திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் 21-06-2025 மாலை 5 மணி அளவில் வ.உ.சி திடல் (செங்காடு) அவினாசி பகுதியில் ஒன்றிய அரசே! கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடு எனக் கோரி திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய கழகம் சார்பாக கையெழுத்து இயக்கம், மற்றும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் திவிக சார்பாக மாவட்டச் செயலாளர் முகில்ராசு கண்டன உரையாற்றினார். நிகழ்வில் மாரிமுத்து மாநகர துணைத் தலைவர், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 26062025இதழ்

You may also like...