Category: செய்திகள்

மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்!

மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்!

மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்! ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புலனாய்வு செய்து ‘கேரவன்’ பத்திரிக்கை விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் ஆர்.எஸ்.எஸின் சட்டப்பிரிவான ஏ.பி.ஏ.பி. அமைப்பு நீதித்துறையில் ஊடுருவி இருக்கும் அதிர்ச்சியான தகவல்களை அதன் அதிகாரபூர்வ பதிவேடுகளில் இருந்து அம்பலப்படுத்தி இருந்தது. நீதிபதிகளாக, வழக்கறிஞர்களாக, சட்டத்துறை அதிகாரிகளாக பல்வேறு மட்டங்களில் ஊடுருவி தங்களின் இந்துத்துவா கொள்கைக்காக நீதித்துறையை பயன்படுத்தி வருகிறார்கள். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கும் தீர்ப்புகளும்,சட்டத்துக்கு எதிரான எல்லை மீறிய செயல்பாடுகளும் இதற்கு சான்றாக நிற்கின்றன. இதற்கான வெகுமதி எதிர்காலத்தில் இவர்களுக்கு காத்திருக்கிறது. அதே நேரத்தில் மதவாத சக்திகளின் மிரட்டலுக்கு பணியாமல் நேர்மையாக மனித உரிமைக்காக குரல் கொடுத்த சென்னையைச் சேர்ந்த மற்றொரு நீதிபதியை பற்றியும் குறிப்பிட வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் பழிவாங்கலுக்கு உள்ளான. இந்த நீதிபதிக்கு இப்போது ஐ.நா.மனித உரிமை ஆணையம் மிக உயர்ந்த பதவியை வெகுமதியாக வழங்கி கவுரவித்திருக்கிறது. அவரது பெயர் “சீனிவாச முரளிதர்.” பாலஸ்தீன...

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா? ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா? ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை ஒட்டி வழக்கமான உச்சி பிள்ளையார் கோயில் பகுதிக்கு மாற்றாக, சிக்கந்தர் பாஷா தர்கா பகுதியில் தீபம் ஏற்ற வேண்டுமென்று, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட இந்த நீதிபதியின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, உறுதியான எதிர்வினையாற்றி, தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியது திமுக அரசு. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருள வேண்டும் என தீர்ப்பளிப்பது, சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களை உமிழ்வது என தொடர்ந்து மதவாத நஞ்சை விதைக்கும் இந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதித்துறையில் தொடர இடம் அளிக்கக் கூடாது என நாடு முழுக்க கண்டனங்கள் வலுத்துள்ளன. இவரை நீக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 107 பேர் கையெழுத்திட்டு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர். இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். நீதிபதி என்று மக்களவையிலேயே அழுத்தம் திருத்தமாகப் பதிவு...

மக்கள் திரளில் நடைபெற்ற தாரமங்கலம் பொதுக்கூட்டம்.!

மக்கள் திரளில் நடைபெற்ற தாரமங்கலம் பொதுக்கூட்டம்.!

திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில்.. “மனிதம் நமது அடையாளம்” “ஜாதி நமக்கு அவமானம்” பொதுக்கூட்டம் டிசம்பர் 14,.2025 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு தாரமங்கலம் அண்ணாதிடல் (சின்னப்பம்பட்டி சாலை) பகுதியில் மக்கள் பேராதரவுடன் நடைபெற்றது. சி.தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமை வகித்தார். (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்),டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) , குடந்தை பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தோழர் சிற்பி ராசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்வு பொதுமக்கள், பெண்கள் என அனைவரையும் கவனம் ஈர்க்கச் செய்து மிகுந்த வரவேற்பை பெற்றது. பொதுக்கூட்டத்தில் கே.ஆர்.தோப்பூர் கண்ணன், (சேலம் மாநகரச்...

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்!   தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்! தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய நாகரீக உலகிலும் பல்வேறு வடிவங்களில் ஜாதியம் தலைதூக்கி நிற்கிறது. ஜாதிக் கயிறுகள், ஜாதிய குருபூஜைகள், ஜாதிய திருமண தகவல் மையங்கள், சமூக வலைதளங்களில் ஜாதி அடையாளத்தை வெட்கமின்றி ஒட்டிக்கொள்ளுதல் என ஜாதியை வலிமைப்படுத்தும் புதுவிதமான முயற்சிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. ஜாதிச்சங்கங்கள் இந்த வேலைகளை இடைவிடாமல் செய்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய ஜாதி வெறிச்செயல்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கண்டிப்பதுடன், ஜாதிய நடவடிக்கைகளுக்கான எதிரான அரசின் உறுதியான சட்ட நடவடிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, திராவிடர் விடுதலைக் கழகம் இந்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. தமிழ்நாடெங்கும் போராட்டத்திற்கு கழகத் தோழர்கள் தயாராகி வருவதுடன், “மனிதம் நம் அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பிலே போராட்ட நோக்கத்தை விளக்கி, பரப்புரைப் பயணங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த...

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்! கொட்டும் மழையிலும் கொள்கைப் பரப்புரை!

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்! கொட்டும் மழையிலும் கொள்கைப் பரப்புரை!

சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் ‘மனிதம் நமது அடையாளம் -ஜாதி நமக்கு அவமானம்’ என்ற முழக்கங்களோடு ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சமத்துவப் பரப்புரை தெருமுனைக் கூட்டம் 29.11.2025 காலை 11.00 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. சமுத்திரமம், மூலப்பாதை, கொங்கணாபுரம் பேருந்து நிலையம், எட்டிக்குட்டைமேடு ஆகிய நான்கு இடங்களில் பரப்புரை நடைபெற்றது. கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), கவியரசு(தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்), கொங்கணாபுரம் கோகுல் ஆகியோர் தலைமை வகித்தனர். தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), முன்னிலை வகித்தனர். பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார். இளம்பிள்ளை நகரச் செயலாளர் மோகன்ராஜ், குமரசேன், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), கோகுல் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர். பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. எடிசன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்....

கழக ஏட்டுக்கு தோழர் இரண்யா மாதந்தோறும் ரூ.2000 நன்கொடை

கழக ஏட்டுக்கு தோழர் இரண்யா மாதந்தோறும் ரூ.2000 நன்கொடை

கழகத் தோழர் இரண்யா சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக மாதம் ரூ.2000 கொடுப்பதாக தெரிவித்தார். டிசம்பர் மாத வளர்ச்சி நிதியாக ரூ.2000 தந்துள்ளார். சென்னை மாவட்டக் கழக தோழர் அன்பரசு முதல் கட்ட முழக்க சந்தாவாக ரூ.1000 மாவட்டச் செயலாளர் உமாபதியிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். -ஆசிரியர் பெரியார் முழக்கம் இதழ் 04122025

நிமிர்வோம் வெளியீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு!

நிமிர்வோம் வெளியீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு!

தி.மு.க.- 75 அறிவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக, நவம்பர் 8 முதல் 16 வரை வள்ளுவர் கோட்டத்தில், சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி நடைபெற்றது. இதில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நிமிர்வோம் பதிப்பகமும் பங்கேற்க, ஊடவியலாளர் ர.பிரகாசு, தோழர் மகிழவன் முயற்சியில் அரங்கு ஒதுக்கப்பட்டது. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைப்பில், 9 நாட்கள் நிமிர்வோம் பதிப்பக அரங்கு செயல்பட்டது. கழக வெளியீடுகளுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் கழக வெளியீடுகளை தேடி வந்து வாங்கிச் சென்றனர். மொத்தம் ரூ.82,000-க்கு கழக நூல்கள் விற்பனையானது. இளைஞர் அணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு.கோபிநாத், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா, காவை அஜித், முழக்கம் செய்தியாளர் பிரசாந்த், சுகந்தன், வீரா, யாழினி, அசோக், ஓவியா ஆகிய தோழர்கள் அரங்க வடிவமைப்பு பணிகளை முனைப்புடன் செய்தனர். தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி,...

தமிழர் இயக்கத்தை முன்னெடுத்த பெரியார்! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (6)- கொளத்தூர் மணி

தமிழர் இயக்கத்தை முன்னெடுத்த பெரியார்! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (6)- கொளத்தூர் மணி

‘ஈரோட்டுப் பாதை சரியா?’ நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களுக்கான பதிலின் தொடர்ச்சி. தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியாக 22.11.1925 குடிஅரசு இதழில் ‘தமிழ் தினசரி பத்திரிக்கை’ என்ற ஒரு தலையங்கத்தை பெரியார் எழுதியுள்ளார். அதில், ‘தென்னிந்தியாவுக்கு, தென் இந்தியர்களுக்கு, ஒரு நம்பிக்கையும் யோக்கியமும் உள்ள தமிழ் தினசரி பத்திரிக்கை வேண்டுமா? வேண்டாமா? என்று யோசிக்க வேண்டும். குறைந்தது ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். ஒரு வருடத்தில் பத்தாயிரம் சந்தாக்கள் சேர வேண்டும். 50,000 இல்லாமல் ஆரம்பிப்பது நிலை பெற தக்கதாகாது. அதற்கு பங்கு ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் 20 ஆயிரம் பங்கு கொண்ட ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். 50 ஆயிரம் ரூபாய் வசூலித்த பிறகுதான் பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் ஜில்லாக்களாகிய 12 ஜில்லாக்களுக்கும் ஜில்லா ஒன்றுக்கு 5000 ரூபாய் முன்பணம் வசூலிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டு விட்டு, “பத்திரிகையின் கொள்கை பிராமணரல்லாதாருடையவும்...

ஆர்.எஸ்.எஸ்க்காக கோயில் இடிப்பு!

ஆர்.எஸ்.எஸ்க்காக கோயில் இடிப்பு!

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் கட்டியுள்ள புதிய தலைமையகத்தின் வாகன நிறுத்துமிட வசதிக்காக, அப்பகுதியில் இருந்த பழமையான கோயில் ஒன்று இடிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி, மாநகராட்சியின் துணைகொண்டு இந்த ‘கர’சேவையை நடத்தியிருக்கிறது ஆர்எஸ்எஸ். இந்துக்கள், ஆலயங்கள் என்றெல்லாம் பாஜகவும், சங் பரிவார் கும்பலும் பேசுவது வெறும் அரசியலுக்காகத்தானா என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் நிர்வாக நடைமுறையைப் பின்பற்றித்தான் கோயில் இடிக்கப்பட்டுள்ளது இதில் எந்த விதிமீறலும் இல்லை என விளக்கம் தந்திருக்கிறது பாஜக தரப்பு. நடைபாதை கோயில்களை அகற்ற வேண்டுமென்று நீதிமன்றங்கள் எத்தனையோ முறை கூறிவிட்டன. விதிமுறைகளைப் பின்பற்றித்தான் அந்த கோயில்களையும் அதிகாரிகள் இடிக்க முயன்றனர். ஆனால் இந்துத்துவாதிகள் விட்டார்களா? ஜெய்பூரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இப்போது தங்கள் தேவைக்காக கோயிலை இடித்திருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பு பக்தியைப் பரப்பும் இயக்கமல்ல, பாகுபாட்டை விதைக்கும் நஞ்சு. அதற்கு...

கொழுக்கும் கோச்சிங் செண்டர்கள்!

கொழுக்கும் கோச்சிங் செண்டர்கள்!

`நீட்’ என்பது சமமற்ற வாய்ப்பு. `நீட்’ என்பது அநீதி. ஏழைகள், கிராமப்புற மக்களுக்கு எதிரானது. சமச்சீரான கல்விமுறையை சீரழித்துவிடும். எனவே, நீட் ரத்து செய்யப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு போராடி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத ஒன்றிய அரசு, இப்போது தகுதித் தேர்வுகளை நடத்துவதில் சீர்திருத்தம் செய்யலாமா எனத் தேர்வு முகமை ஆலோசித்து வருவதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வெளியான செய்தியைப் பகிர்ந்து தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன். “நீட் தேர்வு பள்ளிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து, கோச்சிங் நிறுவனங்களின் வணிக வேட்டைக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தது தமிழ்நாடு! dummy schools அதிகரித்துவிட்டன; நாள்தோறும் 6 மணி நேரம் கோச்சிங் மையங்களில் மாணவர்கள் வதைபடுகிறார்கள் என்ற அவலம் டெல்லியை, இப்போதுதான் உறுத்தத் தொடங்கி இருக்கிறது. ப்ளஸ்-ஒன் படிக்கும்போதே நீட்டை நடத்திவிடலாமா? கோச்சிங் மையத்தில் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என...

தமிழீழ போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

தமிழீழ போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

ஆஸ்திரேலியா: தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டு மாவீரர் நாள் தமிழ் தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நவம்பர் 27 மாலை நடைபெற்றது இத்தாலி செயின்ட் ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினார் அவர் தனது உரையில்”போர் தான் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் போராட்ட களம் அரசியல் நிகழ்வுகளுக்காக காத்திருக்கிறது என்றும் விடுதலைப் புலிகளின் மகத்தான தியாகங்கள் குறித்தும் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர் அரசியல் நிகழ்வுகள் மற்றும் ஐநாவின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாட்டில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை வலியுறுத்தி ஸ்ரீதர் ராஜ் உரையாற்றினார். சதீஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் பாடல்களை பாடியதோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கொளத்தூரில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக 27.11.2025 வியாழக்கிழமை...

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

அரசிலமைப்புச் சட்டத்தில் 25, 26, 13, 19, 368, 372(1) ஆகிய பிரிவுகள் ஜாதியைப் பாதுகாக்கும் விதமாக உள்ளது என்றும், அவற்றை நீக்க வேண்டுமென்றும் 03.11.1957 அன்று தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக ஸ்பெசல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய பெரியார், கோரிக்கைக்கு செவிசாய்க்க அரசுக்கு 30 நாட்கள் கெடு விதித்தார். ஆனால் கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டிய அரசாங்கமோ, சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்று வரையறுத்து மசோதாவை இயற்றி நிறைவேற்றியது. 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டமியற்றி அச்சுறுத்திய பின்பும், முதல் நாளே தந்தை பெரியாரை திருச்சியில் வைத்து கைது செய்த பின்பும், 26.11.1957-இல் நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நான்காயிரம் பேர் சிறைபுகுந்து, சிறைக்குள்ளேயும் விடுதலை ஆன ஒரு மாதத்தில் 18 பேர் உயிர் நீத்த வீரஞ்செறிந்த ஜாதி ஒழிப்புப் போராட்டம் இந்தியக் கண்டம் கண்டிராதது....

57 நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை மாவட்டக் கழகம்!

57 நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை மாவட்டக் கழகம்!

மயிலாப்பூரில் கழகத் தலைமை அலுவலகத்தில் 18.11.2025 அன்று சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தலைமையில் சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தோழர் இரண்யா கடவுள் மறுப்பு உறுதிமொழியை வாசித்தார். கடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் இருந்து தற்போது வரை 57 நிகழ்ச்சிகளை சென்னை மாவட்டக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்றிருக்கிறது. கடந்த ஜூன் முதல் தற்போது வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளின் பட்டியலை தோழர் உமாபதி வாசித்தார். திமுக இளைஞர் அணி நடத்திய அறிவுத் திருவிழாவில் கழக வெளியீடுகள் ரூ. 81980 விற்பனையானது. அதை முழுபொறுப்பேற்று நடத்திய தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் மற்றும் அதற்கு மூலக் காரணமாக இருந்த தோழர் பிரகாசு இருவரையும் பாராட்டி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் சால்வை அணிவித்தார். முற்போக்கு புத்தகக் காட்சியில் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் இடம்பெற்று, நூல்கள் விற்க துணைநின்ற மாவட்டக் கழகத்தோழர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தோழர்கள் எட்வின்...

சேலம் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள்!

சேலம் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள்!

கே.ஆர்.தோப்பூரில் கணேசன் இல்லத்தில் 18.11.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: தீர்மானம்-1: “மனிதம் நமது அடையாளம் – ஜாதி நமக்கு அவமானம்” தெருமுனைக் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 29,30 ஆகிய நாட்களில் புதிய பகுதிகளில் நடத்துவது. தீர்மானம்-2: டிசம்பர் 14 அன்று “மனிதம் நமது அடையாளம்” “ஜாதி நமக்கு அவமானம்” நிறைவுக்கூட்டம் பொதுக்கூட்டமாக தாரமங்கலம் அண்ணா சிலை பகுதியில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம்-3: புரட்சிப் பெரியார் முழக்க இதழை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் கொண்டு சேர்ப்பது குறித்தும், புதிய சந்தாக்களை அதிகப்படுத்தி வருகிற டிசம்பர் 24 அன்று மாவட்டக் கழகத்திடம் ஒப்படைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தீர்மானம்-4: டிசம்பர் 24 கோவையில் நடைபெறும் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொள்வது எனவும்...

கழக நாட்காட்டிக்கு முன்பதிவு செய்யலாம்!

கழக நாட்காட்டிக்கு முன்பதிவு செய்யலாம்!

திரைத்துறையைச் சார்ந்த (மறைந்த) கடவுள், மத மறுப்பாளர்களின் படங்கள், கருத்துக்கள் அடங்கிய, 2026-ஆம் ஆண்டுக்கான கழக நாட்காட்டி விரைவில் தயாராக உள்ளது. ரூ.100 மதிப்புள்ள நாட்காட்டி முன்பதிவு சலுகை விலையில் ரூ 75/- மட்டும். 2025 டிசம்பர் 15-க்கு முன்னதாக முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே நாட்காட்டி வழங்கப்படும். – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம். 22.11.25. தொடர்பு எண்: 99417 59641 புரட்சிப் பெரியார் முழக்கம் 27112025

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்- கொளத்தூரில் கண் மருத்துவ முகாம்!

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்- கொளத்தூரில் கண் மருத்துவ முகாம்!

இலவச மருத்துவ முகாமை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். சேலம் வள்ளி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை சார்பாக 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டம் கொளத்தூர் ஸ்ரீ கொளத்தூர் கஃபே, S. K. C கார்னரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். இம்முகாமை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிபுரியும் கழகத் தோழர். ஜலகண்டாபுரம் ரமேஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் கழக தலைமைக் குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், செட்டியூர் மாரி, கத்தரிப்பட்டி பழனியப்பன் ஆகிய கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 27112025

தமிழர் இயக்கம் உருவானதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (5)- கொளத்தூர் மணி

தமிழர் இயக்கம் உருவானதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (5)- கொளத்தூர் மணி

“ஈரோட்டுப் பாதை சரியா?” நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களைப் பார்ப்போம். ஈரோட்டுப் பாதையின் 20 ஆண்டுகள் என்ற தலைப்பில், “இன்று ஈரோட்டுப் பாதை திராவிடர் கழகம் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பித்த பொழுது இதற்கு இந்தப் பெயர் இல்லை; கூடு விட்டு கூடு பாய்வதைப் பாய்வது போல பல பெயர்களைத் தாங்கி ஈரோட்டுப் பாதை 20 ஆண்டுகளைக் கழித்து இருக்கிறது. பார்ப்பனரல்லாதார் இயக்கம், சமூகச் சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், சமதர்ம நாஸ்திக இயக்கம், தமிழர் இயக்கம், திராவிடர் இயக்கம் என்ற பல பெயர்களோடு பாதை காட்டி வந்திருக்கிறார் தன்னைப் பின்பற்றிய தமிழ் மக்களுக்கு ஈரோட்டுப் பெரியார்” என்று எழுதியுள்ளார் ஜீவா. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மார்க்சியர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொற்றொடர் ஆகும். வரலாற்றின் தொடக்கத்தில் கிரேக்க தத்துவஞானி ஹிராகிளிடஸ் சொல்லியிருந்தாலும், நவீன வரலாற்றில் பேராசான் மார்க்சும் இதனைச் சொல்லி உள்ளார். ஆனால்...

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

தமிழ்நாடு அறிவியல் மன்ற நிர்வாகிகளான ஆசிரியர்கள் சிவகாமி, ஆசிரியர் சிவகுமார் (ஈரோடு) ஆகியோர் முன்னெடுப்பில் பெரியார் முழக்கம் வளர்ச்சிக் குழு உருவாக்கப்பட்டு, பல்வேறு தோழர்கள் மாதம்தோறும் தலா ரூ.500 வழங்கி வருகிறார்கள். அவர்களின் பெயர் பட்டியல்: தலைமைக் குழு உறுப்பினர்கள் அன்பு தனசேகர், இளையராஜா, துரை. தாமோதரன், தோழர்கள் நாத்திக ஜோதி (ஈரோடு), முத்து (திருப்பூர்), சண்முகசுந்தரம் (மயிலாடுதுறை), பிரபாகரன் (மேட்டூர்), பிரபாகரன் (பவானிசாகர்), ஜோதி (மடத்துக்குளம்), சாக்கோட்டை இளங்கோவன், அஜீத் (மேட்டூர்), அறிவழகன் (கடலூர்), வீரமணி, முத்து (சத்தியமங்கலம்), சுந்தரம் (பவானி), தினேஷ், சந்தோஷ், அறிவழகன், மலைக் கொழுந்தன், வெங்கட், வீரன், கோபிநாத், வடிவேல் ராமசாமி, செளந்தர்யன், சரவணகுமார், மதன், மகேஷ், பழனிச்சாமி கோபி, அழகர் பிரபாகரன், ஆனந்த், மாதவன், இளங்கோ, ரவி, கோடி சுந்தரம். ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். நவம்பர் மாத நன்கொடையாக ரூ.15,500 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்). ——————————————————————————————————————————- கழகத் தலைமை...

குலுங்கிய கைகள்

குலுங்கிய கைகள்

புட்டபர்த்தி சாய்பாபா நூற்றாண்டு விழாவில் மோடியை மேடையில் வைத்துக் கொண்டே நடிகை ஐஸ்வர்யா ராய் வெளுத்து வாங்கி விட்டார். உலகின் ஒரே மதம் அன்பு; ஒரே மொழி அன்பின் மொழி ஒரே கடவுள் -உலகம் முழுதும் நிறைந்துள்ள சக்தி என்று பேசியதோடு உரையை முடிக்கும் முன் நக்கலாக ஒர் பஞ்ச் வைத்தார்”ஜெய் ராம்; ஜெய்ஹிந்த்” மோடியின் முகம் செத்து கிடந்தது. அடுத்த நாள் தென்னாப்பிரிக்காவில் நடந்த சர்வதேச மாநாட்டில் ஆஸ்திரேலியா நாட்டு பிரதமரை மோடி சந்தித்து உடன்பாடுகளை செய்து கொண்டார் என்ற செய்தி வந்தது. ஆஸ்திரேலியாவில் இப்போது தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களின் தேசம். கூட்டாட்சி அரசாங்கம் நடக்கிறது. அனைத்து இனங்களுக்கும் சம உரிமை, தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலாய்டு நகரில் கடந்த 14ஆம் தேதி கலாச்சாரங்களின் திருவிழா ஒன்று அரசு சார்பில் நடத்தப்பட்டது. இது ஆண்டுதோறும் நடக்கும் விழா. ஒவ்வொரு தேசிய இன...

ஈரோடு தமிழன்பனுக்கு புகழ்வணக்கம்!

ஈரோடு தமிழன்பனுக்கு புகழ்வணக்கம்!

திராவிட இயக்கக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 22.11.2025 அன்று தனது 92ஆம் வயதில் காலமானார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடன் நெருங்கி பழகியவர் ஈரோடு தமிழன்பன். சீரிய பகுத்தறிவாளர். பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதுடன், சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர், தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். `வணக்கம் வள்ளுவ’ என்னும் புகழ்பெற்ற கவிதை நூலுக்காக இந்திய அரசின் சாகித்திய அகாடெமி விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிய கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் ‘உலகத் தமிழ்ப் பீட விருது’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். ஈரோடு தமிழன்பனின் இழப்பு தனிப்பட்ட அவருடைய குடும்பத்திற்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த திராவிட இயக்கத்திற்குமான பேரிழப்பு. கவிதைகள், இலக்கியத்தின் ஊடாக அவர் விட்டுச்சென்ற பெரியாரியல் பணியை, விதைத்துச் சென்ற சுயமரியாதைச் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கும்...

நாகரீக உலகிலும் ஜாதிவெறி தலைதூக்கலாமா?  சமத்துவ சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்க ஜாதி ஒழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது கழகம்!

நாகரீக உலகிலும் ஜாதிவெறி தலைதூக்கலாமா? சமத்துவ சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்க ஜாதி ஒழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது கழகம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மாநிலம் தழுவிய அளவிலான இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கழகத்தின் சார்பில், சுவர் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோழர்கள் ஆத்தூர் மகேந்திரன், சென்னிமலை செல்வராசு ஆகியோர் சுவர் விளம்பரங்கள் தீட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு என பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராவதற்கான திட்டமிடல் பணிகளில் கழகத் தோழர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள், தனியார் வாகனங்களில் தோழர்களை திரட்டி அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர். ஏற்பாடுகள் ஒருபக்கம் தீவிரமடைந்து கொண்டிருக்க இந்த ஆர்ப்பாட்டம் ஏன் என்ற விவாதமும் எழத் தொடங்கியிருக்கிறது. ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது. இனி இந்த ஆர்ப்பாட்டம் தேவைதானா என்ற உரையாடலும் ஒருபக்கம் நடந்து...

சந்தா சேகரிப்பீர்!

சந்தா சேகரிப்பீர்!

2026-ஆம் ஆண்டுக்கான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழ் சந்தா சேகரிப்புப் பணிகளை கழகத் தோழர்கள் விரைவாக தொடங்கி, டிசம்பர் மாத இறுதிக்குள் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆண்டு சந்தா ரூ.300 அய்ந்தாண்டு சந்தா ரூ.1,500 – விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். பெரியாரிய, திராவிட இயக்க, சமகால அரசியல் கருத்துகளைத் தாங்கி வரும் வார இதழை வாங்கிப் படியுங்கள்.. பரப்புங்கள்…

மனோஜ்குமார் – அஞ்சலி இணையேற்பு விழா!

மனோஜ்குமார் – அஞ்சலி இணையேற்பு விழா!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த தந்தை பெரியார் பிரியாணி கடை உரிமையாளர் கழகத் தோழர். கி.சுப்பிரமணியன்- சாவித்திரி ஆகியோரின் மகன் மனோஜ்குமார் அவர்களுக்கும், திருச்சி மாவட்டம், மணப்பாறை பண்ணாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த வை.சுப்பிரமணி – பார்வதி ஆகியோரின் மகள் அஞ்சலி அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 16.11.2025- அன்று, ஞாயிற்றுக்கிழமை 11 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் சீதா திருமண மண்டபம் முதன்மை அரங்கத்தில் நடைபெற்றது. தி.மு.க. நெசவாளர் அணி மாநிலச் செயலாளர் சிந்து இரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் க.நாத்திக ஜோதி வரவேற்புரையாற்றினார். கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையுரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, கழகப் பொருளாளர். துரைசாமி, தலைமைக் கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வக்குமார், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், திராவிடர் விடுதலைக் கட்சி தலைவர் அன்பு மகேசு, அதிமுக...

“ஜாதி நமக்கு அவமானம்” ஈரோடு, கோவையில் தீவிர பரப்புரை!

“ஜாதி நமக்கு அவமானம்” ஈரோடு, கோவையில் தீவிர பரப்புரை!

ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 09.11.2025 ஞாயிறு மாலை பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் ‘ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வினோத் தலைமையேற்க, பரப்புரைச் செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகிக்க செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, விசிகவின் ஆற்றல், தலைமைக் கழகப் பேச்சாளர் .கா.சு வேலுச்சாமி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மமகவின் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது ஆகியோர் கருத்துரையாற்றினர். இராம. இளங்கோவன் கழக வெளியீட்டுச் செயலாளர், பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி நிறைவுரையாற்றினார். பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பெரியார் குறித்த பாடலை பாட பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பெரியார், அம்பேத்கர் மற்றும் கழகத்தின் செயல்பாடுகள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்கள்...

ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 09.11.2025 ஞாயிறு மாலை பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் ‘ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வினோத் தலைமையேற்க, பரப்புரைச் செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகிக்க செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, விசிகவின் ஆற்றல், தலைமைக் கழகப் பேச்சாளர் .கா.சு வேலுச்சாமி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மமகவின் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது ஆகியோர் கருத்துரையாற்றினர். இராம. இளங்கோவன் கழக வெளியீட்டுச் செயலாளர், பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி நிறைவுரையாற்றினார். பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பெரியார் குறித்த பாடலை பாட பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பெரியார், அம்பேத்கர் மற்றும் கழகத்தின் செயல்பாடுகள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்கள்...

கழகப் பொதுச்செயலாளருக்கு ஆஸி.யில் பாராட்டு விழா

கழகப் பொதுச்செயலாளருக்கு ஆஸி.யில் பாராட்டு விழா

ஆஸ்திரேலியா தமிழ் கலை மற்றும் கலாச்சார இயக்கம் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் போராசியர் சரசுவதி ஆகியோர்க்கு பாராட்டு விழா 14.11.2025 அன்று வடக்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மாகாணத்தில் நடைபெற்றது. லாரன்ஸ் அண்ணாதுரை வரவேற்புரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் போராசியர் சரசுவதி ஆகியோரின் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. விடுதலை இராசேந்திரன் பேசுகையில் ஜாதி, மதம் அரசியல் அமைப்புகளில் சிக்காமல் ஒற்றுமை உணர்வுடன் தமிழர்கள் செயல்பட வேண்டும் என்று உரையாற்றினார். தோழர்களின் ஆஸ்திரேலிய வருகையை கொண்டாடும் விதமாக இந்த பாராட்டு விழா அமைந்தது. ஆஸ்திரேலிய வாழ் தமிழ் குடும்பங்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரவு உணவு வழங்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்பரிப்புடனும் இந்த விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் இதழ் 20112025

அறிவியலை பாடமாக அல்ல வாழ்வியலாக ஏற்க வேண்டும்! ‘நாத்திகம்’ நூலை வெளியிட்டு மருத்துவர் எழிலன் பேச்சு

அறிவியலை பாடமாக அல்ல வாழ்வியலாக ஏற்க வேண்டும்! ‘நாத்திகம்’ நூலை வெளியிட்டு மருத்துவர் எழிலன் பேச்சு

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கொளத்தூரில் கழகப் பெண்களே தலைமையேற்று நடத்திய நாத்திகர் விழாவை ஒட்டி கடந்த 5 மாதங்களுக்கு, மேல் புரட்சிப் பெரியார் முழக்கத்தில் எழுதிய ‘கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை’ தொடர் கட்டுரைகள் கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் முயற்சியில், ‘நாத்திகம் – சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்’ நூலாக தொகுக்கப்பட்டு, 12.11.2025 அன்று சென்னை முற்போக்கு புத்தகக் காட்சியில், கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் அரங்கு எண் 22-இல் வெளியிடப்பட்டது. ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் நூலை வெளியிட, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வாலாசா வல்லவன் பெற்றுக்கொண்டார். நூலை வெளியிட்டுப் பேசிய எழிலன் நாகநாதன், “திமுக இளைஞர் அணி சார்பாக அறிவுத் திருவிழா சிறப்புற நடைபெற்று வருகிறது. கருத்தரங்கம், கண்காட்சி என பல்வேறு முற்போக்கு கருத்தியல் கொண்ட தோழர்கள் தங்களின் படைப்புகளை வைத்துள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் எழுதியுள்ள ‘நாத்திகம்...

தோழர் க.கிருஷ்ணமூர்த்தி மறைவு!

தோழர் க.கிருஷ்ணமூர்த்தி மறைவு!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் ஓமலூர் க.சக்திவேல் அவர்களின் சகோதரர், முன்னாள் சேலம் மாவட்டத் தி.க தலைவர் தோழர் க.கிருட்டிணமூர்த்திஅவர்கள் 31.10.2025 அன்று இயற்கை எய்தினார். மறைந்த கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் தோழரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, இரங்கல் உரையாற்றினார். சேலம் மாவட்ட கழகத் தோழர்கள் பலரும் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 13112025

உருவக் கேலிக்கு உடனடி பதில் தந்த நடிகை!

உருவக் கேலிக்கு உடனடி பதில் தந்த நடிகை!

‘அதர்ஸ்’ திரைப்படம் குறித்து, நவம்பர் 6-ஆம் தேதி சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அப்போது இயக்குநரிடம் யூடியூபர் ஒருவர் கதாநாயகியின் எடை எவ்வளவு என்று வக்கிர எண்ணத்தோடு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இதற்கு முன்பும் இத்திரைப்படம் குறித்து, நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படத்தின் நாயகனிடமும் கதாநாயகியின் எடை எவ்வளவு என்ற அதே கேள்வியை எழுப்பியிருந்தார். மேலும் தன்னுடைய கேள்வியில் என்ன தவறு என்ற தொனியிலும் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டு இருந்தார். அந்த யூடியூபருக்கு பதிலளித்த கதாநாயகி கௌரி கிஷன், “இந்தக் கேள்விக்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? எனது கதாபாத்திரத்தைப் பற்றியோ, அதற்காக நான் என்ன செய்தேன் என்பதைப் பற்றியோ ஒரு கேள்வியும் கேட்கப்படவில்லை. எனது எடை என்னவென்று தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இதே கேள்வியை ஒரு கதாநாயகனிடம் கேட்பீர்களா?” என்று காட்டமாக பதிலளித்துள்ளார். இந்தக் கேள்வி சாதாரணமாகக் கேட்கப்பட்டது என்ற தொனியில் மற்றொருவர் இதை நியாயப்படுத்த,...

மடத்துக்குளம், கோவையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

மடத்துக்குளம், கோவையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

திருப்பூர்: மடத்துக்குளம் – கணியூர் காரத்தொழுவு, துங்காவி பகுதிகளில் 12-10-2025 அன்று மடத்துக்குளம் மாவட்டக் கழகம் சார்பாக தந்தை பெரியார் 147வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, ‘ஜாதி நமக்கு அவமானம்; மனிதம் நமது அடையாளம்’ என்கிற கருத்தை முன்வைத்து தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தங்கவேலு, கழக மாவட்டக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றியச் செயலாளர் விசிக ராஜசேகர், கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு, மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். கடத்தூர் சரவணன் நன்றி உரையாற்றினார். மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன்,...

திராவிட மாடல்தான் பீகாரிகளையும் பாதுகாக்கிறது!

திராவிட மாடல்தான் பீகாரிகளையும் பாதுகாக்கிறது!

திமுக ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில் பீகாரிகளுக்கு எதிராக திமுகவினரால் துன்புறுத்தல் நடக்கிறது என்ற மோடியின் பேச்சு., அவரது பதவிக்கு உரிய பண்பாடுஅல்ல என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துரைத்துள்ளார். பாஜக ஆட்சியோடு முதல்வருக்கு முரண்பாடுகள் இருந்தாலும் கூட சர்வதேச விளையாட்டு போட்டியானாலும், கலைஞர் நாணய வெளியீட்டு விழாவானாலும் பிரதமரையும் மத்திய அமைச்சரையும் அழைக்க வேண்டிய கடமையை உணர்ந்து தனது முதல்வர் பதவிக்குரிய பண்பை வெளிப்படுத்தியவர் தமிழ்நாடு முதல்வர். தமிழ்நாட்டில் தாங்கள் துன்புறுத்தப்படுவதாக பீகாரிகள் ஏதாவது பிரதமரிடம் முறையிட்டார்களா? பீகார் அரசு குற்றம் சாட்டியதா? பீகாரிகளுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று முதலமைச்சருக்கு மோடி ஏதாவது கடிதம் எழுதினாரா? எதுவுமே இல்லை! பீகாரின் தலை விரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் திராவிட மாடல் ஆட்சியை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கிறது. எந்த திமுகவை மோடி குற்றம் சாட்டுகிறாரோ அந்த திமுக ஆட்சியில் தான் பீகாரிகளுக்கு வேலைவாய்ப்பும் பாதுகாப்பும் கிடைக்கிறது. பீகாருக்குக்கும் தமிழ்நாட்டுக்கும் பிரதமராக இருக்கும் ஒருவர்...

ஆர்.எஸ்.எஸ். கூடாரமாகிறதா அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்? – அப்பாவி மாணவர்களின் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

ஆர்.எஸ்.எஸ். கூடாரமாகிறதா அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்? – அப்பாவி மாணவர்களின் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், 2024-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ்-ஸை சேர்ந்த இருவர் உள்ளே நுழைந்து, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஆவணங்களைக் கையில் வைத்துக்கொண்டு மாணவர்களிடையே ஜாதிய மதவாத நச்சுக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தனர். குறிப்பாக, ஏ.பி.வி.பி-யின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கையில் வைத்துக்கொண்டு, நாங்குநேரியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் சின்னதுரை ஆதிக்க ஜாதிவெறி கொண்ட மாணவர்களால் தாக்கப்பட்டவுடன் தமிழ்நாடு அரசால் நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டியின் பரிந்துரையை விமர்சித்தும், அந்த அறிக்கை இந்துக்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது என்றும் பிரச்சாரம் செய்துள்ளனர். இதனை அறிந்துகொண்ட சட்டக்கல்லூரி மாணவர்கள், குறிப்பாக சமூக அக்கறைகொண்ட, அரசியல் உணர்வு கொண்ட மாணவர்கள் (தமிழ்நாடு மாணவர் கழகம், இந்தியா மாணவர் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனி) கல்லூர்ri மாணவர்கள் நேரில் சென்று ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் இருவரையும் விசாரித்தனர். விசாரிக்கும் போது...

கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரியாரின் ஆதரவு

கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரியாரின் ஆதரவு

பெரியாரிய மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.வி.ஆர்(எஸ்வி ராஜதுரை) எழுதிய பெரியார் குறித்த ஆங்கில நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. “பெரியார்: ஜாதி தேசம் மற்றும் சோசலிசம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆங்கில் நூல், உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர் சிந்தனையாளரான வித்யாபூஷன்ராவத் என்ற ஜாதி எதிர்ப்புப் போராளி எஸ்.வி.ஆர் அவர்களிடம் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பே இந்த நூல். கடந்த இதழின் தொடர்ச்சி…. கீழ்வெண்மணி படுகொலை தொடர்பாக பெரியார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கெனவே திட்டவட்டமான மறுப்புகள் வெளிவந்துள்ளன. எஸ்.வி.ஆர் இந்த நூலிலும் ஒரு தனி அத்தியாயத்தையே ஒதுக்கி விரிவாக பெரியார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இதேபோன்று தீவிர காங்கிரஸ்காராகவும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகித்தவருமான எல்.இளையபெருமாள் பெரியார் தலித் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார், பெரியார் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கே.பி.எஸ் மணி, தொண்டு வீராசாமி ஆகியோர் பெரியார் தலித் மக்களின் ஆதரவாளர் அல்ல...

தோழர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சியுரை!  ஈரோட்டுப் பாதையில் நடைபோடுவோம்!

தோழர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சியுரை! ஈரோட்டுப் பாதையில் நடைபோடுவோம்!

ஈரோட்டுப் பாதை தான் நமக்கு வழி காட்டுகிறது; பெரியார் இயக்கம் தான் எனது தாய் வீடு என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். சென்னையில் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி தலைவர் மறைந்த தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு நிறைவு மலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று துணை முதலமைச்சர் நிகழ்த்திய உரையிலிருந்து சில பகுதிகள்… பெரியாரின் தொண்டர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. பெரியாரின் தொண்டர்களை, துறவிகளைவிட மேலானவர்கள் என்று பெருமையாக சொல்வார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் அய்யா ஆனைமுத்து அவர்கள். பெரியார் தொண்டர்களின் தன்னலம் இல்லாத உழைப்புதான், தமிழ்நாட்டை சுயமரியாதை மண்ணாக மாற்றி வைத்துள்ளது. எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் விட, மிகமிக முக்கியமான நிகழ்ச்சியாக நான் கருதுவது, இன்றைக்கு இந்த அரங்கில் நடந்துகொண்டு இருக்கின்ற அறிஞர் ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழா. இன்னும் சொல்லப்போனால், எனது தாய் வீட்டிற்கு நான் வருகை தந்துள்ளேன். பெரியார் தொண்டர்கள் நிறைந்து...

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

ஆசிரியர்கள் சிவகாமி, சிவக்குமார் முயற்சியில் ஆதரவாளர்கள் மற்றும் கழகத் தோழர்களை ஒருங்கிணைந்து வாட்ஸ்அப் குழு வழியாக புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு மாதம் ரூ. 500 என நன்கொடை திரட்டி வருகின்றனர். ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். செப்டம்பர் மாத நன்கொடையாக ரூ.15000 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்). பெரியார் முழக்கம் இதழ் 09102025

கழகத்தினர் எடுத்த பெரியார் பிறந்தநாள் விழாக்கள்

கழகத்தினர் எடுத்த பெரியார் பிறந்தநாள் விழாக்கள்

கள்ளக்குறிச்சி: மாவட்டக் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு நயனார்பாளையத்தில் தந்தை பெரியார் பள்ளியில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 10- மணியளவில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ப.அங்கமுத்து தலைமையில் மாலை அணிவித்து பெரியாரின் சிறப்புகள் குறித்து பேசப்பட்டன. இந்நிகழ்வில் க.அசன், க,மதியழகன், ஆ.நாகராசன், ந.வெற்றிவேல் ச.வீரப்பாண்டியன், ஜெயனுல்லாபுதீன், சேரன், மைக்கேல், அஜித்குமார், தண்டபாணி உள்ளிட்ட பல தோழர்களும் பள்ளி மாணவர்களும் கருப்பாயி, இலட்சுமி, வாசுகி, கோமதி, அஞ்சுகம், சாரதாமணி உள்ளிட பெண் தோழர்களும் கலந்து கொண்டனர். சங்கராபுரதில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 11 மணியளவில் ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாலை 5 மணி அளவில் கடுவனூரில் பெரியார் அம்பேத்கர் திடலில், பெரியார் பிறந்தநாள் மற்றும் தோழர்கள் பெ. கோவிந்தன் கா.கோவிந்தராஜ் சு.தினகரன் செ.விஜய் ஆகிய தோழர்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. க. இராமர் மாவட்டச் செயலாளர் தலைமை...

சென்னிமலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

சென்னிமலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பேரணி- மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை 14.09.2025 அன்று மாலை 6 மணியளவில் சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தோழர்கள் கலந்து கொண்ட வாகனப் பேரணி வெள்ளோடு மாரியம்மன் கோவில் திடலில் இருந்து மேளதாளத்துடன் தொடங்கியது. தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் பேரணிக்கு தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, கரூர் மாவட்டத் தலைவர் மோகன் தாஸ், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் சென்னிமலை செல்வராசு, திராவிடர் எழுச்சிப் பேரவை மாநிலத் தலைவர் சக்திவேந்தன், சுற்றுச்சூழல் போராளி முகிலன், கழக மாநிலப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திமுக சென்னிமலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் செங்கோட்டையன் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். பேரணி வெள்ளோடு, அனுமன்பள்ளி ,...

பெரியாரை கொச்சைப்படுத்தும் அறிவுஜீவிகள்

பெரியாரை கொச்சைப்படுத்தும் அறிவுஜீவிகள்

பெரியாரிய மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.வி.ஆர்(எஸ்வி ராஜதுரை) எழுதிய பெரியார் குறித்த ஆங்கில நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. “பெரியார்: ஜாதி தேசம் மற்றும் சோசலிசம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆங்கில் நூல், உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. பெரியார் அம்பேதகர் சிந்தனையாளரான வித்யாபூஷன்ராவத் என்ற ஜாதி எதிர்ப்புப் போராளி எஸ்.வி.ஆர் அவர்களிடம் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பே இந்த நூல். கடந்த இதழின் தொடர்ச்சி…. தமிழ்நாட்டில் 20 விழுக்காடு தலித் மக்கள் உட்ஜாதிப் பிரிவுகளாக பிரிந்துள்ளனர். உண்மையில் தலித் மக்களின் மேம்பாட்டை விரும்புவோர் இந்த பிரிவினருக்கு இடையே ஒற்றுமையை உருவாக்கி தலித் அல்லாத முற்போக்கு சக்திகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும். குறிப்பாக தலித் அல்லாத பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்டுகளோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் எஸ்விஆர். மாறாக சில தலித் அறிவுஜீவிகள் பெரியாருக்கு எதிரான கருத்துகளை அச்சு ஊடகங்களின் வழியாக பரப்புகிறார்கள். இந்த போக்கு 1990- களிலேயே தொடங்கிவிட்டது என்கிறார் எஸ்.வி.ஆர். பெரியார்...

திருச்சியில் பேரெழுச்சியுடன் நடந்த     பெரியார் எனும் பெரும்நெருப்பு

திருச்சியில் பேரெழுச்சியுடன் நடந்த பெரியார் எனும் பெரும்நெருப்பு

திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் எனும் பெரும்நெருப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் 04.10.2025 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் திருச்சி, அருண் ஹோட்டலில் உள்ள சுமங்கலி அரங்கத்தில் தலைமைக் குழு உறுப்பினர் இரா. உமாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வி. சி. க. (திருச்சி மண்டலச் செயலாளர்) அ. க. தமிழாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி (திருச்சி மாவட்டச் செயலாளர்) ராயல் ராஜா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி (திருச்சி மாவட்டச் செயலாளர்) ராயல் சித்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர்) செ. ராஜ்குமார், ம. க. இ. க (மாநில பொதுச்செயலாளர்) கோவன், மக்கள் அதிகாரம் (மாநில பொதுச் செயலாளர்) செழியன், த. பெ. தி. க (மாநில கொள்கை பரப்புச் செயலாளர்) சீனி விடுதலை அரசு, அங்குசம் செய்திகள் (பொறுப்பாசிரியர்) பேராசிரியர். நெடுஞ்செழியன், திராவிடர் இயக்கத் தமிழர்...

ஆர்.எஸ்.எஸ்-க்கு அரசு மரியாதையா?

ஆர்.எஸ்.எஸ்-க்கு அரசு மரியாதையா?

நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ்-க்கு ஒன்றிய அரசு சார்பில் தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டு இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த அவலத்திற்கு சரியான எதிர்வினை ஆற்றி இருக்கிறார். “தேசத் தந்தையைக் கொன்ற மதவாதிகளின் கனவுகளை செயல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு, அரசு கவுரவம் வழங்குவது மிகப்பெரும் அவலம்”என்று முதலமைச்சர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் தான் காந்தியின் உயிரைப் பலி கேட்டது. * மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ் *’சுயம் சேவக்குகளாக ’பெண்களை’ நூறு ஆண்டுகளாக ஏற்க மறுக்கும் அமைப்பு. *கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமராக தொடரக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைமை விரும்பியது. கடவுளின் குழந்தை என்று மோடி தனக்கு தெய்வீக முலாம் பூசிக் கொண்டதை மோகன் பகவத் கடுமையாக எதிர்த்தார். “இனி எங்களுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு தேவையில்லை”என்று பாஜக தலைவர் நட்டா பேட்டி அளித்தார். பதவி பறிபோய்...

தேசியப் பாதுகாப்புச் சட்ட வழக்கில் கழகத் தலைவர் விடுதலை

தேசியப் பாதுகாப்புச் சட்ட வழக்கில் கழகத் தலைவர் விடுதலை

2009 – ஆம் ஆண்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தி கொலை என்று பேசாதீர்கள், ராஜீவ்காந்தி செய்த தவறுக்காக அவருக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனை என்றும், அமைதிப்படையை ஏவி எத்தனை படுகொலைகள் செய்து இருப்பார்; அதற்காக கொடுக்கப்பட்ட மரண தண்டனை அது. விடுதலைப் புலிகள் செய்திருந்தால் பாராட்டுகிறேன்; இல்லையெனில் கண்டிக்கிறேன். ஈழமக்களுக்கான பாதுகாவலர்கள் ஆன விடுதலைப் புலிகளே, நீங்கள் தானே செய்திருக்க வேண்டும். நீங்கள் செய்யாமல் வேறோருவனை ஏன் கொலை செய்ய விட்டீர்கள் என்று விடுதலைப் புலிகளைக் கண்டித்திருப்பேன் என பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. ஓராண்டுக்கான தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ச்சப்பட்டது. 3மாதம் சிறையிலிருந்தார். இவ்வழக்கை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு 16 ஆண்டு காலம் கடந்து 29.09.2025 திங்கட்கிழமை திண்டுக்கல் மாவட்டம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கழகத்...

இளைஞர்கள் புடைசூழ நடந்து முடிந்த கோவை பயிலரங்கம்!

இளைஞர்கள் புடைசூழ நடந்து முடிந்த கோவை பயிலரங்கம்!

கோவை மாவட்டக் கழகச் சார்பில் பெரியாரியல் பயிலரங்கம் 28.09.2025 அன்று கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. பயிலரங்கில் பங்கேற்ற தோழர்களின் அறிமுகத்துடன் நிகழ்வு தொடங்கியது. பயிலரங்கின் முதல் வகுப்பாக தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, இந்திய வரலாற்றில் பார்ப்பனிய எதிர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்‌.பிரபாகரன், திராவிடர் இயக்க வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பெரியார் தொண்டர் சிற்பி இராசனின் மந்திரமா! தந்திரமா! மூடநம்பிக்கை விளக்க நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜாதி ஒழிப்புப் பணியில் திராவிடர் இயக்கம் என்ற தலைப்பில் வரலாற்றுச் சிறப்பிக்க உரையை நிகழ்த்தினார். கழகத் தலைவர் முன்னிலையில் கோவையைச் சேர்ந்த மோகன் கிருட்டிணன், வழக்கறிஞர் ஆல்டன், ஹரிஹரன், கவுதம், அஜய், சுதர்சன் ஆகியோர் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்குக் கழகத் தலைவர், கழக வெளியீடுகளை வழங்கி வரவேற்றார். பயிலரங்கில்...

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் வாகன பேரணியுடன்  பெரியார் பிறந்த நாள் விழா!

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் வாகன பேரணியுடன் பெரியார் பிறந்த நாள் விழா!

சேலத்தில் காலை முதல் மாலை வரை 20-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு வாகனப் பேரணியாக சென்று, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சேலம் கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் எங்கு திரும்பினாலும் பெரியார் பதாககைகள், படங்கள் இருந்த காட்சி பெரும் மகிழ்ச்சியை தந்தது. அனைத்துப் பகுதிகளிலும் பெரியார் படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. சேலம் மேற்கு: 17.09.2025 புதன் காலை 9.00 மணியளவில் கோனூர் சமத்துவபுரத்தில் எழுச்சியுடன் தொடங்கியது. சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமை வகித்தார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அதன் பிறகு தோழர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணி சமத்துவபுரம் பெரியார் சிலையில் இருந்து தொடங்கி மேச்சேரி, பனங்காடு, மசக்காளியூர், கீழ் வனவாசி, வனவாசி மேல்ரோடு, நங்கவள்ளி பேருந்து நிலையம், தோப்புத்தெரு, வீரக்கல், மேட்டூர்...

கடவுள் உண்டா? சவால் விட்ட நாத்திகர்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-17

கடவுள் உண்டா? சவால் விட்ட நாத்திகர்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-17

டாக்டர் ஆபிரகாம் கோவூர் அவர்கள் ஒரு தலைசிறந்த நாத்திகர், மனோதத்துவ நிபுணர். அறிவியல் அறிஞர். எதையும் அறிவுபூர்வமாகப் பேசி, உண்மைகளை நிலைநிறுத்திடும் ஆற்றல் வாய்ந்த ஒரு சமுதாய விஞ்ஞானி கேரளத்தில் பிறந்தவராயினும், இறுதி வாழ்க்கையை இலங்கையில் அமைத்துக் கொண்டவர். சிறீலங்காவில், கொழும்புவில்தான் 1978 செப்-18-ல் அவர் மறைந்தார். பல ஆண்டுகாலம் தமிழ் நாட்டிலும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் தீவிர பகுத்தறிவுப் பிரச்சாரம் புரிந்தவர் அவர். டாக்டர் கோவூர் “கடவுள்” உண்டு என நிரூபிப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்று சவால்விட்டார். எவர் முன் வருவார்? அப்படி ஒன்று இருந்தால் அல்லவா நிரூபிக்க முடியும்? அவரது பகுத்தறிவுப் பிரச்சாரத்தை பெரியார் இயக்கம் பயன்படுத்திக் கொண்டது. கோவூர் பலமுறை தமிழ்நாடு வந்து திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது உண்டு. கோவூர் எழுதிய தன்னுடைய சுயவரலாற்றிலிருந்து சி ல கேரளாவில் தீண்டத்தகாதவர்கள் தாங்கள் நடக்கும் வழியிருந்தால் அகன்று போய்விடுவதற்கு எச்சரிக்கையாக, நம்பூதிரிகள்...

அச்சுத்துறையில் அதிர்வலைகளை உருவாக்கிய “சீர்”

அச்சுத்துறையில் அதிர்வலைகளை உருவாக்கிய “சீர்”

ஈரோட்டில் செப்-7-ல் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு சீர் வாசகர் வட்டம் விருது வழங்கும் விழாவில் பேரா. வீ.அரசு உரையிலிருந்து… யாருக்கு பரிசு கொடுக்க வேண்டுமோ அந்த சரியான நபருக்கு பரிசு கொடுப்பதுதான் இந்த சீர் வாசகர் வட்டத்தின் நோக்கமாக அவர்கள் வரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தான் தமிழறிஞர் பொதியவெற்பனுக்கும் அதைப்போல நம் தோழர் கொளத்தூர் மணிக்கும் அவர்கள் பரிசளித்திருக்கிறார்கள். இந்த சீர்வாசகர் வட்டத்தை பற்றி ஒரு குறுகிய காணொளியும் ஒளிபரப்பட்டது. கவிஞர் தம்பி அவர்கள் பேசுகிற பொழுது சில தகவல்களையும் சொன்னார். சில முக்கியமான தகவல்களை அவர் பகிர்ந்து கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று எனக்கு ஒரு சங்கடம் இருந்தது. அவர் சொன்னார், நீங்கள் அதை சொல்லிவிடுங்கள் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். இந்த சீர்வாசகர் வட்டம் என்கிற அமைப்பு தனக்கான அறவியலை உறுதிப்படுத்திக் கொண்டு செயல்படும் ஒரு இளைஞர் பாசறை. பெருமைப்படக்கூடிய பல்வேறு பணிகளை அவர்கள் செய்துள்ளார்கள். “பெண் ஏன்...

தமிழ்நாடு அரசின் 12-ம் வகுப்பு பாடத்தில் திணிக்கப்பட்டுள்ள  சனாதன கருத்துக்களை திரும்பப் பெறுக!

தமிழ்நாடு அரசின் 12-ம் வகுப்பு பாடத்தில் திணிக்கப்பட்டுள்ள சனாதன கருத்துக்களை திரும்பப் பெறுக!

தேசியகல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு எதிராக தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை என்ற ஒன்றை தமிழ்நாடு அரசு சமீபத்தில் முன்வைத்தது. தமிழ்நாடு அரசு முன்வைத்த மாநில கல்விக் கொள்கையில் பல்வேறு பிரிவுகள் தேசியகல்விக் கொள்கையை ஒத்ததாக இருப்பதாக பல்வேறு கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கிடையே தமிழ்நாடு அரசு தேசியகல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்டது போல் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கக்கூடிய தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள 12-ம் வகுப்பு “அறவியலும் இந்திய பண்பாடும்” என்கிற பாட புத்தகத்தில் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட பல்வேறு கருத்துக்கள் இந்த பாடப்புத்தகத்திலும் இடம்பெற்று இருக்கிறது. உதாரணமாக பக்கம் 53 மற்றும் 54 இல் “நவீன காலத்திற்கு வேதங்களின் ஏற்புடைமை” என்கிற தலைப்பின் கீழ் “விண்வெளியில் காணப்படும் பல்வேறு கிரகங்கள் நட்சத்திரங்கள் பற்றி விளக்கமான செய்திகள் வேதங்களில் கூறப்பட்டுள்ளன” என்றும், பக்கம்- 53-இல் “புராணங்களின் இன்றியமையாமை” என்கிற...

அல்பேனியா அரசின் அதிரடி முடிவு செயற்கை நுண்ணறிவுக்கு ஊழல் ஒழிப்பு அமைச்சர் பதவி!

அல்பேனியா அரசின் அதிரடி முடிவு செயற்கை நுண்ணறிவுக்கு ஊழல் ஒழிப்பு அமைச்சர் பதவி!

உலகில் முதன் முதலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.அய்) அமைச்சர் பதவியை ஏற்று இருக்கிறது. அந்த அமைச்சரின் பெயர் ‘டியெல்லா’. அல்பேனியா நாட்டின் பிரதமர் ஏ.டி ராமா கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தனது அமைச்சரவையில் இணைத்துள்ளார். ‘டியெல்லா’வுக்கு ஊழல் ஒழிப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அல்பேனியா இணையதளத்தின் உதவியாளராக கடந்த ஜனவரியில் நியமனம் செய்யப்பட்டது. இப்போது அமைச்சராக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முதலாக அமைச்சராக பதவி ஏற்றுள்ளது ‘டியெல்லா’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். டியெல்லாவுக்கு அல்பேனிய நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த பெண் உருவம் தரப்பட்டுள்ளது. 28 லட்சம் மக்கள் தொகை கொண்ட அல்பேனியா, ஐரோப்பாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்டது இந்த நாடு. 18 வயதுக்கு உட்பட்ட நல்ல மனநிலை உள்ள எவரும் அமைச்சராக முடியும் என்று அல்பேனியாவின் அரசியல் சட்டம் கூறுகிறது. அல்பேனியா இணையதளத்தில்...

2. அடக்குமுறைகளை எதிர்கொண்ட போராளி கொளத்தூர் மணி – பேரா.அரசு.

2. அடக்குமுறைகளை எதிர்கொண்ட போராளி கொளத்தூர் மணி – பேரா.அரசு.

ஈரோட்டில் செப்-7 அன்று சீர்வாசகர் வட்டம் சார்பில் நிகழ்ந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு விருது வழங்கும் விழாவில் பேராசிரியர் வீ.அரசு ஆற்றிய உரை; கடந்த இதழின் தொடர்ச்சி… ஏறக்குறைய 1983 தொடக்கம் முதல் 2009 வரை உருவான ஈழப் போராட்டம் தமிழ்ச் சமூகத்தில் மிக முக்கியமான போராட்டம். அதில் தோழர் மணி அவர்களுடைய பங்களிப்பு பற்றி நிறைய பேருக்கு தெரியும். இந்தத் தொகுப்பில் ஒரு முன்னுரை மாதிரி எழுதி இருக்கிறார்கள். அதில் கடைசி வரி இப்படி முடிகிறது, ”காவல் அதிகாரி எழுதி இருக்கிற ஒரு அறிக்கையில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார். இந்த மணி தனது சொந்தப் பணத்தைக் கொண்டு ஈழ விடுதலைப் போராளிகளுக்கு உதவி செய்து வருகிறார்” என்று அந்த அதிகாரி எழுதி இருக்கிறார். ‘இன்ட்ரஸ்டிங்’ ஆன செய்தி. எனக்கு தனிப்பட்ட முறையில் ஈழத்தில் பல நண்பர்கள் உண்டு, அவர்களுடனான வாழ்க்கை அனுபவங்களும் உண்டு. அப்போதெல்லாம் தோழர் மணி செய்த...

திடீர் நிகழ்வுகளுக்குக் கடவுள் காரணமா?  கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-15

திடீர் நிகழ்வுகளுக்குக் கடவுள் காரணமா? கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-15

கேள்வி: நாம் நினைத்துப் பார்க்காத ஓர் நொடிக்குள் எல்லாம் நடந்து போகிறது. அப்படியாயின், நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றுதானே பொருள்? அதனை உங்களால் நிராகரிக்க முடியுமா? பதில்: அப்படி ஓர் நொடிக்குள் நடந்து முடிவதாக நாம் கருதுகிறோம். ஆனால் அது மெய்யல்ல. “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்” -என்பார் வள்ளுவர். மென்மையான மயிலிறகுதான் என்றாலும், ஏற்றியுள்ள வண்டி, அம்மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முறிந்து கெடும். அளவு மாறும் போதும் குணம் மாறுகிறது. ஆம் மயிலிறகை ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆயினும் ஒரு கட்டத்தில்தான் அச்சு முறிகிறது. இதன் பொருள், அந்தக் கணத்தில் ஏற்றப்பட்ட ஒற்றை மயிலிறகின் பாரம் தாங்காமலா அச்சு முறிந்தது. இல்லை மயிலிறகு ஏற ஏற அச்சு இற்றுக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அதன் தாங்கும் சக்தி தகர, அச்சு முறிகிறது. அளவு மாற்றத்தால் ஏற்பட்டது குணமாற்றம். அந்த நொடியில், பாய்ச்சல்...

எல்லைகளைக் கடந்த சிந்தனையாளர் பெரியார்!

எல்லைகளைக் கடந்த சிந்தனையாளர் பெரியார்!

பகுத்­த­றி­வும், அறி­வி­ய­லும் ஒரே நேர்கோட்டில் இருக்­கும். அறிவின் கூர்மைதான் பகுத்­த­றிவு என்று எடுத்துச் சொன்­ன­தால்­தான், ஆக்ஸ்ஃபோர்டு பல்­கலைக்கழ­கம் அவ­ரைப் பற்றி அவர் மறைந்து இத்­தனை ஆண்டுகள் கழித்­தும் விவா­திக்­கி­றது. கேம்பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கம் புத்­த­கம் வெளியிடுகி­றது. சுய­ம­ரி­யாதை இயக்­கத்தை 1925–ஆம் ஆண்டு தொடங்­கி­னா­லும், சுயமரியாதைச் சிந்­த­னை­யா­னது பெரி­யா­ருக்கு இள­மைக் காலத்­தி­லேயே வந்து­விட்­டது. அவர் அப்­போதே அப்­ப­டித்­தான்! அவ­ரு­டைய சுயசரிதையை கொஞ்­சம் பார்த்­தால், அவர் காலத்தை மீறி செய்த புரட்­சி­கள் புரி­யும்! ஆதிக்க ஜாதி­யி­னர் வீட்­டில் தண்­ணீர் குடித்­த­தால் அவ­மா­னப்­படுத்தப்பட்டதும், தாழ்த்­தப்­பட்­டோர் வீட்­டில் தண்­ணீர் குடித்­த­தால் சொந்த வீட்­டில் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­ட­தும் சிறிய வய­தி­லேயே அவர் மன­தில் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. பெரி­யா­ரின் தங்கை மகள் அம்­மா­யிக்கு 10 வய­தி­லேயே, 13 வயது பையன்கூட திரு­ம­ண­மாகி, மண­மான அறு­ப­தா­வது நாளே மண­மகன் இறந்­து விட்­டார். மறு­ம­ணத்­துக்கு குடும்­பத்­தில் உள்ள எல்­லோ­ரும் எதிர்ப்­புத் தெரி­வித்­தா­லும், அதை­யெல்­லாம் மீறி, அந்­தப் பெண்­ணுக்கு இரண்­டா­வது திரு­ம­ணம் நடத்தி வைத்­தார். மாற்­றுச்...