவில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ப.அங்கமுத்து தலைமையில் மாலை அணிவித்து பெரியாரின் சிறப்புகள் குறித்து பேசப்பட்டன. இந்நிகழ்வில் க.அசன், க,மதியழகன், ஆ.நாகராசன், ந.வெற்றிவேல் ச.வீரப்பாண்டியன், ஜெயனுல்லாபுதீன், சேரன், மைக்கேல், அஜித்குமார், தண்டபாணி உள்ளிட்ட பல தோழர்களும் பள்ளி மாணவர்களும் கருப்பாயி, இலட்சுமி, வாசுகி, கோமதி, அஞ்சுகம், சாரதாமணி உள்ளிட பெண் தோழர்களும் கலந்து கொண்டனர். சங்கராபுரதில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 11 மணியளவில் ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாலை 5 மணி அளவில் கடுவனூரில் பெரியார் அம்பேத்கர் திடலில், பெரியார் பிறந்தநாள் மற்றும் தோழர்கள் பெ. கோவிந்தன் கா.கோவிந்தராஜ் சு.தினகரன் செ.விஜய் ஆகிய தோழர்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. க. இராமர் மாவட்டச் செயலாளர் தலைமை...

சென்னிமலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

சென்னிமலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பேரணி- மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை 14.09.2025 அன்று மாலை 6 மணியளவில் சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தோழர்கள் கலந்து கொண்ட வாகனப் பேரணி வெள்ளோடு மாரியம்மன் கோவில் திடலில் இருந்து மேளதாளத்துடன் தொடங்கியது. தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் பேரணிக்கு தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, கரூர் மாவட்டத் தலைவர் மோகன் தாஸ், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் சென்னிமலை செல்வராசு, திராவிடர் எழுச்சிப் பேரவை மாநிலத் தலைவர் சக்திவேந்தன், சுற்றுச்சூழல் போராளி முகிலன், கழக மாநிலப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திமுக சென்னிமலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் செங்கோட்டையன் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். பேரணி வெள்ளோடு, அனுமன்பள்ளி ,...

நாத்திகம் குறித்து தாய்-மகன் உரையாடல்   கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(18)

நாத்திகம் குறித்து தாய்-மகன் உரையாடல் கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(18)

1928 ஆம் ஆண்டு குடிஅரசு இதழில் நாத்திகம் என்னும் தலைப்பில் சித்திரபுத்திரன் எழுதிய நையாண்டி உரையாடலே இந்த கட்டுரை. சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதியவர் பெரியார். தாயும் மகனும் இதில் உரையாடுகிறார்கள் தந்தை தீவிரமான பெரியார் கொள்கைக்காரர். ‘குடிஅரசு’ அலுவலகத்திலேயே பணியில் சேர்ந்து விடுகிறார். நாத்திகப் பத்திரிகையான குடிஅரசு பத்திரிக்கைக்கு அப்பா ஏன் வேலைக்குப் போக வேண்டும்? என்று மகன் தாயிடம் கேட்கிறார். மகன் கருத்தை வைத்தே தாய் நாத்திகத்தை மகனுக்கு புரிய வைக்கிறார். இந்த உரையாடலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் இவை. இது ஒரு உண்மை சம்பவமாகவே இருக்கும் என்று கருதத் தோன்றுகிறது. உரையாடலை தூயவெழிலழகனார் என்பவர் எழுதி அதை சித்திரபுத்திரன் திருத்தம் செய்துள்ளார் என்று ‘குடிஅரசு’ குறிப்பிடப்பட்டுள்ளது. தாய்: – அப்பா மகனே, சாமி என்றால் என்ன? அதை முதலில் சொல்லு பார்ப்போம், அதாவது அதற்குப் பெயர் என்ன? ரூபம் (உருவம்) என்ன? நிறம் என்ன? குணம் என்ன?...

திருச்சியில் பேரெழுச்சியுடன் நடந்த     பெரியார் எனும் பெரும்நெருப்பு

திருச்சியில் பேரெழுச்சியுடன் நடந்த பெரியார் எனும் பெரும்நெருப்பு

திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் எனும் பெரும்நெருப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் 04.10.2025 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் திருச்சி, அருண் ஹோட்டலில் உள்ள சுமங்கலி அரங்கத்தில் தலைமைக் குழு உறுப்பினர் இரா. உமாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வி. சி. க. (திருச்சி மண்டலச் செயலாளர்) அ. க. தமிழாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி (திருச்சி மாவட்டச் செயலாளர்) ராயல் ராஜா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி (திருச்சி மாவட்டச் செயலாளர்) ராயல் சித்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர்) செ. ராஜ்குமார், ம. க. இ. க (மாநில பொதுச்செயலாளர்) கோவன், மக்கள் அதிகாரம் (மாநில பொதுச் செயலாளர்) செழியன், த. பெ. தி. க (மாநில கொள்கை பரப்புச் செயலாளர்) சீனி விடுதலை அரசு, அங்குசம் செய்திகள் (பொறுப்பாசிரியர்) பேராசிரியர். நெடுஞ்செழியன், திராவிடர் இயக்கத் தமிழர்...

ஆர்.எஸ்.எஸ்-க்கு அரசு மரியாதையா?

ஆர்.எஸ்.எஸ்-க்கு அரசு மரியாதையா?

நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ்-க்கு ஒன்றிய அரசு சார்பில் தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டு இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த அவலத்திற்கு சரியான எதிர்வினை ஆற்றி இருக்கிறார். “தேசத் தந்தையைக் கொன்ற மதவாதிகளின் கனவுகளை செயல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு, அரசு கவுரவம் வழங்குவது மிகப்பெரும் அவலம்”என்று முதலமைச்சர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் தான் காந்தியின் உயிரைப் பலி கேட்டது. * மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ் *’சுயம் சேவக்குகளாக ’பெண்களை’ நூறு ஆண்டுகளாக ஏற்க மறுக்கும் அமைப்பு. *கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமராக தொடரக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைமை விரும்பியது. கடவுளின் குழந்தை என்று மோடி தனக்கு தெய்வீக முலாம் பூசிக் கொண்டதை மோகன் பகவத் கடுமையாக எதிர்த்தார். “இனி எங்களுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு தேவையில்லை”என்று பாஜக தலைவர் நட்டா பேட்டி அளித்தார். பதவி பறிபோய்...

தேசியப் பாதுகாப்புச் சட்ட வழக்கில் கழகத் தலைவர் விடுதலை

தேசியப் பாதுகாப்புச் சட்ட வழக்கில் கழகத் தலைவர் விடுதலை

2009 – ஆம் ஆண்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தி கொலை என்று பேசாதீர்கள், ராஜீவ்காந்தி செய்த தவறுக்காக அவருக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனை என்றும், அமைதிப்படையை ஏவி எத்தனை படுகொலைகள் செய்து இருப்பார்; அதற்காக கொடுக்கப்பட்ட மரண தண்டனை அது. விடுதலைப் புலிகள் செய்திருந்தால் பாராட்டுகிறேன்; இல்லையெனில் கண்டிக்கிறேன். ஈழமக்களுக்கான பாதுகாவலர்கள் ஆன விடுதலைப் புலிகளே, நீங்கள் தானே செய்திருக்க வேண்டும். நீங்கள் செய்யாமல் வேறோருவனை ஏன் கொலை செய்ய விட்டீர்கள் என்று விடுதலைப் புலிகளைக் கண்டித்திருப்பேன் என பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. ஓராண்டுக்கான தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ச்சப்பட்டது. 3மாதம் சிறையிலிருந்தார். இவ்வழக்கை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு 16 ஆண்டு காலம் கடந்து 29.09.2025 திங்கட்கிழமை திண்டுக்கல் மாவட்டம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கழகத்...

இளைஞர்கள் புடைசூழ நடந்து முடிந்த கோவை பயிலரங்கம்!

இளைஞர்கள் புடைசூழ நடந்து முடிந்த கோவை பயிலரங்கம்!

கோவை மாவட்டக் கழகச் சார்பில் பெரியாரியல் பயிலரங்கம் 28.09.2025 அன்று கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. பயிலரங்கில் பங்கேற்ற தோழர்களின் அறிமுகத்துடன் நிகழ்வு தொடங்கியது. பயிலரங்கின் முதல் வகுப்பாக தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, இந்திய வரலாற்றில் பார்ப்பனிய எதிர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்‌.பிரபாகரன், திராவிடர் இயக்க வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பெரியார் தொண்டர் சிற்பி இராசனின் மந்திரமா! தந்திரமா! மூடநம்பிக்கை விளக்க நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜாதி ஒழிப்புப் பணியில் திராவிடர் இயக்கம் என்ற தலைப்பில் வரலாற்றுச் சிறப்பிக்க உரையை நிகழ்த்தினார். கழகத் தலைவர் முன்னிலையில் கோவையைச் சேர்ந்த மோகன் கிருட்டிணன், வழக்கறிஞர் ஆல்டன், ஹரிஹரன், கவுதம், அஜய், சுதர்சன் ஆகியோர் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்குக் கழகத் தலைவர், கழக வெளியீடுகளை வழங்கி வரவேற்றார். பயிலரங்கில்...

சினிமா மட்டுமே அரசியல் அல்ல!-விடுதலை இராசேந்திரன்

சினிமா மட்டுமே அரசியல் அல்ல!-விடுதலை இராசேந்திரன்

ஏழை எளிய விளிம்பு நிலை குடும்பங்களில் 40 உயிர்கள் பலியாகி விட்டன. கடந்த பல ஆண்டுகளாக கதாநாயகன் பிம்பத்தில் தங்கள் உள்ளத்தில் பதிந்துள்ள ஒரு உருவத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற உளவியலால் உந்தப்பட்டு இளைஞர்கள் பெண்களும் ஆண்களுமாய் கரூரில் திரணடனர். காலை 8:30 மணிக்கு விஜய் நாமக்கல் வருகிறார் என்பதால் விடியற் காலையிலே அவர்கள் வீட்டை விட்டு கிளம்பி திரண்டு வந்து விட்டார்கள். ஆனால் நடிகர் விஜய் தனி விமானத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டதே காலை 8 45 மணிக்குத் தான்; அதனால் அவர் கரூருக்கு வந்து சேர்ந்ததும் 10 மணி நேர தாமதத்திற்குப் பிறகு தான்! ஒவ்வொரு வினாடியும் உணர்வுகளால் உந்தப்பட்டு விஜய்க்காக காத்திருந்த மக்கள், அந்த உணர்வுகளின் அழுத்தத்தால் விஜய் வருகிறார் என்றவுடன் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பில் உயிர் பாதுகாப்பைப் பற்றியும் கவலைப்படாமல் மேடை நோக்கி ஓடி இருக்கிறார்கள். தங்களுடைய காலின் கீழ் மிதிபட்டுக்...

கடவுள் உண்டா? சவால் விட்ட நாத்திகர்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-17

கடவுள் உண்டா? சவால் விட்ட நாத்திகர்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-17

டாக்டர் ஆபிரகாம் கோவூர் அவர்கள் ஒரு தலைசிறந்த நாத்திகர், மனோதத்துவ நிபுணர். அறிவியல் அறிஞர். எதையும் அறிவுபூர்வமாகப் பேசி, உண்மைகளை நிலைநிறுத்திடும் ஆற்றல் வாய்ந்த ஒரு சமுதாய விஞ்ஞானி கேரளத்தில் பிறந்தவராயினும், இறுதி வாழ்க்கையை இலங்கையில் அமைத்துக் கொண்டவர். சிறீலங்காவில், கொழும்புவில்தான் 1978 செப்-18-ல் அவர் மறைந்தார். பல ஆண்டுகாலம் தமிழ் நாட்டிலும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் தீவிர பகுத்தறிவுப் பிரச்சாரம் புரிந்தவர் அவர். டாக்டர் கோவூர் “கடவுள்” உண்டு என நிரூபிப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்று சவால்விட்டார். எவர் முன் வருவார்? அப்படி ஒன்று இருந்தால் அல்லவா நிரூபிக்க முடியும்? அவரது பகுத்தறிவுப் பிரச்சாரத்தை பெரியார் இயக்கம் பயன்படுத்திக் கொண்டது. கோவூர் பலமுறை தமிழ்நாடு வந்து திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது உண்டு. கோவூர் எழுதிய தன்னுடைய சுயவரலாற்றிலிருந்து சி ல கேரளாவில் தீண்டத்தகாதவர்கள் தாங்கள் நடக்கும் வழியிருந்தால் அகன்று போய்விடுவதற்கு எச்சரிக்கையாக, நம்பூதிரிகள்...

அச்சுத்துறையில் அதிர்வலைகளை உருவாக்கிய “சீர்”

அச்சுத்துறையில் அதிர்வலைகளை உருவாக்கிய “சீர்”

ஈரோட்டில் செப்-7-ல் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு சீர் வாசகர் வட்டம் விருது வழங்கும் விழாவில் பேரா. வீ.அரசு உரையிலிருந்து… யாருக்கு பரிசு கொடுக்க வேண்டுமோ அந்த சரியான நபருக்கு பரிசு கொடுப்பதுதான் இந்த சீர் வாசகர் வட்டத்தின் நோக்கமாக அவர்கள் வரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தான் தமிழறிஞர் பொதியவெற்பனுக்கும் அதைப்போல நம் தோழர் கொளத்தூர் மணிக்கும் அவர்கள் பரிசளித்திருக்கிறார்கள். இந்த சீர்வாசகர் வட்டத்தை பற்றி ஒரு குறுகிய காணொளியும் ஒளிபரப்பட்டது. கவிஞர் தம்பி அவர்கள் பேசுகிற பொழுது சில தகவல்களையும் சொன்னார். சில முக்கியமான தகவல்களை அவர் பகிர்ந்து கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று எனக்கு ஒரு சங்கடம் இருந்தது. அவர் சொன்னார், நீங்கள் அதை சொல்லிவிடுங்கள் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். இந்த சீர்வாசகர் வட்டம் என்கிற அமைப்பு தனக்கான அறவியலை உறுதிப்படுத்திக் கொண்டு செயல்படும் ஒரு இளைஞர் பாசறை. பெருமைப்படக்கூடிய பல்வேறு பணிகளை அவர்கள் செய்துள்ளார்கள். “பெண் ஏன்...

எளிய ஆங்கிலத்தில் பெரியாரியலை பேசும் நூல் “Periyar, Caste, Nation,Socialism”

எளிய ஆங்கிலத்தில் பெரியாரியலை பேசும் நூல் “Periyar, Caste, Nation,Socialism”

பெரியாரிய மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.வி.ஆர் (எஸ்.வி ராஜதுரை) எழுதிய பெரியார் குறித்த ஆங்கில நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. “பெரியார் ஜாதி, தேசம் மற்றும் சோசலிசம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆங்கில நூல், உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. பெரியார் அம்பேத்கர் சிந்தனையாளரான வித்யாபூஷன்ராவத் என்ற ஜாதி எதிர்ப்புப் போராளி எஸ்.வி.ஆர் அவர்களிடம் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பே இந்த நூல். பெரியார், அம்பேத்கர் இடையிலான கொள்கை உறவுகள், பெரியாரின் வடநாட்டு பயணங்கள், புத்த மார்க்கம் குறித்த இவர்களது பார்வைகள், திராவிட இயக்கம் பட்டியலின பிரிவினருக்கான உறவுகள் குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. பல வரலாற்றுச் செய்திகள் இதில் குவிந்து கிடக்கின்றன. பெரியாரின் வடநாட்டுப் பயணங்கள் குறித்த விரிவான செய்திகள் இடம் பெற்றுள்ளன. 1944 தொடங்கி 1970 வரை பெரியார் கல்கத்தா, கான்பூர் (இரண்டு முறை), லக்னோ (இரண்டு முறை), டெல்லி, பம்பாய் (மூன்று முறை) மற்றும் பூனே நகரங்களுக்கு பெரியார்...

தமிழ்நாடு அரசின் 12-ம் வகுப்பு பாடத்தில் திணிக்கப்பட்டுள்ள  சனாதன கருத்துக்களை திரும்பப் பெறுக!

தமிழ்நாடு அரசின் 12-ம் வகுப்பு பாடத்தில் திணிக்கப்பட்டுள்ள சனாதன கருத்துக்களை திரும்பப் பெறுக!

தேசியகல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு எதிராக தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை என்ற ஒன்றை தமிழ்நாடு அரசு சமீபத்தில் முன்வைத்தது. தமிழ்நாடு அரசு முன்வைத்த மாநில கல்விக் கொள்கையில் பல்வேறு பிரிவுகள் தேசியகல்விக் கொள்கையை ஒத்ததாக இருப்பதாக பல்வேறு கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கிடையே தமிழ்நாடு அரசு தேசியகல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்டது போல் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கக்கூடிய தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள 12-ம் வகுப்பு “அறவியலும் இந்திய பண்பாடும்” என்கிற பாட புத்தகத்தில் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட பல்வேறு கருத்துக்கள் இந்த பாடப்புத்தகத்திலும் இடம்பெற்று இருக்கிறது. உதாரணமாக பக்கம் 53 மற்றும் 54 இல் “நவீன காலத்திற்கு வேதங்களின் ஏற்புடைமை” என்கிற தலைப்பின் கீழ் “விண்வெளியில் காணப்படும் பல்வேறு கிரகங்கள் நட்சத்திரங்கள் பற்றி விளக்கமான செய்திகள் வேதங்களில் கூறப்பட்டுள்ளன” என்றும், பக்கம்- 53-இல் “புராணங்களின் இன்றியமையாமை” என்கிற...

அல்பேனியா அரசின் அதிரடி முடிவு செயற்கை நுண்ணறிவுக்கு ஊழல் ஒழிப்பு அமைச்சர் பதவி!

அல்பேனியா அரசின் அதிரடி முடிவு செயற்கை நுண்ணறிவுக்கு ஊழல் ஒழிப்பு அமைச்சர் பதவி!

உலகில் முதன் முதலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.அய்) அமைச்சர் பதவியை ஏற்று இருக்கிறது. அந்த அமைச்சரின் பெயர் ‘டியெல்லா’. அல்பேனியா நாட்டின் பிரதமர் ஏ.டி ராமா கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தனது அமைச்சரவையில் இணைத்துள்ளார். ‘டியெல்லா’வுக்கு ஊழல் ஒழிப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அல்பேனியா இணையதளத்தின் உதவியாளராக கடந்த ஜனவரியில் நியமனம் செய்யப்பட்டது. இப்போது அமைச்சராக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முதலாக அமைச்சராக பதவி ஏற்றுள்ளது ‘டியெல்லா’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். டியெல்லாவுக்கு அல்பேனிய நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த பெண் உருவம் தரப்பட்டுள்ளது. 28 லட்சம் மக்கள் தொகை கொண்ட அல்பேனியா, ஐரோப்பாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்டது இந்த நாடு. 18 வயதுக்கு உட்பட்ட நல்ல மனநிலை உள்ள எவரும் அமைச்சராக முடியும் என்று அல்பேனியாவின் அரசியல் சட்டம் கூறுகிறது. அல்பேனியா இணையதளத்தில்...

“பெரியாரிஸ்ட்” தமிழ்செல்வி இல்லத்தில் படத்திறப்பு

“பெரியாரிஸ்ட்” தமிழ்செல்வி இல்லத்தில் படத்திறப்பு

17/9/25 – சென்னை அன்று கொளத்தூர் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் பகுதியில் வசிக்கும் தோழர் தமிழ்ச்செல்வி இல்லத்தில் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் இல்லத்தில் பதிக்கப்பட்டு இருக்கும் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து திறந்து வைத்தார் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன். கட்டுமான தொழிலதிபரான தோழர் தமிழ்செல்வி, தலித் மற்றும் இஸ்லாமியர்கள், அசைவ உணவு சாப்பிடுவோர்க்கு வீடு வழங்குவதில் முன்னுரிமையும் விலைச் சலுகைகளையும் தந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. U2 BRUTUS ஞான சத்யா, தமிழ்ச் செல்வி ஆகியோர் உரையாற்றினர். சமூகநீதி நாள் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. திவிக சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.2000 வழங்கினார். பெரியார் முழக்கம் இதழ் 25092025

பெரியார் பற்றிய சரியான புரிதலுக்கு  அவரது மூலநூல்களைப் படிக்க வேண்டும் – கொளத்தூர் மணி

பெரியார் பற்றிய சரியான புரிதலுக்கு அவரது மூலநூல்களைப் படிக்க வேண்டும் – கொளத்தூர் மணி

குடிஅரசு தொகுப்புகளை வெளியிட்ட பதிப்பாசிரியர் கொளத்தூர் மணிக்கு சிறந்த பதிப்பாளர் விருதை சீர் வாசகர் வட்டம் வழங்கியது.விருது ஏற்பு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை; கடந்த இதழின் தொடர்ச்சி. பெரியார் பட்டத்தை யார் கொடுத்தது என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பெரியார் பட்டத்தை யாரும் கொடுக்கவில்லை. 1929-ல் செங்கல்பட்டு மாநாட்டில் கடைசி தீர்மானம், இந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டி எழுப்பி இதை நடத்திக் கொண்டிருக்கிற ராமசாமி பெரியார் என்பவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 1938-ல் பெரியார் என்ற பட்டம் வழங்கவில்லை. பெண்கள் நடத்திய அந்த மாநாட்டில் ஈ.வெ.ராமசாமியை எழுத்திலும், பேச்சிலும் ‘பெரியார்’ என்று குறிப்பிட வேண்டும் என்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் என்ற பட்டம் வழங்கப்படவில்லை. தியாகராய நகர் மாதர் முன்னேற்றக் கழகம் செயலாளராக இருந்த டாக்டர் தர்மாம்பாள் தீர்மானங்களை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தை 11.11.1938-ல் விடுதலை இதழில் வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த...

“கடவுளை” ஓரம் கட்டுகிறது அறிவியல்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-16(விடுதலை இராசேந்திரன்)

“கடவுளை” ஓரம் கட்டுகிறது அறிவியல்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-16(விடுதலை இராசேந்திரன்)

நடிகர் ரோபோ சங்கர்(46 வயது) இறந்த துயரமான செய்தி வந்தது. உண்மையிலேயே இது துயரமானதுதான். இதற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர் இவ்வாறு கூறினார்; “மரணத்துக்கு எவர் மீதும் குறைகாண முடியாது. கடவுள் அவருக்கு விதித்த ஆயுள் அவ்வளவுதான், முடிந்ததும் அவர் அழைத்துக் கொண்டார்.” ஒவ்வொருவருக்கும் கடவுள் ஆயுள் காலம் நிர்ணயித்துக் கொண்டு இருக்கிறாரா?.. * இறந்து போனவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சடங்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. ஒருகாலத்தில் வீடுகளில் நடத்தப்பட்ட சடங்குகள் இப்போது பொதுநிகழ்வாக திட்டமிட்டு மாற்றப்பட்டுவிட்டன. இதனால் வேத பார்ப்பன பண்டிதர்கள் கொள்ளை இலாபம் அடிக்கிறார்கள். இதற்கு சரியான நாளாக புரட்டாசி மாதம் அமாவாசையை தேர்வு செய்து இருக்கிறார்கள். அந்த ஒரு நாளில் மட்டும் தான் வேறு உலகத்தில் இருந்தும் மூதாதையர்களுக்கு இவர்கள் தரும் தர்ப்பணம் டெலிவெரி ஆகுமாம். இப்படி ஒரு புரட்டு! அதுவும் ஆண்களுக்கு மட்டுமே இப்படி தர்ப்பணம் செய்கின்ற உரிமை உண்டு. இப்படி...

திருப்பூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

திருப்பூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

திருப்பூர் மாஸ்கோ நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக விநாயகர் சிலை வைப்பதற்கு இந்து முன்னணி அமைப்பினர் முயற்சித்தனர். திராவிடர் விடுதலைக் கழகத்தோழர்கள் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அரசு வழிகாட்டுதல் முறையில் சிலையை அகற்றுவதாக காவல்துறை தெரிவித்தது. உடனடியாக இந்தச் செய்தி புகைப்பட ஆதாரங்களுடன் காவல் துறைக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இணைய வழியாக புகாராக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் சிலையை இந்து முன்னணியினர் அகற்றவில்லை. இதை அறிந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாநகரச் செயலாளர் மாதவன் ஆகியோர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று விதிகளை மீறி வைக்கப்பட்டிருக்கும் சிலையை அகற்ற வலியுறுத்தி எழுத்துப்பூர்வமாக முறையான புகார் மனுவை அளித்தனர். அதன் அடிப்படையில் 27.08.25 அன்று காலை வைக்கப்பட்ட சிலை அன்று மாலையே காவல்துறையால் அகற்றப்பட்டது.. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை எடுத்த திருப்பூர்...

தமிழக மக்கள் முன்னணி பரப்புரை

தமிழக மக்கள் முன்னணி பரப்புரை

தமிழக மக்கள் முன்னணி சார்பாக நடத்தும் முற்றத்திகார தமிழ்நாடே முதன்மை இலக்கு என்ற முழக்கத்தோடு சென்னை மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, ராமேசுவரம், திருச்செந்தூர், ஈரோடு என 6 முனைகளில் இருந்து பரப்புரை பேரணிகள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் வந்தடைந்து 31.08.2025 மாலை 5 மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பேராசிரியர் த.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. நிலவழகன் பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பு உரையாற்றினார் தமிழ்வாணன், கண குறிஞ்சி, நிலவன், செல்வவேள், தங்க குமரவேல், பாவெல், சுப்பு மகேஷ், நாகேசுவரன், சௌ. சுந்தரமூர்த்தி, எட்வின், காஞ்சனா, குணசேகரன் ஆகிய தோழர்கள் தீர்மானங்களை வலியுறுத்தி உரையாற்றினார்கள். ஆசிரியர் தேன்மொழி, முனைவர் மா. பூங்குன்றன், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மீ. தா. பாண்டியன், தபெதிக சீனி.விடுதலை அரசு, மக்கள் கலை இலக்கியக் கழகம் கோவன், மக்கள் அதிகாரம் கழகத் குருசாமி, மார்க்சிய பெரியார் பொதுவுடைமைக் கட்சி துரை சித்தார்த்தன், திக சி. தங்கராசு, தமிழ் தேசக்...

சூரியகுமார்-காயத்ரி இல்ல மணவிழா!

சூரியகுமார்-காயத்ரி இல்ல மணவிழா!

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் கழக சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ப. கு. சூரியகுமார்- காயத்ரி ஆகியோரின் மகன் இனியன் அவர்களுக்கும், சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தை சேர்ந்த ம.சதிஷ்குமார்- ம.சுமதி ஆகியோரின் மகள் ரிதிசக்தி அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா 14.09.2025 அன்று காலை 10.30 மணியளவில் மேட்டூர், நவப்பட்டி திருமலை மாதவி மகாலில் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராஜ் வரவேற்புரையாற்றி பெரியார் பாடல்களை பாடினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் தலைமையேற்புரையாற்றி, இணையர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இணையர்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஏற்பு ஒப்பந்தம் செய்து வைத்து உரையாற்றினார். இணையர்கள் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ 25,000 கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் அவர்களிடமும், ரூ25,000 கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடமும் வழங்கினர். இறுதியாக சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ப.கு....

எதிர்ப்புகளை புறந்தள்ளி மயிலாடுதுறையில் கழகம் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

எதிர்ப்புகளை புறந்தள்ளி மயிலாடுதுறையில் கழகம் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பில் “ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்” என்ற தலைப்பில் பரப்புரைப் பயணமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. 6 பரப்புரைக் கூட்டங்களை தோழர்கள் நடத்தியுள்ளனர். முதல் நாள்: செப்-2 அன்று மாலை 4.00 மணிக்கு சீர்காழியில் மாவட்டச் செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. தபெதிக மண்டலச் செயலாளர் பெரியார் செல்வம் கலந்து கொண்டு பயணத்தின் நோக்கங்கள் வெற்றி பெற ஆதரித்து பேசினார். மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சியை துரை.தாமோதரன் செய்து காட்டி மக்களிடையே பரப்புரை பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். தலைமைக் குழு உறுப்பினர் இளையராஜா, மாவட்ட அமைப்பாளர் செந்தில், மாவட்டப் பொருளாளர் விஜயராகவன், தில்லை நாதன், சிதம்பரம் மதன்குமார், பாடாலூர் சுதாகர், மெளனி, வழக்குரைஞர் நன்மாறன், தபெதிக மாவட்டத் தலைவர் பரசுராமன், தமிழர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப்பு.மகேசு, தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் நெறியாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர்...

சென்னையில் வெற்றிநடை போட்ட ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

சென்னையில் வெற்றிநடை போட்ட ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம் என்ற தலைப்பில் கழக இளைஞரணி ஜாதி எதிர்ப்புப் பரப்புரைகளை செய்து வருகிறது. சென்னை, சேலம் மாவட்ட இளைஞரணி தோழர்கள் ஆர்வமுடன் இந்த பரப்புரைகளை நடத்தி வருகிறார்கள். சென்னையில் கடந்த 10 நாட்கள் தொடர் பரப்புரை தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. மிக நேர்த்தியாக சென்னை மாவட்டக் கழக இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ப.அருண் மற்றும் எட்வின் பிரபாகரன் இருவரும் இணைந்து பேச்சாளர்கள் மற்றும் இடங்களை தேர்வு செய்தனர். குறிப்பாக தோழமை இயக்கத் தோழர்கள், ஊடவியலாளர்கள் என பலர் சிறப்புரையாற்றினார்கள். கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள் சிலர் இந்த கூட்டங்களை தலைமையேற்று நடத்தினார்கள். இளைய தலைமுறையினரிடம் வெகுவாக இந்த கூட்டம் கவனிக்கப்பட்டது. அனைத்து தெருமுனைக் கூட்டங்களும் சென்னை மாவட்டக் கழக முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அருவி வலையொலியில் வீடியோ வெளிவந்துள்ளது. 10 நாட்களும் பாடல்கள் வழியாக, அரசியல் நையாண்டி வழியாக, பறை இசை வழியாக பொதுமக்களை கவரும்...

காசாவில் இனப்படுகொலை நிறுத்து சென்னையில் பேரணி

காசாவில் இனப்படுகொலை நிறுத்து சென்னையில் பேரணி

காசா மீதான போரை நிறுத்து என்ற முழக்கத்தோடு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை புதுப்பேட்டையில் பேரணியும் அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் 19.09.2025 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. பேரணியில் பங்கேற்று கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கண்டனவுரையாற்றினார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த இயக்கங்கள் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டனர். இளமாறன் (தமிழர் விடியல் கட்சி) ஒருங்கிணைபிபில், திருமாவளவன் (விசிக), கோவை கு. இராமகிருஷ்ணன் (தபெதிக), பேரா.ஜவாஹிருல்லா, திருமுருகன் காந்தி(மே17), நாகை திருவள்ளுவன்(தபுக), மருத்துவர் சாந்தி, மகா (மக்கள் மன்றம்), திரைக்கலைஞர்கள் பிரகாஷ்ராஜ், வெற்றிமாறன், சத்யராஜ், தீனா, அமீர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனவுரையாற்றினார்கள். பேரணியில் சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 25092025

ஜாதி பேசும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

ஜாதி பேசும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

பள்ளி மாணவர்களிடையே ஜாதிப்பாகுபாடுகளை உருவாக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. இது பாராட்டி வரவேற்கத்தக்கதாகும். இத்தகைய ஜாதி உணர்வு கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், அது பள்ளி வளாகத்தில் கடும் விளைவுகளை உருவாக்கி விடும்;‌ பள்ளிகளின் நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும் என்றும் கல்வித்துறையின் சுற்றறிக்கை எச்சரிக்கிறது. சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்: * பள்ளி நிர்வாகம் மாணவர்களின் ஜாதி அடையாளத்தை ரகசியமாக பாதுகாக்க வேண்டும். * ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையிடமிருந்து கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடாது. * இதுகுறித்து நிர்வாகம் விளக்கம் கேட்க விரும்பினால், மாணவர்களை தனித்தனியாக முதல்வர் அறைக்கு அழைத்துப் பேச வேண்டும். * மாணவர்களிடம் அலைபேசி இருந்தால் அதை பறிமுதல் செய்து பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும்....

அறிவியல் வளர்ச்சியும் பார்ப்பனியமும்!

அறிவியல் வளர்ச்சியும் பார்ப்பனியமும்!

அதிவேகமாக வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியால் நடுங்கிப் போய் நிற்கிறது வைதீக பார்ப்பனியம். பாரம்பரியம் என்ற பெயரில் தாங்கள் கட்டமைத்த சனாதன மரபுகள் சீர்குலைந்து விடாமல் காப்பாற்றும் முயற்சிகளில் அது இறங்கியிருக்கிறது. அதற்காக அறிவியலை சனாதான பழமைக்குள் தொடர்புபடுத்தும் திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக பள்ளி பாடத்திட்டங்களில் இந்த கருத்துக்களை திணிக்க தொடங்கி இருக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டாலும் ஒன்றிய ஆட்சி தமிழ்நாடு மீது திணிக்க முயிற்சிக்கிறது. தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்கமாக இந்த கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என்று மிரட்டுகிறார். தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உருவாக்கப்படும் பாடத்திட்டங்களில் “பாரதத்தின் பாரம்பரிய அறிவை முன்னிறுத்துதல்” என்ற பெயரில் மிக மோசமான பார்ப்பனிய கருத்துக்களை திணித்து வைத்துள்ளனர். இதற்காக பல்கலைக்கழக நிதி உதவிக்குழு வரைவு பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக தேசிய கல்விக் கொள்கையின்...

அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி-ஜாதி அமைப்பே தேசவிரோதி

அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி-ஜாதி அமைப்பே தேசவிரோதி

ஜாதிப் பெருமையை உயர்த்திப் பிடிப்பதுதான் தேச விரோதம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி காவல்துறை தொடர்பான ஒரு வழக்கில் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பை நீதிபதி வினோத் திவாகர் வழங்கி உள்ளார். தீர்ப்பில் கூறியுள்ளதாவது:  தேச விரோதம் எது என்று கேட்டால் அது ஜாதிப் பெருமையை பேசுவது தான் (Glorifying Caste Anti-National). சமூகத்தில் ஆழமாக புரையோடி உள்ள ஜாதி அமைப்பை முற்போக்கான சட்டங்கள், கடுமையான பாகுபாடு எதிர்ப்பு சட்டங்கள், முற்போக்கு கொள்கைகள் வழியாக சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டும்.  அரசியல் சட்டத்தின் பார்வையில் இதுதான் உன்னதமான தேசபக்தி என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.  காவல்துறை பதிவு செய்யும் வழக்கு புகார் மனு, சாட்சிப் பதிவுகள்  காவல்துறை அறிவிப்புகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் ஜாதி அடையாளங்களை முழுமையாக நீக்க வேண்டும். படிவங்களிலேயே ஜாதி என்ற...

செப்-17-ல் சென்னையில் எழுச்சியுடன் நடந்த பொதுக்கூட்டம் ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி திரளும் இளைஞர்கள்

செப்-17-ல் சென்னையில் எழுச்சியுடன் நடந்த பொதுக்கூட்டம் ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி திரளும் இளைஞர்கள்

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம், செப்-17 அன்று, மாலை 5 மணிக்கு, திவிக திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத் தலைமையில், சென்னை இராயப்பேட்டை வி.எம் தெருவில் நடைபெற்றது. கழக இளைஞரணி மற்றும் திருவல்லிக்கேணி பகுதி கழகத் தோழர்கள் இணைந்து பொதுக்கூட்ட வேலைகளை சிறப்பாக செய்திருந்தனர். பகுத்தறிவுப் பாடல்களை, “புதுவை விடுதலைக் குரல்” தோழர்கள் எழுச்சியுடன் பாடினார்கள். ராப் பாடலை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு பாடினார். திவிக மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி – பொன்ராஜ் ஆகியோரின் சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சி, மக்களின் கவனத்தைப் பெற்றது. உச்சபட்ச ஆதிக்கத்தை செலுத்தும் பார்ப்பனர்களை எதிர்க்காமல் இருப்பதற்காக, பிற்படுத்தப்பட்டவர்களையும் பட்டியலினத்தவரையும் தங்களுக்குள் மோதிக்கொள்ளச் செய்யும் சூழ்ச்சியை அம்பலப்படுத்தும் விதமாக, புராண இதிகாசங்களை மேற்கோள் காட்டி, பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புதுவை தீனா உரையாற்றினார். ஜாதி...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்வுகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்வுகள்

கவிஞர் ரம்யாதங்கம் அவர்களின் “புதுமையில் புதைந்த புதையல்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா 17.08.2025 அன்று காலை 9 மணி அளவில் லட்சுமி திருமண மண்டபம் கொளத்தூரில் நடைபெற்றது. தலைவர் மேட்டூர் தமிழ் சங்கம் ஆசிரியர் கு. பாரி, சமூக ஆர்வலர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் K. P. N. மகேஷ்வர், செயலர் இந்திய பல் மருத்துவச் சங்கம் மேட்டூர் கிளை மருத்துவர் மோ. சிவசுப்பிரமணியன், அஞ்சல் துறை (ஓய்வு) சஞ்சீவி, பொருளாளர் மேட்டூர் கிளை நூலக வாசகர் வட்டம் எழுத்தாளர் மே. கா. கிட்டு ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் நிகழ்ச்சியில் தலைமையேற்று “புதுமையில் புதைந்த புதையல்கள்” கவிதை நூலை வெளியிட்டார். பழனியப்பா சில்க்ஸ் PEP சந்திரசேகரன் அவர்கள் நூலை பெற்றுக் கொண்டார். திருப்பூர் மாவட்டம் கா. ஜோதி மற்றும் உதவி பேராசிரியர் கற்பகம் பொறியியல் கல்லூரி கோவை வி.ஜெயபிரகாஷ் இந்நூலை பற்றி உரையாற்றினர். கிருஷ்ணகிரி மாவட்டம்,...

சேலம் மாவட்டக் கழகத் தோழர்களின்  தொடர் முயற்சியால்  தமிழில் பெயர்ப்பலகை!

சேலம் மாவட்டக் கழகத் தோழர்களின் தொடர் முயற்சியால் தமிழில் பெயர்ப்பலகை!

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீராஜஸ்தானி உணவகத்தின் பெயர் பலகைகளில் தமிழ்நாட்டு அரசாணைப்படி தமிழில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் ஓமலூர் காவல் நிலையத்தில் கடந்த 01.08.2025 அன்று புகார் மனு கொடுக்கப்பட்டிருந்தது. புகாரைப் பெற்றுக்கொண்டு (18.08.2025) வரை போதிய மாற்றங்கள் ஏதும் செய்யாத நிலையில், மீண்டும் 19.08.2025 அன்று இரண்டாவது புகார் மனு அளிக்கபட்டிருந்தது. அந்த புகார் மனுவில் செப்டம்பர் 05.09.2025 தேதிக்குள் அந்த பெயர் பலகையை நடவடிக்கை எடுத்து மாற்றாத பட்சத்தில் தமிழ்நாடு அரசின் ஆணையை நிறைவேற்றும் எண்ணத்தோடு நாங்களே அந்த பலகையை அழிக்க வேண்டி இருக்கும் என்பதை புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அதனடிப்படையில் அந்த உணவகத்தின் பெயர் பலகைகளில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் புகார் மனு எதிரொலியால் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 18092025

2. அடக்குமுறைகளை எதிர்கொண்ட போராளி கொளத்தூர் மணி – பேரா.அரசு.

2. அடக்குமுறைகளை எதிர்கொண்ட போராளி கொளத்தூர் மணி – பேரா.அரசு.

ஈரோட்டில் செப்-7 அன்று சீர்வாசகர் வட்டம் சார்பில் நிகழ்ந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு விருது வழங்கும் விழாவில் பேராசிரியர் வீ.அரசு ஆற்றிய உரை; கடந்த இதழின் தொடர்ச்சி… ஏறக்குறைய 1983 தொடக்கம் முதல் 2009 வரை உருவான ஈழப் போராட்டம் தமிழ்ச் சமூகத்தில் மிக முக்கியமான போராட்டம். அதில் தோழர் மணி அவர்களுடைய பங்களிப்பு பற்றி நிறைய பேருக்கு தெரியும். இந்தத் தொகுப்பில் ஒரு முன்னுரை மாதிரி எழுதி இருக்கிறார்கள். அதில் கடைசி வரி இப்படி முடிகிறது, ”காவல் அதிகாரி எழுதி இருக்கிற ஒரு அறிக்கையில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார். இந்த மணி தனது சொந்தப் பணத்தைக் கொண்டு ஈழ விடுதலைப் போராளிகளுக்கு உதவி செய்து வருகிறார்” என்று அந்த அதிகாரி எழுதி இருக்கிறார். ‘இன்ட்ரஸ்டிங்’ ஆன செய்தி. எனக்கு தனிப்பட்ட முறையில் ஈழத்தில் பல நண்பர்கள் உண்டு, அவர்களுடனான வாழ்க்கை அனுபவங்களும் உண்டு. அப்போதெல்லாம் தோழர் மணி செய்த...

திடீர் நிகழ்வுகளுக்குக் கடவுள் காரணமா?  கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-15

திடீர் நிகழ்வுகளுக்குக் கடவுள் காரணமா? கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-15

கேள்வி: நாம் நினைத்துப் பார்க்காத ஓர் நொடிக்குள் எல்லாம் நடந்து போகிறது. அப்படியாயின், நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றுதானே பொருள்? அதனை உங்களால் நிராகரிக்க முடியுமா? பதில்: அப்படி ஓர் நொடிக்குள் நடந்து முடிவதாக நாம் கருதுகிறோம். ஆனால் அது மெய்யல்ல. “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்” -என்பார் வள்ளுவர். மென்மையான மயிலிறகுதான் என்றாலும், ஏற்றியுள்ள வண்டி, அம்மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முறிந்து கெடும். அளவு மாறும் போதும் குணம் மாறுகிறது. ஆம் மயிலிறகை ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆயினும் ஒரு கட்டத்தில்தான் அச்சு முறிகிறது. இதன் பொருள், அந்தக் கணத்தில் ஏற்றப்பட்ட ஒற்றை மயிலிறகின் பாரம் தாங்காமலா அச்சு முறிந்தது. இல்லை மயிலிறகு ஏற ஏற அச்சு இற்றுக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அதன் தாங்கும் சக்தி தகர, அச்சு முறிகிறது. அளவு மாற்றத்தால் ஏற்பட்டது குணமாற்றம். அந்த நொடியில், பாய்ச்சல்...

ஜாதிவெறிக்குப் பலியான இமானுவேல் சேகரன்

ஜாதிவெறிக்குப் பலியான இமானுவேல் சேகரன்

ஜாதி ஒழிப்புக்காக களப்பலியான இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளில் தமிழ்நாடு அரசு அவருக்கு சிலை எழுப்ப இருக்கிறது என அறிவித்துள்ளதைப் பாராட்டி வரவேற்போம். * ராணுவத்தில் தான் வகித்த பதவியை உதறி எறிந்து விட்டு மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆதிக்க ஜாதியினர் கட்டவிழ்த்து விட்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடியவர் இம்மானுவேல். * தீண்டப்படாத பட்டியலில் இருந்த பள்ளர் சமூகத்தினருக்கு ஆதிக்க ஜாதியினர் 11 அடிமைக் கட்டளைகளை திணித்திருந்தனர். * கிராமம் கிராமமாக மிதி வண்டிகளில் சென்று அந்த கட்டளைகளை மீறுவதற்கு அழைத்து சுயமரியாதை உணர்வை ஊட்டினார். * கோயில் விழாக்களில் திணிக்கப்பட்ட அடிமைச் சேவகங்களையும் தேநீர் கடைகளில் இருந்த இரட்டைக் குவளைகளையும் எதிர்த்துப் போராடினார். * ஆதிக்க ஜாதி எதிர்ப்பு என்ற எல்லையோடு நின்று விடாமல் ஜாதி எதிர்ப்பையும் பெண்ணுரிமையையும் பேசியவர். * அன்று தீண்டாமை பட்டியலில் இருந்த அருந்ததியினரையும் நாடார் சமூக மக்களையும் நட்பு...

‘குடிஅரசு’ தொகுப்பில் கழகம் சந்தித்த தடைகள்	 –   விருது வழங்கும் விழாவில் கொளத்தூர் மணி விளக்கம்

‘குடிஅரசு’ தொகுப்பில் கழகம் சந்தித்த தடைகள் – விருது வழங்கும் விழாவில் கொளத்தூர் மணி விளக்கம்

தொகுப்புகளை வெளியிட்ட பதிப்பாசிரியர் கொளத்தூர் மணிக்கு சிறந்த பதிப்பாளர் விருதை சீர் வாசகர் வட்டம் வழங்கியது.விருது ஏற்பு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை; எனக்கு குடிஅரசு நூல் பதிப்புக்காக இந்த விருதை அளித்திருக்கிறார்கள். அதனால் அதைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும். பெரியாரின் உதவியாளராக இருந்த புலவர் இமயவரம்பன் அவர்களின் முயற்சியில் தோழர்களால் திரட்டப்பட்டு அப்போது வரை இருந்த குடிஅரசு இதழ்களை படி எடுத்து (ஜெராக்ஸ்) கையால் எழுதி திருச்சி பெரியார் மாளிகையில் பிரதியெடுத்தார்கள். இரண்டு ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெற்றன. பெரியார் மாளிகையில் புலவர் இமயவரம்பன் அவர்கள் அதற்கென்று தேக்கு மரத்தால் செய்யப்பட்ட தனி அலமாரியில் ஆண்டு வாரியாக தனித்தனி ட்ராயரில் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். என்னை பெரியார் திடலில் 1993-94ல் சந்தித்த போது சொன்னார். “ 25 கிலோ நாப்த்தாலின் குண்டுகளை வாங்கி குடிஅரசு இதழ் அலமாரியில் வைத்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்; இன்னும் வெளியிடவில்லை என்றாலும்...

ஜாதிவெறி மிரட்டல் காவல்துறையில் கோவை மாவட்டக் கழகம் மனு!

ஜாதிவெறி மிரட்டல் காவல்துறையில் கோவை மாவட்டக் கழகம் மனு!

கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் நிர்மல் குமார் (மாநகரத் தலைவர்) தலைமையில் காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டது. கோபி, சுதாகர் இருவரும் பரிதாபங்கள் என்கிற வலையொலி சேனல் மூலம் விழிப்புணர்வு வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். ஆணவக் கொலைகளுக்கு காரணமாக உள்ளவற்றை விளக்கி அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தியும் கல்வி சார்ந்து முன்னேறுவோம் ஒற்றுமையாக இருப்போம் என்பதை வலியுறுத்தியும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியான நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் சவுத்ரி தேவர் என்பவர் கோபி சுதாகர் இருவரையும் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். அதுமட்டுமன்றி அண்மையில நடந்த சுர்ஜித் ஆணவப் படுகொலையை நியாயப்படுத்தி ஜாதி வெறியை தூண்டியுள்ளார். இவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கழகத் தோழர்கள் நவீன் (தமிழ்நாடு மாணவர் கழகம் கோவை) வழக்கறிஞர்கள் பாபு, முத்துமாரி, சண்முகநாதன் (பெரியார் மாணவர் கழகம்), வழக்கறிஞர் நரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார்முழக்கம்இதழ்04092025

.    சமத்துவபுரமாகிய நரசிம்மன்நகர் (14)

. சமத்துவபுரமாகிய நரசிம்மன்நகர் (14)

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். `நரசிம்மன் நகர்’ கடந்த இதழின் தொடர்ச்சி இது. ஆனைமலை ஆற்றங்கரையை அடுத்து, நரசிம்மனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று இருந்தது. மக்கள் போக்குவரத்து நிறைந்த பகுதி. அங்குள்ள நெடுஞ்சாலையை யொட்டி திராவிடர் கழகக் கட்டடமும் அதில் பகுத்தறிவுப் படிப்பகமும் அமைக்கப் பட்டிருந்தன. அங்குள்ள நாயக்கர் தெருவில்தான் நரசிம்மனின் வீடு இருந்தது. அந்த வீட்டிற்குள் பெரியாரின் வேன் வந்து செல்வதற்காகவே நுழைவாயிலில் தனிவழி அமைத்திருந்தார். வீட்டின் புல்தரையில் பெரியாருடன் அமர்ந்து பேசிய வரலாறும் உண்டு. இத்தகைய பேச்சுக்களின் ஊடாக, நரசிம்மனுக்கு மூன்று முக்கிய ஆலோசனைகளை வழங்கியிருந்தார் பெரியார். 1) தன்னிடம் இருக்கும் நிலத்திலோ அல்லது புதிதாக வாங்கியோ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றாக இருக்கும் வகையில் பகிர்ந்தளிக்க வேண்டும். 2) தனது செல்வாக்கைப்...

சேலம் மாவட்டக் கழகம் தொடர் பரப்புரை                                          ஜாதிப் பெருமை பேசாதீர்!

சேலம் மாவட்டக் கழகம் தொடர் பரப்புரை ஜாதிப் பெருமை பேசாதீர்!

ஜாதிப் பெருமை அல்ல அது அவமானம் ஜாதிப் பெருமை பேசாதீர் அது மீண்டும் நம்மை அடிமையாக்கிவிடும் என்றும் மக்களிடம் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாடு முழுதும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை செய்து வருகிறது. உலகம் முழுதும் மனிதர்கள் பிறக்கிறார்கள் இந்த நாட்டில் மட்டும் தான் மனிதப் பிறவியோடு ஜாதி அடையாளமும் சேர்ந்து பிறக்கிறது. அந்த ஜாதியே சமூகத்தைப் பாகுப்படுத்துகிறது. ஜாதி அமைப்புக்குள் நாம் மூழ்கிக் கிடந்தால் பார்ப்பனியத்தின் அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறோம் என்று அதன் பொருள். கடந்த தலைமுறைகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதியைப் படிக்க விடவில்லை. ஜாதித் தொழிலை கட்டாயப்படுத்தினார்கள். இதிலிருந்து மீண்டு படித்து, ஜாதித் தொழிலில் இருந்து விடைபெற்ற பிறகு நாம் ஜாதிப் பெருமையை பேசிக் கொண்டிருக்கலாமா? வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே மனம் விரும்பி திருமணம் செய்தால் அதை தடுக்கலாமா? கழகத் தோழர்கள் அடுக்கடுக்கான கேள்வியை மக்கள் மன்றத்தில் எழுப்பி வருகிறார்கள். சேலம் இளைஞர் அணியின் சார்பில் “மனிதம் நமது...

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக;                       கடலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக; கடலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

“மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் ஜாதி ஆணவப் படுகொலை தொடர்ந்து செய்து வரும் ஜாதி வெறியர்களை கண்டித்தும் கடுமையான சிறப்பு சட்டம் இயற்றிட தமிழ்நாடு அரசையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரியார் சிவா தலைமையில் ஆகஸ்டு-16 அன்று கடலூர் மஞ்சகுப்பம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), தொடக்கவுரையாற்றினார். இள.புகழேந்தி (வழக்குரைஞர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க), திருமூர்த்தி (வழக்குரைஞர் சென்னை உயர்நீதி மன்றம்), லோகு.அய்யப்பன்(தலைவர் புதுச்சேரி திவிக), லூசியா (வழக்குரைஞர் ஆற்றல் மாநில ஒருங்கிணைப்பாளர்), தி.ச திருமார்யன் ( வழக்குரைஞர் விசிக மாநில அமைப்புச் செயலாளர்), எழிலேந்தி (மாவட்ட செயலாளர் தி.க), கார்ல் மார்க்ஸ் (வழக்குரைஞர் பாலா பேரவை), புதுவை பிரகாஷ் (தலைவர் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), ராஜா (ஒருங்கிணைப்பாளர் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), பாலு (மாநில தலைமை குழு உறுப்பினர் மக்கள் அதிகாரம்),...

அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் கோவை கெம்பனூர் கிராமத்தில் தொடரும் பேருந்து தீண்டாமை

அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் கோவை கெம்பனூர் கிராமத்தில் தொடரும் பேருந்து தீண்டாமை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் ஓரளவு பெரிய கிராமம். இந்த கிராமத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உள்ளனர். பிற்படுத்தப்பட்டவர்கள் வாழும் பகுதியின் மத்தியில் பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம், அடுத்து 500 மீட்டர் தொலைவில் இந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் மக்கள் வாழும் பகுதி அண்ணா நகர் என்று அழைக்கப்படும் அந்த இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. கெம்பனூருக்கு 21, 21b இரண்டு பேருந்துகள்தான். ஆனால் தற்போது 64D,1C, பேருந்துகள் செல்கின்றன, இடைப்பட்ட காலத்தில் 94 பேருந்து சென்றது. கொரானோ காலத்துக்குப் பிறகு செல்வது இல்லை. பொதுவாக மேலோட்டமாக பார்க்கும் போது அண்ணா நகருக்கு 21B காலை 8:30க்கு ஒரு முறையும் 1C ஒரு முறையும் 64D மூன்று முறையும் தானே செல்கிறது பிறகு என்ன பிரச்சனை என்று நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மை நிலை 21 காலை...

உலகமயமாகிறார் பெரியார்

உலகமயமாகிறார் பெரியார்

நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கின்றேன். -பெரியார் வரலாற்றுப் பெருமை கொண்ட இலண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவும் பெரியார் படத்திறப்பும் நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் வரலாற்றுப் பெருமை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்துள்ளது. உலகில் உள்ள மற்ற சமுதாயத்தைப் போல் மானமும் அறிவும் கொண்ட சமுதாயமாக மாற்றி அமைப்பதே தனது ஒரே குறிக்கோள் என்றார் பெரியார். அவரது சமுதாயப் பார்வை உலக சமுதாயத்தின் வளர்ச்சி பாதையை நோக்கி இருந்தது. ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் ரஷ்யாவிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்தார் பெரியார், பார்ப்பனிய வர்ணாசிரம ஒடுக்குமுறை அந்த...

பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணிநீக்கம் கழகம் வரவேற்பு

பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணிநீக்கம் கழகம் வரவேற்பு

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நிலவி வந்த ஜாதிய மேலாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசுக்கும் துணைவேந்தர் நிர்வாகக் குழுவிற்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் பெரியசாமி போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டு மர்மமான முறையில் நீடித்து வருகிறது.பதிப்புத் துறையின் இயக்குநராக இருந்தபோது பல்கலைக்கழக மானியக் குழு ஒதுக்கிய நிதியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்த சேலம் இலஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் இவர் பட்டியலின ஆராய்ச்சி மாணவர்களை ஜாதியைச் சொல்லி திட்டுவதாக புகார்கள் அளித்தனர். ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளியான பேராசிரியரின் பட்டியலின ஜாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு தேசிய பட்டியலின ஆணைய உத்தரவின்படி மாவட்ட நிர்வாகத்தின் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கல்வியியல் துறை...

பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது

பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது

People’s literature பதிப்பகம் வெளியிட்டுள்ள “Periyar: Caste, Nation and Socialism” நூலின் அறிமுக விழா, (24.8.25), சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று நடத்தினார். பெரியார் மீது எழும் கேள்விகள் அல்லது குற்றச்சாட்டுகள், அல்லது மனதறிந்து பேசுகிற பொய்கள் எல்லாவற்றையும் விளக்கும் நோக்கத்தோடு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கரின் பார்வைகள், புத்தம் குறித்த பெரியார், அம்பேத்கர் கருத்துக்கள் ஆகியவற்றை முதன்மை தலைப்பாக பதிவு செய்துள்ளார். ரங்கூன் மாநாட்டில் பெரியார், அம்பேத்கர் கலந்து கொண்ட செய்திகளையும், வன்முறைக்கு எதிராக பெரியார் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வை தொகுத்து வழங்கினார். கோவி. கனக விநாயகம் (துணைப் போராசிரியர், எஸ்.ஆர்.எம் சட்டக் கல்லூரி , சென்னை) பேசுகையில், எளிய மொழிநடையில், கேள்வி பதிலாக தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல். 21ம் நூற்றாண்டில் திராவிடர் இயக்கத்துக்கு கிடைத்த ஆவணம் இந்த நூல் என்று வாழ்த்துரை வழங்கினார்....