புதுவையில் பெரியார் கைத்தடி பேரணி

புதுவையில் 10-5-25 அன்று பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! சமூகநீதியைக் காப்போம்! உழைப்பாளர் நாள், அம்பேத்கர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பெரியார் கைத்தடி பேரணியும்- பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பாக நடைபெற்றது.

அரியாங்குப்பத்தில் கலைஞர், சிங்காரவேலர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பெரியார் கைத்தடி பேரணியை பா.செ.சக்திவேல் (தலைமை பொதுக்குழு உறுப்பினர் திமுக புதுச்சேரி)‌, மகேசு காஞ்சி மக்கள் மன்றம் இருவரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில்‌ வழிநெடுக கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரியார் சிலைக்கு கழக மயிலாடுதுறை மகேஷ் மாலை அணிவித்தார்.
அரியாங்குப்பம் பகுதியில் தொடங்கி சுமார் 3 கிலோமீட்டருக்கு பேரணியாக சென்று பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகள், பாடல்கள், நாடகங்கள் பொதுமக்கள் மற்றும் தோழர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் தொடர் சொற்பொழிவுகளாக இல்லாமல் பேச்சுக்களுக்கு இடையே பாடல்கள், நாடகங்கள் என‌ கலைத்திருவிழா போல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இரா. உமாபதி, (திவிக சார்பாக சென்னை மாவட்டச் செயலாளர்), மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெசி (வழக்குரைஞர்), பார்வேந்தன்(விசிக வழக்கறிஞர் அணி செயலாளர்), தே.வின்சென்ட்ராஜ் வழக்குரைஞர் (சமூக நீதிக்கான கூட்டமைப்பு) இரா.மங்கையர் செல்வம் (நிறுவனத் தலைவர், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள்) ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

விழுப்புரம் , கடலூர் மாவட்ட‌ சிவக்குமார், மயிலாடுதுறை மகேஷ், இளையராசா, சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், மாணவர் கழக தோழி, உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

புதுவையில் இடதுசாரி இயக்கங்களை ஒருங்கிணைத்து தோழர் தீனா சிறப்பான முறையில் கூட்டத்தை நடத்தினார். மக்கள் மன்றம், திவிக, திமுக, சிபிஐ, மக்கள் அதிகாரம், விசிக, காங்கிரஸ், திராவிடர் தமிழர் கட்சி, சமூக நீதிக்கான கூட்டமைப்பு, விடுதலை வேங்கைகள் உள்ளிட்ட பல அமைப்புகளின் தோழர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேச்சாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பெரியார் முழக்கம் 01062025இதழ்

You may also like...