“Magzter” தளத்தில் பெரியார் முழ்க்கம்
வார இதழாக ஏறத்தாழ 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ், கழக இணையதளப் பக்கத்திலும் கீற்று இணையதளப் பக்கத்திலும் பதிவேற்றி வரப்பட்டது. சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த கழகத் தோழரும் ஐ.டி. ஊழியருமான நந்தகுமார் முயற்சியில், வருகிற செப்டம்பர் மாதம் முதல் ‘Magzter’ (www.Magzter.com) என்ற இணையதளப் பக்கத்திலும் இனி புரட்சிப் பெரியார் முழக்கம் இதழ் இ-பேப்பர் வடிவில் வெளிவரும். பத்திரிகைகளுக்கு என்று வடிவமைக்கப்பட்ட இந்த இணையதளப் பக்கத்தின் சந்தாதாரர்கள், இனி வாரம்தோறும் புரட்சிப் பெரியார் முழக்கத்தை இலவசமாக வாசிக்கலாம்.
பெரியார்முழக்கம்இதழ்28082025
