ஆணவப் படுகொலை சட்டம் கோரி பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும், நெல்லை கவின் படுகொலை செய்தவர்கள் அனைவரின் மீதும் கடுமையான தண்டனையை நிறைவேற்ற கோரியும் கண்டன‌ ஆர்பாட்டம் பொள்ளாச்சி மாவட்டக் கழகம் சார்பில் 6.8.2025 அன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தோழர் யாழ் வெள்ளியங்கிரி தலைமையில் நடைபெற்றது. சபரிகிரி வரவேற்புரையாற்றினார். மாரிமுத்து (தி.க), சண்முகவேல் பிரபாகரன் (திஇதபே), தமிழ் குமரன் (ஆதித்தமிழர் பேரவை), வழக்குரைஞர் சேதுபதி (தமிழ் தன்னுரிமை மீட்பு இயக்கம்), மாரிமுத்து (மவிமு), தமிழ் பிரபாகரன் (மே17), மற்றும் கழகத் தோழர்கள் ரூபா, ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இலக்கியா நன்றியுரை ஆற்றினார்.
பெரியார்முழக்கம்இதழ்14082025

You may also like...