பரப்புரைக்கு தயாராகும் கழகம்!
சேலம்: கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்! 16.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் ஏற்காடு ஷோபா ஹோட்டலில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். தீர்மானங்கள்:
1). ஒவ்வொரு பகுதிகளிலும் துண்டறிக்கை வாயிலாகவும், வீதி நாடகங்கள் வாயிலாகவும் தெருமுனைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவது எனவும்,
2).தோழர்களின் சந்திப்பை விரிவு படுத்தும் வகையிலும், தொடர்புகளை விரிவு படுத்தும் வகையிலும் வருகின்ற ஜூன் மாத இறுதி வாரத்தில் ஏற்காட்டில் குடும்ப விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
3). சேலம் மாவட்டக் கழகத்தின் எதிர்கால செயல் திட்டங்களுக்காக மாவட்ட நிதியை உருவாக்குது எனவும், அந்த நிதியை துண்டறிக்கைகள், கூட்டங்களுக்கு பயன்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கலந்து கொண்டோர்: சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் (கி) மாவட்ட அமைப்பாளர்கள் ஏற்காடு பெருமாள், முத்துமாணிக்கம், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், ஏற்காடு ஒன்றியச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் தேவபிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கதுரை, சிவசண்முகம், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி, சிந்தாமணியூர் நகரத் தலைவர் ஜெய பிரகாஷ், செயலாளர் ரவிக்குமார், சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், ஏற்காடு உலகநாதன், பிரபு, சுதாகர், செல்வம், ரமேஷ், டேவிட் குமார், ஈழ பிரபாகரன், ஜெயக்குமார், கேசவன், ரமேஷ், முருகேசன், ஜாஸ்மி ஸ்ரீ, இளம்பிள்ளை சேகர், குப்புசாமி, வெள்ளார் மனோ, அருண்குமார், சர்மா, நரேந்திரன், சங்கீதா, ஆத்தூர் நகரத் தலைவர் மகேந்திரன், கணபதி, சுதர்சன், ஆனந்த், எழில் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஏற்காடு தேவபிரகாஷ் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.
பெரியார் முழக்கம் 27022025 இதழ்
