ஆணவப் படுகொலையை கண்டித்து கோவையில் தெருமுனைக் கூட்டம்
“மடியட்டும் ஆணவப் படுகொலைகள் மனிதம் நம் அடையாளம் – ஜாதி அவமானம்” என்ற தலைப்பில் மாதவன் தலைமையில் கோவை மாவட்டக் கழகம் சார்பில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு மாலை 5 மணிக்கு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
தெருமுனைக் கூட்டத்தில் ஜாதி ஆணவப் படுகொலைகள் உள்ளிட்ட ஜாதிய கொடுமைகளுக்கு காரணமானவற்றைப் பற்றி மக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது.
வழக்கறிஞர் வெண்மணி(திராவிட தமிழர் கட்சி), இளவேனில் (தமிழ்ப் புலிகள் கட்சி) மலரவன்(புஇமு), கா.சு.நாகராசு (திராவிட இயக்க தமிழர் பேரவை), மு.இனியவன் (மத்தியக் குழு உறுப்பினர், சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார்) ப.மாணிக்கம் (விசிக) உள்ளிட்ட தோழமை அமைப்பு தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார்முழக்கம்இதழ்07082025
