மயிலாடுதுறை, கடலூரில் சங்கராச்சாரி கண்டித்து ஆர்ப்பாடங்கள்

மயிலாடுதுறை: திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 26.04.25 சனி மாலை கிட்டப்பா அங்காடி அருகில் “இன ஒதுக்கல்” பேசும் சங்கராச்சாரியை கண்டித்து மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன உரையாற்றியோர்: பேராசிரியர் ஜெயராமன் தமிழ்மண் தன்னுரிமை இயக்கம், ராஜசேகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சுப்பு.மகேஷ் தமிழர் உரிமை இயக்கம், இளையராஜா,திராவிடர் விடுதலைக் கழகம். நன்றியுரை: வீரமணி

கடலூர்: 21.4.2025 மாலை 6 மணி அளவில் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கடலூரில் மஞ்சகுப்பம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திவிக அருணாச்சலம் வழக்கறிஞர் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில தேர்தல் பணி குழு செயலாளர் வழக்கறிஞர், இள புகழேந்தி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கையின் நிறுவனத் தலைவர் தமங்கையர் செல்வன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் தி ச திருமார்பன், திராவிடர் கழகத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் எழிலேந்தி, மக்கள் அதிகாரம் மாநில அமைப்பு செயலாளர் பாலு, பி போல்ட் இயக்கத்தின் தலைவர் பஷீர் அகமது , புதுச்சேரி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் புதுவை பிரகாஷ், பொதுச் செயலாளர் ராஜா, புதுச்சேரி தந்தை பெரியார் திராவிட கழகத்தின் தலைவர் வீர மோகன், விடுதலை சிறுத்தை கட்சியின் கடலூர் ஒன்றிய துணை செயலாளர் வழக்கறிஞர் கமல், புதுச்சேரி தாயுமானவர் தந்தை பெரியார் இயக்கத்தின் பொறுப்பாளர் பிரசன்னா, புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி நகரத் தலைவர் செங்குலத்தான் ஆகியோர் கண்டன உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் பெரியார் சிவா நன்றி கூறினார்.

புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில தலைவர் தோழர் லோகு ஐயப்பன் அவர்கள் கலந்துகொண்டு , மறைந்த துரும்பர் விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர் தந்தை அருள் வலன் அவர்களின் படத்தை திறந்து வைத்து அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. திராவிட மகிழன் பாடல்கள் பாடினார்.

பெரியார் முழக்கம் 15052025இதழ்

You may also like...