திராவிட மாடல்தான் பீகாரிகளையும் பாதுகாக்கிறது!

திமுக ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில் பீகாரிகளுக்கு எதிராக திமுகவினரால் துன்புறுத்தல் நடக்கிறது என்ற மோடியின் பேச்சு., அவரது பதவிக்கு உரிய பண்பாடுஅல்ல என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.

பாஜக ஆட்சியோடு முதல்வருக்கு முரண்பாடுகள் இருந்தாலும் கூட சர்வதேச விளையாட்டு போட்டியானாலும், கலைஞர் நாணய வெளியீட்டு விழாவானாலும் பிரதமரையும் மத்திய அமைச்சரையும் அழைக்க வேண்டிய கடமையை உணர்ந்து தனது முதல்வர் பதவிக்குரிய பண்பை வெளிப்படுத்தியவர் தமிழ்நாடு முதல்வர்.

தமிழ்நாட்டில் தாங்கள் துன்புறுத்தப்படுவதாக பீகாரிகள் ஏதாவது பிரதமரிடம் முறையிட்டார்களா? பீகார் அரசு குற்றம் சாட்டியதா?

பீகாரிகளுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று முதலமைச்சருக்கு மோடி ஏதாவது கடிதம் எழுதினாரா?
எதுவுமே இல்லை!

பீகாரின் தலை விரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் திராவிட மாடல் ஆட்சியை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கிறது. எந்த திமுகவை மோடி குற்றம் சாட்டுகிறாரோ அந்த திமுக ஆட்சியில் தான் பீகாரிகளுக்கு வேலைவாய்ப்பும் பாதுகாப்பும் கிடைக்கிறது. பீகாருக்குக்கும் தமிழ்நாட்டுக்கும் பிரதமராக இருக்கும் ஒருவர் இரண்டு நாட்டு மக்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்குவது ஒரு பிரதமர் பதவிக்கான தகுதியே இல்லை.

இதே போன்று தான் தமிழ்நாட்டில் வடநாட்டுக்காரர்களும் பீகாரிகளும் தாக்கப்படுகிறார்கள் என்ற வதந்தியை முகநூலில் பதிவிட்டு தமிழ்நாட்டில் குழப்பத்தை உருவாக்க முயன்றார்கள். அந்த வதந்தி பேர்வழிக்கும் மோடிக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டு நாட்களுக்கு முன்பு ஐ.நா.வில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் மதிப்புக்குரிய வில்சன், மோடி ஆட்சியில் முரண்பாடுகள் இருந்தாலும் , பெண்கள் மற்றும் பாதுகாப்பில் இந்தியாவைப் பெருமையோடு தான் பேசியிருக்கிறார். திமுகவின் மாநிலங்களவை உறுப்பினருக்கு உள்ள பண்பாடு கூட நாட்டை ஆளும் பிரதமருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு!

விடுதலை இராசேந்திரன்
முகநூல் பதிவு
பெரியார் முழக்கம் இதழ் 06112025

You may also like...