ஸ்ரீகாந்தராஜ் – இளந்தென்றல் இணையேற்பு விழா!
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த மனோகரன்- ராதை ஆகியோரின் மகன் ஸ்ரீகாந்த்ராஜ் அவர்களுக்கும், சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி- கோதை ஆகியோரின் மகள் இளந்தென்றல் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 31.10.2025 வெள்ளிக்கிழமை அரியானூர் ஸ்ரீ ஆதித்யா மகாலில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மகுடஞ்சாவடி திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் க.அன்பழகன் வரவேற்புரையாற்றினார்.
தி.க.துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஸ்ரீகாந்தராஜ்- இளந்தென்றல் ஆகியோருக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரையாற்றினார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், திமுகவை சேர்ந்த கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் திமுக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் எஸ். ஆர்.சிவலிங்கம், திக (பெரியார் அறக்கட்டளைத் தலைவர்) பொத்தனூர் க.சண்முகம், கழகத் தோழர்கள், திக தோழர்கள், திமுகவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 13112025
