கழக தலைவர் பங்கேற்ற கோவை பொதுக்கூட்டம்!
03.05.2025 அன்று கோவை சின்னியம்பாளையத்தில் பெரியார் உணர்வார்கள் ஏன் வேண்டும் திராவிட மாடல் ஆட்சி! என்ற தலைப்பில் பொதுக்கூட்டத்தை நடத்தினர். கூட்டத்திற்கு சிவா மொபைல்ஸ் சிவா தலைமை தாங்கினார். சூலூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார். கழக மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார்.
நிறைவாக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சிபிஐ(எம்) மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்டாலின் குமார், தி.மு.க. மருத்துவரணி பெரியார் செல்வி, அ.பா.சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, தி.மு.க. மகளிரணி ஜெயலலிதா, திருப்பூர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் விஷ்ணு நன்றி கூறினார்.
இப்பொதுக்கூட்டத்தில் கோவை திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுக்கூட்டம் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வை வழக்கறிஞர் சரவணக்குமார் ஒருங்கிணைத்தார். இனியன் கழக தலைவர் முன்னிலையில்
கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
பெரியார் முழக்கம் 15052025இதழ்
