Category: திவிக

எழுச்சியுடன் நடந்த செயலவை

எழுச்சியுடன் நடந்த செயலவை

சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்டம் மே 21 காலை 10:30 மணியளவில் குகை ஜிபி கூடத்தில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கோவிந்தராஜ் கடவுள் ஆத்மா மறுப்புகளைக் கூறத் தொடங்கியது. மாநகரச் செயலாளர் ஆனந்தி வரவேற்புரையாற்ற பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செயலவை நோக்கம் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்தார் . 30 தோழர்கள் மாநாட்டின் வெற்றி, எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து கருத்துகளை முன் வைத்தனர். மாநாட்டின் வரவு செலவு கணக்குகளையும் அவையின் முன் வைத்தனர், புரட்சிப் பெரியார் முழக்கம் வரவு செலவுக் கணக்குகளை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செயலவையில் முன் வைத்தார். 85 தோழர்கள் செயலவையில் பங்கேற்றனர். மதியம் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு தொடங்கிய செயலவை உணவு இடைவேளையைத் தொடர்ந்து மாலை 6 மணி வரை நீடித்தது....

சேலம் மாவட்ட கழகத்திற்குப் பாராட்டு

சேலம் மாவட்ட கழகத்திற்குப் பாராட்டு

திராவிடம் – சனாதனத்தை விளக்கும் 1000 தெருமுனைக் கூட்டங்கள்: சேலத்தில் கூடிய கழக செயலவை முடிவுகள் ஜூன் 1 முதல் 30 வரை தீண்டாமையைப் பின்பற்றும் கிராமங்களின் பட்டியல் தயாரிப்பு சேலத்தில் கடந்த மே 21ஆம் தேதி சேலம் குகை ஜி.பி.கூடத்தில் நடந்த கழகச் செயலவைக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த தீர்மானங்கள். சேலம் மாவட்டக் கழகத்திற்குப் பாராட்டு : திராவிடர் விடுதலைக் கழகம் ஏப்ரல் 29, 30 தேதிகளில் சேலத்தில்  நடத்தி முடித்த மாநில மாநாடு மாபெரும் வெற்றியை ஈட்டி தந்துள்ளது. தேர்தல் அரசியல் சார்பற்ற பெரியார் இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்களும் ஆண்களும் இலட்சிய உறுதியோடு திரண்டு நின்ற காட்சி, கழகத்தை பலராலும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்த மாநாடு. பெரியாரியத்தை அடுத்த தலைமுறை வீரியத்தோடு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை  உறுதியாக்கி யிருப்பதோடு எதிரிகளுக்கு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது. இந்த பெரும்பணியை ஆர்வத்தோடு சுமப்பதற்கு...

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் குமார வயலூர் கோவிலில் அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தின்படி மூன்று அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒருவர் பார்ப்பனர். ஏனைய இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களின் நியமனம் செல்லாது என்றும், இதற்கு முன்பு பணியில் இருந்த பார்ப்பனர்களுக்கே அர்ச்சகர் பணி கொடுக்கப்பட வேண்டும் என்றும், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மார்ச் 9, 2023 மாலை 4 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் தொடக்கமாக கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, காஞ்சிபுரம் ரவிபாரதி உரையாற்றினார். பின், தோழர் நாத்திகன், இரண்யா, ப்ரீத்தி ஆகியோர் ‘தூங்குறியா நடிக்கிறியா ரங்கநாதா?’ பாடல்களைப் பாடினர். அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், பணி...

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் எதிர்வரும் மே 21, 2023 காலை 10 மணியளவில் கழகச் செயலவைக் கூடுகிறது. பொருள் : மாநாடு பற்றிய ஆய்வு, எதிர்காலச் செயல் திட்டங்கள் மற்றும் மாநாடு வரவு செலவுகள் ஒப்படைத்தல். செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்துக் கொள்ள வேண்டுகிறோம். இடம் : ஜி.பி. ஹால், 52ஊ/1, பென்சன் லைன் ரோடு, குகை ஆண்கள் உயர்நிலைப் பள்ளி அருகில், சேலம், கொளத்தூர் மணி, தலைவர் விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர் பெரியார் முழக்கம் 18052023 இதழ்  

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் : கழகத் தலைவர் தலைமையில் நடந்தது

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் : கழகத் தலைவர் தலைமையில் நடந்தது

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 11.05.2023 வியாழன் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மேட்டூர் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் சேலத்தில் நடைபெற்ற இரண்டு நாள் மாநில மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மாநாட்டு வரவு செலவு கணக்குகளை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் ஆகியோர் மாநாடு குறித்தும், மாநாட்டிற்காக உழைத்த தோழர்களைப் பற்றியும், தோழர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் இந்த மாநாடு சிறக்க உதவியாக இருந்தது என்று தமது உரையில் குறிப்பிட்டனர். அதன் பிறகு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர, நகர, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும், மாநாடு குறித்தும் மாநாட்டிற்காக தங்கள் பகுதியில் திரட்டிய நன்கொடை மற்றும் செலவு...

கொடைக்கானலில் ஆளுநருக்குக் கழகம் கருப்புக் கொடி

கொடைக்கானலில் ஆளுநருக்குக் கழகம் கருப்புக் கொடி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானலுக்கு வருகை தந்ததை ஒட்டி அவருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகச் செயல்படுவதையும், சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டன. பின்னர் கழகத் தோழர்கள் மருதமூர்த்தி, பெரியார், மாக்சிம் கார்கி, ராஜா, கபாலி, ஆயுதன், வீரா, ஜீவா, துர்க்கைராஜ், சிவா, முருகன் உள்ளிட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுக்கப்பட்டனர். பெரியார் முழக்கம் 18052023 இதழ்

காங்கேயத்தில் நிர்வாண சாமியார்கள்: நடவடிக்கை எடுக்கக் கழகம் கோரிக்கை

காங்கேயத்தில் நிர்வாண சாமியார்கள்: நடவடிக்கை எடுக்கக் கழகம் கோரிக்கை

காங்கேயம் நகராட்சி அலுவலகத்திற்குள் நிர்வாண சாமி யார்களை அழைத்து வந்து ஆசி வாங்கியது தொடர்பாக ஆணையர், மாநகராட்சி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் இணைந்து கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மே 13, சனிக்கிழமை அன்று திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல்துறை ஆணையாளர் அவர்கள் விசாரணையின் அடிப்படையில் புகார் மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் முகில் ராசு, முகநூல் பொறுப்பாளர் பரிமள ராசன், சங்கீதா, இராமசாமி, மாரிமுத்து, ஆதித்தமிழர் பேரவை அவிநாசி மணி, தமிழ்மாறன், து.தலைவர் கு.ஜானகி, புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழமுதன், வேலு, மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு கார்மேகம் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 18052023 இதழ்

பொதுச் செயலாளர் விடுதலை  இராசேந்திரன் உரை மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளம் நமது தோழர்களின் உழைப்பு – அர்ப்பணிப்பு

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளம் நமது தோழர்களின் உழைப்பு – அர்ப்பணிப்பு

மாநாட்டில் நிறைவாக உறுதிமொழியைப் படிப்பதற்கு முன், கழகப் பொதுச் செயலாளர் நிகழ்த்திய சுருக்கமான உரை: இந்த மாநாட்டைப் பொறுத்த வரை மாநாடு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருக்கிற நமது தோழர்கள் ஆற்றிய பணி மிகப் பெரிய அளவிடற்கரியது; மதிப்புக்குரியது. குறிப்பாக கடைவீதிகளில் சாதாரண மக்களை சந்தித்து கடைவீதி வசூல் என்ற ஒரு இயக்கத்தைத் தொடங்கி இரண்டு மூன்று வாரங்களாக தோழர்கள் இதே பணியை செய்து மாநாட்டிற்கு நிதி திரட்டினார்கள். சுவர் எழுத்து விளம்பரங்களை செய்தனர், மாநாட்டுப் பணிகளில் தங்களை முழுமையாக மூழ்கடித்து, அர்ப்பணித்து  செயல்பட்டனர். இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியடைவதற்கு அடித்தளமிட்டது, கழகச் செயல் வீரர்களின் கடுமையான உழைப்பு ஒன்று மட்டும்தான் என்பதை இந்த மாநாட்டின் வழியாக நாம் சொல்லியாக வேண்டும். சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் அந்த மாவட்ட கழகத் தோழர்கள் கடைவீதி வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள். தொடர்ச்சியாக மக்களை சந்தித்து சாதாரண மக்களிடம்,...

மதவாத ஆட்சி அமைக்க மன்னராட்சி உருவாகும் ஆபத்து பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த உறுதி ஏற்போம்! ஜனநாயக சக்திகளுக்கு சேலம் மாநாடு அறைகூவல்

மதவாத ஆட்சி அமைக்க மன்னராட்சி உருவாகும் ஆபத்து பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த உறுதி ஏற்போம்! ஜனநாயக சக்திகளுக்கு சேலம் மாநாடு அறைகூவல்

இந்து இராஷ்டிரம் அமைக்க மன்னராட்சியை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் ஆபத்துகள் எதிர்நோக்கியுள்ள நிலையில் பா.ஜ.க. அணியை வீழ்த்த மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்று சேலத்தில் கூடிய (ஏப்.29, 30, 2023) திராவிடர் விடுதலைக் கழக மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. இது தமிழ்நாடு; இளம் தலைமுறை எச்சரிக்கை மாநாட்டுத் தீர்மானங்கள்: வேத மத ஆட்சியின் ஆபத்து : 1) தமிழ்நாட்டில்  நீண்டநெடுங்காலமாக பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதை, சமூகநீதி, பெண்ணுரிமைக் கொள்கைகளை சீர்குலைத்து வேத பார்ப்பனிய ஆட்சியை இந்துத்துவம் என்ற பெயரில் கொண்டுவர ஒன்றிய பாஜக ஆட்சி திட்டமிட்டு செயல்பட்டு வரும் நிலையில் அந்த ஆபத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் வேத பார்ப்பனியம் ஆட்சிக்கு வந்தால் நாம் அடிமையாகி படுகுழியில் தள்ளப்படுவோம் என்றும் நமது முன்னோர்கள் பெற்று தந்த தன்மான உணர்வை இழந்து கீழ் மக்கள் ஆகிவிடும் ஆபத்து உருவாகிவிடும் என்பதையும் இம்மாநாடு தமிழர்களுக்குச்...

சனாதனத்துக்கு தமிழ்நாட்டில் சவக்குழி!

சனாதனத்துக்கு தமிழ்நாட்டில் சவக்குழி!

மாநாட்டின் இறுதி நிகழ்வாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சனாதன எதிர்ப்பு உறுதி மொழியை வாசிக்க, தோழர்கள் உறுதி எடுத்தனர். உறுதி மொழி விவரம்: இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாட்டில் அந்த கொள்கை உணர்வோடும் இலட்சிய துடிப்போடும் ஆயிரக் கணக்கில் கூடியிருக்கிற இளைஞர் களாகிய நாங்கள் கீழ்கண்ட உறுதியினை ஏற்கிறோம். ஜாதியற்ற தமிழர்களாக வாழ்ந்த நமது சமூகத்தை ஆரியம் ஊடுருவி வர்ணாசிரம சனாதனத்தால் வீழ்த்தியது. 1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம், பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்து உருவான திராவிடர் கழகம் தொடர்ந்து வந்த திராவிட ஆட்சிகள் ஆகியவற்றின் உழைப்பால் திராவிடர் என்ற பெருமையோடு நாம் தலை நிமிர்ந்தோம். பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுத்து நம்மை இழிமக்களாக்கிய ஆரிய சனாதனத்திற்கு எதிரானது எங்கள் திராவிடம். ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான சமத்துவம் சம நீதியே எங்கள் திராவிடம். ஆனால் சனாதன ஒன்றிய ஆட்சி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சமத்துவத்தை...

சுயமரியாதை எங்கள் அடையாளம்  சனாதனம் எமக்கு அவமானம்

சுயமரியாதை எங்கள் அடையாளம் சனாதனம் எமக்கு அவமானம்

திராவிடர் விடுதலை கழகம் நடத்திய சனாதனத்துக்கு எச்சரிக்கை விடும் இளைஞர் மாநாட்டிலிருந்து (ஏப்ரல் 29, 30 – 2023) சில செய்தித் துளிகள் : மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார், தேர்தல் களத்தில் தனது வெற்றிக்கு வாக்காளர்களிடம் வாக்குகளைச் சேகரித்த கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு நன்றி கூறியதோடு தன்னுடைய அரசியல் கட்சி திமுக என்றாலும் சமுதாய அமைப்பு – திராவிடர் விடுதலைக் கழகம் தான் என்று பெருமையுடன் குறிப்பிட்டார். சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பயிற்சி முகாம்களில் ‘உயிர் தோற்றம்’ குறித்து தாம் பேசியதையும் தனது தேர்தல் வெற்றிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கடுமையாக உழைத்ததை யும் நினைவு கூர்ந்தார். மேடையில் அமைக்கப்பட்ட பதாகையில் ‘சுயமரியாதை எங்கள் அடையாளம்; சனாதனம் எமக்கு அவமானம்’ என்று ஒரு பக்கத்திலும். ‘பன்முகத் தன்மையை சிதைக்காதே; ஒற்றைப்...

சனாதன சக்திகளுக்கு எச்சரிக்கை வரலாறு படைத்தது சேலம் மாநாடு  ஆர்ப்பரித்து அணிவகுத்த கருஞ்சட்டைகள்  வைக்கம் போராட்டம் முடியவில்லை

சனாதன சக்திகளுக்கு எச்சரிக்கை வரலாறு படைத்தது சேலம் மாநாடு ஆர்ப்பரித்து அணிவகுத்த கருஞ்சட்டைகள் வைக்கம் போராட்டம் முடியவில்லை

வைக்கம் நூற்றாண்டையொட்டி வைக்கம் போராட்டம் முடியவில்லை எனும் தலைப்பில் ஜாதி – தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்தவெளி மாநாட்டில் முன்மொழிந்த தீர்மானம் வைக்கம் போராட்டம் முடிந்து 100 ஆண்டுகள்உருண்டோடிவிட்டன. வைக்கத்தில் மகாதேவன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தீண்டப்படாத மக்கள் நடமாடும் உரிமைக்காகத் தொடங்கிய போராட்டம் ஒரு வருடம் 7 மாதங்கள் நீடித்தது. பிற்காலத்தில் கோயில் நுழைவு உரிமைக்கும் வழிவகுத்த இந்தப் போராட்டத்தை பெரியார், டி.கே. மாதவன் உள்ளிட்ட தலைவர்கள் வழி நடத்தினார்கள்.  போராட்டத்தில் பங்கேற்றதற்காக கிரிமினல் சட்டப் பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டு இரண்டு முறை சிறை ஏகி கடுங்காவல் தண்டனைக்கு உள்ளாகிய ஒரே தலைவர் பெரியார்தான். வைக்கம் வீதிகளில் நடமாடும் உரிமை கிடைத்தாலும் நாடு முழுதும் வைக்கங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வளர்ச்சிப் பாதையில் வழிகாட்டும் தமிழ்நாட்டில் கிராமங்களில் ஜாதி தீண்டாமைக் கொடுமைகள் நீடிக்கவே செய்கின்றன. ஜாதிய...

காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்களை தோழர்கள் சந்தித்து நிதி திரட்டினர்

காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்களை தோழர்கள் சந்தித்து நிதி திரட்டினர்

சேலம் கழக மாநாட்டை ஒட்டி நன்கொடை திரட்டும் பணி ஏப்ரல் 17, அந்தியூரில் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் ஈரோடு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி முன்னிலையில் நடைபெற்றது. வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மாநாட்டு நிதியை வழங்கினார்கள். அந்தியூரில் ரூ.13,030 நன்கொடை திரட்டப்பட்டது. பங்கேற்றோர் : இராம.இளங்கோவன், நாத்திகஜோதி, காவை ஈசுவரன், சித்துசாமி, இளவரசன், இளம்பிள்ளை தங்கதுரை, தங்கமாபுரிபட்டினம் ராமசந்திரன், நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன், வனவாசி உமாசங்கர், நந்தினி , கே.ஆர்.தோப்பூர். அஜித்குமார் ஆகியோர். சேலம் மேற்கு : தனிநபர் வசூல் பணி சுசீந்திரன், சாரா தலைமையில் ஏப்ரல் 17 ஆம் தேதி சங்ககிரியில் நடைபெற்றது. சங்ககிரி பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர், காவல்துறை உயர் அதிகாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் மாநாட்டு நிதி வழங்கினார்கள். ரூ. 25,300 வசூலானது. இளைஞர்கள் அதிகளவில் பெரியாரிய இயக்கத்தில் இருப்பதை பார்த்து அரசு அதிகாரிகள் பாராட்டி...

பேரணி ; ஓர் அறிவிப்பு

பேரணி ; ஓர் அறிவிப்பு

எச்சரிக்கைப் பேரணியில் சிறப்பாக – மிடுக்காக அணிவகுத்து வரும் மாவட்டத்திற்கு பரிசுகள் வழங்கி மாநாட்டில் கவுரவிக்கப்படும். தோழர்களே! பரிசுகளைத் தட்டிச் செல்ல தயாராகுவீர்! எந்த மாவட்டம் முந்துகிறது என்று பார்க்கலாம். – திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 27042023 இதழ்

இளைய தலைமுறையின் எச்சரிக்கை மணி – சேலத்தில் ஒலிக்கப் போகிறது

இளைய தலைமுறையின் எச்சரிக்கை மணி – சேலத்தில் ஒலிக்கப் போகிறது

திராவிட இயக்க வரலாற்றுப் பக்கங்களில் சேலம் பல முத்திரைகளைப் பதித்து நிற்கிறது. 1944இல் நீதிக் கட்சி – திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்றது சேலத்தில் தான். 1971இல் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், இந்தியா முழுதும் பேசும் பொருளாகியது. இராமன் உள்ளிட்ட வேத மதக் கடவுள்களை ஊர்வலத்தில் அவமதித்ததாகக் குற்றச்சாட்டு; பெரியார் அஞ்சவில்லை. ஆம்; அப்படித்தான் செய்தேன்; சூத்திரனாக இருக்க மாட்டேன் என்ற உணர்ச்சியுள்ள ஒவ்வொருவரும் இதைத் தான் செய்வார்கள் என்றார் பெரியார். அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் இப்பிரச்சினையை முன்வைத்து காங்கிரசாரும் பார்ப்பனர்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தீவிரமாக செயல்பட்டனர். ஆனால் 184 இடங்களில் தி.மு.க. வெற்றி வாகை சூடியது. “நீங்கள் உலகப் புகழ் பெற்று விட்டீர்கள்; என் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியது” என்று பெரியார், கலைஞருக்கு தந்தி மூலம் பாராட்டினார். தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடு; வேத மரபு எதிர்ப்பு மாநாடுகளை திராவிடர் விடுதலைக்...

சென்னையில் மாநாடு விளக்கக் கூட்டம்

சென்னையில் மாநாடு விளக்கக் கூட்டம்

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும்”இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு!” விளக்கக் கூட்டம் ஏப்ரல் 13, மாலை 6 மணியளவில் அயனாவரம், ஜாயின்ட் ஆபிஸ் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேத்துப்பட்டு இராசேந்திரன் தலைமை வகித்தார். வட சென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்டத் தலைவர் வேழவேந்தன் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்தார். நாத்திகனின் மந்திரமா? தந்திரமா ? நிகழ்ச்சி கூட்டத்தின் தொடக்கமாக நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன் மாநாட்டின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து, சென்னை கழகச் செயலாளர் இரா.உமாபதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். திமுக பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசன் நிறைவுரையாற்றினார். பெரியார் முழக்கம் 20042023 இதழ்

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

வேலூர்: புரட்சியாளர் அம்பேத்கர் 132ஆவது பிறந்தநாள் விழா வேலூர் மாவட்டக் கழக சார்பில் மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் குடியேற்றம், கொண்டசமுத்திரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர்  விடுதலைக் கழகம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இணைந்து மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு அனைவரும் ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். நண்பகல் 12 மணிக்கு வேலூர் மாநகரில் விசிக ஒருங்கிணைத்த “ஜனநாயகம் காப்போம்! சனாதனத்தை வேரறுப்போம்!”பேரணியில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 2 மணிக்கு ராமாலையில் திராவிட் மற்றும் பகுதித் தோழர்கள் ஒருங்கிணைப்பில் அம்பேத்கருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு  வேலூர் மாவட்டம் புட்டவாரபள்ளி கிராமத்தில் அமல்ராஜ், ஒருங்கிணைப்பில் பொதுமக்களோடு இணைந்து அம்பேத்கர்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.   இரவு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது....

ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் 1 லட்சம் மாநாட்டு நிதி!

ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் 1 லட்சம் மாநாட்டு நிதி!

முதல் தவணையாக கழகத் தலைவரிடம் வழங்கினார்கள் ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக வருகின்ற  ஏப்ரல் 29, 30 சேலத்தில் நடைபெறும் இது தமிழ்நாடு! இளைய தலைமுறை யின் எச்சரிக்கை மாநாட்டிற்காக கழகத் தோழர்கள் ஈரோடு வடக்கு மாவட்டத் திற்கு உட்பட்ட கோபி, கொளப்பலூர், காசிபாளையம், அளுக்குளி, அந்தியூர், குருவரெட்டியூர், பவானி ஆகிய பகுதிகளில் கழக ஆதராவாளர்களிடம் துண்டறிக்கை அளித்தல் மற்றும் நன்கொடை திரட்டும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டனர்.  மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் மாவட்ட தலைவர் நாத்திகசோதி, மாவட்ட செயலாளர் எலத்தூர் செல்வக்குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இரமேசு, அழகிரி, கிருஷ்ணமூர்த்தி, இராவணன், அருளானந்தம், வேணுகோபால், வீரகார்த்திக், சுந்தரம், வினோத், வேலுச்சாமி, கருப்பணன், சுப்பிரமணியம், ரகுநாதன், மூர்த்தி, நிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு நன்கொடை திரட்டும் பணியில் இணைந்து செயல்பட்டனர். அவ்வாறு நன்கொடையாக பெறப்பட்ட மாநாட்டு நிதியை முதல் தவணையாக ரூ. 1,00,000 (ஒரு லட்சம்...

ட இது தமிழ் நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு  ட கருத்துச் செறிவு அரங்கங்கள்; கலை நிகழ்ச்சிகள் அடர்த்தியான நிகழ்வுகளுடன் சேலம் மாநாடு

ட இது தமிழ் நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு ட கருத்துச் செறிவு அரங்கங்கள்; கலை நிகழ்ச்சிகள் அடர்த்தியான நிகழ்வுகளுடன் சேலம் மாநாடு

ஏப்ரல் 29,30 – சேலம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் 2 நாள் மாநில மாநாடு. 29.04.2023 – பெரியார் அரங்கம் : காலை 9.00 மணி – கழகக் கொடியேற்றம் – நிர்மல்குமார் மாநகர அமைப்பாளர், கோவை 9.30 – புதுவை “விடுதலைக் குரல்” கலைக்குழு இசை நிகழ்ச்சி. தொடக்க உரை : DNV செந்தில்குமார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க. 10.30  – கருத்தரங்கம் – கருப்பு சிவப்பு நீலம் இணையும் புள்ளிகள் தலைமை : இராம இளங்கோவன் (வெளியீட்டு செயலாளர்) மாநில உரிமைகளில் : மருத்துவர் எழிலன் (ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர்) சனாதன எதிர்ப்பில் : பேராசிரியர் ஜெயராமன் (தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்) கார்ப்பரேட் சுரண்டலில் : மதுக்கூர் இராமலிங்கம் (தீக்கதிர் ஆசிரியர்) பெண்ணியலில் : முனைவர் சுந்தரவள்ளி (த.மு.எ.க.ச.) இட ஒதுக்கீட்டில் : கு.அன்பு தனசேகர் (கழக தலைமைக் குழு உறுப்பினர் போலி அறிவியல்...

கழகத் தோழர் திலீபன் மீது வன்முறைக் கும்பல் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கழகத் தோழர் திலீபன் மீது வன்முறைக் கும்பல் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர்திலீபன் (பழனி) மீது கொடும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலூர் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் பாணாவரம் காவல்நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம், மக்கள் தமிழகம் கட்சி, ஊர் பொது மக்கள் தோழைமை இயக்கத் தோழர்கள் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டனர். நிகழ்வில் தலைமை குழு உறுப்பினர் அய்யனார், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, மக்கள் தமிழகம் கட்சி விஸ்வநாதன், மக்கள் குடியரசு இயக்கம் ஜான் மண்டேலா, திவிக பேரணாம்பட்டு நகர செயலாளர் தோழர்கள் ச.பார்த்திபன், மற்றும் மகிழவன், இரண்யா, அன்பழகன், ராஜேஷ், மணி, அருண், சூரியா, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20042023 இதழ்    

மாநாட்டு நன்கொடையை அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம்

மாநாட்டு நன்கொடையை அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம்

வங்கிக் கணக்கு PURATCHI PERIYAR MUZHAKAM Karur Vysya Bank, Adyar Branch Current Acct No.: 1257115000002041 IFSC : KVBL0001257 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி, அடையாறு கிளை ‘கரண்ட்’ அக்கவுண்ட் எண் :: 1257115000002041 IFSC : KVBL0001257 கூகுள் பே எண் : 9444115133   பெரியார் முழக்கம் 20042023 இதழ்

ட அமைச்சர் உதயநிதி – அய். பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்களிடம் நேரில் மாநாட்டு அழைப்பிதழ்   ட நன்கொடை திரட்டும் பணியில் தோழர்கள் தீவிரம்  பேரெழுச்சியுடன் சேலம் மாநாட்டுப் பணிகள்

ட அமைச்சர் உதயநிதி – அய். பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்களிடம் நேரில் மாநாட்டு அழைப்பிதழ் ட நன்கொடை திரட்டும் பணியில் தோழர்கள் தீவிரம் பேரெழுச்சியுடன் சேலம் மாநாட்டுப் பணிகள்

சென்னை : சேலத்தில் வருகிற 29,30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு! அழைப்பிதழை, மாநாட்டில் சிறப்புரையாற்ற உள்ள மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து வழங்கினார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மருதையன், தபெதிக பிரச்சார செயலாளர் சீனி.விடுதலை அரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர், கருஞ்சட்டைப் பதிப்பக இயக்குனர் பெல் ராஜன், யூடியூபர்கள் மைனர் வீரமணி, மகிழ்நன் உள்ளிட்ட தோழர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகத் தோழர்கள் வழங்கினார்கள். மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலுவை சந்தித்து மாநாட்டு...

நங்கவள்ளி ஒன்றியத்தில் பகுத்தறிவுப் பரப்புரை

நங்கவள்ளி ஒன்றியத்தில் பகுத்தறிவுப் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்டம்,நங்கவள்ளி ஒன்றியத்தின் சார்பில் 22.02.2023 புதன்கிழமை கிராமப்புற பகுத்தறிவு பிரச்சார தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன முதல் தெருமுனை கூட்டம் பக்க நாடு சந்தை அருகில் மாலை 5.00 மணிக்கு நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் புதியவன், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, கழக தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள். இப்பகுதியில் பெருமளவில் மக்கள் ஆர்வத்துடன் பிரச்சாரத்தை உற்று கவனித்ததோடு உண்டியல் வசூல் 840 ரூபாய் வழங்கி ஆதரவளித்தனர். முடிவில் சிவக்குமார் நன்றியுரையாற்றினார். இரண்டாவது நிகழ்வு ஆடையூர் குடியிருப்பு பகுதியில் 7.00 மணி அளவில் நடைபெற்றது. மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த கிராமப்புற பகுத்தறிவு பிரச்சார தெருமுனை கூட்டத்திற்கு நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் புதியவன் மற்றும் வழக்கறிஞர் வித்யாபதி...

மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செய லாளர் மா.பா மணியமுதன் – மணிமேகலை ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழா 26.02.23 ஞாயிறு அன்று மதுரை மேலூர் ரஹ்மா திருமண மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் துவங்கி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இணையேற்பு விழாவிற்கு ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். விழாவின் துவக்க நிகழ்வாக வானவில் இன உணர்வுப் பாடலைப் பாடினர். மணமக்களை வாழ்த்தி அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பசும்பொன் பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, கனியமுதன், தமிழ்மண் தன்னுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் பேசினர். தோழர்களின் வாழ்த்துரைகளுக்கு பின்பு கழகத் தலைவர்...

களப்பணி: செயல்வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டு

களப்பணி: செயல்வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டு

கழகம் நடத்தும் ஏப்.29, 30இல் “இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டிற்கான களப் பணியில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் சேலம் மாவட்ட கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டுதல்களை தெரிவித்து பயனாடை அணிவித்தார். கழகத் தலைவரின் ஆலோசனைப்படி சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மாநாட்டிற்கான ஆதரவு திரட்டுதல் மற்றும் நிதி வசூலுக்காக நங்கவள்ளி அன்பு, இராஜேந்திரன் தலைமையில் சேலம் மேற்கு குழுவும், நங்கவள்ளி கிருஷ்ணன், இளம்பிள்ளை தங்கதுரை தலைமையில் சேலம் கிழக்கு குழுவும் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் துண்டறிக்கை வழங்குவது மற்றும் நிதிதிரட்டுவது ஆகியவற்றில் தோழர்கள்  தொய்வின்றி கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மிகச் சிறப்பாக களப்பணியாற்றி வந்ததை நாள்தோறும் கவனித்து வந்த கழகத் தலைவர், தோழர்களைப் பாராட்டும் விதமாக நிகழ்வு ஒன்றை மாவட்டக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யக் கேட்டுக்கொண்டார் அதன்படி மேட்டூர் கழக நகரத் தலைவர் செ. மார்ட்டின் உணவு ஏற்பாட்டுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு கழகத் தோழர்கள்...

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

ஏப். 29, 30 தேதிகளில் கழக மாநாட்டுப் பணிகளில் கழகச் செயல் வீரர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளனர். கோவை : கோவை மாவட்டக் கழகத்தினர் ஏப்ரல் 8-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வ.உ.சி மைதானத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டலக்குழுத் தலைவர் கதிர்வேல், மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் நா.மாலதி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.ஆ.ரவி, வடவள்ளி சண்முகசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார்கள். கலந்து கொண்டோர்: தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், கிருட்டிணன், வெங்கட், மாதவன் சங்கர், துளசி, நிலா. ஏப்ரல் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது. பொள்ளாச்சி : கழக மாநாட்டு விளக்க தெருமுனைக்...

சென்னை மாவட்டக் கழகத்துக்கு திருவல்லிக்கேணி பகுதி தோழர்கள் ‘ஸ்கார்பியோ’ கார் பரிசளிப்பு

சென்னை மாவட்டக் கழகத்துக்கு திருவல்லிக்கேணி பகுதி தோழர்கள் ‘ஸ்கார்பியோ’ கார் பரிசளிப்பு

சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி கழகத் தோழர்கள் மாவட்டக் கழகப் பயன்பாட்டுக்கு ஸ்கார்பியோ கார் ஒன்றை வாங்கி (2009ஆம் ஆண்டு மாடல்) கழகத்துக்கு அளித்துள்ளனர். சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதியிடம் அவரது பிறந்த நாளான பிப். 17 அன்று இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், உமாபதியிடம் வழங்கினார். கழகப் பணிகளுக்கு இந்த கார் பயன்படும். தனது பிறந்த நாளையொட்டி தோழர்கள் வழங்கிய ரூ.2500/- நன்கொடையை கழக ஏட்டுக்கு பொதுச் செயலாளரிடம் வழங்கினார் இரா. உமாபதி. பெரியார் முழக்கம் 02032023 இதழ்  

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் இரண்டு நாள் மாநாடு தோழர்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. ‘இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு’ என்ற தலைப்பு தோழர்களை ஈர்த்துள்ளது. சேலத்தில் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் கூடி மாநாட்டுப் பணிகளை ஆலோசித்தது. 20.02.2023 திங்கள் மாலை 4.00 மணியளவில் கருப்பூர் சக்திவேல் இல்லத்தில் எதிர்வரும் ஏப்ரல் 29, 30 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் திராhவிடர் விடுதலைக் கழக மாநில மாநாடு குறித்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. கலந்துரை யாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களும், பொறுப்பாளர் களும் மாநாடு குறித்தும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் மாநாட்டினை குறித்து பொதுமக்களிடம் சுவரெழுத்து மற்றும் துண்டறிக்கைகள் வாயிலாக...

கடைகடையாக வசூல் பணி : மக்களைச் சந்தித்து மாநாட்டுத் துண்டறிக்கைகள் களப்பணியில் தோழர்கள் உற்சாகம்

கடைகடையாக வசூல் பணி : மக்களைச் சந்தித்து மாநாட்டுத் துண்டறிக்கைகள் களப்பணியில் தோழர்கள் உற்சாகம்

ஏப். 29, 30 சேலம் மாநாட்டுப் பணிகளில் தோழர்கள் ஒவ்வொரு நாளும் கடை கடையாகச் சென்று வசூல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை : ஏப்ரல் 29.30 தேதிகளில் சேலத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டை ஒட்டி சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக மார்ச் 29, புதன்கிழமை அன்று ஆயிரம் விளக்கு பகுதியில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடத்தில் துண்டறிக்கை வழங்கி பரப்புரை மேற்கொண்டனர். இரண்டாவது நாளாக 30.03.2023 அன்று மாலை 7 மணியளவில், சேத்துப்பட்டு பகுதி கடைவீதிகளில் நடைபெற்றது. திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் இராஜேஷ் தலைமையில், வீரா, குமார், லட்சுமணன், மாணிக்கம், விஜயகாந்த், யாழினி, அருண்குமார், அருண் ஆகியோர் கலந்து கொண்டு துண்டறிக்கை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மயிலைப் பகுதி சார்பாக 30.03.2023 அன்று மாலை 7 மணியளவில் தேனாம்பேட்டை திருவள்ளூர் சாலையில் இராவணன் தலைமையில் பிரவின், கார்த்திக், உதயா, உமாபதி, சிவா, மனோகர் உள்ளிட்ட தோழர்கள் கடைவீதி வசூலை மேற்கொண்டனர். மூன்றாவது நாளாக...

மாநாட்டு மண்டபத்தை  தலைவர் பார்வையிட்டார்

மாநாட்டு மண்டபத்தை தலைவர் பார்வையிட்டார்

சேலம் மாநாடு நடக்கும் ‘சந்திர மகால்’ மண்டபத்தை கழகத் தலைவர், மாவட்டக் கழகத் தோழர்களுடன் சென்று பார்வையிட்டார். (பிப்.17, 2023) பெரியார் முழக்கம் 23022023 இதழ்  

சிங்காரவேலர் சிலைக்கு  கழக சார்பில் மாலை

சிங்காரவேலர் சிலைக்கு கழக சார்பில் மாலை

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் 164ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிங்காரவேலர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட கழகச் செயலாளர் இரா. உமாபதி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, அருண், கிஷோர், மயிலைப் பகுதி கழகத் தலைவர் இராவணன், மனோகர், மக்கள் குடியரசு இயக்கம் ஜான் மண்டேலா, மே 17 இயக்கம் முகிலன், திராவிடர் கழகம் மாரிமுத்து உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 23022023 இதழ்

1929 – சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசியலும் கோவையில் கழகம் நடத்திய எழுச்சிக் கருத்தரங்கு

1929 – சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசியலும் கோவையில் கழகம் நடத்திய எழுச்சிக் கருத்தரங்கு

கோவை மாநகரக் கழகம் ஏற்பாடு செய்த “1929 செங்கல் பட்டு முதல் சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசிய லும்” கருத்தரங்கம் கோவை அண்ணாமலை அரங்கில் பிப்ரவரி 18, மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார், கருத்தரங்கின் முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை கழகத் தோழர்கள் கிருஷ்ணன், புரட்சித் தமிழன், யாழினி, தமிழினி, சுருதி, அம்பிகா, இசைமதி ஆகியோர் பாடினார்கள். சிவராசு வரவேற் புரையாற்றினார், அதைத் தொடர்ந்து மாநகரத் தோழர் வெங்கட் , மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் யாழ். வெள்ளிங்கிரி, கழகப் பொரு ளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப் பாளர் சிவகாமி ஆகியோர் உரையாற்றினர் . தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி “பெண்களை கைப்பிடித்து அழைத்து வந்த தலைவர் பெரியார்” என்று தனது உரையில் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து சிறப்புரையாற்ற வந்த...

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை ஆஷ்துரையை வாஞ்சி சுட்டது ஏன்?

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை ஆஷ்துரையை வாஞ்சி சுட்டது ஏன்?

பிப்.6, 2023 அன்று மயிலைப் பகுதியில் கழகம் நடத்திய காந்தி படுகொலைக் கண்டன நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) கல்புர்கி, கவுரி லங்கேசு இவர்களைக் கொன்ற துப்பாக்கியில் ஒரே ஒரு துப்பாக்கி. அது ஒரே வகை தோட்டா என்று இப்போது அறிக்கையிலே வெளி வந்திருக்கிறது. அவர்களைப் பிடித்து விசாரித்தால் அனைவரும் சொல்கிறார்கள் அமைப்பு ஒண்ணு இருக்குதுன்றான் என்னடா அமைப்பு? அப்படீன்னு கேட்டா, சனாதன, சன்ஸ்தா என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று. அவர்கள் சாஸ்திர தர்மம் என்று புத்தகம் எழுதியிருக்கிறார்கள். அந்த புத்தகத்தைப் படித்ததற்குப் பிறகு படித்தவன் யாரெல்லாம் இந்த சனாதன் தர்மத்தை எதிர்க்கிறார்களோ அவர்களை தீர்த்துக் கட்டுவதே அவர்களின் நோக்கமாக இருக்கும். ஏதோ சுதந்திரத்திற்குப் பின்பு தான் இந்த கொலை நடந்திருக்கிறது என்று நீங்கள் தயவு செய்து நினைக்க வேண்டும். சனாதனத்தைக் காப்பாற்றுவதற்காக கொலை. இந்தியர்களை மட்டுமல்ல பிரிட்டிஷார் ...

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது “இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு”

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது “இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு”

  திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு பிப்.15, 2023 பகல் 11 மணியளவில் சென்னை தலைமை அலுவலகத்தில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், ஆசிரியர் சிவகாமி, சென்னை உமாபதி, விழுப்புரம் அய்யனார், பரிமளராசன், காவலாண்டியூர் ஈசுவரன், மயிலாடுதுறை இளையராசா ஆகியோர் பங்கேற்றனர். ஏப்ரல் 29, 30 தேதிகளில் சேலத்தில் கழகத்தின் மாநில மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு அது குறித்து நிகழ்ச்சிகள், தலைப்புகள், மாநாட்டு நோக்கங்கள், மாநாட்டுக்கான பேச்சாளர்கள், மாநாட்டுக்கு நன்கொடை திரட்டும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. “இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு” என்று மாநாட்டின் தலைப்பு முடிவு செய்யப்பட்டது....

பராசக்தி திரைப்படத்தில் சமூக நீதிக் கருத்துகள்: கொளத்தூர் மணி உரை

பராசக்தி திரைப்படத்தில் சமூக நீதிக் கருத்துகள்: கொளத்தூர் மணி உரை

ஊடகம் மற்றும் சமூக அறிவியல் மையம், மூங்கில்பாடி,சேலம் மற்றும் சேலம்  ஏ.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை நடத்திய தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு நடந்தது. “திரைப் படங்களில் திராவிடக் கதையாடல்கள்”: “பராசக்தி திரைப்படம்” – ‘வாசிப்பு மற்றும் மீள் வாசிப்பு’ எனும் தலைப்பில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில் 10.02.2023 வெள்ளி காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று “பராசக்தி திரைப்படத்தில் சமூக நீதிக் கருத்துகள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 16022023 இதழ்

சேத்துப்பட்டு இராஜேந்திரன்-அலமேலு மணிவிழா

சேத்துப்பட்டு இராஜேந்திரன்-அலமேலு மணிவிழா

பெரியாரியலாளர் சேத்துப் பட்டு க. இராஜேந்திரன் – அலமேலு மணிவிழா பிப்.22ஆம் தேதி அயனாவரம் ‘ஸ்ரீசக்தி பார்ட்டி ஹாலில்’ ஆனூர் ஜெகதீசன் (தலைவர் த.பெ.தி.க.) தலைமையில் நிகழவிருக்கிறது. தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங் குடி ஆணைய துணைத் தலைவர் புனித பாண்டியன், உறுப்பினர் வழக்கறிஞர் குமாரதேவன், அன்பு தனசேகர் (தி.வி.க.) சிறப்புரையாற்றுகிறார்கள். மணிவிழா மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதிக்கு ரூ.2000/- வழங்கியுள்ளார்கள். பெரியார் முழக்கம் 16022023 இதழ்

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை காந்தியார் கொலை: பெரியார் முன்கூட்டியே எச்சரித்தார்

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை காந்தியார் கொலை: பெரியார் முன்கூட்டியே எச்சரித்தார்

¨        காந்தியார் கொலை வரலாறு மறைக்கப் படுகிறது. ¨        காந்தியாரிடம் பெரியார் இயக்கத்துக்கு முரண் உண்டு. இரட்டை வாக்குரிமை ஓர் உதாரணம். ¨        அம்பேத்கர் ஒன்றிய அரசுப் பதவிகளில் ஆதிராவிடர் இடஒதுக்கீட்டை 1943லேயே பெற்றுத் தந்தவர் பிப்.6, 2023 அன்று மயிலைப் பகுதியில் கழகம் நடத்திய காந்தி படுகொலைக் கண்டன நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்த்திய உரை. இப்போது எதற்காக திராவிடர் விடுதலைக் கழகம், காந்தியார் படுகொலை நாள் கூட்டத்தை நடத்துகிறது என்று சொன்னால், இப்போது ஆண்டு கொண்டிருக்கிற ஒன்றிய அரசாங்கம், பல்வேறு வரலாற்றுத் திரிபுவாதங்களை செய்து கொண்டிருக்கிறது. குஜராத்தினுடைய பாடப் புத்தகங்களிலே மத்திய அரசினுடைய பாடப் புத்தகங்களிலே 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி காந்தியடிகள் இறந்து போனார் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஏதோ நோய் வாய்ப்பட்டு இறந்தது மாதிரியோ அவர் ஆஸ்பத்திரியில் இருந்து பிழைக்க மாட்டார் என்று சொல்லி அவர்...

மதுரையில் காதலர் தினம் ‘இந்து முன்னணி’க்கு கழகம் பதிலடி

மதுரையில் காதலர் தினம் ‘இந்து முன்னணி’க்கு கழகம் பதிலடி

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ராஜாஜி பூங்காவில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செய்தியறிந்து, அதே பூங்காவில் மதுரை திவிக சார்பில் காதலர் தின வாழ்த்து தெரிவித்து காதலர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.. மேலும் “ஜாதி மறுத்து காதல் செய்வோம் – ஜாதி மறுத்து இணையேற்போம்” – ஜாதி மறுப்பு இணையர்களின் குழந்தைகளுக்கு “ஜாதியற்றோர் இட ஒதுக்கீடு வழங்கிடுக” என்று தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயலாளர் மா.பா. மணிஅமுதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, புலிப்பட்டி கருப்பையா மற்றும் விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவைத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 16022023 இதழ்

ஆனந்தி – அஸ்வின் குமார் இணையேற்பு விழா

ஆனந்தி – அஸ்வின் குமார் இணையேற்பு விழா

சென்னை மயிலைப் பகுதி திராவிடர் விடுதலை கழகத் தோழர் அஸ்வின் குமார் – ஆனந்தி ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழா 03.02.2023 வெள்ளி அன்று சென்னை தேனாம்பேட்டை, டாக்டர் கிரியப்பா சாலை, சமூக நலக்கூடத்தில் மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.  விழாவிற்கு தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி முன்னிலை வகித்தார். இணையேற்பு விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வை திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.  ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.  கழக ஏட்டுக்கு ரூ.5,000/- நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09022023 இதழ்  

நன்கொடை

நன்கொடை

குமாரபாளையம் தமிழன் இன்ஜினியரிங் லேத் தோழர் மாது ராஜி சரசுவின் மகன் திலகன்-சந்தியா தம்பதியருக்கு 29.1.2023 பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்வான தருணத்தில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு வளர்ச்சி நிதியாக நன்கொடை ரூ.1000/- காவலாண்டி ஊர் சார்பாக வழங்கி உள்ளார். பெரியார் முழக்கம் 09022023 இதழ்

திருப்பூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 26.1.23 அன்று திருப்பூர் மங்கலம் சாலை கே ஆர் சி மஹாலில் மாலை 5.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.  ஆலோசனைக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி அறிமுக உரையாற்றினார். கழக நிர்வாகிகள் உடுமலை மற்றும் பல்லடம் பொறுப்பாளர்கள், மாநகர பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா வசூல் மற்றும் பரப்புரைக்கான பல்வேறு ஆலோசனைகளை பேசினார்கள். தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் மகிழவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, இணையதளப் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத் தலைவர் முகில் ராசு, தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், கழகப் பொருளாளர் துரைசாமி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். நிறைவாக பேசிய கழகத் தலைவர், கழகம் கொள்ளவிருக்கிற அடுத்தகட்ட செயல்பாடுகள்,...

ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு

ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றம் இணைந்து நடத்திய “பெண்கள் சந்திப்பு” நிகழ்வு 5.2.2023 ஞாயிறு அன்று ஈரோடு பிரியாணிபாளையம் உணவக அரங்கில் நடைபெற்றது. ஈரோடு மணிமேகலை நிகழ்விற்கு தலைமையேற்று சுவையான கவிதை நடையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திருப்பூர் கார்த்திகா வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடக்கவுரையாற்றினார். பெரியார் தனது இயக்கத்தில் பெண்களுக்கு அளித்த முக்கியத்துவம் பற்றியும் பெரியார் நடத்திய மாநாடுகளில் தொடக்க உரையாகவோ கொடியேற்றி தொடங்கி வைப்பவராகவோ கட்டாயம் ஒரு பெண் தோழர் இருக்கும் படி பார்த்துக் கொண்டார் என்பதையும் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும் இயக்கங்கள் தங்களது பணியை சிறப்பாக செய்ய முடியும் என்பதை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து ‘அம்பேத்கரும் பெரியாரும்’ என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, ‘மூடநம்பிக்கைகளை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, ‘பெண் கல்வியும் தமிழ்நாடும்’ என்ற தலைப்பில் கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர்...

உடல் மற்றும் கண்கள் கொடை

உடல் மற்றும் கண்கள் கொடை

திராவிடர் விடுதலைக் கழக குமாரபாளையம் நகரச் செயலாளர் செ .வடிவேலு தந்தையார் செல்லமுத்து உடல் நலக்குறைவால் 28.11.2022 மதியம் அன்று சுமார் 2.45 மணியளவில் இயற்கை எய்தினார். அவர் இறந்த ஆறுமணி நேரத்திற்குள் அவரின் இரண்டு கண்களும் பார்வை இழந்தவர்களுக்கு பார்வை கிடைக்கும் வகையில் ஈரோடு அரசன் கண் மருத்துமனைக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டது. அவரின் உடல் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவும் விதமாக கொடையாக நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் பொறுப்பாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது அங்கிருந்து மருத்துவப் பேராசிரியர்கள் மிகுந்த மகிழ்வுடன் பெற்று கொண்டது மட்டுமில்லாமல் இது தான் இந்த மருத்துவக் கல்லூரிக்குக் கிடைத்த முதல் உடற்கொடை ஆகும். தொடர்ச்சியாக பெரியார் இயக்கத்தை சார்ந்தவர்கள் இப்பணியைச் செய்வது பாராட்டத்தக்கது என்று பாராட்டினார். தோழர் வடிவேல் மட்டும்தான் அவருடைய குடும்பத்தில் பெரியாரிய கொள்கையை ஏற்றுக் கொண்டவர். இருப்பினும் வடிவேல் மற்றும் கழகத் தோழர்களின் வேண்டு கோளையேற்று அவருடைய...

அனைத்து இந்துக்களையும் சேலம் திருமலைகிரி கோயில் நுழைவுக்கு அனுமதிக்கக் கோரி சேலத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

அனைத்து இந்துக்களையும் சேலம் திருமலைகிரி கோயில் நுழைவுக்கு அனுமதிக்கக் கோரி சேலத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 02.02.2023 வியாழன் காலை 11.00 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் திருமலை கிரி கோவிலில் அனைத்து தரப்பு இந்து மக்களும் வழிபட ஆலய நுழைவை தமிழ் நாடு அரசு உறுதிப் படுத்த வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் க.சத்திவேல் தலைமை தாங்கினர். கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர் அ.சக்தி வேல், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, இளைஞரணி அமைப்பாளர் தேவபிரகாசு, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்ட நோக்கத்தை விளக்கி உரை நிகழ்த்தினர்.  தோழர்கள் தங்களது உரையில் “கிராமப் பகுதிகளில் தொடர்ந்து நிலவும் ஜாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள் இவற்றை தமிழ்நாடு அரசு கண்கானித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதேபோல அறநிலையத் துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அனைத்து இந்து மக்களும் வழிபட தமிழ்நாடு...

மயிலையில் காந்தி படுகொலை கண்டனக் கூட்டம் ‘கருப்பு-சிவப்பு-நீலம்’ இணைந்து காவிகளின் மிரட்டலை சந்திக்கும்

மயிலையில் காந்தி படுகொலை கண்டனக் கூட்டம் ‘கருப்பு-சிவப்பு-நீலம்’ இணைந்து காவிகளின் மிரட்டலை சந்திக்கும்

‘கருப்பு-சிவப்பு-நீலம்’ இணைந்து தமிழ்நாட்டில் காவியை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் என்று காந்தி படுகொலை கண்டனக் கூட்டத்தில் பேசிய அனைவரும் உறுதி ஏற்றனர். சென்னை மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 6.2.2023 மாலை மந்தைவெளி இரயில் நிலையிம் அருகே காந்தி படுகொலை நாள் பொதுக் கூட்டம் மக்கள் கலை இலக்கிய மய்யக் குழு பாடகர் கோவன் கலை நிகழ்ச்சிகளோடு எழுச்சியுடன் தொடங்கியது. காந்தியாரின் பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்ட வடிவத்தில் தங்களுக்கு முரண்பாடு உண்டு என்றும், பகத்சிங் நிலைப்பாட்டையே தங்களது அமைப்பு அங்கீகரிப்பதாகவும் கூறிய பாடகர் கோவன், காந்தி படுகொலையை பார்ப்பன சங்கிகள் திட்டமிட்டு நடத்தியதைக் கண்டிப்பதிலும், அது நம் அனைவருக்குமான வரலாறு தரும் எச்சரிக்கை என்பதிலும் நாம் இந்த மேடையில் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்ற தன்னிலை விளக்கத்தோடு நிகழ்ச்சியைத் தொடங்கினார். காந்தி படுகொலைக்குப் பின் இந்தியாவுக்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்டக் கோரினார் பெரியார். ஆனால் காந்தி பிறந்த...

திருப்பூர் மாஸ்கோ நகரில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

திருப்பூர் மாஸ்கோ நகரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

சிறுவர் சிறுமியர் விளையாட்டுப் போட்டிகள் – கலை நிகழ்ச்சி – தமிழிசைப் பாடல்கள் – பொதுக் கூட்டம் என ஒரு நாள் நிகழ்சியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்திலும் அப்பகுதி வாழ் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 13ஆவது ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ஆகியவை 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு வரை நடைபெற்றது.  விழாவிற்கு மாநகரச் செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக காலை 10.00 மணிக்கு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கும் நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் துரைசாமி, மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, தெற்கு பகுதி கழகச் செயலாளர் இராமசாமி, சரசு, பகுதி கழகத் தோழர் கோமதி,...

சென்னையில் காந்தி படுகொலை நாள் பொதுக்கூட்டம்

சென்னையில் காந்தி படுகொலை நாள் பொதுக்கூட்டம்

சென்னை மயிலாப்பூர் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காந்தி படுகொலை நாள் பொதுக் கூட்டம் 6.2.2023 திங்கள் மாலை மந்தை வெளி இரயில் நிலையம் அருகே நடைபெற உள்ளது. உரை :      ஆளூர் ஷா நவாஸ், எம்.எல்.ஏ. பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர்) வழக்கறிஞர் திருமூர்த்தி கு. அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்) கோவன் குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும். பெரியார் முழக்கம் 02022023 இதழ்

மொழிப் போர் தியாகிகள், முத்துக்குமார் நினைவிடங்களில் கழகம் மரியாதை

மொழிப் போர் தியாகிகள், முத்துக்குமார் நினைவிடங்களில் கழகம் மரியாதை

1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் வீரமரணம் அடைந்த நடராசன், தாளமுத்து நினைவிடம் வட சென்னை மூல கொத்தளம் பகுதியில் உள்ளது. அதேபோல ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முத்துக்குமார் நினைவிடம் சென்னை கொளத்தூரில் உள்ளது. கழக சார்பில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மயிலை சுகுமார், இராவணன், மனோகரன், பிரவீன், உதயகுமார், ரவி பாரதி, சிவா, கனி, நரேஷ் உள்ளிட்ட தோழர்கள் முறையே ஜன. 25 மற்றும் 30ஆம் தேதிகளில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 02022023 இதழ்

காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை : திருச்சியில் கழகம் கருத்தரங்கம்

காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை : திருச்சியில் கழகம் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் திருச்சி, பெரம்பலூர் மாவட்டக் கழகங்களின் சார்பில், காந்தியார் நினைவு நாள் கருத்தரங்கம், “காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை” என்ற தலைப்பில், 28.01.2023 அன்று மாலை 5 மணி யளவில், திருச்சி இரவி மினி அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை தாமோதரன் தலைமை வகித்தார். நிகழ்விற்கு, திருச்சி மாவட்டச் செயலாளர் மனோகரன் வரவேற்பு கூறினார். திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி, திருவரங்கம் அசோக், விராலிமலை குமரேசன், திருச்சி ஆறுமுகம், போலீஸ் காலனி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் தொடக்கத்தில், மக்கள் கலை இலக்கிய கழகம் மய்யக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மதவெறிக்கு எதிரான பாடல்களை கலைக்குழுவினர் பாடினர். தொடர்ந்து, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கருத்துரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சங் பரிவாரங்களின் மதவெறிக் கலவரங்கள் மற்றும் கொலைகளைப் பற்றி விரிவாக விளக்கி உரையாற்றினார்....

ஈஷா மய்ய மர்மங்கள் : கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

ஈஷா மய்ய மர்மங்கள் : கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

கோவை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் சனவரி 26, காலை 10 மணிக்கு கோவை ஆதித்தமிழர் பேரவை அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பா. இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் அண்மையில் மறைந்த தூத்துக்குடி மாவட்ட தலைவர் பால்ராசு, தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் இணையர் வசந்தி, தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைப் பொதுச்செயலாளர் சந்திரபோஸ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஈசா யோகா மையத்தில் தொடரும் மர்மங்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்துவது, பெரியார் கொள்கைகளை விளக்கி புதிய இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்துவது, தலைமைக் கழக வெளியீடுகளை மக்களிடத்தில் பரவலாக கொண்டு சேர்ப்பது, பெரியாரியல், திராவிடர் இயக்க பயிலரங்கங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு நூலகங்களில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செல்கிறதா என்பதில் தோழர்கள் கவனம் செலுத்தி இதழ் செல்வதற்கு வழி செய்ய தோழர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 2023ஆம் ஆண்டிற்கான கழக வார...