தலைவர் பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள் தாரமங்கலம் பொதுக்கூட்டத்தில் படிவம் வழங்கினர்
தாரமங்கலம் நகரக் கழகத்தின் சார்பில் “குடிஅரசு இதழ் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா” பொதுக்கூட்டம் 20.06.2024 அன்று தாரமங்கலம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பவளத்தனூர் சரவணன் தலைமை தாங்கினார், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் வரவேற்புரையாற்றினார், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, குடந்தை பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் முதல் நிகழ்வாக உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி மற்றும் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ் தொடக்கவுரையாற்றினார்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.
கே.ஆர்.தோப்பூர் கணேசன் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
இதில் தாரமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் R.பாலகிருஷ்ணன், நகரமன்றத் தலைவரும், தாரமங்கலம் நகரச் செயலாளருமான டி.எம்.குணசேகரன் மற்றும் சேலம், சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு, பாண்டிச்சேரி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், தருமபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத் துளிகள்
• 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்த கழக குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்களைப் பாராட்டும் விதமாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
• எச்சில் இலையில் உருள்வது யாரால்? குடிஅரசு கையேடு மற்றும் குடிஅரசு வழக்கு – முழுத் தகவல்கள் உள்ளிட்ட மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.
• கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
• கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு கழகத் தோழர்கள், தாங்கள் இறந்த பிறகு தங்களது உடலை மருத்துவ ஆய்வுக்காக ஒப்படைப்பதற்காக உடற் கொடை வழங்க முடிவெடுத்து, அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கழகத் தலைவரிடம் பொதுக்கூட்ட மேடையில் சமர்ப்பித்தனர்.
குறிப்பு: விடுபட்டவர்கள் பெயர் அடுத்த இதழில் இடம்பெறும்
பட்டியல்
சென்னை
1. அருண்குமார், இராயப்பேட்டை, சென்னை
2. உமாபதி, இராயப்பேட்டை, சென்னை
3. குமார், மயிலாப்பூர், சென்னை
4. சூர்யா, இராயப்பேட்டை, சென்னை
5. பெரியார் நம்பி, திண்டுக்கல்
6. விஜயகுமார், ஆதனூர், காஞ்சிபுரம்
திருப்பூர்
1. சங்கீதா, ஆத்துப்பாளையம், திருப்பூர்
2. தனபால், ஆத்துப்பாளையம், திருப்பூர்
3. முத்துக்குமார், பொங்குபாளையம், திருப்பூர்
4. வசந்தி, பொங்குபாளையம், திருப்பூர்
5. முத்துலட்சுமி, அனுப்பர்பாளையம், திருப்பூர்
திண்டுக்கல்
1. மீனா லட்சுமி, ஆயக்குடி, பழனி
2. மாக்சிம் கார்க்கி, ஆயக்குடி, பழனி
3. மருதமூர்த்தி, பழனி
4. ஆயுதன், பழனி
5. கௌசின் பானு, ஆயக்குடி, பழனி
6. சங்கர், ஆயக்குடி, பழனி
7. பெரியதுரை, கனக்கன்பட்டி, பழனி
8. ரேகா, கனக்கன்பட்டி, பழனி
9. முருகேசன், பழைய ஆயக்குடி, பழனி
10. ராஜா, கனக்கன்பட்டி, பழனி
கோவை
1. கிருட்டிணன், பீளமேடு
2. இராஜாமணி, பீளமேடு
3. விடுதலைச் செல்வன், செஞ்சேரிமலை
பெரியார் முழக்கம் 27.06.2024 இதழ்