உடற் கொடை அளிப்பு!
திருப்பூர் தி.வி.க தோழர் மலரவன் என்கிற மலர் மணி நாதன் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 28.06.2025 இரவு 8. 30 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது உடல் சோளிபாளையம் பாரதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பிறகு அவரது விருப்பத்தின் பேரில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக் கிழமை 29.6.2025 காலை 12.30 மணிக்கு அவரது உடல் கொடையாக வழங்கப்பட்டது.
தோழர் மலரவனின் உடலுக்கு எந்தவிதமான ஜாதி மத சடங்குகளும் செய்யப்படவில்லை. மலர் மாலை கூட அணிவிக்கப்படாமல் பெண் தோழர்கள் கொள்கை முழக்கமிட்டு உடலை சுமந்து வந்தனர். தோழரின் இணையர் பாண்டிச்செல்வி, மகள் மதுலதா, மகன் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் கொடையாக வழங்கப்பட்டது.
மலரவன் அவர்கள் 41 ஆண்டுகளாக தந்தை பெரியார் கொள்கையை கடைபிடித்தவர். தனது குடும்ப உறுப்பினர்களை பெரியார் வழியில் நடத்தியவர் ஆவார்.
நிகழ்வில் சு.துரைசாமி பொருளாளர், வீ.சிவகாமி தலைவர் தமிழ்நாடு அறிவியல் மன்றம், அங்குமார் களப்பணி ஒருங்கிணைப்பாளர் த.பெ.தி.க
யாழ் ஆறுச்சாமி மாவட்டத் தலைவர் திக, முகில் இராசு மாவட்டத் தலைவர் திவிக, தமிழ் அமுதன் உளவியல் ஆய்வாளர், சிவாச்சல மூர்த்தி திமுக, அருண் நவீன மனிதர்கள் குழு, சந்திராமணி ஆசிரியர், சங்கீதா மாவட்ட அமைப்பாளர், தனபால் மாநகரத் தலைவர், மாதவன் மாநகரச் செயலாளர், முத்து மாநகர அமைப்பாளர், சரசுவதி மாநகர அமைப்பாளர்
ராமசாமி தெற்கு பகுதிச் செயலாளர், கனல்மதி தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர், தோழர்கள் முத்துலட்சுமி, இனியன், சிரிஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 10072025இதழ்
