1947 ஆகஸ்ட் 15-ல் ஆர்.எஸ்.எஸ் ஏற்றிய ஹிட்லர் கொடி

தேசத்துக்கு மாபெரும் தொண்டாற்றிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ் என்கிறார் மோடி. உலகின் மிகப்பெரும் தொண்டு நிறுவனம் என்றும் புகழாரம் சூட்டியது, சுதந்திரதின கொடியேற்று விழாவில்.

ஆகஸ்ட் 15 சுதந்திர நாளை பெரியார் ‘துக்க நாள்’ என்று வெளிப்படையாகவே அறிவித்தார். அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து பார்ப்பனிய பனியாவுக்கு கைமாற்றப்பட்டது என்றார். இதற்காக பார்ப்பனியம் பெரியாரை ‘தேச விரோதி’ என்று முத்திரை குத்தியது. பார்ப்பன தேசத்துக்கு நான் விரோதி தான் என்று பெரியார் அறிவித்தார்.

ஆனால் தேச பக்தி வேடம் போடும் ஆர்.எஸ்.எஸ் சுதந்திர தினத்தில் என்ன செய்தது? பிரிட்டிசார் ஆட்சி உரிமையைத் தங்களிடம் விட்டுச் செல்வார்கள் என்று அவர்கள் கனவில் மிதந்து கொண்டு இருந்தார்கள், வெளிப்படையாக சில இடங்களில் பேசினார்கள். இஸ்லாமிய வெறுப்பைக் கடுமையாக கண்டித்த காந்தியையும் நேருவையையும் தங்கள் எதிரிகளாக கருதினார்கள், அதற்காக காந்தியின் உயிரையே விலையாக கேட்டவர்கள், ஆகஸ்டு 15 சுதந்திர நாளில் அவர்கள் என்ன செய்தார்கள்?

“இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் பூனாவில் தேசியக்கொடிக்கு பதிலாக ஹிட்லரின் “ஸ்வஸ்திகா” கொடியை ஏற்றினார்கள். அந்த கொடியில் ‘ஆரியர் சின்னம்’ ஒன்றை இணைத்தார்கள்”. இந்த செய்தியை மிகச் சிறந்த ஆய்வு நூலாக வெளிவந்த “நள்ளிரவில் வந்த சுதந்திரம் (Freedom at Midnight)” அம்பலப்படுத்தியது.

500 பேர் திரண்டு அந்த கூட்டத்தில் முதல் வரிசையில் நின்றது காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே என்ற உண்மையையும் அந்த நூல் அம்பலப்படுத்தியது.

சுதந்திர நாள் விழாவில் ஹிட்லர் கொடியை ஏற்றிய அந்த கூட்டத்தைத் தான் இப்போது சுதந்திர நாள் விழா கொண்டாட்டத்தில் உலகின் மிகப்பெரும் தொண்டு நிறுவனம் என்று புகழாரம் சூட்டுகிறார் மோடி.
பெரியார்முழக்கம்இதழ்21082025

You may also like...