Category: பெரியார் முழக்கம் 2025

புத்தர் பேசிய கடவுள் மறுப்பு              கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-14

புத்தர் பேசிய கடவுள் மறுப்பு கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-14

பேராசிரியர் அருணன் எழுதிய ‘கடவுளின் கதை’ மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. முதல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரையிலுருந்து சில செய்திகள்… உலக வரலாற்றிலேயே ஒரு மதத்தின் நிறுவனர் வலுவான கடவுள் எதிர்ப்பு வாதங்களை முதன்முதலாக முன்வைத்தார் என்றால் அவர் புத்தர்தான். கடவுள் எதிர்ப்போடு ஒரு புதிய சமூக ஒழுங்குமுறையை, சிந்தனை கட்டமைப்பை நடைமுறைப்படுத்த முயன்ற மகா புதுமையான முயற்சி புத்தருடையது. அவருக்குப் பிறகு இத்தகைய முயற்சியில் ஈடுபட்ட வேறு மத நிறுவனர் உலகில் தோன்றவும் இல்லை. இவரே முதலும் முடிவும் ஆனவர். புத்தரின் வாக்கு என்று பலராலும் ஒப்புக்கொள்ளப்படுகிற ஓர் உரையாடல் ‘தீவிக்க சுத்தம்’ எனும் நூலில் உள்ளது. அதில் ”பிரம்மா” எனத் தாங்கள் கூறுகிற ஒன்றை பார்ப்பனர்களில் எவராவது நேருக்கு நேர் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்களா எனும் கேள்வியை எழுப்பினார் புத்தர். அப்படிச் சொல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார், ஆனால், “தாங்கள் எதை அறியவில்லையோ, எதைப் பார்க்கவில்லையோ அதனோடு ஒன்றுபடுகிற மார்க்கத்தை மட்டும்...

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக;                       கடலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக; கடலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

“மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் ஜாதி ஆணவப் படுகொலை தொடர்ந்து செய்து வரும் ஜாதி வெறியர்களை கண்டித்தும் கடுமையான சிறப்பு சட்டம் இயற்றிட தமிழ்நாடு அரசையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரியார் சிவா தலைமையில் ஆகஸ்டு-16 அன்று கடலூர் மஞ்சகுப்பம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), தொடக்கவுரையாற்றினார். இள.புகழேந்தி (வழக்குரைஞர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க), திருமூர்த்தி (வழக்குரைஞர் சென்னை உயர்நீதி மன்றம்), லோகு.அய்யப்பன்(தலைவர் புதுச்சேரி திவிக), லூசியா (வழக்குரைஞர் ஆற்றல் மாநில ஒருங்கிணைப்பாளர்), தி.ச திருமார்யன் ( வழக்குரைஞர் விசிக மாநில அமைப்புச் செயலாளர்), எழிலேந்தி (மாவட்ட செயலாளர் தி.க), கார்ல் மார்க்ஸ் (வழக்குரைஞர் பாலா பேரவை), புதுவை பிரகாஷ் (தலைவர் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), ராஜா (ஒருங்கிணைப்பாளர் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), பாலு (மாநில தலைமை குழு உறுப்பினர் மக்கள் அதிகாரம்),...

அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் கோவை கெம்பனூர் கிராமத்தில் தொடரும் பேருந்து தீண்டாமை

அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் கோவை கெம்பனூர் கிராமத்தில் தொடரும் பேருந்து தீண்டாமை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் ஓரளவு பெரிய கிராமம். இந்த கிராமத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உள்ளனர். பிற்படுத்தப்பட்டவர்கள் வாழும் பகுதியின் மத்தியில் பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம், அடுத்து 500 மீட்டர் தொலைவில் இந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் மக்கள் வாழும் பகுதி அண்ணா நகர் என்று அழைக்கப்படும் அந்த இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. கெம்பனூருக்கு 21, 21b இரண்டு பேருந்துகள்தான். ஆனால் தற்போது 64D,1C, பேருந்துகள் செல்கின்றன, இடைப்பட்ட காலத்தில் 94 பேருந்து சென்றது. கொரானோ காலத்துக்குப் பிறகு செல்வது இல்லை. பொதுவாக மேலோட்டமாக பார்க்கும் போது அண்ணா நகருக்கு 21B காலை 8:30க்கு ஒரு முறையும் 1C ஒரு முறையும் 64D மூன்று முறையும் தானே செல்கிறது பிறகு என்ன பிரச்சனை என்று நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மை நிலை 21 காலை...

உலகமயமாகிறார் பெரியார்

உலகமயமாகிறார் பெரியார்

நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கின்றேன். -பெரியார் வரலாற்றுப் பெருமை கொண்ட இலண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவும் பெரியார் படத்திறப்பும் நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் வரலாற்றுப் பெருமை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்துள்ளது. உலகில் உள்ள மற்ற சமுதாயத்தைப் போல் மானமும் அறிவும் கொண்ட சமுதாயமாக மாற்றி அமைப்பதே தனது ஒரே குறிக்கோள் என்றார் பெரியார். அவரது சமுதாயப் பார்வை உலக சமுதாயத்தின் வளர்ச்சி பாதையை நோக்கி இருந்தது. ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் ரஷ்யாவிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்தார் பெரியார், பார்ப்பனிய வர்ணாசிரம ஒடுக்குமுறை அந்த...

பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணிநீக்கம் கழகம் வரவேற்பு

பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணிநீக்கம் கழகம் வரவேற்பு

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நிலவி வந்த ஜாதிய மேலாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசுக்கும் துணைவேந்தர் நிர்வாகக் குழுவிற்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் பெரியசாமி போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டு மர்மமான முறையில் நீடித்து வருகிறது.பதிப்புத் துறையின் இயக்குநராக இருந்தபோது பல்கலைக்கழக மானியக் குழு ஒதுக்கிய நிதியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்த சேலம் இலஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் இவர் பட்டியலின ஆராய்ச்சி மாணவர்களை ஜாதியைச் சொல்லி திட்டுவதாக புகார்கள் அளித்தனர். ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளியான பேராசிரியரின் பட்டியலின ஜாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு தேசிய பட்டியலின ஆணைய உத்தரவின்படி மாவட்ட நிர்வாகத்தின் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கல்வியியல் துறை...

பெரியாரின் இங்கிலாந்து பயணத்தில் நடந்தது என்ன?

பெரியாரின் இங்கிலாந்து பயணத்தில் நடந்தது என்ன?

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் படத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். பெரியார் உலகமயமாகி வருகிறார் என்று பெருமிதத்துடன் முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெரியார் 16. 6 .1932 தேதியிலிருந்து 6.7.1932 வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தார். பயணத்திற்கு உடன் இருந்து உதவியவர் கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத்வாலா. இவருடன் தொடர்பு கொள்ள அறிமுக கடிதம் கொடுத்தவர்; பெர்லின் நகரில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர் டெட். இங்கிலாந்து பயண விவரங்களை பெரியார் தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அதில் 28 .6.1932 தேதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் ஸ்கார்பியோவில் 9 கருப்பின இளைஞர்கள் மீது “ரேப்” குற்றம் சாட்டி தூக்குத் தண்டனை விதித்தது அமெரிக்க அரசு. உலகம் முழுதும் தூக்குத் தண்டனைக்கு எதிராக கண்டனங்கள் வெடித்தன. இங்கிலாந்தில் நடந்த இந்த கண்டனக் கூட்டத்தில் பெரியாரும் கலந்து கொண்டார். தூக்குத் தண்டனைக்கு உள்ளான இரண்டு...

பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது

பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது

People’s literature பதிப்பகம் வெளியிட்டுள்ள “Periyar: Caste, Nation and Socialism” நூலின் அறிமுக விழா, (24.8.25), சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று நடத்தினார். பெரியார் மீது எழும் கேள்விகள் அல்லது குற்றச்சாட்டுகள், அல்லது மனதறிந்து பேசுகிற பொய்கள் எல்லாவற்றையும் விளக்கும் நோக்கத்தோடு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கரின் பார்வைகள், புத்தம் குறித்த பெரியார், அம்பேத்கர் கருத்துக்கள் ஆகியவற்றை முதன்மை தலைப்பாக பதிவு செய்துள்ளார். ரங்கூன் மாநாட்டில் பெரியார், அம்பேத்கர் கலந்து கொண்ட செய்திகளையும், வன்முறைக்கு எதிராக பெரியார் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வை தொகுத்து வழங்கினார். கோவி. கனக விநாயகம் (துணைப் போராசிரியர், எஸ்.ஆர்.எம் சட்டக் கல்லூரி , சென்னை) பேசுகையில், எளிய மொழிநடையில், கேள்வி பதிலாக தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல். 21ம் நூற்றாண்டில் திராவிடர் இயக்கத்துக்கு கிடைத்த ஆவணம் இந்த நூல் என்று வாழ்த்துரை வழங்கினார்....

77 வயது  ‘பயனாளி’ ஐந்து மாத பயனாளியுடன்..

77 வயது ‘பயனாளி’ ஐந்து மாத பயனாளியுடன்..

உடல் உறுப்பு கொடையில் தமிழ்நாடு தேசிய சராசரியை விட ஏழு மடங்கு கூடுதலாக இருக்கிறது என்று பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் எம்.ஜி.எம் மருத்துவமனை நடத்திய உறுப்பு கொடையாளர் பாராட்டு விழாவில் குறிப்பிட்டார். கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 9 மணி அளவில் எம்.ஜி.எம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்ற மருத்துவமனை நிர்வாகம் விடுதலை ராசேந்திரனை அழைத்து இருந்தது. மருத்துவமனையிலேயே மிக அதிக வயதில் (அதாவது 77 வயதில்) கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் என்று, அறுவை சிகிச்சை செய்த குழுவின் தலைவர் மருத்துவர் டாக்டர் தியாகராஜன் விடுதலை இராசேந்திரனை அறிமுகப்படுத்தினார். மிகக்குறைந்த வயதுள்ள ஐந்து மாத குழந்தைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இதே மருத்துவமனை வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தி சாதனை புரிந்தது. தாயும் குழந்தையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். விடுதலை ராசேந்திரன் தனது உரையில் குறிப்பிட்டதாவது: “எனக்கு உறுப்பை கொடையாக...

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்!

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்!

16.08.2025 மாலை 6.00 மணிக்கு நங்கவள்ளியில் கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) இல்லத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமை வகித்தார். கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை வகித்தார். கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய கலந்துரையடால் தொடங்கியது. கூட்டத்தில் எடுக்கபட்ட தீர்மானங்கள்: 1). மேச்சேரியில் 03.08.2025 அன்று சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் நடைபெற்று முடிந்த “பெரியார் எனும் பெருநெருப்பு” கருத்தரங்கத்திற்கான வரவு, செலவு கணக்கு சார்பார்க்கப்பட்டது. வரவு- 74,500, செலவு- 70,160, மீதி= 4,340 2). சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் எதிர்வரும் 22.08.2025 வெள்ளி அன்று ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனவும் இறுதியாக நிறைவுக் கூட்டம் ஓமலூரில் பொதுக் கூட்டமாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ), சிவ சண்முகம்...

களம் இறங்கிறது சென்னை இளைஞரணி!

களம் இறங்கிறது சென்னை இளைஞரணி!

சென்னை மாவட்ட இளைஞர் அணி சார்பாக “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள் என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, செப்டம்பர்-17 தேதி வரை தொடர் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், சைதாப்பேட்டை, தியாகராயர் நகர், எம்.ஜி.ஆர் நகர், அம்பத்தூர், அமைந்தகரை, வேளச்சேரி, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. 10 நாட்கள் தினமும் மாலை 5 மணியளவில் தெருமுனைக் கூடட்ங்கள் நடைபெறும். தெருமுனைக் கூட்டங்களில் கழகத் தோழர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் பலர் கருத்துரை ஆற்ற உள்ளனர். செப்-17 நிறைவு பொதுக் கூட்டம் இராயப்பேட்டை பெரியார் படிப்பகம் அருகில் நடைபெறும். இளைஞர்களே ஜாதியை தகர்த்தெறிவோம்! சமத்துவ சமுதாயம் படைப்போம் வாரீர்!

ஊர்-சேரி பாகுபாட்டை ஒழித்த ‘ஆனைமலை’

ஊர்-சேரி பாகுபாட்டை ஒழித்த ‘ஆனைமலை’

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். `நரசிம்மன் நகர்’ வரலாறு இது. 1938-ஆம் ஆண்டில் முதல் இந்தி எதிர்ப்புப் போரில்’ பங்கேற்று தந்தை பெரியார் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்ட போது, அவருடன் சிறையில் இருந்தவர்களில் ஒருவர் `ஆனைமலை’ நரசிம்மன். பட்டம் படித்தவர் என்பதால், சிறையில் முதல் வகுப்பை அதிகாரிகள் வழங்க, தன் தோழர்கள் எல்லோரும் சாதாரண வகுப்பில் இருக்க, தனக்கு மட்டும் முதல் வகுப்பு வேண்டாம் என்று மறுத்துவிட்டார் நரசிம்மன். ஆனால், ஆனைமலையில் வசதி படைத்த, செல்வாக்கான குடும்பம் இவருடையது. ராஜாஜி, சத்தியமூர்த்தி அய்யர் என அந்த காலத்தில் இவர் வீட்டில் பல தலைவர்கள் தங்கிச் சென்றுள்ளனர். 1906-ஆம் ஆண்டு நாராயண நாயக்கர்-குஞ்சம்மாள் தம்பதிக்கு கடைசி மகனாகப் பிறந்தவர் நரசிம்மன். சென்னை...

கடவுளை மறுத்த ஆன்மீகவாதி    கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-12  விடுதலை இராசேந்திரன்

கடவுளை மறுத்த ஆன்மீகவாதி கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-12 விடுதலை இராசேந்திரன்

‘மனம்’ என்று ஒன்று இல்லை அது மூளை என்ற ஒரு பொருளின் செயல்பாடு. மனதை ஒருமுகப்படுத்துவது ஆன்மிகம் சார்ந்தது அல்ல! அது ஒரு பயிற்சியே என்ற கட்டுரையை கடந்த இதழில் ‘பெரியார் முழக்கம்’ வெளியிட்டது. கடவுள் வழி நடத்தவில்லை, மனித மூளை தான் உடலை இயக்குகிறது என்பதே அந்த கட்டுரையின் மய்யமான கருத்து. இதற்கு நேர் மாறாக ‘மனமே’ மனிதரை இயக்குகிறது. தனி மனிதரின் ‘மன மாற்றமே’ அனைத்துக்கும் தீர்வு. மனிதருக்கு வெளியே புறத்தில் நிகழும் சமூகப் புரட்சிகள் உயிரற்றவை, நானே என்னை புரிந்து கொள்ளாத வரை வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், மற்றவர்களை எப்படி புரிந்து கொள்ள முடியும் என்ற சிந்தனையை உலகம் முழுதும் ஒருவர் பரப்பினார். உலகப் புகழ்பெற்ற தத்துவஞானியாக அவர் பேசப்பட்டார், அவரது பெயர் ‘ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி’. பொருளியல் நிகழ்வுகளை விலக்கிவிட்டு ‘மனப்புரட்சி’ பேசிய அவரது பின்னணியை சுருக்கமாக விளக்குவோம். 1875-இல் மதனப்பள்ளியில் பார்ப்பன குடும்பத்தில் அவர்...

“Magzter” தளத்தில் பெரியார் முழ்க்கம்

“Magzter” தளத்தில் பெரியார் முழ்க்கம்

வார இதழாக ஏறத்தாழ 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ், கழக இணையதளப் பக்கத்திலும் கீற்று இணையதளப் பக்கத்திலும் பதிவேற்றி வரப்பட்டது. சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த கழகத் தோழரும் ஐ.டி. ஊழியருமான நந்தகுமார் முயற்சியில், வருகிற செப்டம்பர் மாதம் முதல் ‘Magzter’ (www.Magzter.com) என்ற இணையதளப் பக்கத்திலும் இனி புரட்சிப் பெரியார் முழக்கம் இதழ் இ-பேப்பர் வடிவில் வெளிவரும். பத்திரிகைகளுக்கு என்று வடிவமைக்கப்பட்ட இந்த இணையதளப் பக்கத்தின் சந்தாதாரர்கள், இனி வாரம்தோறும் புரட்சிப் பெரியார் முழக்கத்தை இலவசமாக வாசிக்கலாம். பெரியார்முழக்கம்இதழ்28082025

குமரி மாவட்டத்தில் கழக கலந்துரையாடல் கூட்டம்

குமரி மாவட்டத்தில் கழக கலந்துரையாடல் கூட்டம்

24.08.2025 அன்று மாலை 04.00 மணியளவில் தக்கலை அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் குமரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் தி.வி.க.வின் களப்பணியினை தொடங்க வேண்டும் என்ற குமரி மாவட்ட தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெற்ற கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இயக்கம் செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்கண்ட தோழர்கள் மாவட்டத் தலைவர் – ஜா. சூசையப்பா மாவட்டச் செயலாளர் – நீதியரசர், மாவட்ட பொருளாளர் – ரமேஷ்பாபு, செய்தி தொடர்பாளர் – தமிழ்மதி ஆகியோர் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தோழர்கள் இயக்கத்தில் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என்றும் மாத சந்தாவாக ரூ – 100/- வசூலிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. முன்னாள் மாவட்டச் செயலாளர் தமிழ்மதியிடம் கையிருப்பு தொகை ரூ. 4,660 இருப்பதை முறையான வரவு செலவு கணக்கினை கூட்டத்தில்...

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

ஆசிரியர்கள் சிவகாமி, சிவக்குமார் முன்னெடுப்பில் பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தோழர்களை திரட்டி மாதம் ரூ.500 என்று நன்கொடையை கழக ஏட்டுக்கு திரட்டி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக பெரியார் முழக்க வங்கி கணக்குக்கு அனுப்பி வருகின்றனர். நாளுக்கு நாள் குழுவில் தோழர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, மாதம் மாதம் நன்கொடையும் அதிகரித்து வருகிறது. ஜூலை மாத நன்கொடையாக ரூ.23000 அனுப்பி உள்ளனர். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆசிரியர்). பெரியார்முழக்கம்இதழ்28082025

பெரியாரின் பேத்திக்கு பெரியார் விருது

பெரியாரின் பேத்திக்கு பெரியார் விருது

“பெண் விடுதலைப் போராளி கனிமொழி அவர்களுக்கு திமுக சார்பில் பெரியார் விருது வழங்கப்பட்டு இருப்பது மிகச் சிறப்பானது.பொருத்தமானது.இந்த விருதுக்கு நூற்றுக்கு நூறு தகுதி அவருக்கு உண்டு.இளமைக் காலத்தில் இருந்தே அவர் ஒரு பெரியாரிஸ்ட். “எங்கள் குடும்பத்தில் கனிமொழி ஒரு முழுமையான பெரியாரிஸ்ட்” என்று கலைஞர் பெருமையுடன் கூறினார். பெரியாரை உள்வாங்கியதால் அவரது அரசியல் பயணம் ஆரவாரம் இன்றி சீராக நதி போல் ஓடிக்கொண்டிருக்கிறது.வீண் சர்ச்சைகளுக்கு அவர் இடமளிப்பதில்லை கடுஞ்சொல் பேசாதவர்.எளிமையானவர். அதே நேரத்தில் பெண்களை அவமதிக்கும் கருத்துகள் தலைவர்களிடமிருந்து வரும்போது முதல் எதிர்ப்புக் குரல் அவரிடம் இருந்து தான் வரும்.தனது சொந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார். நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுகள் அதிர வைக்கின்றன. மிகச் சிறந்த கவிஞர். அரசியல் வருகைக்கு பிறகு “கவிஞர் கனிமொழியை” காண முடியவில்லை என்பது வருத்தம்தான். பெரியார் பெண்ணுரிமை கருத்தியலைக் கடந்து பெண் விடுதலையைப் பேசியவர். பெரியாரின் பெண்ணுரிமை நோக்கி இன்று பெண்கள்...

இது  ‘ஜனநாயக திருட்டு’

இது ‘ஜனநாயக திருட்டு’

புதிய சட்டத் திருத்தம் ஒன்றை அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். 5 ஆண்டுகள் தண்டனை வழங்கக்கூடிய குற்றத்தின் கீழ் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தாலே, அவர்கள் பதவி பறிக்கப்படும் என்று கூறுகிறது இந்த மசோதா. நீதிமன்ற விசாரணை, நீதிமன்ற தீர்ப்புகள் இல்லாமலே குற்றவாளிகளை ஒன்றிய பாஜக ஆட்சியே தனது புலனாய்வு, அமலாக்கத்துறை அமைப்புகளை வைத்து முடிவு செய்து விட முடியும். “ஓட்டு திருட்டு செய்தவர்கள் அடுத்து ஜனநாயக திருட்டுக்கு தயாராகிறார்கள்” என்று காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே மிகச்சரியாகவே சுட்டிக்காட்டி உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எதிர்க்கட்சி ஆட்சிகளை குறுக்கு வழியில் வீழ்த்துவது இந்த சட்டத்தின் நோக்கம். மாநில ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஏற்கனவே 356 என்ற ஒரு சட்டப்பிரிவு இருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இந்த பிரிவு செயலற்றதாக்கப்பட்டு விட்ட நிலையில், இப்போது ஒரு புதிய குறுக்கு வழியை கண்டுபிடித்து இருக்கிறது ஒன்றிய ஆட்சி....

பெரியார் எனும் பெருநெருப்பு                    மாநாடு போல் நடந்த கொளத்தூர் கருத்தரங்கு

பெரியார் எனும் பெருநெருப்பு மாநாடு போல் நடந்த கொளத்தூர் கருத்தரங்கு

கொளத்தூரில் நடந்த ‘பெரியார் எனும் பெருநெருப்பு’ கருத்தரங்கம் மாநாடு போல் எழுச்சியுடன் நடந்தது. அரங்கம் நிரம்பி வழிந்த்து. சேலம் மாவட்டம் கொளத்தூரில் ஆகஸ்ட்17-ல் கே.வி.ஆர் மண்டபத்தில் ஈசுவரன் (தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு கோவிந்தராஜ் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் இணைந்து பகுத்தறிவு பாடல்கள் பாடினார்கள். கொளத்தூர் இளைஞரணி தோழர் குமரேசன் வரவேற்புரையாற்றினார், ஆசிரியர் செல்வேந்திரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். மிதுன் சக்கரவர்த்தி (திமுக மேற்கு மாவட்ட ஒன்றியச் செயலாளர்) கருத்தரங்கத்தில் ஏராளமான தோழர்களுடன் கலந்து கொண்டு கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையின் அவசியத்தை பாராட்டி பேசினார். மில்டன்: பேரலை வலையொளி மில்டன் தனது உரையில்; பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதை திருமணம் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது என்று குறிப்பிட்டார். ஜாதி கட்டமைப்பையும் பெண் அடிமையையும் சமூகத்தில் அது அசைத்தது. இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு என்பது மொழித் திணிப்பு எதிர்ப்பு மட்டுமல்ல! அது பண்பாட்டுத்...

இரசாயன விநாயகர் சிலைகளுக்குத் தடை கோரி கழகம் மனு

இரசாயன விநாயகர் சிலைகளுக்குத் தடை கோரி கழகம் மனு

திருப்பூர்: 08-08-2025 அன்று திருப்பூர் மாவட்டக் கழகம் சார்பக காலை 10 மணி அளவில் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்று சொல்லக் கூடிய வேதி பொருட்கள், இரசாயன பொருட்கள், சுட்டகளிமண் போன்ற பொருட்களால் விநாயகர் சிலைகளை தயாரிக்க கூடாது. அவ்வாறு இரசாயனம் கலந்து தயரிக்கப்பட்ட சிலைகளை நீரில் கரைத்து நீர்நிலைகளை மாசுபடுத்துவதை தடுக்க வேண்டும் அரசு முறையாக கண்காணித்து நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என வழியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் முகில் ராசு (மாவட்டத் தலைவர்) தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. நிகழ்வில் சு.துரைசாமி (கழகப் பொருளாளர்), மாதவன் (மாநகரச் செயலாளர்), வீ.தனபால் (மாநகரத் தலைவர்), முத்து (மாநகர அமைப்பாளர்), அய்யப்பன் (வடக்கு ஒன்றியச் செயலாளர்) தமிழமுதன் (உளவியலாளர்) மற்றும் தோழர்கள் இனியன் வசந்தி, பெரியார் பிஞ்சு மகிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 14.08.2025 அன்று மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில்...

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு

சென்னையில் 2 வாரங்களாக நடைபெற்றுவரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தில், (11/8/25), தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), இராவணன் (தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்), மனோகர், ஜான் மண்டேலா (மகுஇ), மாரிமுத்து (திக) உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். பெரியார்முழக்கம்இதழ்21082025

கல்லூரி மாணவர்களிடம்    உரையாடல்

கல்லூரி மாணவர்களிடம் உரையாடல்

ராணிப்பேட்டை மாவட்டம் கல்லாறில், ஆகஸ்டு 9 அன்று SRED ஒருங்கிணைத்த சமூகப்பகுப்பாய்வுக் கூட்டத்தில், திவிக தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை, “பெரியார்” குறித்து பள்ளி – கல்லூரி மாணவிகளிடம் உரையாடினார். “இறுதி மூச்சு அடங்கும் வரை யாருக்காக உழைத்தார் பெரியார்?” எனும் திவிக நூலையும், “இரகசிய புத்தகம்” எனும் நன்செய் பிரசுர நூலையும், மாணவர்களுக்கு வழங்கினார். பெரியார்முழக்கம்இதழ்21082025

சமூக நீதி எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் நினைவேந்தல்

சமூக நீதி எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் நினைவேந்தல்

சமூக நீதி எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி 09.08.2025 அன்று தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் விஜயபாஸ்கர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. திமுக இளைஞர் அணி செயலாளர் – தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமூகநீதி எழுத்தாளர் சு. விஜயபாஸ்கர் படத்தைத் திறந்து நினைவேந்தல் உறையாற்றினார்.மேலும் அவர் விஜயபாஸ்கரின் இணையர் காயத்ரி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ‘விஜயபாஸ்கர்’ அறக்கட்டளையை தொடங்கி வைத்தார்.அறக்கட்டளைக்கு திமுக சார்பாக ரூ.5,00,000 காசோலை காயத்ரியிடம் வழங்கினார். கீழ்கண்ட 5 ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள், நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய மொழிப் போராட்டம், முத்துசாமிப் பிள்ளை எழுதிய நீதிக்கட்சி வரலாறு, பேராசிரியர் அன்பழகன் எழுதிய வகுப்புரிமைப் போராட்டம். (முதல் பகுதி மட்டும்), பேராசிரியர் ப.இராசாராம் ஆங்கிலத்தில் எழுதிய நீதிக்கட்சி குறித்த நூலின் ஒருபகுதி The Birth of the Justice Party. நூல்களை...

சவால் விட்ட தேர்தல் ஆணையம் சந்தி சிரிக்கிறது

சவால் விட்ட தேர்தல் ஆணையம் சந்தி சிரிக்கிறது

தேர்தல் ஆணையம் நடத்தியுள்ள ஓட்டுத் திருட்டுகளை ராகுல் காந்தி ஆதாரத்துடன் அம்பலப்படுத்திவிட்டார். தேர்தல் ஆணையத்தின் முகத்திரை மக்கள் மன்றத்தில் கிழிந்து தொங்குகிறது! தலைமை தேர்தல்ஆணையர் ஞானேஷ்குமார் ராகுல் காந்தியை மிரட்டுகிறார். குற்றச்சாட்டுகளை ‘பிரமாண பத்திரத்தின்’ ஆவணமாக கையெழுத்திட்டுத் தர வேண்டும், 7 நாட்களில் சமர்ப்பிக்காவிட்டால் ஆணைத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் சவால் விட்டார். ஆனால் உச்சநீதிமன்றம் ராகுல் காந்தி கேட்ட கேள்வியை தேர்தல் ஆணையத்திடம் கேட்டபோது தேர்தல் ஆணையம் மண்டியிட்டுக் கிடக்கிறது. நீக்கப்பட்ட 65 இலட்சம் வாக்காளர்களுடைய பெயரை வெளியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு போட்டது. உச்சநீதிமன்றம் அதை ஏற்க மறுத்து விட்டது. நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டது. ராகுல் காந்தியை மிரட்டி பார்க்கலாம், ஆனால் உச்சநீதிமன்றத்தை இவர்களால் மிரட்ட முடியுமா? உத்தரவிட்ட 56 மணி நேரத்தில் நீக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை மட்டும் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு முகத்தில்...

கடவுளின் குரலை  “மனம்” பேசுகிறதா?  கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (11)

கடவுளின் குரலை “மனம்” பேசுகிறதா? கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (11)

கேள்வி: மனம் ஒரு குரங்கு, மனசை அடக்கு என்று ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள். மனமும், சிந்தனையும் ஒன்றா? ‘சிந்தனைசெய் மனமே’ என்று திரைப்படப் பாடல் சொல்கிறதே! மனதும் அறிவும் வெவ்வேறுதானே! அப்படியாயின், மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே? மனசெல்லாம் மத்தாப்பு, மனநிம்மதி, மனநிறைவு, மனசாட்சி இப்படி ஏராளமான சொற்களை அன்றாடம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். மனம் ஒரு குரங்கு என்று ஆன்மீகவாதிகள் மட்டுமா சொன்னார்கள்? இல்லை. “மனசாட்சி தூங்கும் போது மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது” என்பது கலைஞர் சினிமா வசனமும் கூட. மார்க்சின் எழுத்துகளில் கூட மனசாட்சி என்ற சொல்லைக் காண முடியும். மனம் என்ற சொல் ஆன்மீகத்துக்கு பட்டாபோட்ட சொல் அல்ல; ஆனால் எது மனம் என்பதை விளக்குவதில்தான் ஆன்மீகவாதிகளும் பகுத்தறிவாளர்களும் மாறுபடுகின்றனர். மனம் என்பது தனித்து சுயம்புவாக இயங்குவதாக ஆன்மீகவாதிகள் சித்தரிப்பர். ஆனால் மனம் என்பது மூளை என்ற உறுப்பின் செயல்பாடென அறிவியலாளர் கூறுவர். மகிழ்ச்சி, கோபம் என பல்வேறு உணர்ச்சிகளை...

கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா

கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா

சென்னை: கழகம் 14-ம் ஆண்டு துவக்க விழா சென்னை மாவட்டக் கழகம் சார்பில் இராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவு படிப்பகத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கொடியோற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கழகத் தோழர்கள் தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்),வேழவேந்தன்(மாவட்டத் தலைவர்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), ம.கி எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ப.அருண்( இளைஞரணி அமைப்பாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (வடசென்னை மாவட்ட அமைப்பாளர்), கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), த.நா சூர்யா (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் தோழி, குறளரசி மற்றும் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 12.08.2025 மாலை 5.00 மணியளவில் கோனூர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து...

பா.ஜ.கவின் வஞ்சக அரசியல்

பா.ஜ.கவின் வஞ்சக அரசியல்

குடியரசு துணைத் தலைவர் பதவி என்ற அரசமைப்பு பதவியை கட்சி அரசியலுக்காக வழமைக்கு மாறாக இடையில் பறித்துவிட்டு, புதிதாக குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துகிறார்கள். தாங்கள் நடத்திய அரசியல் விளையாட்டுக்கு அனைத்து கட்சிகளும் துணைக்கு வர வேண்டும் என்று கேட்பதும் அதுவும் தமிழரை நாங்கள் நிறுத்தி இருக்கிறோம் என்று பேசுவதும் ‘ஏமாற்று அரசியல்’ தான். வேட்பாளர் சிபி. ராதா கிருஷ்ணனுக்காக பாஜக தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் ஆதரவு கேட்பது எதற்காக? பாஜகவின் தமிழ்நாட்டு வஞ்சிப்புக் கொள்கைக்கு நீங்களும் துணை வரவேண்டும் என்பதற்காகவா? சி .பி.ராதாகிருஷ்ணன் தன்னுடைய அடையாளத்தை தமிழராக ஏற்க வில்லை இந்துவாகத்தான் அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தியாவை பாரத தேசம் என்று மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அவர் மாநிலங்களவைத் தலைவராக வந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டு மாநிலங்களவை உறுப்பினர்களின் உரிமைக் குரலை அவர் அனுமதிக்கப் போவதும் இல்லை. இதுவரை தமிழ்நாட்டு உரிமைக்கு குரல் கொடுத்ததும் இல்லை. “தமிழர்...

பார்ப்பன “தீண்டாமை”

பார்ப்பன “தீண்டாமை”

வைணவ கோயில்களில் அர்ச்சகர் உரிமை மட்டும் அல்ல, பிரசாதம் விற்கும் உரிமையும் ‘வைணவ பிராமணர்களுக்கு’ மட்டுமே உண்டு என்று உயர் நீதிமன்றத்தில் பார்ப்பனர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். காஞ்சிபுரம் தேவநாதன் கோயிலில் பிரசாத விற்பனை நிலையம் அமைக்க இந்து அறநிலையத்துறை ஏல அறிவிப்பை வெளியிட்டது. அந்த ஏலத்தில் அனைத்து பிரிவுகளும் பங்கேற்க முடியும் என்று அறிவித்திருந்தது. இதற்கு வைணவ ‘பிராமணர்களுக்கு’ மட்டுமே உரிமை என்றும் ஏனைய சமூகத்தினர் இதில் பங்கேற்க உரிமை கிடையாது என்றும் அறநிலையத்துறை அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த பார்ப்பனர் வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார். காலம் காலமாக பார்ப்பன வைணவர்களுக்கு மட்டுமே இந்த விற்பனை நிலையத்திற்கு உரிமை வழங்கப்பட்டு வருகிறது என்றும், பழக்க வழக்கங்களை மாற்றக்கூடாது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் கடந்த ஆண்டில் வைணவ பார்ப்பனர் அல்லாத ஒருவருக்கு உரிமை வழங்கப்பட்டதால் பெருமாள் வளாகத்தின் புனிதம் மீறப்பட்டது என்றும், பிரசாதத்தில் பெருமாளுக்கு எதிராக...

1947 ஆகஸ்ட் 15-ல் ஆர்.எஸ்.எஸ் ஏற்றிய ஹிட்லர் கொடி

1947 ஆகஸ்ட் 15-ல் ஆர்.எஸ்.எஸ் ஏற்றிய ஹிட்லர் கொடி

தேசத்துக்கு மாபெரும் தொண்டாற்றிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ் என்கிறார் மோடி. உலகின் மிகப்பெரும் தொண்டு நிறுவனம் என்றும் புகழாரம் சூட்டியது, சுதந்திரதின கொடியேற்று விழாவில். ஆகஸ்ட் 15 சுதந்திர நாளை பெரியார் ‘துக்க நாள்’ என்று வெளிப்படையாகவே அறிவித்தார். அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து பார்ப்பனிய பனியாவுக்கு கைமாற்றப்பட்டது என்றார். இதற்காக பார்ப்பனியம் பெரியாரை ‘தேச விரோதி’ என்று முத்திரை குத்தியது. பார்ப்பன தேசத்துக்கு நான் விரோதி தான் என்று பெரியார் அறிவித்தார். ஆனால் தேச பக்தி வேடம் போடும் ஆர்.எஸ்.எஸ் சுதந்திர தினத்தில் என்ன செய்தது? பிரிட்டிசார் ஆட்சி உரிமையைத் தங்களிடம் விட்டுச் செல்வார்கள் என்று அவர்கள் கனவில் மிதந்து கொண்டு இருந்தார்கள், வெளிப்படையாக சில இடங்களில் பேசினார்கள். இஸ்லாமிய வெறுப்பைக் கடுமையாக கண்டித்த காந்தியையும் நேருவையையும் தங்கள் எதிரிகளாக கருதினார்கள், அதற்காக காந்தியின் உயிரையே விலையாக கேட்டவர்கள், ஆகஸ்டு 15 சுதந்திர நாளில் அவர்கள் என்ன செய்தார்கள்? “இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில்...

மடியட்டும் ஆணவப் படுகொலைகள் கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

மடியட்டும் ஆணவப் படுகொலைகள் கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

“மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!” என்ற தலைப்பில் கழகத் தோழர்கள் ஜாதி எதிர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் செய்தி விவரம்: சென்னை: ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தெருமுனைக் கூட்டம் 12.08.2025 அன்று திருவல்லிக்கேணி நடேசன் சாலையில் நடைபெற்றது. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), தலைமையில், லட்சுமணன் முன்னிலையில் நடைபெற்றது. சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்வு பொதுமக்களை தோழர்களை வெகுவாக ஈர்த்தது. ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நெல்லை கவின் படத்திறப்பு நடைபெற்றது. வழக்கறிஞர் சாரநாத் (மாவட்டச் செயலாளர் -விசிக) ஜாதி எதிர்ப்புப் பரப்புரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கழக செயல்பாடுகளை பாராட்டி உரை நிகழ்த்தினார். நிறைவாக சிறப்புரையாற்றிய பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையின் தேவை குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இரண்டாம் நாள்: 13.08.2025 அன்று சென்னை சி.என்.கே சாலை...

ஈரோட்டில் ஜாதிமறுப்பு இணையர்கள் ஒன்றுகூடல்;  மாவட்டக் கழகம் முடிவு

ஈரோட்டில் ஜாதிமறுப்பு இணையர்கள் ஒன்றுகூடல்; மாவட்டக் கழகம் முடிவு

ஈரோடு தெற்கு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 10.8.25 அன்று ஞாயிற்றுக்கிழமை, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு மதிமுக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். எழிலன்( மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஈரோட்டில் ஜாதி மறுப்பு இணையர்களின் ஒன்று கூடல் நிகழ்வை முழு நாள் நிகழ்வாக நடத்துவது என்றும், தமிழ்நாடு முழுவதும் இருந்து ஜாதி மறுப்பு இணையர்களை அணிதிரட்டுவது என்றும், சிறப்பு அழைப்பாளர்களாக தலைவர் பொதுச் செயலாளர் உள்ளிட்டோரை அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. கிருஷ்ணன், குமார், ஆசிரியர் சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கார்மேகம், நல்லதம்பி, சசிக்குமார் போதி சத்துவா, விருதுநகர் செந்தில், வீரப்பன்சத்திரம் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். * 10.08.2025 அன்று கழக செயல்பாடுகளை இணையத்தில் தொடர்ந்து கவனித்து வந்த தோழர் ந.கெளரி சங்கர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்....

ஆணவப் படுகொலை சட்டம் கோரி பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலை சட்டம் கோரி பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும், நெல்லை கவின் படுகொலை செய்தவர்கள் அனைவரின் மீதும் கடுமையான தண்டனையை நிறைவேற்ற கோரியும் கண்டன‌ ஆர்பாட்டம் பொள்ளாச்சி மாவட்டக் கழகம் சார்பில் 6.8.2025 அன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தோழர் யாழ் வெள்ளியங்கிரி தலைமையில் நடைபெற்றது. சபரிகிரி வரவேற்புரையாற்றினார். மாரிமுத்து (தி.க), சண்முகவேல் பிரபாகரன் (திஇதபே), தமிழ் குமரன் (ஆதித்தமிழர் பேரவை), வழக்குரைஞர் சேதுபதி (தமிழ் தன்னுரிமை மீட்பு இயக்கம்), மாரிமுத்து (மவிமு), தமிழ் பிரபாகரன் (மே17), மற்றும் கழகத் தோழர்கள் ரூபா, ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இலக்கியா நன்றியுரை ஆற்றினார். பெரியார்முழக்கம்இதழ்14082025

சுயமரியாதைக்காக கருப்புச் சட்டை ஏந்திய ‘கீழப்பாலையூர்’ (13)

சுயமரியாதைக்காக கருப்புச் சட்டை ஏந்திய ‘கீழப்பாலையூர்’ (13)

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். கீழப்பாலையூர் வரலாறு இது. ராஜராஜன் காலத்தில் சமணப்பள்ளியைக் கொண்டிருந்த ஊர், தஞ்சை பெரிய கோயிலின் தென்புறக் கருவறைச் சுவற்றில் பெரிய நெல் களம் குறித்த வரலாற்றுக் குறிப்பு என திருவாரூரில் உள்ள கீழப்பாலையூருக்கு வரலாற்றுப் பெருமிதங்கள் ஏராளம் சொல்லப்படுகின்றன. ஆனால், டெல்டா பகுதியில் நிலவிய கொடூரமான ஜாதிய- பண்ணை அடிமைத் தனத்திற்குத் தப்பாத பகுதி என்ற வரலாறு பதிவாகவில்லை. சுற்றியிருந்த சுமார் 50 கிராமங்களிலும் நிலமும் ஆதிக்கமும் விரல் விட்டு எண்ணக்கூடிய பார்ப்பனர்கள் வசம்தான் இருந்தன. ராமசுப்ரமணிய ஐயர், சேஷாத்ரி ஐயர் போன்றோரிடம்தான் கீழப்பாலையூர் மண்ணும் மக்களும் சிக்குண்டு இருந்தனர். அக்ரஹாரத் தெருவுக்குள் ஆடு, மாடுகள் நுழையலாம். ஆனால், ஐயர் வயலில் கூலியாட்களாக இருந்த தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்துவிடக்கூடாது. பிற்படுத்தப்பட்டவர்கள் ஆடு,...

இந்தியாவின் முதல் நாத்திகர் மாநாடு  – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(10)

இந்தியாவின் முதல் நாத்திகர் மாநாடு – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(10)

நம் நாட்டு வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத புதுமையானதொரு மாநாடு சென்னை எழும்பூரில் அமைந்த ‘ஒயிட்ஸ் மெமோரியல் ஹால்’ என்ற மண்டபத்தில் 31-12-1933 அன்று வெற்றியாக நடந்தேறியிருக்கிறது. நாஸ்திகர் மகாநாடு என்று அழைக்கப்பட்ட அம்மாநாட்டின் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை விரிவாகப் ‘புரட்சி’ ஏடு தந்தது. நாடெங்கிலுமிருந்து கணக்கற்ற எண்ணிக்கையில் மக்கள் வந்து கலந்து கொண்டார்கள். குறிப்பாக, படிப்பறிவு பெற்ற நிறையப் பெண் வீராங்கனைகள் மாநாட்டில் பங்கேற்ற செய்தியைப் படிக்கும்போது பெருமையாக இருக்கின்றது. இம்மாநாட்டில் கருத்துரைகள் ஆற்றிய சான்றோர்தம் சுவையான சில சொற்பொழிவுகள் படிப்பவர் எவருக்கும் உணர்ச்சியூட்டும் என்பதில் அய்யமில்லை. வரவேற்புரை நிகழ்த்திய சி.கே. குப்புசாமியின் கருத்துரை ஒவ்வொருவருக்கும் சிந்தனை விருந்தாகும். “நாஸ்திகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து சென்னை மாகாணத்தில் முதன் முதலாக மாகாண நாஸ்திகர் மகாநாட்டைக் கூட்டியிருக்கிறோம். இதிலிருந்து உலகத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், பாமர மக்களுக்கும் நாஸ்திக உணர்ச்சி அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாஸ்திகம் என்றால் என்ன? சர்வசக்தி, சமகுணம், தயாளகுணம், ஜீவகாருண்யம்,...

மடியட்டும் ஆணவப் படுகொலைகள்

மடியட்டும் ஆணவப் படுகொலைகள்

தமிழ்நாடு அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் அது மிகவும் அவசியம். ஆனால் ஆணவக் கொலை தடுப்புச் சட்டங்கள் கொண்டு வருவதோடு ஜாதி எதிர்ப்பு இயக்கங்களின் கடமைகள் முடிந்து விடக்கூடாது. ஜாதி எதிர்ப்புக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினரை ஜாதி மறுப்பாளராக மாற்ற வேண்டும். பெரியார் இயக்கம் ஜாதி ஒழிப்புக்காக ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை எரித்தது, இட ஒதுக்கீட்டுக்காகப் போராடியது. இந்த சட்டப் போராட்டங்கள் மிகவும் தேவை. அதே நேரத்தில் பெரியார் ஒவ்வொரு கூட்டத்திலும் ஜாதி எதிர்ப்புக் கருத்துக்களை மக்களிடம் பேசினார், எழுதினார், ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தினார். இட ஒதுக்கீடு உரிமைச் சட்டங்கள் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டங்கள் என்ற சட்டப் போராட்டங்களோடு சமுதாயத்தில் ஜாதி ஒழிப்புக்கான இயக்கங்களை நடத்த வேண்டும். “மடியட்டும் ஜாதி படுகொலைகள்” என்ற தலைப்பில் 7.08.2025 பெரியார் முழக்கம் வெளியிட்டுள்ள முதல்...

பெரியார் முழக்கத்துக்கு பாராட்டு

பெரியார் முழக்கத்துக்கு பாராட்டு

“பெரியார் மண்” என்ற தலைப்பில் பெரியார் தொண்டர்கள் சாதனை குறித்து “முரசொலியில்” ர.பிரகாசு எழுதி வரும் கட்டுரைத் தொடரை “பெரியார் முழக்கம்” தொடர்ந்து வெளியிட்டு வருவது மகிழ்ச்சி தருகிறது. பெரியார் தொண்டர்கள் கிராமங்களில் நடத்தியப் புரட்சிகளை படிக்கும்போது மெய் சிலிர்க்கிறது. எதிர்ப்புகளில் எதிர்நீச்சல் போட்டு அவர்கள் போட்டுத் தந்த பாதைகளில்தான் நாம் இன்றைக்கு எளிதாகப் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். கரடுமுரடான பாதைகளில் அவர்கள் நடந்தார்கள். நாம் நெடுஞ்சாலையில் வாகனத்தில் வசதியாக பயணிக்கிறோம். 3-ம் பக்கத்தில் “கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை” கட்டுரைகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. மதவெறிக்கு பலியான பகுத்தறிவாளர்களின் பட்டியலை ரிவோல்ட் வெளியிட்டுள்ளதை பெரியார் முழக்கம் வெளியிட்டுள்ளது மிகவும் சிறப்பு. பெரியார் நடத்திய இதழ்கள் 1930ஆம் ஆண்டிலேயே எவ்வளவு அறிவு செறிவோடு வெளிவந்திருக்கிறது என்பது வியக்க வைக்கிறது. அதே கட்டுரயில் “நான் தூக்கு மேடையில் நின்று கொண்டு பரிசுத்த நாத்திகன் என்று கூப்பாடு போட்டு சொல்வேன்” என்ற பெரியார் பேச்சை...

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு கழகம் ஆதரவு

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு கழகம் ஆதரவு

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களின் பதிவு: “வேறு எந்தப் பிரிவினரின் போராட்டத்தையும்விட தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு முன்னுரிமை தர வேண்டியதுதான் சமூக நீதி அரசின் முதன்மையான கடமையாகும்”. சென்னையில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.அவர்கள் தங்களின் வேலை உத்தரவாதத்திற்கும், ஊதியம் குறைக்கப்படக்கூடாது என்பதற்கும் போராடுகிறார்கள். பேச்சுவார்த்தை என்ற பெயரில், போராட்டத்தை உடைப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் வருகின்றன. மழை வெள்ளம் வரும்போதும், புயல் வீசும்போதும் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் சுமை, தூய்மைப் பணியாளர்கள் உழைப்பின் மீதுதான் விழுந்து கிடக்கிறது. வெள்ளத்தால் சென்னை நகரம் பாதிக்கப்பட்டபோது, தூய்மைப் பணியாளர்கள்தான் சென்னையை மீட்டெடுத்தார்கள். அதற்காக தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு பாராட்டு விருந்து அளித்து மதிப்புத்தொகை வழங்கியதையும் நினைவுபடுத்த வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடி பள்ளிகளில் படித்த மாணவர்களை உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் திட்டங்களை அமல்படுத்துகிற தமிழ்நாடு அரசு, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏன் இழுத்தடிக்க வேண்டும்? அறிவுப்பணிக்கு உயர் ஊதியம்;...

ஓட்டுத் திருட்டுகள்

ஓட்டுத் திருட்டுகள்

“தேர்தல் ஜனநாயகத்தின் முதலாளிகள் வாக்காளர்கள்” என்று சொல்லப்படுவது உண்டு. இப்போது வாக்காளர்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பறித்துக் கொண்டுவிட்டது. இதுதான் ‘ இந்துத்துவ ஜனநாயகம்’. தேர்தல் ஆணையம் நடத்திய ‘ஓட்டுத் திருட்டுகளை’ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருக்கிறார் ராகுல் காந்தி. வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்று அந்த எந்திரத்தை வடிவமைத்த குழுவில் இடம் பெற்ற பொறியாளரே அமெரிக்காவிலிருந்து ஏற்கனவே பேட்டி அளித்துள்ளார். இப்போது ராகுல் காந்தி தேர்தல் ஆணையமே போலி வாக்காளர்களை உருவாக்கி மோசடி செய்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் மகாதேவபுரா என்ற சட்டசபை தொகுதியை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அதில் நடந்துள்ள போலி வாக்காளர் மோசடிகளை ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார். தேர்தல் ஆணையம் தொடர்ந்து மோசடிகளை செய்து வருகிறது. மகாராஷ்டிராவில் 2024 ஏப்ரலில் நடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை அடுத்த 9 மாதங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில்...

நீதிபதியின் திமிர்ப் பேச்சு  தலைமை நீதிபதி கண்டனம்

நீதிபதியின் திமிர்ப் பேச்சு தலைமை நீதிபதி கண்டனம்

ஜே.பி. ப்ர்திவாலா குஜராத் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது வழக்கு ஒன்றில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான மோசமான கருத்துக்களை கூறினார். ‘பட்டேல்’ சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடிய ஹர்திக் பட்டேல் மீது தொடுக்கப்பட்ட தேசத் துரோக வழக்கு இந்த நீதிபதிக்கு முன் 2015 டிசம்பரில் விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த நாட்டை சீரழிப்பது எவை என்று என்னிடம் கேட்டால் ஒன்று இட ஒதுக்கீடு; மற்றொன்று ஊழல் என்று கூறுவேன்” என்று அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். அப்போது 58 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தனர். தீர்மானம் மாநிலங்களவையில் தாக்கல் செய்ததை அறிந்து அடுத்த சிலமணி நேரங்களிலேயே குஜராத் மாநில பாஜக ஆட்சி நீதிபதியை அவசரமாக காப்பாற்றுவதற்கு முன் வந்தது. நீதிபதியின் முன் ஒரு மனுவை தாக்கல் செய்து அவர் இட ஒதுக்கீடு பற்றிய கருத்தை நீதிமன்ற குறிப்பேடுகளிருந்து...

வருவாய்த்துறையின் அதிரடி நடவடிக்கை தீண்டாமைச் சுவர் இடிப்பு

வருவாய்த்துறையின் அதிரடி நடவடிக்கை தீண்டாமைச் சுவர் இடிப்பு

கரூர் மாவட்டம் முத்தலம்பட்டி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை தீண்டாமைச் சுவர் ஒன்று இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் வாழும் இடைநிலைச் ஜாதிகளான தொட்டிய நாயக்கர் என்ற சமூகத்தினர், அருந்ததியர் சமூக மக்கள் தங்கள் பகுதிக்குள் வர விடாமல் தடுப்பதற்காக இந்த தடுப்புச் சுவரை அரசு புறம்போக்கு நிலத்தில் எழுப்பி இருந்தனர். மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த சுவர் எழுப்பப்பட்டது. அருந்ததியர் சமூகத்தினர் தங்கள் மாரியம்மன் திருவிழாவை கொண்டாடுவதற்கு மேடை அமைப்பதற்கும்- அரசு புறம்போக்கு நிலத்தில் கழிப்பறை ஒன்றை கட்டுவதற்கும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருந்ததியினர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த சுவரை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்றும் அரசு நிலத்தில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருக்கிறது என்றும் தொட்டிய நாயக்கர் சமூக தலைவருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருந்தனர். இது தீண்டாமைச் சுவர் அல்ல; சமூகவிரோதிகள் உள்ளே...

கிராமத் தீண்டாமைகளைத் தடுக்க கண்காணிப்புக் குழு

கிராமத் தீண்டாமைகளைத் தடுக்க கண்காணிப்புக் குழு

ஜாதிக் கட்டமைப்புகளில் இருந்து கிராமங்கள் விடுபடவில்லை.இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை அளித்துள்ள ஒரு தீர்ப்பைக் குறிப்பிட வேண்டும். தென்காசி மாவட்டத்தில் தலைவன் கோட்டை என்ற கிராமத்தில் தலித் மக்கள் வாழும் பகுதிக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் தரப்படவில்லை.பிற ஜாதியினர் வாழ்கிற பகுதிகளில் இருந்துதான் அவர்கள் தண்ணீர் எடுக்க வேண்டியிருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை வந்த நிலையில் தண்ணீர் எடுக்க தலித் மக்களுக்கு ஆதிக்க ஜாதியினர் தடை போட்டனர். தண்ணீர் பற்றாக்குறை வரும்போது ஜாதி பாகுபாடும் வந்து விடுகிறது.‌ நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. நீதிமன்றம் அரசுக்கு விளக்கம் கேட்டதற்கு பிறகு, அரசு நிர்வாகம் தலித் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கியது. இப்போது பிரச்சனை சரி செய்யப்பட்டு விட்டதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார். `நீதிபதி ஆர்.என். மஞ்சுளா’ தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியமானது. “பொது வளங்கள் சரிசமமாக பாகுபாடு இன்றி வழங்கப்பட வேண்டும் என்பதைத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சுட்டிக்காட்டுகிறது” என்பதை...

மேச்சேரியில் “பெரியார் எனும் பெருநெருப்பு” கருத்தரங்கம்!

மேச்சேரியில் “பெரியார் எனும் பெருநெருப்பு” கருத்தரங்கம்!

சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் 03.08.2025 ஞாயிறு மேச்சேரி VGP மஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிவ சண்முகம் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கதுரை, வெற்றிமுருகன், திவாகர் , மற்றும் ஏற்காடு தேவபிரகாஷ் (சேலம் மாவட்ட இளைஞர் அணித் தலைவர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரபாகரன்( மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜின் பகுத்தறிவு பாடல்களைப் பாடினார். U2Brutus தோழர்கள் மைனர் மற்றும் சத்யாவின் அரசியல் அரட்டை நடைபெற்றது. “மீண்டும் நடிகர்” எனும் தலைப்பில் பேரலை மில்டன், “மாடல்ல மற்றை யவை” எனும் தலைப்பில் U2Brutus மைனர், “நாக்பூர் ஏஜெண்டுகள்” எனும் தலைப்பில் இந்திரகுமார் தேரடி அவர்களும் கருத்துரை ஆற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கவியரசு (தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்) நன்றி கூறினார்....

வேலுபிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

வேலுபிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் 27.07.25 அன்று இயக்குனர் வேலு பிரபாகரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இனமுரசு சத்யராஜ் சிறப்புரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தபெதிக பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், ப்ளூ சட்டை மாறன், இயக்குனர் கதிர், திக பொருளாளர் வீ.குமரேசன், பாடகர் அந்தோணி தாசன், இயக்குனர் அகரன் உள்ளிட்ட பலரும் இயக்குனர் வேலு பிரபாகரனுடனான தங்கள் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். இரா. உமாபதி (திவிக சென்னை மாவட்டச் செயலாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) , ம.கி.எட்வின் பிரபாகரன் (தென்சென்னை மாவட்ட அமைப்பாளர்), கோபி (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் ஒருங்கிணைத்தார். பெரியார்முழக்கம்இதழ்07082025

ஆணவப் படுகொலையை கண்டித்து  கோவையில் தெருமுனைக் கூட்டம்

ஆணவப் படுகொலையை கண்டித்து கோவையில் தெருமுனைக் கூட்டம்

“மடியட்டும் ஆணவப் படுகொலைகள் மனிதம் நம் அடையாளம் – ஜாதி அவமானம்” என்ற தலைப்பில் மாதவன் தலைமையில் கோவை மாவட்டக் கழகம் சார்பில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு மாலை 5 மணிக்கு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. தெருமுனைக் கூட்டத்தில் ஜாதி ஆணவப் படுகொலைகள் உள்ளிட்ட ஜாதிய கொடுமைகளுக்கு காரணமானவற்றைப் பற்றி மக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது. வழக்கறிஞர் வெண்மணி(திராவிட தமிழர் கட்சி), இளவேனில் (தமிழ்ப் புலிகள் கட்சி) மலரவன்(புஇமு), கா.சு.நாகராசு (திராவிட இயக்க தமிழர் பேரவை), மு.இனியவன் (மத்தியக் குழு உறுப்பினர், சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார்) ப.மாணிக்கம் (விசிக) உள்ளிட்ட தோழமை அமைப்பு தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார்முழக்கம்இதழ்07082025

விநாயகர் ஊர்வலத்தில்   விதிமீறல்களை தடுக்க மனு

விநாயகர் ஊர்வலத்தில் விதிமீறல்களை தடுக்க மனு

கோவை: விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சியாக நீதிமன்ற ஆணைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கோவை மாநகர வடக்கு துணை காவல் ஆணையர், கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் ஜீலை 28 அன்று மனு அளிக்கப்பட்டது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பதிவு அஞ்சலில் மனு அனுப்பப்பட்டது. தோழர்கள் நிர்மல் குமார், வெங்கடேசன், கிருஷ்ணன், ஸ்டாலின், மாதவன், நவீன் கலந்து கொண்டனர். கடலூர்: விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சியாக நீதிமன்ற ஆணைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடலூர் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 1.8.25 அன்று பெரியார் சிவா தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. வழக்கறிஞர் இள.புகழேந்தி( திமுகவின் தேர்தல் பணி குழு...

அக்ரஹாரத் தடையை தகர்த்த கொக்கூர்

அக்ரஹாரத் தடையை தகர்த்த கொக்கூர்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலியில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். கொக்கூர் வரலாறு இது. கடந்த இதழின் தொடர்ச்சி… கொக்கூர் கிராமத்திற்குள் அக்ரஹாரம் வழியாகப் பெரியார் நுழைந்தபோது, அந்தத் தெருவில் பிறர் நுழையக் கூடாது என தடுக்கப்பட்டிருந்த தென்னை மரத் தடுப்புகள் தகர்த்து வீசப்பட்டன. பண்ணையார் ஐயர் குடும்பம் கதவைத் தாழிட்டுக்கொண்டது. மேல் சட்டையோடு, காலில் செருப்பு அணிந்துகொண்டு அக்ரஹாரத் தெருவுக்குள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் நுழைந்ததைக் கண்டு கொக்கூர் மக்கள் சுயமரியாதை உணர்வு பெற்றனர். அங்கிருந்து அரை கிலோ மீட்டருக்கு அப்பால்தான் கூட்டம் நடைபெற்றது. ஆனால் பெரியாரின் பேச்சை ஐயர் கேட்க வேண்டுமென்று அக்ரஹார முனையில் ஒலிபெருக்கி அமைத்திருந்தனர். 3 மணி நேரம் பெரியார் பேசினார். கொக்கூர் மக்களின் மூளைகளில் இடப்பட்டி ருந்த அடிமை விலங்கு அறுபட்டது. அதன்பின்னர்தான் எல்லோரும் கல்வி...

சட்டத்தில் `கடவுள்’ சொல்லை இணைக்க மறுத்த அம்பேத்கர்

சட்டத்தில் `கடவுள்’ சொல்லை இணைக்க மறுத்த அம்பேத்கர்

“அம்பேத்கரின் முகப்புரை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரகசிய வரலாறு” எனும் தலைப்பில் ஆகாஷ் சிங் ரத்தோ எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை ‘எதிர் வெளியீடு’ வெளியிட்டுள்ளது. இந்த நூலை திறனாய்வு செய்து ம.கி எட்வின் பிரபாகரன் ஜூலை 12.07.2025 அன்று நடைபெற்ற 28வது நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் நிகழ்த்திய உரையின் சுருக்கம்: அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை (preamble) எழுதியது யார்? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, ஆய்வாளர் ஆகாஷ் சிங் ரத்தோர் ஆங்கிலத்தில் எழுதிய Ambedkar’s preamble: A secret history of the constitution of India என்ற புத்தகத்தை, எழுத்தாளர் ச.வின்சென்ட் தமிழில் மொழிபெயர்த்து, “அம்பேத்கரின் முகப்புரை: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இரகசிய வரலாறு” எனும் பெயரில் நூலாகக் கொண்டு வந்துள்ளார். சந்தர்ப்பசாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு, வேறு யாரும் இதனை எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பதை நிறுவுவதற்கான தரவுகளையும் மேற்கோள்களையும் தொகுத்தளித்து, அதன்மூலம் அம்பேத்கர்தான் முகப்புரையை எழுதினார் என்பதை...

திருப்பூரில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

திருப்பூரில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

மனிதம் நமதுஅடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை திருப்பூர் மாவட்டக் கழகம் நடத்தவுள்ளது. 12.08.2025 செவ்வாய்க்கிழமை: அருள்புரம் மற்றும் பொங்கலூர் பகுதியில் மாலையில் நடைபெறும். 13.08.2025 புதன்கிழமை: பல்லடம் பகுதியிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெறும். பெரியார்முழக்கம்இதழ்07082025.

உபா சட்டம் தேவையா?

உபா சட்டம் தேவையா?

2018-2022 வரையிலான காலகட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) சட்டத்தில் 8947 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வெறும் 252 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலாக அளித்த பதிலில், 2018 – 1,421 பேர் 2019 – 1,948 பேர் 2020 – 1,321 பேர் 2021 – 1,621 பேர் 2022 – 2,636 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 2,633 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 2,162 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 252 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதைப் போல, உபா சட்டத்தை வைத்து சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களை ஒடுக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இச்சட்டத்தின் தேவையை கேள்விக்குள்ளாக்குகிறது இந்த புள்ளி விவரங்கள். பெரியார்முழக்கம்இதழ்07082025

ஆணவப் படுகொலை சட்டம்  வரட்டும்; ஆனாலும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை தொடர வேண்டும்!

ஆணவப் படுகொலை சட்டம் வரட்டும்; ஆனாலும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை தொடர வேண்டும்!

தடைச்சட்டம் என்று ஒன்று இல்லாத காரணத்தினால் தான், ஆணவப் படுகொலைகள் நடக்கிறதா? வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்தும் கூட ஜாதியக் கொடுமைகள் நின்று விட்டதா? சட்டங்களும் வரட்டும்! ஆனால் ஆணவப் படுகொலைகளுக்கு ஊற்று எது? ஜாதிய கட்டமைப்புதான்! ஜாதியக் கட்டமைப்பை மீறக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? இல்லை. சமையலறை பெண்களுக்கே உரிமையானது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? இல்லை. சட்டங்கள் ஏதும் இல்லாமலே, இவைகள் கண்டிப்பாக வாழ்க்கையின் சட்டங்களானது எப்படி? ஆணவக் கொலையில் முதல் குற்றவாளியாக கூண்டில் ஏற்ற வேண்டியது ஜாதியையும் ஜாதி வெறியையும் தான்! பிறப்பின் அடிப்படையில் விலையில்லாமல் கிடைக்கிறது ஜாதி.‌ அந்த விலையில்லா பொருளுக்கு மதத்தின் முதலீடுகள் இருக்கின்றன.‌இவை புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாமலே கிடைக்கின்ற முதலீடுகள்! மனுதர்மம், பகவத்கீதை, சாஸ்திரம், ஆகமம், வேதம், ராமாயணம், இதிகாசங்கள், சம்பிரதாயங்களில் இருந்து இந்த முதலீடுகள் வருகின்றன! பிறப்பின் அடிப்படையில் விலையில்லாமல் கிடைக்கும் ஜாதியை இந்த முதலீடுகளே‌ இயக்கிக் கொண்டிருக்கின்றன....

ஆணவப் படுகொலை: முகநூல் குழப்பவாதிகளுக்கு பதில்

ஆணவப் படுகொலை: முகநூல் குழப்பவாதிகளுக்கு பதில்

ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க முதன்மைப் பணியாக நாம் கையில் எடுக்க வேண்டியது ஜாதியின் கேடுகள் குறித்தும், ஜாதி ஒழிப்பு குறித்தும் மக்களிடம் பரப்புரை செய்வதா? அல்லது ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் மட்டும் நிறைவேற்றினால் போதும் என்று கோரிக்கை வைத்து விட்டு, ஜாதி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தாமல் ஒதுங்கிகொள்வதா? ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் வேண்டாம் என்றும் அப்படி ஒரு சட்டம் தேவையில்லை என்றும் யாரும் இங்கு சொல்லவில்லை. ஆனால் அதே சமயம் அதைவிட முக்கியமானது ஜாதிய மனநிலையில் இருக்கும் இந்த சமூகத்தில் நேரடியாக மக்களிடம் சென்று ஜாதி என்கிற கட்டமைப்பு எந்த அளவிற்கு சமூகத்தை தனிமனிதர்களை மனிதத் தன்மையற்றவர்களாக மாற்றி வைத்திருக்கிறது? அது சக மனிதர்களை எவ்வாறு பிளவுபடுத்தி இருக்கிறது? சக மனிதன் மீது எந்த காரணமும் இன்றி வெறுப்பை விதைத்து இருக்கிறது? சக மனிதனை தன்னைவிட கீழானவன் என்று நம்பவைத்து இருக்கிறது? என்பதை எடுத்துச் சொல்லி அந்த...