ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன் மகன் கி.பிரபாகரன், ஆனைமலை ஒன்றியச் செயலாளர் நடராஜ் மகள் ந.கஸ்தூரி ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை இணை யேற்பு விழா ஆனைமலை பரிமளா சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில் 11.06.2025 புதன் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.

இணையர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை ஏற்று தாங்களும் மலர் மாலையை மாற்றிக் கொண்டனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை.தாமோதரன் மந்திரமா? தந்திரமா? நிகழ்வு நடைபெற்றது. நிமிர்வு கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. யாழ்.வெள்ளிங்கிரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் இணையேற்பினை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், வேலூர் மாவட்டச் செயலாளர் சிவா, சேலம் மாவட்ட இலக்கிய அணித் தலைவர் கோனூர் வைரமணி, சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நங்கவள்ளி ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணன், திராவிடர் கழகத் மாரிமுத்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சண்முகவேல் பிரபாகரன், சட்ட எரிப்புப் போராளி ஆறுமுகம் அய்யா, வழக்கறிஞர் இரண்யா, வழக்கறிஞர் சேதுபதி, பிரியா மனோகரன் வி.சி.க ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் கழகத்தின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்றனர். புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதி ரூ.2000 வழங்கப்பட்டது.

மணமக்களின் பெற்றோர்கள் திராவிடர் விடுதலை கழகத்தைச் சார்ந்த இரண்டு குடும்பங்களும் இணைந்து பேசி இந்த ஜாதி மறுப்பு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் முழக்கம் 26062025இதழ்

You may also like...