மடியட்டும் ஆணவப் படுகொலைகள்
தமிழ்நாடு அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் அது மிகவும் அவசியம். ஆனால் ஆணவக் கொலை தடுப்புச் சட்டங்கள் கொண்டு வருவதோடு ஜாதி எதிர்ப்பு இயக்கங்களின் கடமைகள் முடிந்து விடக்கூடாது. ஜாதி எதிர்ப்புக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினரை ஜாதி மறுப்பாளராக மாற்ற வேண்டும். பெரியார் இயக்கம் ஜாதி ஒழிப்புக்காக ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை எரித்தது, இட ஒதுக்கீட்டுக்காகப் போராடியது. இந்த சட்டப் போராட்டங்கள் மிகவும் தேவை. அதே நேரத்தில் பெரியார் ஒவ்வொரு கூட்டத்திலும் ஜாதி எதிர்ப்புக் கருத்துக்களை மக்களிடம் பேசினார், எழுதினார், ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தினார்.
இட ஒதுக்கீடு உரிமைச் சட்டங்கள் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டங்கள் என்ற சட்டப் போராட்டங்களோடு சமுதாயத்தில் ஜாதி ஒழிப்புக்கான இயக்கங்களை நடத்த வேண்டும். “மடியட்டும் ஜாதி படுகொலைகள்” என்ற தலைப்பில் 7.08.2025 பெரியார் முழக்கம் வெளியிட்டுள்ள முதல் பக்க கட்டுரை எழுப்பும் கேள்விகள் மக்களை சிந்திக்க வைக்கக் கூடியவை. மக்கள் மனதில் பதியச்செய்யும்? கேள்விகளாக இருக்கின்றன. இந்த கேள்விகளை அமெரிக்காவிலும் கேட்க வேண்டி இருக்கிறது. எனவே பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் நடத்தும் “கனடியன் ரேஷனலிஸ்ட்” ஆகஸ்ட் இதழில் இந்த கட்டுரையை மறுபதிப்பு செய்ய உள்ளோம். பெரியார் முழக்கத்துக்கு எங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
-ஆசிப், ஒருங்கிணைப்பாளர்
பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம், கனடா.
பெரியார்முழக்கம்இதழ்14082025
