கழகப் பொதுச்செயலாளருக்கு ஆஸி.யில் பாராட்டு விழா
ஆஸ்திரேலியா தமிழ் கலை மற்றும் கலாச்சார இயக்கம் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் போராசியர் சரசுவதி ஆகியோர்க்கு பாராட்டு விழா 14.11.2025 அன்று வடக்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மாகாணத்தில் நடைபெற்றது.
லாரன்ஸ் அண்ணாதுரை வரவேற்புரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் போராசியர் சரசுவதி ஆகியோரின் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.
விடுதலை இராசேந்திரன் பேசுகையில் ஜாதி, மதம் அரசியல் அமைப்புகளில் சிக்காமல் ஒற்றுமை உணர்வுடன் தமிழர்கள் செயல்பட வேண்டும் என்று உரையாற்றினார்.
தோழர்களின் ஆஸ்திரேலிய வருகையை கொண்டாடும் விதமாக இந்த பாராட்டு விழா அமைந்தது. ஆஸ்திரேலிய வாழ் தமிழ் குடும்பங்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரவு உணவு வழங்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்பரிப்புடனும் இந்த விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பெரியார் முழக்கம் இதழ் 20112025
