கருநாடக கழகத் தலைவர் இராவணன் படத்திறப்பு நிகழ்வு!

கருநாடக திவிக மாநிலத் தலைவர் தோழர் இராவணன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி பெங்களூரு ஜெய்பீம் பவன் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்று தோழர் இராவணன் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்தியாவில் பௌத்தம் முன்னெடுத்த சமத்துவம் குறித்தும், ஆரியர்கள் படையெடுப்பு பற்றியும், ஆரிய பண்பாட்டு படையெடுப்பால் நாம் இழந்தவற்றை திணிக்கப்பட்ட ஆரிய பண்பாட்டில் இருந்து நாம் மீள்வதற்கு பெரியார் கையாண்ட விழாக்கள் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு சிறப்பான உரையை நிகழ்த்தினார்.
பெரியார் முழக்கம் 03072025இதழ்

You may also like...