நங்கவள்ளி ஒன்றியத்தில் பகுத்தறிவுப் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்டம்,நங்கவள்ளி ஒன்றியத்தின் சார்பில் 22.02.2023 புதன்கிழமை கிராமப்புற பகுத்தறிவு பிரச்சார தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன

முதல் தெருமுனை கூட்டம் பக்க நாடு சந்தை அருகில் மாலை 5.00 மணிக்கு நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் புதியவன், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, கழக தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள். இப்பகுதியில் பெருமளவில் மக்கள் ஆர்வத்துடன் பிரச்சாரத்தை உற்று கவனித்ததோடு உண்டியல் வசூல் 840 ரூபாய் வழங்கி ஆதரவளித்தனர். முடிவில் சிவக்குமார் நன்றியுரையாற்றினார்.

இரண்டாவது நிகழ்வு ஆடையூர் குடியிருப்பு பகுதியில் 7.00 மணி அளவில் நடைபெற்றது. மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த கிராமப்புற பகுத்தறிவு பிரச்சார தெருமுனை கூட்டத்திற்கு நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் புதியவன் மற்றும் வழக்கறிஞர் வித்யாபதி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து மந்திரமா ? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சியை காவை.இளவரசன் மக்கள் மத்தியில் மிகச் சிறப்பாக செய்து காட்டினார்.  நிறைவாக மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு மற்றும் கழக தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல் கருத்துரையாற்றினார்

இந்தப் பகுதியில் இளைஞர்களும், மாணவர்களும்,பெண்களும் திரளாக வந்திருந்து கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரத்திற்கு ஆதரவளித்து சிறப்பித்தார்கள்.  முடிவில் உமா சங்கர் நன்றி கூறினார்.

இந்தத் தெரு முனை கூட்டத்தில் ஆர்.எஸ். பகுதியைச் சார்ந்த நாகராஜ், நங்கவள்ளி தோழர்கள் அருள் குமார்,  குமார், சிவக் குமார், வனவாசி நகரத் தலைவர் செந்தில் குமார் மற்றும் அறிவழகன், வனவாசி நகரப் பொறுப் பாளர் பன்னீர் செல்வம், வன வாசி பொறுப் பாளர் கதிர் வேல், நகரச் செயலார் உமாசங்கர், வெள்ளரி வெள்ளி பகுதியைச் சார்ந்த

விஜய் பாபு, சங்ககிரி சார்ந்த செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய 500 துண்டறிக்கைகள் மக்களிடம் கொடுக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 02032023 இதழ்

You may also like...