பஞ்சாங்கப் புரட்டு அம்பலம்!

தமிழ்நாடு அரசியலில் “ கூட்டணிப் பெயர்ச்சிகள்’ தொடங்கி உள்ளன. மக்கள் குழம்பி நிற்கிறார்கள் அதே போல் “சனிப் பெயர்ச்சியிலும்” குழப்பங்கள். வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறது என்று ‘த்ருக்’ பஞ்சாங்கம் கூறுகிறது. வாக்கிய பஞ்சாங்கம் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி இல்லை என்று கூறுகிறது. திருநள்ளாறு சனி பகவான் கோயில் நிர்வாகம் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி இல்லை என்று கூறிவிட்டது. ஏனைய‌ சோதிடர்கள் உண்டு என்று கூறுகிறார்கள்.

அன்றாடம்‌ ராசி பலன்களை நம்பும் நம்பிக்கையாளர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள். பஞ்சாங்கங்கள் அறிவியலுக்கு எதிரானது என்பதற்கு இதுவே சான்று. அறிவியல் என்றால் ஒரு கருத்துதான் இருக்க முடியும்

விண்வெளியில் நிகழும் மாற்றங்களை அறிவியல் ரீதியாக ‘ஜீயோ சென்டிரிக் டாட் காம்’ என்ற‌ இணையதளம் விளக்குகிறது. ஆனால் இது மக்களுக்கான கிரகப் பலன்களைக் கூறாது. காரணம், அது அறிவியல் அல்ல மக்களோ பஞ்சாங்கத்தைதான் நம்புகிறார்கள் அறிவியலை மறுக்கிறார்கள். சனிப்பெயர்ச்சி போல் கூட்டணி பெயர்ச்சியும் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறது.
பெரியார் முழக்கம் 03042025இதழ்

You may also like...