பெரியாரின் பேத்திக்கு பெரியார் விருது
“பெண் விடுதலைப் போராளி கனிமொழி அவர்களுக்கு திமுக சார்பில் பெரியார் விருது வழங்கப்பட்டு இருப்பது மிகச் சிறப்பானது.பொருத்தமானது.இந்த விருதுக்கு நூற்றுக்கு நூறு தகுதி அவருக்கு உண்டு.இளமைக் காலத்தில் இருந்தே அவர் ஒரு பெரியாரிஸ்ட்.
“எங்கள் குடும்பத்தில் கனிமொழி ஒரு முழுமையான பெரியாரிஸ்ட்” என்று கலைஞர் பெருமையுடன் கூறினார். பெரியாரை உள்வாங்கியதால் அவரது அரசியல் பயணம் ஆரவாரம் இன்றி சீராக நதி போல் ஓடிக்கொண்டிருக்கிறது.வீண் சர்ச்சைகளுக்கு அவர் இடமளிப்பதில்லை கடுஞ்சொல் பேசாதவர்.எளிமையானவர். அதே நேரத்தில் பெண்களை அவமதிக்கும் கருத்துகள் தலைவர்களிடமிருந்து வரும்போது முதல் எதிர்ப்புக் குரல் அவரிடம் இருந்து தான் வரும்.தனது சொந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார். நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுகள் அதிர வைக்கின்றன.
மிகச் சிறந்த கவிஞர். அரசியல் வருகைக்கு பிறகு “கவிஞர் கனிமொழியை” காண முடியவில்லை என்பது வருத்தம்தான்.
பெரியார் பெண்ணுரிமை கருத்தியலைக் கடந்து பெண் விடுதலையைப் பேசியவர். பெரியாரின் பெண்ணுரிமை நோக்கி இன்று பெண்கள் ஏராளமாக வந்து கொண்டிருக்கிறார்கள் .ஆனால் பெரியாரின் பெண் விடுதலை கருத்தியலை ஏற்றுக்கொள்ளும் அபூர்வமான அரசியல் பெண் தலைவர் கனிமொழிதான் என்று உறுதியாக கூற முடியும்.
பெரியாரின் பேத்திக்கு பெரியார் விருது கிடைத்திருப்பது பெரியார் இயக்கங்களுக்கு கிடைத்த பெருமையாகவே கருதி மகிழ்கிறோம். வாழ்த்துகிறோம்.”
– “விடுதலை இராசேந்திரன்,”
முகநூல் பதிவு, 24.08.25.
பெரியார்முழக்கம்இதழ்28082025
