பொள்ளாச்சியில் கழகப் பொதுக்கூட்டம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக குடிஅரசு மற்றும் சுயமரியாதைஇயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் 10.06.2026 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணம் பகுதியில் வே.அரிதாசு தலைமையில் நடைபெற்றது. யாழ் வெள்ளிங்கிரி வரவேற்புரை ஆற்றினார். கோவன் கலைக்குழுவின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் பேரூராட்சி தலைவர், ஆசிரியர் சிவகாமி (தலைவர், தமிழ்நாடுஅறிவியல் மன்றம்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழக தலைவர் கொளத்தூர் மணி, காசு.நாகராசன் (திராவிட இயக்கத்தமிழர் பேரவை) சிறப்புரையாற்றினர்.

நிகழ்வில் தினேசு குமார் கழகத்தில் தன்னை கழகத்தில் இணைத்து கொண்டார். தோழருக்கு கழகத் தலைவர் புத்தகம் வழங்கினார். 15 பேர் உடற் கொடை வழங்க முன்வந்துள்ளனர். இதற்கான சான்றிதழை தோழர் அறக்கட்டளைத் தலைவர். சாந்தகுமார் மற்றும் கழக தலைவர் கொளத்தூர் மணி வழங்கினர்.

தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண், பொள்ளாச்சி கழக தோழர்கள் மற்றும் தோழமை அமைப்பு தோழர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். ரூபா அவர்கள் நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 26062025இதழ்

You may also like...