நாத்திகர் விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
வரும் மே 24 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மாவட்டம் கொளத்தூரில் நடைபெற உள்ள நாத்திகர் விழா – மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி – பொதுக்கூட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டம் நடத்த அனுமதி கேட்டும் இதுவரை போலீசார் தரப்பில் எந்த உத்தரவும் தராததால் சேலம் மாவட்ட தி.வி.க. மகளிர் அணி அமைப்பாளர் சுதா அவர்கள் கூட்டத்திற்கு அனுமதிகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது நீதிமன்றம் உத்தரவு. வழக்குரைஞர் திருமூர்த்தி கழக சார்பில் வாதாடினார்.
பெரியார் முழக்கம் 22052025இதழ்
