மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மே18 அன்று திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர இசை திருவிழா கன்னிகுமரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கீழ்க்கண்ட அறிக்கையை விடுத்து இருந்தார்.
துயர மிகுந்த இந்த நாளில் இவ்வாறான கொண்டாட்டத்தை நடத்துவது இன உணர்வுமிக்க தமிழர்களின் உணர்வுகளைப் பதறவைக்கும் ஒன்றாகும்.
அந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை இதனை வேறு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டுமாறு முதற்கட்டமாக கனிவுடன் கோருகிறோம் என்று குறிப்பிட்டுருந்தார்.
அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் இதில் தலையிட்டு நிகழ்ச்சியை தள்ளி வைக்க முயற்சிகளை எடுத்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டது. இத்தகவலை திரு நாசர் கழக தலைவருக்கு கடிதமாக எழுதியுள்ளார்.
இனமுரசு சத்தியராஜ் இந்த கடிதத்தை கழக தலைவருக்கு அனுப்பியுள்ளார். இதற்கு நன்றி தெரிந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கையில்: ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கழகத் தலைவர் மற்றும் இன உணர்வாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நட்சத்திர கொண்டாட்ட நாளை தள்ளி வைக்க ஆவண செய்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர்,இனமுரசு சத்யராஜ் மற்றும் பொறுப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், தோழர்கள் தியாகு, கோவை கு.இராமகிருட்டிணன், சுப.உதயகுமாரன், கண.குறிஞ்சி, பொழிலன், இயக்குனர்கள் களஞ்சியம், கௌதமன், மருதுபாண்டியன் ஆகியோரும் இந்நிகழ்வின் தேதியை மாற்றக் கோரி குரல் கொடுத்தனர்.
பெரியார் முழக்கம் 15052025இதழ்
