கடவுள் உண்டா? சவால் விட்ட நாத்திகர்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-17
டாக்டர் ஆபிரகாம் கோவூர் அவர்கள் ஒரு தலைசிறந்த நாத்திகர், மனோதத்துவ நிபுணர். அறிவியல் அறிஞர். எதையும் அறிவுபூர்வமாகப் பேசி, உண்மைகளை நிலைநிறுத்திடும் ஆற்றல் வாய்ந்த ஒரு சமுதாய விஞ்ஞானி கேரளத்தில் பிறந்தவராயினும், இறுதி வாழ்க்கையை இலங்கையில் அமைத்துக் கொண்டவர். சிறீலங்காவில், கொழும்புவில்தான் 1978 செப்-18-ல் அவர் மறைந்தார். பல ஆண்டுகாலம் தமிழ் நாட்டிலும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் தீவிர பகுத்தறிவுப் பிரச்சாரம் புரிந்தவர் அவர். டாக்டர் கோவூர் “கடவுள்” உண்டு என நிரூபிப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்று சவால்விட்டார். எவர் முன் வருவார்? அப்படி ஒன்று இருந்தால் அல்லவா நிரூபிக்க முடியும்? அவரது பகுத்தறிவுப் பிரச்சாரத்தை பெரியார் இயக்கம் பயன்படுத்திக் கொண்டது. கோவூர் பலமுறை தமிழ்நாடு வந்து திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது உண்டு. கோவூர் எழுதிய தன்னுடைய சுயவரலாற்றிலிருந்து சி ல கேரளாவில் தீண்டத்தகாதவர்கள் தாங்கள் நடக்கும் வழியிருந்தால் அகன்று போய்விடுவதற்கு எச்சரிக்கையாக, நம்பூதிரிகள்...
