உபா சட்டம் தேவையா?
2018-2022 வரையிலான காலகட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) சட்டத்தில் 8947 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வெறும் 252 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலாக அளித்த பதிலில்,
2018 – 1,421 பேர்
2019 – 1,948 பேர்
2020 – 1,321 பேர்
2021 – 1,621 பேர்
2022 – 2,636 பேர்
கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 2,633 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 2,162 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 252 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதைப் போல, உபா சட்டத்தை வைத்து சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களை ஒடுக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இச்சட்டத்தின் தேவையை கேள்விக்குள்ளாக்குகிறது இந்த புள்ளி விவரங்கள்.
பெரியார்முழக்கம்இதழ்07082025
