Category: சேலம் கிழக்கு

‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு சேலம் மாவட்டக் கழகங்கள் சார்பாக 1500 சந்தாக்கள் வழங்க முடிவு

‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு சேலம் மாவட்டக் கழகங்கள் சார்பாக 1500 சந்தாக்கள் வழங்க முடிவு

26.11.2021 சனிக்கிழமை மதியம் 02.00 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைந்த சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளியில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராசு வரவேற்பு மற்றும் கடவுள் மறுப்பு கூற கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் அனைத்துக் கிளைக் கழகப் பகுதிப் பொறுப்பாளர்களும், இயக்க வளர்ச்சி குறித்தும், 2022ஆம் ஆண்டு சந்தா சேர்ப்பு குறித்தும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 09.11.2021 அன்று இயற்கை எய்திய திராவிடர் கழக மண்டல தலைவர் தோழர் பிரகலாதன் அவர்களின் மறைவிற்கு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 2022ஆம் ஆண்டிற்கான புரட்சி பெரியார் முழக்க சந்தாக்கலாக சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக 500...

ஹத்ராஸ் படுகொலை – சூரப்பா எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்

ஹத்ராஸ் படுகொலை – சூரப்பா எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்

உ.பி. ஹத்ராஸ் தலித் பெண் படுகொலை – அண்ணா பல்கலை துணை வேந்தர் எதேச்சாதிகார நடவடிக்கை – பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றத்தைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட் டங்கள் நடந்தன. இந்திய ஒன்றியத்தில் தரவரிசைப் பட்டியலில் 12 வது இடத்தைப் பெற்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக் கழகம் ஒளிவீசிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தப் பல்கலைக் கழகத்தை உயர்ப் புகழ் நிறுவனமாக ஆக்குவது என்ற பெயரில் மத்திய அரசிடம் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், இதனால் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69ரூ இட ஒதுக்கீடு முறைக்கு வரும் பெரும் ஆபத்தைத் தடுக்கவும் மேலும், ‘‘உயர் புகழ் நிறுவனமாக அண்ணா பல்கலைக் கழகத்தை தரம் உயர்த்த மாநில அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டிய தில்லை” என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம்...

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துகிறது, சேலம் மாவட்டக் கழகம்

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துகிறது, சேலம் மாவட்டக் கழகம்

05.01.2020 அன்று காலை 11 மணியளவில்  கழகத்தின் பொறுப் பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் சேலம் தாதகாப்பட்டி சாலையில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் க. சக்திவேல் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் இரா. டேவிட் முன்னிலையிலும் நடைபெற்றது. அதில்  இயக்கத்தின் செயல் பாடுகளை முடுக்கிவிடும் விதமாக முதலாவதாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கான சந்தா சேர்ப்புகளை துரிதப்படுத்தி ஜனவரி மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும், கிழக்கு மாவட்டம் முழுதுமாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனவும், தெருமுனை பிரச்சாரத்துக்காக ஒலிபெருக்கியுடன் கூடிய மேடை வடிவமைப்போடு  சொந்தமாக பிரச்சார வேன் (மஹேந்திர வேன்) ஒன்று வாங்கவும் பொறுப்பாளர்களின் ஒருமித்த கருத்தோடு முடிவெடுக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 16012020 இதழ்

17 தலித் மக்கள் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை சேலத்தில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

17 தலித் மக்கள் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை சேலத்தில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

டிசம்பர் 2 அன்று மேட்டுப்பாளையம் அருகே தலித் மக்கள் கண்களில்படக் கூடாது என்ற நோக்கில் கட்டப்பட்ட ஜாதிச்  சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரமான மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியது. சென்னை மாவட்டக் கழக சார்பில் டிசம்பர் 3ஆம் தேதி அண்ணா சாலை பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை : திராவிடர் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் மற்றும் கரு. அண்ணாமலை, மயிலைப் பகுதி தோழர்கள் சுகுமார், இராவணன், மனோகர், கன்னியப்பன், எட்வின் பிரபாகரன், திருவான்மியூர் வெங்கடேசன், வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டதோழர்கள் பங்கேற்றனர். தமிழ்த் தேச மக்கள் முன்னணி சார்பில் செந்தில், மே 17 இயக்கத் தோழர்கள் மற்றும் எஸ்.டி.பி.அய். மக்கள்...

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

சேலம் – சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், 16.11.2019 அன்று சேலம் இளம்பிள்ளை நகர அமைப்பாளர் தனசேகர் இல்லத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கலந்துரையாடல் கூட்டத்தில், நீலச் சட்டைப் பேரணிக்கு தோழர்கள் அதிகளவில் பங்கேற்பது, சேலத்தில் அலுவலகம் அமைப்பது, கிளைக் கழக பயிற்சி வகுப்புகள், மாணவர் பிரச்சினைக்கான துண்டறிக்கைகளை கல்லூரி முன்பு மாணவர்களிடத்தில் கொடுப்பது போன்ற கருத்துக்கள் தோழர்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இறுதியாக கழகத் தலைவர், தோழர்களிடத்தில் கழகச் செயல்பாடுகள் மற்றும் நீலச் சட்டைப் பேரணிக்கு அதிகளவில் பங்கேற்பதன் நோக்கம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். கலந்துரையாடலில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சேலம் மாநகரத் தலைவர், சேலம் சரவணன் (மூணாங்கரடு), கிழக்கு...

வீதி நாடகம் கலை நிகழ்வுகளுடன் மேட்டூர் பயணக் குழு நடத்திய எழுச்சிப் பிரச்சாரம்

வீதி நாடகம் கலை நிகழ்வுகளுடன் மேட்டூர் பயணக் குழு நடத்திய எழுச்சிப் பிரச்சாரம்

17.09.2019 தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாளில் மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரைப் பயணம் சமத்துவபுரத்தில் காலை 10 மணிக்கு  தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார். பயணம் சமத்துவபுரம், மல்லிகுந்தம், மேச்சேரி, நங்கவள்ளி, குஞ்சாண்டியூர், சுஊ பிளாண்ட், ராமன் நகர், புதுச் சாம்பள்ளி, மேட்டூர் சுளு, தேசாய் நகர், சேலம் கேம்ப், தங்கமாபுரி பட்டிணம், காவேரி கிராஸ், மாதையன் குட்டை, புதுக் காலனி, பெரியார் நகர், தூக்கணாம்பட்டி, காவேரி நகர், சின்ன பார்க், பாரதிநகர், குமரன் நகர், பொன்னகர், ஆஸ்பத்திரி காலனி, ஒர்க் ஷாப் கார்னர், பெரியார் பேருந்து நிலையம், மேட்டூர் நகர படிப்பகம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் கொடி யேற்று விழாவாகவும் இரு சக்கர வாகன பேரணியாகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவினை கழகப் பொறுப்பாளர்களும் தோழர் களும் சிறப்பாக நடத்தினார்கள். கொடியேற்று...

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம்

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம்

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டமானது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணியளவில் துவங்கியது. சேலம் மாநகர அமைப்பாளர் தோழர் பாலு அவர்களின் கண்டன முழக்கங்கள் எழுப்ப அதை தொடர்ந்து கழக தலைவர் அவர்கள் புதிய தேசிய கல்வி கொள்கையின் நகல் கிழித்தெரியும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி கண்டன உரையாற்றினார். அதை தொடர்ந்து நம் தோழர்களின் கண்டன முழக்கங்களோடு புதிய தேசிய கல்வி கொள்கையின் வரைவு நகல்கள் கிழித்தெரிய பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் டேவிட் ஒருங்கிணைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 110 தோழர்கள் கலந்து கொண்டனர். 5 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 85 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோட்டை கமலா மஹால் மண்டபத்தில்...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

மதுரை மாவட்டம் மருத்துவர் சௌந்திர பாண்டியன் –            ரூ.   20,000 காமாட்சி பாண்டி தி.வி.க – ரூ.   10,000 தளபதி –      ரூ.   5,000 அழகர் பிரபாகரன் – தி.வி.க. –      ரூ.   4,000 நாக பாலன் – ரூ.   2,000 செயராமன் –      ரூ.   1000 விசு – ஆடிட்டர் –      ரூ.   1000 ராஜா – சிம்மக்கல்       –      ரூ.   1000 விஜயன் – சமூக நீதி பண்பாட்டு மையம் –      ரூ.   1000 கருப்பையா –     ரூ.   1000 சான் பெனடிக் – திருப்பரங்குன்றம் –      ரூ.   500 விஜய் – சிம்மக்கல் –      ரூ.   500 டேவிட் –      ரூ.   500 குமரேசன்...

முகிலன் எங்கே?  சென்னை, எடப்பாடியில் ஆர்ப்பாட்டம்

முகிலன் எங்கே? சென்னை, எடப்பாடியில் ஆர்ப்பாட்டம்

சென்னை : சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே, பதில் சொல்! என்ற முழக்கத்துடன், கண்டன ஆர்ப்பாட்டம் 01.06.2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் நிகழ்வை ஒருங்கிணைத்தது. ஆர்ப்பாட்டம்  ஆர்.நல்லக்கண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) தலைமையில் நடைபெற்றது. அனைத்து ஜனநாயக கட்சிகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டனத்தைப் பதிவு செய்தார். எடப்பாடி : சூழலியல் போராளி தோழர் முகிலன் எங்கே? என்ற முழக்கத்துடன் முகிலன் மீட்பு கூட்டியக்கத்தின் சார்பில் 06.06.2019 அன்று சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாலை 4 மணிக்கு, ஆதித் தமிழர் பேரவையின் க.ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஜனநாயக அமைப்புகள் மற்றும் சூழலியல் தோழர்கள் கலந்து கொண்டு...

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கோவை விடியல் நண்பர்கள் ரூ.   4,20,000 (27.5.2019 அன்று மாலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் விடியல் நண்பர்கள் குழுவினரைச்  சந்தித்தபோது தங்கள் நிதியுடன் திரட்டிய நிதியையும் சேர்த்து ரூ. 4,20,000த்தைக் கழகத் தலைவரிடம் வழங்கினர். இவர்கள் ஏற்கனவே ரூ. 20,000 வழங்கியுள்ளனர்.) அ.மாசிலாமணி (கீழப்பாவூர்)  ரூ.         25,000 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட சார்பில்     ரூ.   4,35,000 (ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டக் கழக கட்டமைப்பு நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி 27.05.2019 அன்று கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக ரூ.4,35,000 (நான்கு இலட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) ரூபாயை கழகத் தலைவரிடம் ஒப்படைத்தனர்) மேட்டூர் நாத்திகர் விழாவில்…...

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பேரணியாக வந்து மு.நாகராஜ் (அறிவியல் மன்ற அமைப்பாளர்) தலைமையில்  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்ட அமைப் பாளர் சி.சாமிதுரை முன்னிலை வகித்தார். ஜாதி ஒழிப்பு, ஆணவப் படுகொலைக்கு தனி சட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இரா.துளசிராஜா, குமார், பாரதிதாசன், ராமச்சந்திரன் கார்மேகம், நீதிபதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம் : திவிக சேலம் மாநகரம் சார்பாக 6.12.2018 அன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மற்றும் சேலம் மாநகர செயலாளர் பரமேஸ்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர். நிகழ்வில் மாநகர தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை: இந்திய...

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

ஈரோடு தெற்கு : 17.09.2018 பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. காலை, ஈரோடு ப.செ. பூங்கா பெரியார் சிலை வளாகத்திலுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின் தி.க., த.பெ.தி.க., தி.வி.க. அமைப்புகளின் சார்பாக நூற்றுக்கணக்கான தோழர்கள் ஊர்வலமாக பெரியாரின் இல்லத்தை அடைந்து அங்கும் அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் தி.வி.க. ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கழகக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இரு சக்கர வாகன ஊர்வலத்தில் கருஞ்சட்டை தோழர்கள் பெரியாரை வாழ்த்தி முழக்கமிட்டபடி சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர். இறுதியாக சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாகன பேரணியை நிறைவு செய்தனர். இந்நிகழ்வில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களும்...

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

பேராவூரணி: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பேராவூரணி ஆவணம் சாலை முகத்தில் அமைந் துள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம்,  நகர அமைப்பாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா, மதிமுக பொறுப்பாளர்கள் குமார், கண்ணன், மணிவாசன், தேனி ஆல்பர்ட், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொறுப்பாளர்கள் பைங்கால் மதியழகன், வீரக்குடி ராஜா, சத்துணவு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் முத்துராமன், அறநெறி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் வனராணி, ஜேம்ஸ்,   முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கீ.ரே. பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பேராசிரியர் ச.கணேஷ்குமார், திரைப்படப் பாடலாசிரியர் செங்கை நிலவன், பெரியார் அரும்புகள் அறிவுச் செல்வன், அரும்புச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு : தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளான...

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

ஆகஸ்ட் 21 முதல் 26 வரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பயண அனுவபங்கள். சென்னை குழுவின் அனுபவங்கள் பற்றி உமாபதி கல்வி உரிமைகள் குறித்த பரப்புரைப் பயணம் என்பதால் கலைக்குழுவுக்கு அதிக நேரத்தை எல்லா இடத்திலும் வழங்கினோம். எங்களுடன் வந்த விரட்டு கலைக் குழுவின் நாடகம் பரப்புரையின் நோக்கத்தை மக்களிடம் மிக எளிமையாக விளக்கியது. தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து எல்லா இடங்களிலும் மக்கள் தங்களது பேராதரவைத் தந்தனர். சென்ற இடங்களில் கடை வைத்திருந்த ஏழை, எளிய உழைக்கும் மக்கள், நம் நிகழ்ச்சியை முடித்த பிறகு குளிர்பானங்கள், பழங்கள் வாங்கிக் கொடுத்து பல இடங்களில் எங்களை உற்சாகப்படுத்தினர். ஒரு இடத்தில் தோழர்கள் பரப்புரையில் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தபோது நாடகத்தைப் பார்த்துவிட்டு, “எனக்குப் படிக்கத் தெரியாது, நீங்கள் ஏதோ நல்லது செய்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது” என்றுகூறி தனது...

கிராமப்புற பெண்-ஆண் இளைஞர்கள் சம அளவில் பங்கேற்றனர் சிந்தனைக் கூர் தீட்டிய, ஏற்காடு பயிலரங்கம்

கிராமப்புற பெண்-ஆண் இளைஞர்கள் சம அளவில் பங்கேற்றனர் சிந்தனைக் கூர் தீட்டிய, ஏற்காடு பயிலரங்கம்

இராசிபுரம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்காட்டில் ஜூன் 23, 24ஆம் தேதிகளில் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம், கருத்துக் களமாகவும், விவாத அரங்கமாகவும் சிறப்புடன் நடந்து முடிந்தது. இந்தப் பயிலரங்கில் பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முன் பதிவு செய்திருந்தனர். ஆனாலும் பங்கேற்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பதால் கவனச் சிதைவு மற்றும் ஏற்பாட்டு வசதிக் குறைவு கருதி எண்ணிக்கைக் குறைக்கப்பட்டு முதல் முறையாக பெரியாரியல் குறித்து அறிய விரும்பு வோருக்கு முன்னுரிமை தரப்பட்டு, பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே பயிலரங்கில் பங்கேற்ற கழகத் தோழர்கள் இதில் பங்கேற்காது தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் புதிய தோழர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தேர்வு செய்தார். மொத்தம் பங்கேற்ற 51 பயிற்சியாளர்களில் பெண்கள் 21 பேர் என்பது இப்பயிலரங்கின் சிறப்பாகும். கிராமத்தி லிருந்து முதல் தலைமுறையாகப் படித்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்ற இந்த முகாமில் இளம் பெண் தோழர்கள் முனைப் புடன் பங்கேற்று கருத்துகளை குறிப்பெடுத்து...

ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம்

ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜூன் 23, 24 தேதிகளில் ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், பால் பிரபாகரன், பேரா. சுந்தரவள்ளி, வீரா கார்த்திக், வகுப்புகளை எடுக்கிறார்கள். பயிற்சிக் கட்டணம் ரூ.100/-                      முன் பதிவு அவசியம். தொடர்புக்கு:  ஃபிடல் செகுவேரா, இராசிபுரம். பேசி: 9788593863 பெரியார் முழக்கம் 07062018 இதழ்

பெரியாரியல் பயிலரங்கம் ஏற்காடு 23062018 மற்றும் 24062018

பெரியாரியல் பயிலரங்கம் ஏற்காடு 23062018 மற்றும் 24062018

ஜுன் 23 & 24 சனி,ஞாயிறு , #பெரியாரியல்பயிலரங்கம் இடம்- #ஏற்காடு நிகழ்ச்சி நிரல் : 23-06-2018 சனிக்கிழமை காலை 10:00 மணி- தோழர்கள் அறிமுகம் காலை 11:00 மணி- தோழர் #விடுதலை இராசேந்திரன் (பெரியார் அன்றும் இன்றும்) மதியம் 1:00 மணி-உணவு இடைவேளை மதியம் 2:00 மணி-தோழர் #வீராகார்த்திக் (கடவுள் மறுப்பு தத்துவம் – பெரியார்) மாலை 3:30 மணி தேனீர் இடைவேளை மாலை 3:45. பேரா- #சுந்தரவள்ளி (உலக மயமாக்கல்-தாராளமயமான இந்திய அரசியலும்) மாலை 6:00 மணி தனிதிறமை (பேச்சுபயிற்சி,வீதி நாடகம்) இரவு 8:30 மணி உணவு இரவு 9:15 மணி கலந்துரையாடல் 24-06-2018 ஞாயிறு காலை -7:00 மணி தோழர் #பால்பிரபாகரன் (இட ஒதுக்கீட்டு வரலாறு) காலை 9:00 மணி காலை உணவு காலை 10:00மணி தோழர் #கொளத்தூர்மணி (இந்துத்துவம்- பெரியார் அம்பேத்கர்) காலை 12:00மணி தோழர் விடுதலை இராசேந்திரன் (களத்தில் திராவிடர் விடுதலைக்கழகம்) மதியம் 2:00...

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி மே 9ஆம் தேதி ஈரோட்டில் பெரியார் இல்லத்திலிருந்து தொடங்கி மே 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நிறைவடைந்தது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு நாட்களில் 25 தெருமுனைக் கூட்டங்களில் பரப்புரைக் குழு பல ஆயிரம் மக்களை சந்தித்து தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது. சேலம், கிருட்டிணகிரி, வேலூர், கூடுவாஞ்சேரியில் ஒவ்வொரு நாள் மாலையும் பொதுக் கூட்டங்களும் நடந்தன. பா.ஜ.க. – சங் பரிவாரங்களின் பார்ப்பனிய மதவெறித் திணிப் புகள், நீட் திணிப்பு, தமிழக வேளாண் மண்டலத்தை நஞ்சாக்கும் நடுவண் அரசின் திட்டங்கள், காவிரி நீர் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகம் ஆகியவற்றை விளக்கி மக்களிடம் பேசியபோது மக்கள் பெரிதும் வரவேற்றனர். உரிமை முழக்க ஊர்திப் பேரணி குறித்த செய்திகளின் தொகுப்பு: டி           பேரணியில் 65 தோழர்கள்...

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’  உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய உரிமை முழக்க ஊர்திப் பேரணியின் பரப்புரை குறித்த ஓர் தொகுப்பு: 9.5.2018 காலை 12 மணியளவில் ஈரோடு பெரியார் நினைவு இல்லம் அருகில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி ஆரம்பமானது. மதியம் 2 மணிக்கு பவானியில் பயண நோக்கம் குறித்து நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் பேசினார். அம்மாபேட்டையில் 3 மணியளவில் மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கழக ஒன்றிய செயலாளர் வேல் முருகன், வழக்கறிஞர் பிரகாஷ், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் பிரகலாதன், மணிகண்டன் (தி.க.), மகாலிங்கம் (தி.க.), வை. இராமன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), செல்வராஜ் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) உரையாற்றினர். மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் 3 மணிக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 3.30 மணிக்கு மேட்டூர் நகர தி.வி.க. சார்பில் உணவு ஏற்பாடு...

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

திருப்பூர் : மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது. கழக பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் கனல் மதி வாசிப்பில் கழகத் தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்களால் ஏற்கப்பட்டது. நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகி யோரின் பிறந்த நாள் அவ்விடத் திலேயே கேக் வெட்டி கொண்டாடப் பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாநில அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர் கழக தேன்மொழி, இணைய தள...

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

அய்.பி.எல். சுவர் விளம்பரம் : கழகத் தோழர்கள் அழித்தனர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்கள் இணைந்து 05.04.2018 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “ஐபிஎல் வேண்டாம்” – “காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பைத் தெரிவித்தனர். மந்தவெளி இரயில் நிலையம் முற்றுகை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சார்ந்த மக்கள் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகை யிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். விழுப்புரத்தில் அஞ்சலகம்...

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச். ராஜாவைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உருவ பொம்மை எரிப்புகள் நடந்தன. குமரி மாவட்டத்தில் 07-03-2017 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீநாத்திடம் புகார் மனு வழக்குரைஞர் வே.சதா (மாவட்டத் தலைவர்) தலைமையில் தமிழ்மதி (மாவட்டச் செயலாளர்), நீதி அரசர் (தலைவர், பெரியார் தொழிலாளர் கழகம்), சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி (வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர், தி.மு.க), வைகுண்ட ராமன், வின்சென்ட் ஆகியோரால் வழங்கப் பட்டது. ஆனைமலை : கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின்  ஒருங் கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் 07-03-2018 மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச் செயலர் வே.அரிதாசு தலைமையில், நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்), பரமசிவம் (சிபிஎம் ), மணிமாறன்  (வெல்ஃபேர் பார்ட்டி), அப்பன்குமார் (விசிக), சாந்துசாகுல்அமீது (இந்திய...

ஏற்காட்டில் எச்.ராஜ உருவபொம்மை எரிப்பு !

ஏற்காட்டில் எச்.ராஜ உருவபொம்மை எரிப்பு !

ஏற்காட்டில் எச்.ராஜ உருவபொம்மை எரிப்பு ! தோழர் லெனின், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்கரட்டீஸ் பெரியார் ஆகியோர் சிலைகள் சேதப்படுத்திய மதவாத பிஜேபி கட்சியையும், எச். ராஜாவையும் கண்டித்து ஏற்காடு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 08.03.2018 அன்று ஏற்காடு அண்ணா சிலை அருகில் மதியம் 1.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்தது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் மதயாத்திரைக்கு வரவேற்பா?

பெரியார் பல்கலைக்கழகத்தில் மதயாத்திரைக்கு வரவேற்பா?

கழகம் கருப்புக் கொடி; தோழர்கள் கைதுசேலம் பெரியார் பல்கலைக்கழகம், பா.ஜ.க.வின் மதவாத யாத்திரைக்கு அனுமதித்து, மாணவர்களைப் பயன்படுத்தியதற்கு கழகத் தோழர்கள் கருப்புக் கொடிக் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சுவாமி விவேகானந்தரின் மேலை நாட்டுச் சீடரான நிவேதிதை 150ஆவது பிறந்தநாள் ரத யாத்திரையை பெரியார் பல்கலைக் கழகம் வரவேற்கும் நிகழ்ச்சிக்கு, திராவிடர் விடுதலைக் கழம் எதிர்ப்பு தெரிவித்து 10-02-2018 மாலை 3 மணிக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. போராட் டத்தில் ஈடுபட்ட  42 தோழர்கள் கைதானார்கள். சுவாமி விவேகானந்தரின் மேலை நாட்டுச் சீடரான நிவேதிதை 150 வது பிறந்து நாள் விழா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ராமகிருஷ்ணா மடம் சார்பில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நிவேதிதை 150 வது ரத யாத்திரை கடந்த 22ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றி எதிர் வரும் 22-ம் தேதி ரத யாத்திரை முடிவடைகிறது. பா.ஜ.க. பின்னணியோடு இது நடக்கிறது. இந்த நிலையில்...

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ! சேலம் 10022018

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ! சேலம் 10022018

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ! சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவிகளின் ரதயாத்திரைக்கு வரவேற்பு அளித்து விழா நடத்துவதைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இன்று மதியம் 2.00 மணிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 10.02.2018 சனிக்கிழமை. நேரம் : மதியம் 2.00 மணி. இடம் : கருப்பூர்,சேலம். சகோதரி நிவேதிதை 150 ரதயாத்திரை – 2018 எனும் பெயரில் மதவெறி காவிகள் கல்வி நிலையங்களில் நுழைவதை அனுமதிக்கலாமா?ஏற்கனவே விவேகனந்தர் பெயரை வைத்துக்கொண்டு கல்வி நிலையங்களுக்குள் நுழைந்த இந்துத்துவவாதிகள் இப்போது விவேகானந்தரின் சீடர் நிவேதிதா பெயரை கையில் எடுத்திருக்கிறார்கள்.இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்க்கு மற்ற மதத்தவருக்கு இப்படி வாய்ப்புகளை இவர்கள் வழங்குவார்களா? கல்வி நிலையமா?காவி நிலையமா?அதுவும் தந்தை பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் ரதயாத்திரை மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஜ.கவின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் போன்ற காவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துவதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.மத சார்பின்மையை...

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் சேலம் 25012018

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் சேலம் 25012018

சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் இன்று மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ் தாய் வாழ்த்து பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக்கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந்திரன் செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டது. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியை சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டனர்.

பொய் வழக்கும்,போராட்டமும்’ – நூல் அறிமுகவிழா ! சேலம் 28012018

‘பொய் வழக்கும்,போராட்டமும்’ – நூல் அறிமுகவிழா ! நாள் : 28.01.2018.ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 05.30 மணி. இடம் : ஹோட்டல் வசந்தம்,புதிய பேருந்து நிலையம் எதிரில்,சேலம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும் தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு நூல் திறனாய்வுச் சிறப்புரையாற்றுகிறார்கள்.

சேலத்தில் கழக செயலவைக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 29.12.2017 அன்று சேலம் விஜயராகவாச்சாரியார் அரங்கில் பகல் 11.30 மணியளவில் தொடங்கியது. வரவேற்புரை –  கோவிந்தராஜ், கடவுள் மறுப்பு – ஈரோடு மணிமேகலை. உரை நிகழ்த்தியோர்: ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) , வீ. சிவகாமி (த.நா. அறிவியல் மன்றம்), பாரி சிவகுமார் (தமிழ்நாடு மாணவர் கழகம்), விஜயகுமார் (இணையதள பொறுப்பாளர்), பரிமளராசன் (முகநூல் பொறுப்பாளர்), இராம. இளங்கோவன் (வெளியீட்டு செயலாளர்), தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் சக்திவேல் (மேட்டூர்), பன்னீர் செல்வம் (சூலூர்), அய்யனார் (சென்னை), உமாபதி (சென்னை), மணிமேகலை, சண்முகப்பிரியன், சூரியக்குமார், நாத்திகஜோதி, சாமிநாதன், முத்துப்பாண்டி, முகில் ராசு, நீதியரசன், பாரதிதாசன், செந்தில் (விருதுநகர்), காமாட்சிபாண்டியன் (மதுரை), மருதமுத்து, அன்பு (நாகை), தாமோதரன் (பெரம்பலூர்), இளையரசன் (விழுப்புரம்),  கிருஷ்ணன் (கிருஷ்ணகிரி), இரத்தினசாமி, வேழவேந்தன், செந்தில், டேவிட் (சேலம் கிழக்கு), வேணுகோபால் (பவானி), துரைசாமி (பொருளாளர்), மோகன் (மடத்துக்குளம்),...

திவிக செயலவை தீர்மானம் சேலம் 29122017

29122017 வெள்ளியன்று, சேலம் விஜயராகவாச்சாரி அரங்கில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகச் செயலவையில் இயற்றப்பட்டத் தீர்மானங்கள் தீர்மானம் 1 சமூக நீதிக் கொள்கைகளால், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டிய தமிழ்நாடு இன்று மோசமான நிலையில் பின்னடைந்து, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம், இந்தியா சராசரியைவிட அதிகமாகிவிட்டது என்றும், வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படாததே காரணம் என்றும் கூறியுள்ளது இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், மாநில அரசுப் பணி நியமனங்களுக்கு, இந்தியாவின் அனைத்து மாநிலத்தினரும், நேபாளம், பூட்டான் நாட்டவரும், வெளிநாடுகள் பலவற்றிலிருந்து நிரந்தரமாக குடியமரும் நோக்குடன் இந்தியா வந்துள்ளோரும் – தமிழ்மொழி தெரியாதோரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பிற மாநிலத்தவர்களுக்கு பணி...

அரசு தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்!

தமிழ்நாட்டின் அரசுப் பணிகளுக்கு பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. திருச்சி : திருச்சி மாவட்ட கழகச் சார்பாக 14.12.2017 வியாழன் காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தைக் கண்டித்து, அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை வகித்தார். பல் மருத்துவர் எஸ்.எஸ். முத்து, திருவரங்க நகரச் செயலாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்துரை வழங்கியோர்: செந்தில் (இளந்தமிழகம்), வின்செட் (மாநகரத் தலைவர், த.பெ.தி.க.), பாலாஜி (மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்), வழக்குரைஞர் தமிழழகன் (ஆசிரியர், ‘தமிழ்க்காவிரி’), அன்பழகன் (பெரியார் பாசறை), பஷீர் அகமது (மக்கள் உரிமை மீட்பு இயக்கம்), வழக்குரைஞர் பொற்கொடி ஆகியோர்.  டார்வின்தாசன் (கழக மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்) நன்றியுரையாற்றினார்.  தோழர்கள் குணா, முருகானந்தம், மு.மனோகரன், டி.வி.மெக்கானிக் மணி, அவரது துணைவியார்,...

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் சேலம் 07122017

07122017 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வடநாட்டாருக்கு தாரைவார்க்கும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்துhர் மணி அவர்கள் தலைமை ஏற்றார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் (திவிக) தோழர் இரா. டேவிட் அவர்கள் முன்னிலை வகித்தார். கண்டனஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்(சிபிஎம்)தோழர் பி. தங்கவேல் , மாவட்ட செயலாளர் (சிபிஐ) தோழர் எ. மோகன், த.மு.மு.க மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் தோழர் பி. யூனுhஸ் அகமத் , சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்(திவிக) சி. கோவிந்தராசு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக கழகத் தலைவர் தோழர் கொளத்துhர் மணி அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி உரை நிகழ்த்தினார். திவிக கிழக்கு மாவட்ட...

TNPSC விதிகளில் செய்துள்ள மாற்றங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ! சேலம் 07122017

கண்டன ஆர்ப்பாட்டம் ! நாள் : 07.12.2017 நேரம் : மாலை 05.00 மணி இடம் : தலைமை தபால் நிலையம் முன்பு சேலம். தலைமை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். பிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) விதிகளில் செய்துள்ள மாற்றங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக அரசுப் பணியாளர்களாக தமிழ்நாட்டினருக்கே வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் கர்நாடகம்,குஜராத், மராட்டிய மாநிலங்களில் இருப்பதைப் போல புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தோழர் கோகுலக் கண்ணன் – தோழர் பிரேமா வாழ்க்கை இணையேற்பு விழா சேலம் 12112017

12-11-2017 அன்று காலை 11-00 மணிக்கு, சேலம்,சிவதாபுரம் மாணிக்கம் திருமண மண்டபத்தில், தோழர் கோகுலக் கண்ணனுக்கும், ஏற்காடு தோழர் பெருமாளின் அக்கா மகள் பிரேமாவுக்கும், ஜாதி, தாலி, சடங்கு மறுப்பு இணையேற்பு விழா முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வீரபாண்டி ஆ.இராசா தலைமையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்திவைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் அரங்கு நிரம்பி வழியும் வண்ணம் திரளாகத் திரண்டிருந்தனர். விழா நிறைவில் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. இளம்பிள்ளை கழகத் தோழர்கள் மணவிழாப் பரிசாக ஒரு மோட்டார்  சைக்கிளை வழங்கினர். மேலும் படங்களுக்கு  

தோழர் பாரூக் குடும்ப நிதி

தோழர் பாரூக் குடும்ப நிதி

சேலம் கிழக்கு மாவட்டத்தில் நடந்த தோழர்கள் சந்திப்பின் போது ஏற்காடு பெருமாள்பிரபாகரன் அவர்கள் பாரூக் குடும்ப நிதியாக 10.000 பத்தாயிரம் ரூபாய் வழங்கினார்கள்

வாழ்க்கை இணையேற்பு விழா சேலம் 12112017

திவிக தலைவர் தோழர்.கொளத்தூர்மணி அவர்களின் முன்னாள் உதவியாளர், அன்பிற்கினிய தோழர்.கோகுலின் வாழ்க்கை இணையேற்பு அழைப்பிதழ்

தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம் சேலம் கிழக்கு

சேலம் கிழக்கு மாவட்ட தி.வி.க சார்பில் மாவட்ட செயலாளர் தோழர் டேவிட் தலைமையில் சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தோழர்கள் இருசக்கர வாகன பேரணியாக சென்று சேலம் மாநகரை சுற்றி 8 இடங்களில் அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்து முழக்கமிட்டனர். கூடியிருந்த மக்களுக்கு துண்டறிக்கையும் இனிப்பும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரும்பாலை, தோப்பூர், இளம்பிள்ளை என 8 இடங்களில் கழக கொடி ஏற்றப்பட்டது. அடாத மழையிலும் தோழர்கள் தோய்விற்றி பேரணியில் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். காலையில் அம்மாப்பேட்டை தோழர் செந்தில் தோழர்கள் அனைவருக்கும் அவரது இல்லத்தில் தேனீர், பிஸ்கட் வழங்கினார். தோழர் பிரபு நெத்திமேடு பகுதியில் தோழர்களுக்கு அவரது இல்லத்தில் தயாரித்த கேசரி மற்றும் வடை வழங்கினார். மதியம் இளம்பிள்ளை பகுதி தோழர்கள் அனைவருக்கும் மாட்டிறைச்சி உணவு வழங்கினார்கள்....

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் 02092017

சேலத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்கிட கோரியும், NEET தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் 02092017 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் கருப்பூர் சக்திவேல் தலைமை தாங்கினார், சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் தோழர் ஏற்காடு பெருமாள் முன்னிலை வகித்தார். தோழர் இரணியாவின் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் சூரி, மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராசு, தோழர் முல்லை வேந்தன், சேலம் மாநகர அமைப்பாளர் தோழர் பாலு, தலைமை செயர்குழு உறுப்பினர் தோழர் R.S.சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சேலம் மாநகர செயலாளர் தோழர் பிரபு நன்றியுரை ஆற்றினார். இவ்ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகரம், இளம்பிள்ளை, நங்கவள்ளி, ஏற்காடு, மேட்டூர், கொளத்தூர், ஆர்.எஸ் பகுதி பொறுப்பாளர்கள், தோழர்கள்...

சேலம் முருங்கப் பட்டியில் கழகப் பொதுக்கூட்டம் ! 11082017

சேலம் முருங்கப் பட்டியில் கழகப் பொதுக்கூட்டம் ! 11082017. கழகத் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இழந்து வரும் உரிமைகளை மீட்போம் !தமிழகத்தின் தனித்தன்மையை காப்போம் ! எனும் முழக்கத்தை முன்வைத்து நடைபெற்ற பரப்புரை பயணத்தின் ஒரு பகுதியாக 11.08.2017 அன்று மாலை 6 மணிக்கு சேலம் முருங்கப் பட்டி சந்தை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தலைமைக் கழக பேச்சாளர் தோழர் கோபி.வேலுச்சாமி மற்றும் கழக மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வனவாசி, சேலம் 24072017

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். நாள் : 24.07. 2017 திங்கள் நேரம் : மாலை 6.00 மணி இடம் : பேருந்து நிலையம்,வனவாசி, சேலம் மாவட்டம். சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி அவர்கள். தலைவர்,திராவிடர் விடுதலைக்கழகம். தோழர் வே.மதிமாறன், எழுத்தாளர். தோழர் காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியும், மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

உணவு உரிமை – கருத்துரிமையை பறிக்காதே! தடையை மீறி மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்: சேலத்தில் கழகத்தினர் கைது

மாட்டுக் கறியை உண்ணத் தடைபோடும் பார்ப்பன மதவாத சக்திகளுக்கு ஆதரவாகவே தமிழக காவல்துறையும் செயல்பட்டு வருகிறது. மாட்டுக்கறி உணவு – உழைக்கின்ற மக்களின் உணவு; புரதச் சத்து மிக்க உணவு; ஆடு மற்றும் கோழிக் கறியைச் சாப்பிடும் உரிமை இருக்கும்போது, உலகம் முழுதும் மக்களால் உண்ணப்படும் மாட்டுக்கறி உண்பதை மதத்தைக் காரணம் காட்டி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தடை போட்டுள்ளதோடு, கண்காணிப்புக் குழுக்கள் என்ற பெயரில் காலித்தனத்திலும்  இறங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மே 12ஆம் தேதி சேலம் நகரில் மாட்டுக்கறி அரசியல் கருத்தரங்கம் ஒன்றுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் தலைமையில் மாநகரத் தலைவர் த.பரமேசு முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் பொ.இரத்தினம் ஆகியோர் உரையாற்ற இருந்தனர். மதியம் ரூ.50 கட்டணத்தில் மாட்டுக்கறி உணவு வழங்க ஏற்பாடாகியிருந்தது. ‘லால் மஜித் மண்டபம்’ என்ற தனியார் அரங்கில் நடந்த...

மாட்டுக்கறி அரசியல் – மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் ! சேலம் 12052017

கருத்துரிமை உணவு உரிமைக்கு தடை போடும் தமிழ்நாடு காவல்துறையை கண்டித்து இன்று 12052017 காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காவல் துறையின் தடையை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் தடையை மீறி மாட்டுக்கறியை சாப்பிட்டார்கள். போராட்டத்தின் போது தோழர் கொளத்தூர் மணி பேச்சு போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. இப்போராட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், அமைப்பாளர் டைகர் பாலன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், மாவட்ட செயலாளர் சரவணன்,...

களப்பணிகளில் கழகத் தோழர்கள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கழகத்தின் களப்பணிகள் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் தொகுப்பு. ஈரோட்டில் ‘கனி ராவுத்தர்’ குளம் மீட்பு இயக்கத்தின் தொடர் போராட்டம் ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலை களால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப் பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து மக்கள் திரள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு என்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர்...

மாட்டுக்கறி அரசியல் – சேலம் 12052017

அன்பார்ந்த தோழர்களே! 23-4-2017 அன்று கொளத்தூரில் மாட்டுக்கறி அரசியல், மாட்டுக்கறி விருந்து என்றறிவித்தோம்; அனுமதி மறுப்பு என்றது காவல்துறை. 2-5-2017 அன்று ஈரோட்டிலதே நிகழ்வு. நாம் அனுமதி கேட்கவில்லை; பாதுகாப்பு மட்டும் கேட்டோம். ஆனாலும் அனுமதி இல்லை என்றது காவல்துறை; உயர்நீதி மன்றமோ அடுத்த மாதம்தான் விசாரிப்பேன் என்கிறது. 12-5-2017 அன்று சேலத்திலும் அதே நிகழ்வு. பாதுகாப்பு மட்டுமே கேட்டிருந்தோம். அனுமதி இல்லை என்று கூறிவிட்டது காவல்துறை. அரசியல் சட்டத்தின் 48ஆவது பிரிவு நேரடி சட்டம்கூட இல்லை; வெறும் வழிகாட்டும் நெறிமுறை மட்டும்தான். அப்பிரிவு “பால் கொடுக்கும் பசுக்களையும், பாரம் இழுக்கும் எருதுகளையும், இளங்கன்றுகளையும் வெட்டுவதை வேண்டுமானால் – தடை செய்ய விரும்பினால் – மாநில அரசுகள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்றுதான் கூறுகிறது. நாமோ பால் கொடுக்காத, விவசாய வேலைக்குப் பயன்படாத மாட்டின் கறியைத்தான் உண்ணப்போகிறோம் என்பதை தெளிவாக – அடிமடையன் கூட புரிந்துகொள்ளும் வகையில் நமது பாதுகாப்பு கோரும்...

சேலம் மாநகர விசிக கடிகாரம் அன்பளிப்பு 26042017

சேலம் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 56ஆவது கோட்ட செயலாளர் தோழர் எம்.எஸ்.ஏ. ஆர்ட்ஸ் முத்துராசு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் வைப்பதற்காக, கிரானைட் கல்லில் பெரியார்-அம்பேத்கர் ஆகியோரின் உருவப் படங்களுடனும், கடிகாரம் பொறுத்திய முகவரிக்கல்லை 26042017 அன்று காலை கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். கழகத் தோழர் எல்.ஐ.சி. தனசேகரன் உடனிருந்தார்.