சங்கராபுரத்தில் தீர்மான விளக்கக் பொதுக்கூட்டம்!

28/04/2025 திங்கள் மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் செம்பராம்பட்டு ஊரில் கழக மு.சரத்குமார் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாள் மற்றும் மயிலாடுதுறை மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்ட நிகழ்வை கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க.இராமர் ஒருங்கிணைத்தார்.

மு.நாகராஜ், வீ.முருகன், தே.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை.தாமோதரன் மந்திரமல்ல தந்திரமே என்ற சாமியார்களின் மோசடியையும், சோதிடம் போன்ற புரட்டுகளையும், மூடநம்பிக்கையால் மக்கள் எவ்வளவு ஏமாறுகிறார்கள் என்று தன்னுடைய அறிவியல் விளக்க கலைநிகழ்ச்சி மூலம் விளக்கினார்.

தொடக்க உரை செ.வே.ராஜேஷ் நிகழ்த்தினார். கழக மாவட்ட தலைவர் க.மதியழகன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ. இளையரசன், தபெதிக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் செ. பிரபு, மக்கள் அதிகார கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஆ.இராமலிங்கம், CPI இவிதொச, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் க.முருகேசன், அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அக்ராபாளையம் பகுதியைச் சார்ந்த விக்னேஷ் தன்னை கழகத்தில் தலைவர் முன்னிலையில் இணைத்துக் கொண்டார்.

தலைவர் கொளத்தூர் மணி அப்பகுதியில் நிகழ்வு தொடங்குவதற்கு முன் கழகக் கொடியை ஏற்றி, சிந்தனைப் பலகையை திறந்துவைத்தார். கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிகழ்வில் கழக மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை, மா.அரசு,
ரா.அருள்மொழி, சி.ராசேந்திரன், க.மாரியப்பிள்ளை, கொ.பிரசாந்த், செ.ராஜகுரு, வே. கோவிந்தராஜ், ச.சுபாஷ், கி.ஆனந்தன், ரா.சதிஷ், நா.குணால், கு.குறளரசன், ச.ரோனித், ச.ராகுல், ரா.மகேஷ், இஅபிஷேக், சி. விஷ்வா ரிஷிவந்திய ஒன்றிய அமைப்பாளர் இரா.கார்மேகம், ஒன்றிய தலைவர் மா.குமார், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பாபா, ஏ.ஜெயப்பிரகாஷ், மு.குமரேசன், இரா.துளசிராசா, மு.சுலேச்சனா, கா.பசுமதி, சா.சூர்யா, மு. இராவணன், இரா. ஜீவா, சு.வல்லரசு, திரளாக அப்பகுதி விசிக, சிபிஐ மற்றும் தபெதிக தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் நிறைவாக மு.யுவன் சங்கர்ராஜா நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 08052025இதழ்

You may also like...