விநாயகர் ஊர்வலத்தில் விதிமீறல்களை தடுக்க மனு

கோவை: விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சியாக நீதிமன்ற ஆணைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கோவை மாநகர வடக்கு துணை காவல் ஆணையர், கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் ஜீலை 28 அன்று மனு அளிக்கப்பட்டது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பதிவு அஞ்சலில் மனு அனுப்பப்பட்டது.

தோழர்கள் நிர்மல் குமார், வெங்கடேசன், கிருஷ்ணன், ஸ்டாலின், மாதவன், நவீன் கலந்து கொண்டனர்.

கடலூர்: விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சியாக நீதிமன்ற ஆணைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடலூர் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 1.8.25 அன்று பெரியார் சிவா தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

வழக்கறிஞர் இள.புகழேந்தி( திமுகவின் தேர்தல் பணி குழு செயலாளர்), வழக்கறிஞர் தி.ச.திருமார்பன் (விசிக மாநில அமைப்புச் செயலாளர்)பாலு (மக்கள் அதிகாரம் மாநில தலைமை குழு உறுப்பினர்), தோழமை அமைப்புகள் கலந்துக் கொண்டனர்.
பெரியார்முழக்கம்இதழ்07082025

You may also like...