தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்!

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் மற்றும் இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு தருவைகுளம் மெயின் ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக பொருளாளர் கே.சந்திர சேகர் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக அமைப்பாளர் பால். அறிவழகன், ஆழ்வை ஒன்றிய தி.வி.க. செயலாளர் இரா.உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

ச.ரவி சங்கர் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக்கழக மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் இன ஒதுக்கல் பேசும் சங்கராச் சாரி மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் திராவிடர் தமிழர் கட்சியின் மாநில நிதிச் செயலாளர் சு.க. சங்கர், மனித நேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கா.மை. அகமது இக்பால், விசிக வழக்குரைஞர் அணி பொறுப்பாளர் செந் அர்ஜுன், வழக்குரைஞர் குரு. பிரசாத், தமிழர் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் ச. இராஜா, புஇமு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சுஜித்,தூத்துக்குடி மாவட்ட மனித நேய மக்கள் முன்னேற்ற கழகச் செயலாளர் ஷி.முகமது ஜான், சமம் குடிமக்கள் இயக்க தூத்துக் குடி மாவட்ட பொறுப்பாளர் ஜான் பூபால் ராயர், தி.மு.க. இளம் பேச்சாளர் இள.கார்த்திக், தென்காசி மாவட்ட தி.வி.க தலைவர் குறும்பை அரு. மாசிலாமணி, மாவட்டச் செயலாளர் பொ.பெ.சு.அன்பரசு, தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் ச.தமிழ் செல்வன், கீழப்பாவூர் ஒன்றிய தி.வி.க. செயலாளர் ச.சுப்பையா, தென்காசி .பாலசுப்பிரமணியன், நெல்லை சி.ஆ.காசிராசன், பெரியார் பிஞ்சு இர.அ.இளம் பரிதி திராவிடர் தமிழர் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ஹேமா, தமிழ்புலிகள் கட்சியின் தூத்துக்குடி மாவட் டச் செயலாளர் ஆட்டோ சரவணன், மற்றும் திராவிடர் தமிழர் கட்சி, வடக்கு சோட்டையன் தோப்பு அம்பேத்கர் இளைஞரணி, வி.சி.க தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக தூத்துக்குடி நகர தி.வி.க. பொறுப்பாளர் சா.த. பிரபாகரன் நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 15052025இதழ்

You may also like...