கடைகடையாக வசூல் பணி : மக்களைச் சந்தித்து மாநாட்டுத் துண்டறிக்கைகள் களப்பணியில் தோழர்கள் உற்சாகம்
ஏப். 29, 30 சேலம் மாநாட்டுப் பணிகளில் தோழர்கள் ஒவ்வொரு நாளும் கடை கடையாகச் சென்று வசூல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : ஏப்ரல் 29.30 தேதிகளில் சேலத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டை ஒட்டி சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக மார்ச் 29, புதன்கிழமை அன்று ஆயிரம் விளக்கு பகுதியில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடத்தில் துண்டறிக்கை வழங்கி பரப்புரை மேற்கொண்டனர்.
இரண்டாவது நாளாக 30.03.2023 அன்று மாலை 7 மணியளவில், சேத்துப்பட்டு பகுதி கடைவீதிகளில் நடைபெற்றது.
திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் இராஜேஷ் தலைமையில், வீரா, குமார், லட்சுமணன், மாணிக்கம், விஜயகாந்த், யாழினி, அருண்குமார், அருண் ஆகியோர் கலந்து கொண்டு துண்டறிக்கை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மயிலைப் பகுதி சார்பாக 30.03.2023 அன்று மாலை 7 மணியளவில் தேனாம்பேட்டை திருவள்ளூர் சாலையில் இராவணன் தலைமையில் பிரவின், கார்த்திக், உதயா, உமாபதி, சிவா, மனோகர் உள்ளிட்ட தோழர்கள் கடைவீதி வசூலை மேற்கொண்டனர்.
மூன்றாவது நாளாக மார்ச் 31 மாலை 7 மணியளவில், மயிலாப்பூர் பகுதி சார்பில், மயிலை இராவணன் தலைமையில் தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் ரோடு, பெரியார் மார்கெட் மற்றும், இராயப்பேட்டைப் பகுதி சார்பில் பகுதிச் செயலாளர் அருண் தலைமையில் சூளைமேடு சுற்றியுள்ள பகுதிகளில் கடைவீதிகளில் துண்டறிக்கைப் பிரச்சாரம் மற்றும் வசூல் நடைபெற்றது.
மயிலை உதயா, பிரவீன், கார்த்திக், சிவா ஆகியோரும், இராயப்பேட்டை இராஜேஷ், அருண், யாழினி, உதயகுமார், மாணிக்கம், குமார், அருண்குமார் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.
நான்காம் நாள் 01.04.2023 மாலை 7 மணியளவில், நங்கநல்லூர் மார்கெட் பகுதி கடைவீதிகளில் நடைபெற்றது.
துண்டறிக்கை பிரச்சாரம் இரம்யா தலைமையில் நடைபெற்றது. மேலும், நங்கநல்லூர் பகுதி அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் அருண், இராஜேஷ், வீரா, குமார், மாணிக்கம், விஜயகாந்த், யாழினி, அருண்குமார், ப்ரீத்தி, சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு துண்டறிக்கை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மயிலை பகுதி கழகம் சார்பில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு பகுதியில் கடைவீதி வசூலை தோழர்கள் உமாபதி, பிரவீன், உதயா, விஷ்ணு, பிரசாந்த் ஆகியோர் மேற்கொண்டனர்.
நங்கவள்ளி : 25.3.2023 அன்று நங்கவள்ளி பகுதியில் தனிநபர் வசூல் செய்யப்பட்டது. வசூல் தொகை ரூ.29000/-.
வசூல் பணியில் பங்கெடுத்துக் கொண்டத் தோழர்கள் மாவட்ட அமைப்பாளர் அன்பு, தலைமை குழு உறுப்பினர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஆர்.எஸ். பகுதி பொறுப்பாளர் முரளி, அருள், சிவக்குமார், குமார், பன்னீர்செல்வம், சந்திரசேகர்.
29.3.2023 அன்று நங்கவள்ளி, தானாபதியூர், பனங்காடு பகுதிகளில் தனிநபர் வசூல் செய்யப்பட்டது. வசூல் தொகை ரூ. 11,500. வசூல் பணியில் பங்கெடுத்துக் கொண்ட தோழர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், காவை விக்னேஷ், கிருஷ்ணன், தங்கதுரை, ராமசந்திரன், நங்கவள்ளி அருள், உமாசங்கர், பிரபாகரன், கவியரசு.
29.3.2023 அன்று நங்கவள்ளி பகுதியில் தனிநபர் வசூல் செய்யப்பட்டது. வசூல் தொகை 17500 ரூபாய். வசூல் பணியில் பங்கெடுத்துக் கொண்ட தோழர்கள் மாவட்ட அமைப்பாளர் அன்பு, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நங்கவள்ளி பொறுப்பாளர் அரூள்குமார், வனவாசி நகரச் செயலாளர் உமா சங்கர்.
எடப்பாடி : 31.3.2023 அன்று சேலம் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக மாநில மாநாட்டு கடை வசூல், எடப்பாடி பகுதியில் காலை 12 மணிக்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு தலைமையில் நடைபெற்றது.
எடப்பாடி பகுதியில் உள்ள தமிழ் உணர்வாளர்களும், சிறு வியாபாரிகளும், அரசு அதிகாரிகளும், குறிப்பாக எடப்பாடி சார்பதிவாளர் தமிழ்ச்செல்வி மாநாட்டின் நிதியாக பெரும் தொகையை வழங்கி எங்களை உற்சாகப்படுத்தினார்.
எடப்பாடி காவல் நிலையத்தில் இருக்கக்கூடிய காவல் துறை நண்பர்களும் மாநாட்டு நிதியை வழங்கி ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக திராவிடர் கழகத்தைச் சேர்ந்த எடப்பாடி அன்பு மதி, காலை முதல் இரவு வரை வசூல் குழுவில் உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்டார். வசூல் தொகை 21,070 ரூபாய்.
கலந்து கொண்ட தோழர்கள் நங்கவள்ளி பகுதி சிவக்குமார், சுடர்மணி, நிறைமதி, அருள், ராஜேந்திரன், அன்பு, மேட்டூர் ஆர்.எஸ். பகுதி நாகராஜ், விவேக், சக்திவேல், ஜெகதீஷ், பெர்னாண்டஸ், மேட்டூர் முத்துராஜ், கொளத்தூர் சுதா, மாரி செட்டி, ராமமூர்த்தி.
ஈரோடு : திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாநாடு தொடர்பாக நேற்று ஈரோடு கடைவீதியில் வசூல் நடந்தது. அதில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவம்.
காவலாண்டியூர் ஈசுவரன், நங்கவள்ளி கிருஷ்ணன், இரத்தினசாமி உள்ளிட்ட தோழர்கள் சுமார் 10 பேர் ஒரு குழுவாக இணைந்து ஈரோட்டில் கடைவீதி வசூலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது,நம்மை வழிமறித்த ஒரு கேரள மாநிலத்தை சேர்ந்தவர், நம் கையில் இருந்த துண்டறிக்கையில் இருந்த தந்தை பெரியாரின் படத்தைப் பார்த்துவிட்டு, “இவர் எங்கள் தலைவர், இவரை நீங்களும் வைத்துள்ளீர்களே?” என்று கேட்டார்.
தந்தை பெரியார் கேரளாவில் உள்ள வைக்கம் என்னும் இடத்திற்குச் சென்று, அங்குள்ள கோயிலை சுற்றி தாழ்த்தப்பட்டவர்கள் நடக்கக் கூடாது என்று இருந்த நிலையை மாற்றுவதற்காக போராட்டம் நடத்தி, சிறைப்பட்டு அதில் வெற்றி கண்டார் என்பது வரலாறு.
எனவே, இன்றைக்கும் கேரள மாநிலத்தவர்கள் தந்தை பெரியாரை தங்களது தலைவர்களில் ஒருவராகப் போற்றுகின்றனர் என்பதற்கு நேற்றைய நிகழ்வு ஒரு சாட்சி.
மாநாட்டில் 1000 பேருக்கான மதிய உணவுப் பொருட்கள் நன்கொடை: ஈரோடு மாவட்டம் கோபி ஒன்றியம் அளுக்குளி ஊராட்சி கவுன்சிலர் க.தங்கம் (திமுக) அவர்கள் 30.03.23 அன்று சேலத்தில் நடைபெற உள்ள கழக மாநில மாநாட்டிற்கு மார்ச் 29 அன்று 1000 பேருக்கு மதிய உணவுக்கான அனைத்து மளிகை பொருட்கள் மற்றும் சமையலுக்கு ஆகும் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பொருட்களை கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி அவர்களிடம் வழங்கி மாநாடு சிறக்க வாழ்த்துகளை தெரிவித்தார்.
அவ்வமயம் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், ஈரோடு மாவட்ட தலைவர் சி. செல்வராஜ், ப.கார்த்தி தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர், மு.விக்னேஷ், ஜெகதீஸ்குமார் (திமுக), சின்னதுரை (காங்கிரஸ்) செவியூர் ஆகியோர் உடனிருந்தனர்.
சேலம் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஏப்ரல் 29, 30இல் சேலத்தில் நடைபெறும் இரண்டு நாள் மாநில மாநாடு குறித்த சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 01.04.2023 சனி மாலை 5.00 மணி அளவில் சேலம் கருப்பூர் சக்திவேல் இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்தில் சேலத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில மாநாட்டிற்கான வேலை திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் மற்றும் தனிநபர்களிடம் துண்டறிக்கைகள் விநியோகித்து மாநாடு குறித்து விளக்குவது மற்றும் நன்கொடை திரட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பேரணியை மிகவும் சிறப்பாக நடத்துவதற்காக அந்தந்த கிளைக் கழகங்கள் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் ஆண்கள், பெண்கள் ,குழந்தைகள் எத்தனை பேர் கலந்து கொள்ள உள்ளனர் என்ற பட்டியலும், மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு நிதி வசூலை இன்னும் தீவிரப்படுத்துவதாகவும் பேசப்பட்டது.
சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள வசூல் குழுவினர் சிறப்பாக செயல்பட்டு பொது மக்கள் மற்றும் வியாபார பெருமக்களிடம் துண்டறிக்கை மூலம் மாநாடு குறித்து செய்திகளை கூறி நன்கொடை திரட்டும் பணியை மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர் என கழகத் தலைவர் அவர்கள் தமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கூறினார். மேலும் கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் மாநாடு குறித்த தங்களது கருந்துக்களை எடுத்துரைத்தனர்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமது உரையில், “சேலம் மாவட்டம் என்பது எந்தவொரு நிகழ்வு நடந்தாலும் சிறப்பாக நடத்தும், அதே போல இந்த இரண்டு நாள் மாநில மாநாட்டையும் சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் அதற்கு தோழர்கள் ஒத்துழைப்பு என்பது மிகவும் முக்கியம் எனவும், அதேபோல் மாநாட்டிற்கு தோழர்கள் அனைவரும் குடும்பத்தார் மற்றும் நண்பர் களோடு கலந்து கொள்ள வேண்டும்” எனவும் உரையில் குறிப்பிட்டார்.
நிறைவாக சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவடைந்தது. கலந்து கொண்ட தோழர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 06042023 இதழ்