சமூக நீதி எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் நினைவேந்தல்

சமூக நீதி எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி 09.08.2025 அன்று தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் விஜயபாஸ்கர் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

திமுக இளைஞர் அணி செயலாளர் – தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமூகநீதி எழுத்தாளர் சு. விஜயபாஸ்கர் படத்தைத் திறந்து நினைவேந்தல் உறையாற்றினார்.மேலும் அவர் விஜயபாஸ்கரின் இணையர் காயத்ரி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ‘விஜயபாஸ்கர்’ அறக்கட்டளையை தொடங்கி வைத்தார்.அறக்கட்டளைக்கு திமுக சார்பாக ரூ.5,00,000 காசோலை காயத்ரியிடம் வழங்கினார்.

கீழ்கண்ட 5 ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட்டன.

தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள், நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய மொழிப் போராட்டம், முத்துசாமிப் பிள்ளை எழுதிய நீதிக்கட்சி வரலாறு, பேராசிரியர் அன்பழகன் எழுதிய வகுப்புரிமைப் போராட்டம். (முதல் பகுதி மட்டும்), பேராசிரியர் ப.இராசாராம் ஆங்கிலத்தில் எழுதிய நீதிக்கட்சி குறித்த நூலின் ஒருபகுதி The Birth of the Justice Party.

நூல்களை மொழிபெயர்த்த தோழர்களுக்கு நினைவுப் பரிசை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கினார். பேராசிரியர் விநாயகம் ஒருங்கிணைப்பு பணிகளை செய்தார். கவிஞர் தம்பி‌ தொகுத்து வழங்கினார்.

நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நினைவேந்தல் உரையாற்றினார்.

பெரியார்முழக்கம்21082025

You may also like...