குமரி மாவட்டத்தில் கழக கலந்துரையாடல் கூட்டம்

24.08.2025 அன்று மாலை 04.00 மணியளவில் தக்கலை அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் குமரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் தி.வி.க.வின் களப்பணியினை தொடங்க வேண்டும் என்ற குமரி மாவட்ட தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெற்ற கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இயக்கம் செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்கண்ட தோழர்கள் மாவட்டத் தலைவர் – ஜா. சூசையப்பா
மாவட்டச் செயலாளர் – நீதியரசர், மாவட்ட பொருளாளர் – ரமேஷ்பாபு, செய்தி தொடர்பாளர் – தமிழ்மதி ஆகியோர் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

தோழர்கள் இயக்கத்தில் தொய்வின்றி பணியாற்ற வேண்டும்
என்றும் மாத சந்தாவாக ரூ – 100/- வசூலிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

முன்னாள் மாவட்டச் செயலாளர் தமிழ்மதியிடம் கையிருப்பு தொகை ரூ. 4,660 இருப்பதை முறையான வரவு செலவு கணக்கினை கூட்டத்தில் சமர்பித்தார். புதிய பொறுப்பாளர்களிடம் ரூபாய் 5000/-த்தை ஒப்படைத்தார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் அடுத்த கட்ட செயல்பாடு குறித்தும், புதிய மற்றும் பழைய தோழர்களை சந்தித்து கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்ள செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. நிகழ்வில் பள்ளியாடி இளங்கோ, மஞ்சுகுமார், ஜெபகுமார், ரித்தீஸ், கரீம், அகமது, குறுப்பை (தென்காசி மாவட்டத் தலைவர்), அரு.மாசிலாமணி (நெல்லை மாவட்டத் தலைவர்), அணைகரை பா.பால்வண்ணன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார்முழக்கம்இதழ்28082025

You may also like...