இரசாயன விநாயகர் சிலைகளுக்குத் தடை கோரி கழகம் மனு
திருப்பூர்: 08-08-2025 அன்று திருப்பூர் மாவட்டக் கழகம் சார்பக காலை 10 மணி அளவில் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்று சொல்லக் கூடிய வேதி பொருட்கள், இரசாயன பொருட்கள், சுட்டகளிமண் போன்ற பொருட்களால் விநாயகர் சிலைகளை தயாரிக்க கூடாது.
அவ்வாறு இரசாயனம் கலந்து தயரிக்கப்பட்ட சிலைகளை நீரில் கரைத்து நீர்நிலைகளை மாசுபடுத்துவதை தடுக்க வேண்டும் அரசு முறையாக கண்காணித்து நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என வழியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் முகில் ராசு (மாவட்டத் தலைவர்) தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
நிகழ்வில் சு.துரைசாமி (கழகப் பொருளாளர்), மாதவன் (மாநகரச் செயலாளர்), வீ.தனபால் (மாநகரத் தலைவர்), முத்து (மாநகர அமைப்பாளர்), அய்யப்பன் (வடக்கு ஒன்றியச் செயலாளர்) தமிழமுதன் (உளவியலாளர்) மற்றும் தோழர்கள் இனியன் வசந்தி, பெரியார் பிஞ்சு மகிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 14.08.2025 அன்று மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், நங்கவள்ளி அருள் ஆகியோர் மனு அளித்தனர்.
பெரியார்முழக்கம்இதழ்21082025
