கழகத் தோழர் தனபால் தந்தை மறைவு!
திருப்பூர் மாநகர கழகத் தலைவர் தனபால் அவர்களின் தந்தையாரும்,
மாவட்ட அமைப்பாளர் சங்கீதா அவர்களின் மாமனாருமான அய்யா ஏ.எஸ்.வீரபாகு (எ) மோதிரக்காரர் 24.10.2025 அன்று இரவு உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
அவரது சொந்த ஊரான மணப்பாறை வட்டம், கீழையூர் கிராமம் அனந்தானூர் பகுதியில், 25-10-2025 மாலை 3 மணி அளவில் இறுதி நிகழ்வுகள் இரங்கல் கூட்டத்துடன் நடைபெற்றது. தனபால் கடும் முயற்சியால் சாஸ்திர சடங்கு சம்பிரதாயங்களை புறக்கணித்து தன்னுடைய அப்பாவின் இறுதி நிகழ்வை நடத்தினார்.
இரங்கல் கூட்டத்தில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, தமிழ்நாடு மாணவர் கழகத்தின் திருப்பூர் மகிழவன் உள்ளிட்ட தோழர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினர்..
திருப்பூர் தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி, மாநகரச் செயலாளர் மாதவன், மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, மாநகர அமைப்பாளர் முத்து, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், மணப்பாறை பகுதி விராலி மலை ஒன்றியம் குமரேசன், மதுரை சத்தியமூர்த்தி, மாப்பிள்ளை சாமி, மதுரை முருகேசு, மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
ஐயா வீரபாகு உடலை பெண்களே சுமந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பெரியார் முழக்கம் இதழ் 13112025
